Vaibz News தமிழ்

Vaibz News தமிழ் VAIBZ News is an authorised and registered news website in Ministry of Mass Media of Sri Lanka.

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி   – கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு   இடையிலான பெரும் சமருக்கான ஒப்பந்தம் கைச...
15/08/2025

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி – கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இடையிலான பெரும் சமருக்கான ஒப்பந்தம் கைச்­சாத்து

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி மற்றும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்­கு இடையிலான உத்தியோகபூர்வ கடினப்பந்து கிரிக்கெட் சமருக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் விழா அண்­மையில் நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், இரண்டு பாடசாலைகளின் அதிபர்கள் தலைமையில், பழைய மாணவர் சங்க செயலாளர், உப செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உப செயலாளர், விளையாட்டுத்துறை ஆசிரியர்கள், மேலும் இரு அணிகளின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

ஒப்பந்தத்தின் படி, உத்தியோகபூர்வ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நாவலப்பிட்டி ஜெயதிலக்க விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

மேலும், இரண்டு பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களுக்கிடையிலும் சிறப்பு கிரிக்கெட் போட்டி நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.

13/08/2025

மஸ்கெலியா - கார்ட்மோர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியை அடுத்த ஆண்டுக்குள் சுற்றுலாத் தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.கார்ட்மோர் நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு கண்காணிப்பு விஜயமொன்றில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இத்தகைய பகுதிகளை உருவாக்குவதன் மூலம், அந்த பகுதிகளில் உள்ள மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முடியும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.பல்வேறு நிறுவனங்களை ஈடுபடுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இந்தப் பகுதியை சுற்றுலாத் தளமாக உருவாக்க எதிர்பார்க்கப்படடுள்ளது.இந்த பகுதிக்கு தற்போது பல சுற்றுலாப் பயணிகள் வந்த சென்றாலும், அவர்களுக்கு தேவையான வசதிகள் அங்கு இல்லை. அங்கு உலங்குவானூர்தி தரையிறங்குவதற்கான இடங்களையும் நிர்மாணிக்க முடியும்.இதுபோன்ற நவீன வசதிகளை இங்கு உருவாக்குவதற்கு அடுத்த பாதீட்டிலிருந்து நிதி ஒதுக்குவோம். நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வீதியை மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை பொழுதுபோக்கு நிகழ்ச்சி போல் உள்ளது - வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு.பெருந்தோட்ட ...
12/08/2025

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை பொழுதுபோக்கு நிகழ்ச்சி போல் உள்ளது - வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கும் அடிப்படை சம்பளத்தினை அதிகரிக்கும் பேச்சுவார்த்தை தற்போதைய அரசாங்கம் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாகவே எடுத்துக்கொண்டுள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் (10) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய ஜனாதிபதி மேதின கூட்டத்திலும் சரி பாராளுமன்றத்திலும் மற்றும் பல்வேறு பொது கூட்டங்களில் கலந்துகொண்டு சம்பள அதிகரிப்பை பற்றி பேசினாலும் இன்று வரை அது கைகூடவில்லை.

மேலும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தினது பேச்சாளர் ரொஷான் ராஜதுரை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உற்பத்தி அடிப்படையில் மாத்திரமே வேதன அதிகரிப்பொன்றை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அல்லது மீண்டும் அரசுக்கு தோட்டங்களை கையளிக்க வேண்டும் என அலட்சியமான பதில்களை தெரிவிக்கின்றனர் .

தற்போது சாதாரண அரிசி ஒரு கிலோ 250 ரூபாவை கடந்து போகிறது இந்நிலையில் எமது தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு சிரமத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றன.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,350 ரூபாவை அடிப்படை சம்பளமாக மாத்திரம் வழங்க சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் தீர்மானித்து வழங்கி வருகிறது அத்துடன் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அதிகரிக்கப்பட்ட ஆயிரத்து 700 ரூபாய் சம்பளம் தமக்கு வழங்கப்படவில்லை என பல பெருந்தோட்ட தொழிலாளர்கள் விசனம் தெரிவித்து வருகின்றதும் தொடர் கதையாகவே உள்ளது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார.

“யாழ்ப்பாணம் நகரம்” எனும் பெயரைப் பெற்ற இலங்கை ஏர்லைன்ஸ் விமானம்இலங்கை ஏர்லைன்ஸ் தனது A320-200 வகை விமானங்களில் ஒன்றிற்க...
03/08/2025

“யாழ்ப்பாணம் நகரம்” எனும் பெயரைப் பெற்ற இலங்கை ஏர்லைன்ஸ் விமானம்

இலங்கை ஏர்லைன்ஸ் தனது A320-200 வகை விமானங்களில் ஒன்றிற்கு “யாழ்ப்பாணம் நகரம்” (City of Yalpanam) எனப் பெயரிட்டு, யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரப் பெருமையையும் மதிக்கும் வகையில் முக்கியமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது.

தெற்காசியாவின் சிறந்த விமான சேவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்நிறுவனம், தமிழர் வாழ்வில் முக்கிய இடம் பிடிக்கும் நல்லூர் திருவிழா காலத்தில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை இழுக்கும் திட்டங்கள்.

நடிகர் மதன் பாப் புற்றுநோயால் சென்னையில் காலமானார்
02/08/2025

நடிகர் மதன் பாப் புற்றுநோயால் சென்னையில் காலமானார்

புதுக்குடியிருப்பு மாணிகாகபுரத்தில் கசிப்பு வியாபாரியை மடக்கி பிடித்த கிராம இளைஞர்கள்..!புதுக்குடியிருப்பு மாணிக்கபுரம் ...
02/08/2025

புதுக்குடியிருப்பு மாணிகாகபுரத்தில் கசிப்பு வியாபாரியை மடக்கி பிடித்த கிராம இளைஞர்கள்..!

புதுக்குடியிருப்பு மாணிக்கபுரம் பகுதியில் நீண்ட நாட்களாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை கிராம இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இவரிடமிருந்து 16 லிட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இந்த நபர் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.

கிராம இளைஞர்களால் பிடிக்கப்பட்ட நபர் புதுக்குடியிருப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

71-வது தேசிய திரைப்பட விருது பட்டியலில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய...
02/08/2025

71-வது தேசிய திரைப்பட விருது பட்டியலில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய 33 வருட சினிமா பயணத்தில் ஷாருக்கான் பெறும் முதல் தேசிய விருது என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நாம் நாட்டுக் கலைஞர்கள் இயக்கி, நடித்துள்ள ‘தி மாதர்’ (Pilot Film) திரைப்படத்தின் சிறப்புக் காட்சியானது கடந்த சனிக்கிழமை...
31/07/2025

நாம் நாட்டுக் கலைஞர்கள் இயக்கி, நடித்துள்ள ‘தி மாதர்’ (Pilot Film) திரைப்படத்தின் சிறப்புக் காட்சியானது கடந்த சனிக்கிழமை (26) வத்தளையில் அமைந்துள்ள Ram Cinemas திரையரங்கில் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் திரையிடப்பட்டது.

Windsor Production தயாரிப்பில், பிரவீன் கிருஸ்ணராஜா இயக்கியுள்ள இந்த திரைப்படமானது சமூதாயத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் மற்றும் வன்முறை சம்பவங்களை எடுத்துக் காட்டும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விக்னேஷன் தேவராஜ், ரூபஷாலினி, கோபி ரமணன், திவிராஜ், பி.டி. செல்வம், போல்ராஜ், ஜனா, சிபி, ரஷிகா அருட்செல்வம், பிரேம்ஜித், நீல்ரிக்ஷன் உள்ளிட்ட நம் நாட்டுக் காலைஞர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நடித்த அனைத்து காலைஞர்களும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து உள்ளனர், குறிப்பாக தந்தையாக நடித்த விக்னேஷன் தேவராஜ், வில்லனாக நடித்த கோபி ரமணன் மிக தத்ரூபமாக நடித்துள்ளார்கள்.

இப்படத்தில் கேமரா (DOP) தேவ் கிறிஸின், எடிட்டிங் சரண் மற்றும் இசை சஞ்ஜித் லக்ஷ்மன் மிக அருமையாக செய்துள்ளனர்.

குறிப்பாக தேவ் கிறிஸின் கமரா பணிகள் மிக வித்தியாசமான கோணத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார், அதேபோன்று சரணின் எடிட்டிங் பணிகள் மிக சிறப்பாக அமைந்துள்ளதோடு சஞ்ஜித் லக்ஷ்மன் இசை படத்தின் விறுவிறுப்புக்கு முக்கிய புள்ளியாக அமைந்துள்ளது.

சுமார் 40 நிமிட நீளமுடைய இந்த திரைப்படமானது கயவர்கள் கூட்டத்தினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படும் தனது மகளுக்காக தந்தையின் பழிவாங்கலையும், சமூதாயத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களையும் சித்தரித்துக் காட்டுகின்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை மேற்கொள்ளும் கயவர்கள் கூட்டம் இறுதியில் பெண்களின் கைகளினாலேயே பழிவாங்கப்படுவதும் இயக்குநர் பிரவீன் உள்ளிட்ட குழுவினரின் பாராட்டப்பட வேண்டிய முயற்சியாக அமைந்துள்ளது.

படத்தில் சில இடங்களில் சலிப்பு தன்மையும் குறைபாடுகளும் இருந்தாலும் கூட இதுபோன்ற படைப்புக்கான முயற்சிக்கு பாராட்டத்தக்கது.

அதேபோன்று இப்படம் (தி மாதர்) எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01.08.2025) மாலை 5.30 க்கு வவுனியா அமுதா திரையரங்கிலும் சனிக்கிழமை (02.08.2025) மாலை 5.30 க்கு யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கிலும் திரையிடப்படவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மாலைதீவின் அரச பிரதானிகள் ஜனாதிபதியுடன்  சந்திப்பு..!மாலைதீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அம...
30/07/2025

மாலைதீவின் அரச பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு..!

மாலைதீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் நேற்று (29) ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர்.

அதன்படி, மாலைதீவு பிரதி சபாநாயகர் அகமத் நஸீம் (Ahmed Nazim), வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல் (Dr. Abdulla Khaleel) பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் மொஹமட் சயீத் (Mohamed Saeed), பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் கசான் மௌமூன் (Mohamed Ghassan Maumoon), நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் மூசா சமீர் (Moosa Zameer), உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அலி இஹுசான்(Ali Ihusaan) ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.

மாலைதீவுக்கு அரச விஜயம் மேற்கொண்டதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்தப் பயணம், எதிர்காலத்தில் ஆழமான ஒத்துழைப்பு, பரந்த புரிதல் மற்றும் சிறந்த நட்புக்கான அடித்தளமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவுமாலைதீவுக்கான  உத்தியோகபூர்வ விஜ...
30/07/2025

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவு

மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (30) பிற்பகல் மாலே தலைநகரில் உள்ள சுல்தான் பூங்காவில் மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மரக்கன்றொன்றை நட்டார்.

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr. Mohamed Muizzu), மாலைதீவு சுற்றுலா மற்றும் சுற்றாடல் அமைச்சர் தோரிக் இப்ராஹிம் (Thoriq Ibrahim) மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

30/07/2025

இலங்கைப் பிரஜைகளுக்கு மாலைதீவிற்கு இலவச 90 நாள் On-Arrival சுற்றுலா விசா

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச் செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச 90 நாள் on-arrival சுற்றுலா விசாக்களை வழங்க மாலைதீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த விசாக்கள் வழங்குவது 2025 ஜூலை 29 முதல் அமுலுக்கு வருவதோடு, இந்த விசாக்களைப் பெறுவதற்கு, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருத்தல் மற்றும் மாலைதீவில் தங்கியிருக்கும் காலத்தில் தமது செலவுகளை ஈடுகட்ட போதுமான பணம் தங்களிடம் உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும்.

மாலைதீவு குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான விசா வசதி வழங்கல் ஒப்பந்தத்தின் விதிகள் மற்றும் மாலைதீவின் குடிவரவு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு இந்த விசா வசதி வழங்கப்படுகிறது என்று மாலைதீவு அரசாங்கம் தெரிவிக்கிறது. இதன் ஊடாக தமது அரசாங்கம் இலங்கைக்கு அளிக்கும் உயர் முன்னுரிமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று மாலைதீவு அரசாங்கம் மேலும் தெரிவிக்கிறது.

நுவரெலியாவில் பெண்கள் காப்பகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் சரோஜா பால்ராஜ்புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதில் இருந்து குறுகி...
30/07/2025

நுவரெலியாவில் பெண்கள் காப்பகத்தை திறந்து வைத்தார் அமைச்சர் சரோஜா பால்ராஜ்

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதில் இருந்து குறுகிய காலத்திற்குள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுக்கு சாதகமான பணிகளை மேற்கொண்டு வருகிறது என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா சாவித்ரி பால் ராஜ் கூறினார்.

நேற்று (29) நுவரெலியா தற்காலிக பெண்கள் காப்பகத்தை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

வீட்டு வன்முறையை எதிர்த்துப் போராடவும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்கு தேவையான மசோதாக்களைக் கொண்டுவரவும், அனாதைகள் மற்றும் நன்னடத்தையில் உள்ள குழந்தைகளுக்கு ரூ. 5,000 உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டு, குறுகிய காலத்திற்கு வீடுகளை விட்டு வெளியேறி, அரசின் பாதுகாப்பு மற்றும் சமூகமயமாக்கலுடன் தங்கியிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை தற்காலிக பெண்கள் தங்குமிடங்கள் மூலம் தங்க வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது 10 தங்குமிடங்கள் இருப்பதாகவும், இன்று நுவரெலியாவில் திறக்கப்பட்ட பெண்கள் தங்குமிடத்துடன், இது 11 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுஷ்கா சஜீவானி மற்றும் கலை செல்வி, பொது பிரதிநிதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன், இலங்கை மகளிர் பணியகத்தின் இயக்குநர் சஜீவானி பெரேரா, அரசு அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள UNFPA பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when Vaibz News தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vaibz News தமிழ்:

Share

GOWRI BRUNTHAN

Media Personality

Dip-in-Journalism (SRM University )

Former Presenter/ Producer (Sooriyan FM)

Former Shakthi TV News Reader