Delft Reporter

Delft Reporter “சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.”

தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையினால் நெடுந்தீவில் வழங்கப்படும் குடிநீர் இயந்திர கோளாறு காரணமாக இரண்டு நாட்கள் தடை...
07/04/2025

தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையினால் நெடுந்தீவில் வழங்கப்படும் குடிநீர் இயந்திர கோளாறு காரணமாக இரண்டு நாட்கள் தடைப்பட்டிருந்த நீர் வழங்கல் திருத்த வேலைகளை தொடர்ந்து இன்று முதல் வழமைக்கு திரும்பியது.

தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையினால் நெடுந்தீவில் வழங்கப்படும் குடிநீர் இயந்திர கோளாறு காரணமாக நாளை திருத்த வேலைக...
04/04/2025

தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையினால் நெடுந்தீவில் வழங்கப்படும் குடிநீர் இயந்திர கோளாறு காரணமாக நாளை திருத்த வேலைகள் நடைபெற உள்ளதால் மறு அறிவித்தல் வரை வழங்கப்பட மாட்டாது என்று நெடுந்தீவு தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு தெரிவித்துள்ளது

அனைவரையும் அன்புடன் அழைத்து நிர்க்கிறார்கள்
29/03/2025

அனைவரையும் அன்புடன் அழைத்து நிர்க்கிறார்கள்

28/03/2025
28/03/2025

பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்களை ஒன்றிணைக்கவும், பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட 80வது வருடத்திளை சிறப்பாக கொண்டாடவும், பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.

காலம் - 2025.03.30 ஞாயிற்றுக்கிழமை

நேரம் - காலை 10.00 மணிக்கு

இடம் மகாவித்தியாலய பொது மண்டபம்

நிகழ்வுகள்
1. அகவணக்கம்
2. பாடசாலைக் கீதம்
3. தலமையுரை
4. செயலாளர் அறிக்கை
5. பொருளாளர் அறிக்கை
6. பாடசாலையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையடால்
7. 80வது ஆண்டுவிழா தொடர்பாகவும் அதற்கான குழுக்கள் உருவாக்குதலும்
8. பிறவிடயங்கள்
9. நன்றியுரை

எமத பாடசாலையில் கல்வி கற்ற அனைத்து பழைய மாணவர்களும் தவறாது இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்

மேலதிக தகவலுக்கு

திரு.ஐ.தயாபரன் - தலைவர் / பாடசாலை முதல்வர் 0774269166

திரு.கு.ஜனேந்திரன் - செயலாளர் 0770251033

கிளிநொச்சியில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழரசின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...!நடைபெறவுள்ள உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலில் ப...
28/03/2025

கிளிநொச்சியில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழரசின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...!

நடைபெறவுள்ள உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலில் போட்டியிடும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களது அறிமுகக் கூட்டம் (26.3.2025)கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி மற்றும் பூநகரி பிரதேச சபைகளில் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் 75 வேட்பாளர்களினதும் பங்கேற்போடு, நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் மாவட்டக் கிளைத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில், மாவட்டத்துக்கான தேர்தல் பிரசாரக் கட்டமைப்பை உருவாக்கி, முறைமைப்படுத்தப்பட்ட வகையில் உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், குறித்த மூன்று சபைகளினதும் மேனாள் தவிசாளர்களான அருணாசலம் வேழமாலிகிதன், சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன், சுப்பிரமணியம் சுரேன் ஆகியோர் கருத்துரைகளையும் வேட்பாளர்களுக்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

28/03/2025

யாழ் மாவட்டத்தை சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சியின் 17உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்ப்பாளர் அறிமுக கூட்டம் எதிர்வரும் 04.04.2025 அன்று மாலை 2மணிக்கு நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இடம்பெறவுள்ளது.

நாளையத்தினம் (29.03.2025) குறித்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சியின் நீண்டகால நிர்வாக செயலாளருமான திரு. சூ. சே. குலநாயகம் அவர்களின் ஏகபுதல்வியான சட்டத்தரணி ஆன் குலநாயகம் அவர்களின் திடீர் மறைவு காரணமாக குறித்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச , ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு ஏப்ரல் 1 ம் திகதி வரை விள...
25/03/2025

இலஞ்ச , ஊழல் ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு ஏப்ரல் 1 ம் திகதி வரை விளக்கமறியல்....

 #பிரதேச_சபை தொடர்பான உள்ளடக்கம்பிரதேச சபை என்பது இலங்கையின் உள்ளூராட்சி அமைப்புகளில் ஒன்று. இவை 1978ல் உருவாக்கப்பட்டன....
24/03/2025

#பிரதேச_சபை தொடர்பான உள்ளடக்கம்

பிரதேச சபை என்பது இலங்கையின் உள்ளூராட்சி அமைப்புகளில் ஒன்று. இவை 1978ல் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில் இதன் உறுப்புரிமையானது கிராமோதய சபைத் தலைவர்கள் மற்றும் பதவி வழிகாரணமாக உதவி அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர் பிரிவில் கடமையாற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் (உதாரணமாக கிராம சேவையாளர் போன்றோர்) இடம்பெறுவர்.

இச்சபையின் தலைவராக பதவி வழியற்ற யாராலும் ஒருவர் (சபை தெரிவு செய்பவர்) இடம்பெறுவார். இச்சபையின் செயலாளராகப் பதவி வழிகாரணமாக உதவி அரசாங்க அதிபர் இடம்பெறுவார்.

1987ம் ஆண்டின் 15ம் இலக்கப் பிரதேச சபைகள் சட்டமூலம் பிரதேசசபையின் அமைப்பு, தெரிவு, நோக்கங்கள், அதிகாரங்கள் செயற்பாடுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தின.

பிரதேச சபையின் நோக்கம்:

உள்ளூராட்சி மட்டத்தில் நிர்வாக மாற்றம், அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக முடிவுகளை எடுத்தல், நடைமுறையில் பயனுறும் வகையில் மக்கள் பங்குபற்றுவதற்கு வாய்ப்புக்களை வழங்கல்

மேற்படி சட்டத்தின்படி

பிரதேசசபைப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் மக்களால் தெரிவுசெய்யப்படுவர். இதன்படி முதலாவது பிரதேச சபைகளுக்கான தேர்தல் 1991 மே 1ம் திகதி நடைபெற்றது.

இலங்கையிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களிலும் 257 பிரதேச சபைகள் ஏற்படுத்தப்பட்டன. (இவற்றுள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள 8 மாவட்டங்களிலும் 63 பிரதேச சபைகள் உண்டு. இந்த 8 மாவட்டங்களிலும் தேர்தல் 1991 இலும் 1997இலும் நடைபெறவில்லை) மேற்படி தேர்தல் மூலம் 194 பிரதேச சபைகளுக்கான அங்கத்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

உதவி அரசாங்க அதிபர் பிரிவில் (தற்போதைய பிரதேச செயலகப்பிரிவில்) காணப்படும் மாநகரசபை, நகரசபை எல்லைகள் தவிர்ந்த ஏனைய நிலப்பரப்பு, பிரதேச சபைகளின் நிலப்பரப்பாகும்.

உறுப்பினர்கள் எண்ணிக்கை:

பிரதேசசபையின் உறுப்பினர் எண்ணிக்கை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாணசபை அமைச்சரினால் வர்த்தமானியில் வெளியிடப்படும். விடேச கட்டளையொன்றினால் தீர்மானிக்கப்படும்.

தெரிவு:

உறுப்பினர்கள் பிரதேசசபை வாக்காளர்களினால் விகிதாசார தேர்தல் முறையின் கீழ் தெரிவுசெய்யப்படுவர். சபையில் அதிக ஆசனங்களைப் பெறும் கட்சி அல்லது குழு ஆட்சி அதிகாரத்தைப் பெறும் அதிகாரத்திற்கு வரும் கட்சி அல்லது குழுவிலிருந்து தவிசாளர், துணைத் தவிசாளர் தெரிவுசெய்யப்படுவர்.

பதவிக்காலம்:

தேர்தல் முடிந்து பதவியேற்ற நாளிலிருந்து 4 வருடங்களாகும். இக்காலகட்டத்தினைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ அமைச்சருக்கு அதிகாரமுண்டு.
(1995ம் ஆண்டில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி தேர்தல் 1997ல் நடைபெற்றதைக் கொண்டு இதனை உறுதிப்படுத்தலாம்.)

தவிசாளரும், துணைத் தவிசாளரும்:

தவிசாளர் சபையின் நிறைவேற்று அலுவலராவார்.
சட்டத்தின் மூலம் அல்லது வேறு ஏதேனும் எழுத்திலான சட்டத்தின் மூலம் ஒரு பிரதேச சபையினரால் செய்யப்பட்ட வேண்டிய நிறைவேற்றப்பட வேண்டியவையெனப் பணிக்கப்பட்ட செயல்கள், பொறுப்புக்களுக்கு தவிசாளருக்கு இருக்கும் அதிகாரத்தைச் கொண்டு செய்யலாம்.

தவிசாளரின் அதிகாரங்கள், கடமைகள், பொறுப்புக்கள் என்பவற்றை எழுத்திலான கட்டளைகள் மூலம் துணைத் தவிசாளருக்கு வழங்கலாம்.

பிரதேசசபைக் குழுக்கள்:

பின்வரும் நோக்கங்களுக்காகப் பிரதேசசபைக் குழுக்கள் அமைக்கப்படலாம்.

நிதி கொள்கைகள் உருவாக்கம்.

வீடமைப்பு சமூகசேவை உருவாக்கம்

தொழில்நுட்ப சேவைகள் வழங்கல்

சுற்றாடலும் வாழ்க்கை வசதிகளும்

பிரதேச சபைகளின் அதிகாரங்கள்:

தனக்குப் பொருத்தமான பதவிகளை உருவாக்கல்
பிரதேச சபையின் சேவையிலுள்ள ஏதேனுமொரு பதவிக்கு அல்லது உத்தியோகத்திற்கான நியமனங்களைச் செய்தல்.
சேவையை விட்டும் அகற்றுதல்

பிரதேச சபையிலிருந்து இளைப்பாறுபவர்களின் ஓய்வுதியத்தை வழங்குதல்

தனது சேவைகளைச் செய்ய வேறு பிரதேச சபைகளுடன் அல்லது உள்ளூராட்சி அமைப்புக்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளல்.

சபையின் இடப்பரப்பிலுள்ள அசையும் அசையா ஆசனங்களையும், சொத்துக்களையும் உரித்தாக்கல் (அமைச்சரின் அனுமதியுடன்)

காணி, கட்டிடங்கள் என்பவற்றைக் கொள்வனவு செய்தல், குத்தகைக்கு விடுதல்

படகுச் சேவைகளை தாபித்தல்

வேலைவாய்ப்புத் திட்டங்களை ஒழுங்குபடுத்தல்

பிரதேசப் பாடசாலைகளைத் திருத்தல், மூடுதல், பெயர்சூடல், தரம் உயர்த்துதல்

தனது நிதியத்தில் ஒரு பாகத்தை மகளிர் சிறுவர் நலனோம்பும் சேவைகளுக்கு ஒதுக்குதல் (உதாரணமாக சுகாதார வசதிகள்)

நிதியத்தின் ஒரு பகுதியைக் கிராம அபிவிருத்திக்கு ஒதுக்குதல்

சமய, கலாசார இலக்கிய விழாக்களை ஒழுங்கு செய்தலும், பரிசில்களை வழங்குதலும்

மகளிர் அபிவிருத்தி

ஏழை நிவாரணம்

இது போன்ற 24 திட்டங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

⭕ *முக்கிய அறிவித்தல் 2025*நடைபெற்று முடிந்த GCE OL விஞ்ஞான வினாத்தாள் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்ட அவசர அறிவிப்பு* ...
23/03/2025

⭕ *முக்கிய அறிவித்தல் 2025*

நடைபெற்று முடிந்த GCE OL விஞ்ஞான வினாத்தாள் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்ட அவசர அறிவிப்பு*

> 23.03.2025

*Full Details*

NOTICE REGARDING GCE OL SCIENCE PAPER_EDU MINISTRY

Address

Mavili/Periyathurai Road, Delft 12
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Delft Reporter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Delft Reporter:

Share