Jaffna Press Club

Jaffna Press Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaffna Press Club, Media Agency, 84 A, Rasavin Thoddam Road, Jaffna.

கிளிநொச்சி நகரபகுதிகளில் நிமலராஜன் அறிக்கை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு!
14/09/2025

கிளிநொச்சி நகரபகுதிகளில் நிமலராஜன் அறிக்கை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு!

புத்துக்குடியிருப்பு, முள்ளியவளை, முல்லைத்தீவு நகரம், வாட்டுவாகல் பகுதிகளில் நிமலராஜன் அறிக்கை பொதுமக்களுக்கு வழங்கும் ந...
14/09/2025

புத்துக்குடியிருப்பு, முள்ளியவளை, முல்லைத்தீவு நகரம், வாட்டுவாகல் பகுதிகளில் நிமலராஜன் அறிக்கை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு!

இடம்-யாழ் நகரம்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் ய...
13/09/2025

இடம்-யாழ் நகரம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனுக்கு நீதி கோரிய விசாரணை அறிக்கை யாழ் ஊடக அமைய ஊடகவியலாளர்களால் யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டது.

06/09/2025
04/08/2025

யாழ்.ஊடக அமையம் அரசியல் சார்பு ஏதுமற்றும் தமிழ் தேசியம் சார்ந்த பரப்பில் ஊடக சுதந்திரத்திற்காகவும் போராடி வருகின்றதொரு சுயாதீன அமைப்பாகும்.

39 இற்கும் அதிகமான தனது ஊடக நண்பர்களை ஊடக சுதந்திரத்திற்கான தமிழ் தேசியப்போராட்டத்தில் அது அர்ப்பணித்துள்ளது.

சமரசமற்ற தனது நிலைப்பாட்டில் ஊடக சுதந்திரத்திற்காகவும் படுகொலையான தனது நண்பர்களிற்கான நீதி கோரிய பயணத்திலும் சமரசமேதுமற்று அது முன்னகர்ந்துவருகின்றது.

இந்நிலையில் தத்தமது அரசியல் வயிறு வளர்ப்பிற்காக சில கட்சிகள் யாழ். ஊடக அமையத்தின் பெயரை முறைகேடாக தமது அறிக்கைகளில் பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் பலரும் எமக்கு சுட்டிக்காட்டிவருகின்றனர்.

இத்தகைய நடவடிக்கை கடும் அதிர்ச்சியையும் அறச்சீற்றத்தையும் எமக்கு தந்துள்ளது.

யாழ்.ஊடக அமையம் என்றுமே பத்தோடு பதினொன்றாக தனது பயணத்தை முன்னெடுக்காது என்பதை மீள வலியுறுத்துவதுடன் அரசியல் வயிறு வளர்ப்பிற்கு சோரம் போகாதென்பதுடன் தனது கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்யவிரும்புகின்றது.

முறையற்ற விதத்தில் தமது அரசியல் இருப்பிற்காக எவரையும் யாழ்.ஊடக அமையத்தின் பெயரை முறைகேடாக பயன்படுத்த வேண்டாமென இச்சந்தரப்பத்தில் நாம் பகிரங்கமாக கேட்டுக்கொள்கின்றோம்.

மத்திய குழு.
யாழ்.ஊடக அமையம்.

ஈழத்தின் வலிகளை எழுத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்த பல்துறை ஆளுமைமிக்க மூத்த படைப்பாளியும் ஊடகவியலாளருமான நா.யோகேந்திரநாதன...
29/12/2024

ஈழத்தின் வலிகளை எழுத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்த பல்துறை ஆளுமைமிக்க மூத்த படைப்பாளியும் ஊடகவியலாளருமான நா.யோகேந்திரநாதன் (வயது 80) இன்று 29.12.2024 ஞாயிற்றுக்கிழமை பல கேள்விகளுடன் விடையின்றி இந்த மண்ணை விட்டுச் சென்றமை ஈழ இலக்கியதுறைக்கு பெரும் இழப்பாகும்.

அவரின் இழப்பில் யாழ்.ஊடக அமையம் தனது ஆழ்ந்த துயரினை அனைவருடனும் பகிர்ந்து கொள்கின்றது.

யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் கிளிநொச்சி - திருவையாறு தபாலகத்தின் உதவித் தபால் அதிபராகப் பணியாற்றியிருந்தார்

1960களில் நிலம் புலம் சார்ந்து எழுத்தின் மூலம் ஈழ உலகை வடிவமைக்கும் இலக்கியத் துறைக்குள் பிரவேசித்தார்.

இலங்கை வானொலியில் நாடக எழுத்தாளராக பணியாற்றிய அவர், போர்க்காலத்தில் புலிகளின் குரல் வானொலியில் நாடக எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் கடமையாற்றினார்.

உயிர்த்தெழுகை, உயிர் குடிக்கும் பறவைகள், சாம்பல் பறவைகள், காவல் வேலி போன்ற நாடகத் தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

கண்ணீர் மழலைகள், விடுதலை முழக்கம் உட்பட பல தொடர் நவீனங்களை எழுதிய அவர் பலநூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் படைத்துள்ளார்.

போர்க் காலத்தில் பல வீதி நாடகங்களையும் உருவாக்கியிருந்தார்.

1993இல் ஈழநாதம் நாளிதழ் வன்னிப் பிராந்தியத்துக்கான பதிப்பை தொடங்கிய போது 1995 வரை அதன் ஆசிரியராகவும், யாழ்ப்பாணத்தில் வெளிவந்த “புதுவிதி” வார இதழின் கௌரவ ஆசிரியராகவும் பணியாற்றினார்.

யாழ்ப்பாணத்தில் வெளிவரும் பத்திரிகைகளில் சந்திரசேகர ஆசாத், யோகநாராயணன், விஷ்ணுபுத்திரன், அக்கினீஸ்வரன் என்ற புனை பெயர்களிலும் நா.யோகேந்திரநாதன் என்ற இயற்பெயரிலும் அரசியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

சமூக ஒடுக்குமுறையை வெளிப்படுத்தும் விதமாக இடிபடும் இரும்புக் கோட்டைகள் என்ற நாவலையும் இவர் படைத்திருந்தார்.

இவர் எழுத்திய 3 நாவல்கள் தேசிய ரீதியில் விருதுகளை வென்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கை வானொலியில் ஒலிப்பரப்பான காட்டு நிலா, என்ற வானொலி நாடகம் நூலாக வெளியாகியிருந்தது.

தமிழ் மக்களின் விடுதலைப் போரை ஆவணமாக்கும் பெருமுயற்சியில் அளப்பரிய பங்காற்றிய அவர் போராட்ட வரலாற்றை மையமாகக் கொண்டு நீந்திக் கடந்த நெருப்பாறு, (முள்ளிக்குளத்திலிருந்து கிளிநொச்சிவரை), நீந்திக்கடந்த நெருப்பாறு (கிளிநொச்சியிலிருந்து புதுமாத்தளன் வரை), மரண மழையில் நீந்திக் கடந்த நெருப்பாறு என்ற நாவல்களைப் படைத்திருந்தார்.

கடும் சுகயீனத்தால் பாதிக்கப்பட்டிருந்த வேளையிலும் ஆனையிறவை வெற்றிகொண்ட வரலாற்றை வெளிப்படுத்தும் விதமாக 39 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு என்ற நாவலை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

யோகேந்திரநாதன் படைப்புத்துறை தவிர்த்து கூத்துக் கலைஞராக, அரங்க நாடக நடிகராக வீதி நாடகத் தயாரிப்பாளராக, வானொலி நாடக தயாரிப்பாளராக, குரல் வழங்குநராக, சிறந்த விமர்சகராக, பேச்சாளராக எனப் பல்துறை ஆளுமையாளராக மிளிர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடது சாரிக் கொள்கையை மாறாத பற்றுடன் தன் வாழ்நாள் முழுவதும் பின்பற்றிய அவர் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக அளப்பரிய பங்காற்றினார். இதனால் பல்வேறு இன்னல்களுக்கும் அவர் முகம் கொடுத்திருந்தார்.

தனது கனதியான படைப்புகள் மூலம் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு வலுச் சேர்த்த அவர், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டார்.

யாழ்.ஊடக அமையம் தமிழ் தேசியத்தின் அர்ப்பணிப்பு மிக்க ஆளுமைகளை வnழ்நாளில் கௌரவிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அவரின் ஊடக பணிக்காக விருது வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய குழு
யாழ் . ஊடக அமையம்

யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்த சீனாவின் இலங்கைக்கான தூதுவர் கி.லென்ஹோங் யாழ்.ஊடக அமையத்திற்க்கு சென்று ஊடகவியலாளர்கள...
19/11/2024

யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்த சீனாவின் இலங்கைக்கான தூதுவர் கி.லென்ஹோங் யாழ்.ஊடக அமையத்திற்க்கு சென்று ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

02/09/2024

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழ் ஊடக அமையத்தின் தண்ணீர் பந்தல்!

பிறப்பிலே சிங்கள இனத்தவராக இருப்பினும் தன் பரந்த மனத்தினால் மனிதர்களை மனிதர்களாக நேசித்து மனித உரிமைகளை மதித்து தமிழினத்...
17/08/2024

பிறப்பிலே சிங்கள இனத்தவராக இருப்பினும் தன் பரந்த மனத்தினால் மனிதர்களை மனிதர்களாக நேசித்து மனித உரிமைகளை மதித்து தமிழினத்தின் உரிமைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து நின்ற அதி உன்னத மனிதம் விராஜ் மெண்டிஸ் சாவை அணைத்த செய்தி இடியாக அதிர்ச்சி தருகிறது.

உயர்ந்த கல்வியலாளரான இவர் தன்னுடைய சொந்த வாழ்விலேயே ஒரு மனிதன் எப்படி நடத்தப்படக் கூடாதோ அப்படி சிறிலங்கா - பிரித்தானிய அரசுகளாலும் துன்புறுத்தப்பட்டவர். சிறிலங்கா சிங்கள அரசினால் நாடற்றவராக்கப்பட்ட விராஜ் மெண்டிஸ் அவர்கள் பிரித்தானிய அரசினால் கொடூரமாக நடத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

தொடர்ந்து பிறீமனில் புகலிடத் தஞ்சம் பெற்று தொடர்ந்து தமிழினத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடி வந்த உன்னத மனிதம் விராஜ் மெண்டிஸ் அவர்கள் தமிழின இனப்படுகொலையை சர்வதேச அரங்கில் விசாரணைக்குட்படுத்த பல முன்னோடி செயற்பாடுகளில் தொடர்ந்து உழைத்து வந்தார்.

கடந்த காலங்களில் இனப்படுகொலை சர்வதேச விசாரணைக்கான ஆரம்பமாக அமைந்திருந்த மக்கள் தீர்ப்பாயங்ளை உதாரணமாகக் கொண்டு தமிழின இனப்படுகொலைக்கான பிறீமன் மக்கள் தீர்ப்பாய அமர்வுகளை நடத்தித் தீர்ப்பளிக்க அச்சாணியாக இருந்து இயங்கியவர் உன்னத மனிதர் விராஜ் மெண்டிஸ் அவர்கள்.

சிங்களவர்கள் அத்தனை பேரையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க முடியாது என்கின்ற ஒரு எண்ணம் மனதில் உதிக்கின்ற போது எல்லாம் தமிழினத்திற்காக வாழ்ந்து கொண்டிருந்த உன்னத மனிதம் விராஜ் மெண்டிஸ் அவர்களே எம் மனக் கண் முன் முதலில் தோன்றுவார்.

தமிழிழின விடுதலைப் போராட்டத்தினையும் அதன் உந்து சக்தியாக இயங்கிய த-மி-ழீ-ழ வி-டு-த-லை-ப் பு-லி-க-ளுடன் நல்ல ஆத்மார்த்தமான உறவைக் கொண்டிருந்த விராஜ் மெண்டிஸ் அவர்கள் மூத்த தளபதி கிட்டு அவர்கள் அனைத்துலகப் பணிகளில் இருந்த நாட்களில் அவருடன் சேர்ந்து இயங்கி ஒரு தமிழனாகவே மாற்றம் பெற்றிருந்தார் என்பதை விடப் போராளியாகவே மாறியிருந்தார் என்பதே பொருத்தமானதாக இருக்கும்.

சாவு என்ற மனித வாழ்வின் முடிவு இந்த உன்னத மனிதத்தினை மௌனிக்க வைத்த போதும் அவரது கனவுகளை தொடர்ந்து செல்வோம் என்ற உறுதி மொழியுடன் நன்றிகளையும் விழியிலிருந்து சொரியும் நீரஞ்சலிகளையும் சமர்ப்பிப்போம். அவரது குடும்பத்தினருடைய துயரிலும் பங்கெடுத்து அஞ்சலிப்போம்.

யாழ் ஊடக அமையம்
(Jaffna Press Club)

02/08/2024

ஜனாதிபதி தேர்தலிற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள சூழலில் தேர்தல் களத்தில் உள்ளவர்கள் தங்களது வெற்றிக்காக பலத்த பிரயத்தனங்களை முன்னெடுப்பது வழமையானது.

இந்நிலையில் வடக்கிலிருந்து ஊடகவியலாளர்கள் குழுவொன்றை கொழும்பிற்கு தருவித்து வேட்பாளர் ஒருவர் தனக்கு வடகிழக்கில் அதீத ஆதரவு இருப்பதாக காண்பிக்க முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்தகைய முயற்சிகள் எவை தொடர்பிலும் ஆதரவளிக்கவோ அல்லது பின்னணியிலோ யாழ்.ஊடக அமையம் இல்லையென்பதை வடகிழக்கிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களிற்கும் ஏனைய ஊடக நண்பர்களிற்கும் யாழ்.ஊடக அமையம் மிகவும் ஆணித்தரமாக அறியத்தருகின்றது.

2016ம் ஆண்டு காலப்பகுதியில் நாடாளுமன்றில் அப்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர்(தற்போதைய ஜனாதிபதி) ஊடக அமைச்சர் ஆகியோரை வடகிழக்கு ஊடகவியலாளர்கள் கூட்டாக சந்தித்த போது கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடக நண்பர்களிற்கான நீதியை தவிர வேறு எத்தயை சலுகையினையும் கோரியிருக்கவில்லையென்பது அனைவரும் அறிந்ததே.

எட்டு ஆண்டுகள் கடந்துள்ள போதும் நீதி கோரிய பயணத்தில் ஆட்சியாளர்கள் ஒரு புள்ளியையேனும் கடந்திராத நிலையில் அவர்களது கதிரைகனவுகளிற்காக ஊடக அமையம் உயிரிழந்த சக நண்பர்களது தியாகங்களை கொச்சைப்படுத்த தயாராக இல்லையென்பதை பகிரங்கமாக அறியத்தருகின்றது.

அதிலும் தனது வடகிழக்கிற்கான பயணத்தில் ஊடகவியலாளர்களை புறந்தள்ளி தற்போதைய ஜனாதிபதி செயற்படுகையில் கொழும்பு சென்று தேடிச்சந்திக்கவேண்டிய அவசியமில்லையென்பதையும் ஊடக அமையம் கருதுகின்றது.

அதிலும் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமையுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் குழுக்களிடம் பணம் பெற்று செயற்படும் இழிநிலைக்கு யாழ்.ஊடக அமையம் தயாராக இல்லையென்பதையும் அறியத்தருகின்றோம்.

மத்திய குழு
யாழ்ஊடக அமையம்

Address

84 A, Rasavin Thoddam Road
Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Press Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaffna Press Club:

Share

Category