Marainathi Jaffna Diocese

Marainathi Jaffna Diocese This is an official Page run by the diocesan commission for social communication - Jaffna Diocese
(1)

18/08/2026
https://youtu.be/eqknGKhAjYc
17/08/2026

https://youtu.be/eqknGKhAjYc

#பிரத்தியேக நேர்காணல் - பேரருட்தந்தை அருள்செல்வம் இராயப்பன் - #சேலம...

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமனம்பெற்றுள்ள பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின்  பணிப்பொறுப்பே...
16/08/2026

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமனம்பெற்றுள்ள பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு திருப்பலி இம்மாதம் 26ஆம் திகதி புதன்கிழமை யாழ். புனித மரியன்னை பேராயலத்தில் நடைபெறவுள்ளது.

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் ஆயர் அவர்கள் வரவேற்கப்பட்டு, பவனியாக அழைத்துவரப்படவுள்ளார்.

தொடர்ந்து, புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதுடன், இத்திருப்பலியில் ஆயர் அவர்கள் யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தமது பணிப்பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்கவுள்ளார்.

இலங்கை அரச படையினரால் அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்...
16/08/2026

இலங்கை அரச படையினரால் அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஆவணி மாதம் 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக அங்கு அனுஸ்டிக்கப்பட்டது.

பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகவணக்கத்துடன் பொதுச்சுடரேற்றப்பட்டு மலரஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து பங்குத்தந்தை தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

2006ஆம் ஆண்டு நிலவிய போர்ச்சூழல் காரணமாக பிலிப்பு நேரியார் ஆலயத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் தஞ்சமடைந்திருந்த மக்களை இலக்குவைத்து ஆவணி மாதம் 13ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதுடன், 54 பேர் காயமடைந்தனர்.

அப்போது பங்குத்தந்தையாகப் பணியாற்றிய அருட்தந்தை திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் அவர்கள், காயமடைந்த மக்களை சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கும், அல்லைப்பிட்டியில் தங்கியிருந்த மேலும் 300 குடும்பங்களை ஊர்காவற்றுறையில் உள்ள புனித மரியன்னை ஆலயத்திற்கும் அனுப்பிவைத்தார்.

இத்தாக்குதல் இடம்பெற்று ஒரு வாரத்தின் பின்னர், ஆவணி மாதம் 20ஆம் திகதி, அருட்தந்தை ஜிம் பிறவுண் அவர்களும் அவருடன் பயணித்த திரு. வின்சன் விமலதாஸ் அவர்களும் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

இவர்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் இதுவரை வெளிப்படுத்தப்படாத நிலையில், அவர்களின் நிலை குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் 52 ஆவது நாளான நேற்றைய தினம்...
16/08/2026

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் 52 ஆவது நாளான நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை 02 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 07 என்புத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை இடம்பெற்ற அகழ்வுப்பணிகள் நிறைவில் 554 என்புத்தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டு 547 என்புத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அண்மையில் நடைபெற்ற அகழ்வுப்பணிகளில் சிறுவர்கள் குழந்தைகளின் என்புத்தொகுதிகள் உட்பட தலையில்லாத என்புத்தொகுதியொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு சிலாவத்தை சுவாமிதோட்ட வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மொண்போர்ட் சர்வதேச பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் ...
16/08/2026

முல்லைத்தீவு சிலாவத்தை சுவாமிதோட்ட வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மொண்போர்ட் சர்வதேச பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆவணி மாதம் 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் மரிய பிரகாசம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய பாடசாலைக்கான அடிக்கல்லை ஆசீர்வதிக்க உரோமை நகர் புனித கபிரியேலின் மொண்போர்ட் சபை துணைத்தலைவர் அருட்சகோதரர் பிரதாப் ரெட்டி, சபை திருச்சி மாகாண முதல்வர் அருட்சகோதரர் ஜோண் பிரிட்டோ ஆகியோர் இணைந்து நாட்டிவைத்தனர்.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம், அருட்தந்தையர்கள், புனித வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள், குளுனி அருட்சகோதரிகள், திருக்குடும்ப அருட்சகோதரிகள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கலந்துகொண்டனர்.

யாழ். திருமறைக்கலாமன்ற கலாமுற்றத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான தியானமும் யோகா பயிற்சியும் ஆவணி மாதம் 10ஆம் திகதி கடந...
16/08/2026

யாழ். திருமறைக்கலாமன்ற கலாமுற்றத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான தியானமும் யோகா பயிற்சியும் ஆவணி மாதம் 10ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

காலாமுற்ற பொறுப்பாளர் திருமதி ஜெயபிரபா ஜஸ்ரின் ஜெலூட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வை யாழ். திருமறைக்கலாமன்ற உதவி நிர்வாக இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.

கலாமுற்ற யோகா பயிற்றுவிப்பாளர் திரு. அச்சுதன் அவர்கள் நெறிப்படுத்திய இப்பயிற்சியில் 75 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

எழுவைதீவு றோ.க பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 06ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது...
16/08/2026

எழுவைதீவு றோ.க பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 06ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திரு. ஜெயராம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்கள் பாண்ட் வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு பாடசாலை வளாகத்தில் தேசிய மற்றும் பாடசாலை கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன.

தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் கலைநிகழ்வுகளும் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்கள் பிரதம விருந்தினராகவும் எழுவைதீவு பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுஸன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டதுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்களென பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

புதுக்குடியிருப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட தாத்தா - பாட்டியர் தின சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழ...
16/08/2026

புதுக்குடியிருப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட தாத்தா - பாட்டியர் தின சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித சூசையப்பர் ஆலய முன்றலில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிளறேசியன் சபை அருட்தந்தை வரதன் குலாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலைப் பவனி, மகிழ்வூட்டல் நிகழ்வுகள், விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள், ஆடல் பாடல், அனுபவ பகிர்வு, இரவு உணவு என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 200 வரையான தாத்தா பாட்டியர் பங்குபற்றியிருந்தனர்.

யாழ். அகவொளி உள ஆற்றுப்படுத்தல் நிலையத்தினால் கிளிநொச்சி வேம்பொடுகேணி இலங்கைத் திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை ஆசிரியர்கள...
16/08/2026

யாழ். அகவொளி உள ஆற்றுப்படுத்தல் நிலையத்தினால் கிளிநொச்சி வேம்பொடுகேணி இலங்கைத் திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் 6-11ஆம் தர மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட உள ஆற்றுப்படுத்தல் செயலமர்வு ஆவணி மாதம் 06ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் திரு. வினோதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை டேவிட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகவொளி குடும்பநல நிலைய உதவி இயக்குநர் அருட்தந்தை ஜெறாட், மல்வம் - உடுவில் பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற், திருமதி நித்தினா அகியோர் வளவாளர்களாக கலந்து ஒழுக்கமும் அடிப்படை நன்னடத்தையும்: மரியாதை, பொறுப்புணர்வு மற்றும் நேர்மறை நடத்தை: சுய ஒழுக்கமும் தனி மனித வளர்ச்சியும்: தலைமைத்துவம், ஆளுமை மற்றும் சமூக நன்னடத்தை: ஒழுக்கத்தை மேம்படுத்தல் மனநல நலனைக் காத்தல் மற்றும் மீளெழும் திறனை வளர்த்தல்: நேர்மறை ஒழுக்கம் மற்றும் நேர்மறை நடத்தையின் மூலம் மாணவர்களை வழிநடத்துதல் போன்ற தலைப்புக்களின் கீழ் மாணவர்களையும் ஆசிரியர்களையும் வழிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 105 மாணவர்களும் 20 ஆசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

Address

MARAINATHI Catholic Media Centre
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Marainathi Jaffna Diocese posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Marainathi Jaffna Diocese:

Shortcuts

Share