21/04/2025
🫵தேவைப்படும்போது உதவி பெறுவதை அவமானமாக கருதுகின்றனரா உங்கள் பிள்ளைகள்.. அப்படியானால் இப் பதிவு உங்களுக்காகத்தான்‼️
👉வாழ்க்கை என்பது யாருக்கும் எளிதல்ல. சில சமயங்களில் நாம் பிரச்சனைகளால் சூழப்பட்ட இடங்களில் கூட வாழ நேரிடலாம். ஆனால் அந்த இடங்களிலிருந்து கூட ஒளிரும் ஒளிக்கற்றைகள் பிறக்க முடியும். அந்த ஒளிக்கற்றைகளை வளர்க்கும் கரங்களில் ஒன்று “உதவி”.
👉வாழ்க்கையில் பல தருணங்களில் நாம் மனமுடைந்து விடக்கூடும். நம்மால் முடியாது என எண்ணும் சந்தர்ப்பங்களில், ஓர் அன்பான கை நம்மை தூக்கி நிறுத்தும். அந்த உதவியே நம்மை உயர்த்தும் பாலமாக அமையும்.
👉நான் யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியில் விஞ்ஞான ஆசிரியராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினேன். அங்குள்ள மாணவர்கள் பலரும் ஏழ்மை, பெற்றோர்களின் பாசமின்மை, சமூக சவால்கள் ஆகியவற்றால் சிக்கியிருந்தனர்.
அங்கு ஒரு சிறுவன் – ஓர் ஏழை குடும்பம், ஆனால் உள்ளுக்குள் கனவுகளால் நிரம்பியவனாக இருந்தான். ஒரு நாள் அவன் என்னிடம் வந்து,சேர் எனக்கு அம்மா இல்லை.. அப்பா மட்டுமே .. அவரும் கூலி தொழிலாளி.. வீட்டு வறுமையால் நான் கல்வியை விட்டுவிட வேண்டிய நிலை” என்றான்.
👉அந்த நொடியில் என் உள்ளத்தில் தடுமாற்றம். அவனுக்கான தேவையை ஒரு சிறிய உதவியாக செய்தேன் வெளி நாட்டில் வதியும் ஒருவரிடம் அவனை தொடர்புகொள்ள செய்து அவனுக்கு , ஆலோசனையும், வழிகாட்டலையும் கொடுத்தேன்.
👉சில வருடங்கள் கழித்து, அவன் தனது கல்விக்காலத்தை முடித்து வெளி நாடு சென்றான்.. பின்னர் ஏழை மாணவர்களுக்கு தனது ஊரில் இலவச வகுப்புகள் நடத்திக் கொண்டு இருந்தான். ஒரு நாள் அவனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு, “சேர், நீங்க எனக்குக் கொடுத்த அந்த அன்பும் அவ் நேர உதவியாலுமே நான் பல உயிர்களுக்கு வாழ்க்கைகான ஒளி கொடுக்கிறேன்” என்றான்.
👉அன்று அவன் தனது தேவையினை யாரிடமும் சொல்லாத நிலை இருந்திருந்தால் இன்று அவன் அவ் நிலையினை அடைந்திருப்பானா என்பது சந்தேகம் தான்.. பாடசாலை கல்வியினை இடை நிறுத்தி சிறுவயதில் தொழிலை தேடி பல இடங்களில் தவறான நபர்களின் சேர்க்கையினால் பிழையான திசையில் செல்லக்கூடிய நிலையும் ஏற்பட்டிருக்கலாம்
👉இதுவே மனிதநேயத்தின் மெய்சாதனை. உதவி பெறுவது தவறல்ல. ஆனால் அந்த உதவியால் உயர்ந்த பிறகு, மறக்காமல் பிறருக்கும் அந்த ஒளியை பகிர்வதுதான் உண்மையான வெற்றி.
✅✅பெற்றோர்களுக்கான சில வார்த்தைகள்:
உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொந்தமாக வழங்க முடியாத உதவிகளை யாராவது தருகிறார்கள் என்றால் தயங்காதீர்கள். அதை ஏற்கச் சொல்லுங்கள். அந்த உதவிகள் ஒருநாளில் உங்கள் பிள்ளையை மட்டும் அல்ல, பல பிள்ளைகளின் வாழ்க்கையையும் மாற்றும். அவர்கள் வெற்றி பெறும்போது, அன்பும் பண்பும் கற்றுக் கொடுத்தீர்கள் என்ற பெருமை உங்களுக்கே வரும்.
உதவியால் உயர்ந்து பிறருக்கு உதவ வைக்கும் ஒரு தலைமுறையை நாம் உருவாக்குவோம். அந்த மாற்றம் உங்கள் குடும்பத்தில் இருந்தே துவங்கட்டும்.
உதவி என்பது நேர்மறையான உறவுகளை உருவாக்கும் பாலமாக செயல்படுகிறது. உதவி பெறும் போது, நன்றி உணர்வு உருவாகிறது; இது, பிறகு, உதவியை திருப்பி வழங்கும் எண்ணத்தை உருவாக்குகிறது. உதவி பெறும் அனுபவங்கள், மனிதாபிமானம், கருணை, மற்றும் பொறுப்புணர்வு போன்ற பண்புகளை வளர்க்கின்றன.
நாம் பெற்ற உதவிக்கு நன்றி செலுத்தும் ஒரே வழி – அதை மற்றவர்களிடம் பகிர்வதே. நாம் பெற்ற வெளிச்சத்தை இன்னொருவரின் இருட்டில் ஒளிர வைக்கவேண்டும். அப்போதுதான் உண்மையான மனிதத்துவம் வளர்கிறது.
உதவியால் உயர்ந்தவர்கள், பிறர் உயரவும் உதவ வேண்டும். இது ஒரு வட்டமாகவே திகழ வேண்டும் – உதவி பெறுதல், வளர்ச்சி, பிறகு மீண்டும் உதவுதல். இதுவே மனித சமூகத்தின் அடிப்படை நெறி.
‼️ஆசிரியர்களே மாணவர்களுக்கான வழிகாட்டுதலை இப்படியும் மேற்கொள்ளலாம்
மாணவர்களிடம் உதவியின் மதிப்பை உணர்த்த, பின்வரும் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்:
• உதவியின் அனுபவங்களை பகிர்வு: மாணவர்கள் தங்கள் உதவி பெற்ற அனுபவங்களை வகுப்பில் பகிர்ந்து கொள்ளலாம். இது, உதவியின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்ள உதவும்.
• சிறிய சேவைகள் செய்ய ஊக்குவித்தல்: பள்ளி அல்லது சமூகத்தில் சிறிய சேவைகள் செய்ய மாணவர்களை ஊக்குவிக்கலாம். உதாரணமாக, மூத்தவர்களுக்கு உதவி செய்யுதல், சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துதல் போன்றவை.
• மாதிரி நபர்களை அறிமுகப்படுத்துதல்: சமூகத்தில் உதவி பெற்றுப் பின்னர் பிறருக்கு உதவிய நபர்களின் கதைகளை அறிமுகப்படுத்தலாம். இது, மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்.
உதவி பெறுவது தவறல்ல. ஆனால் அதனை நம் வளர்ச்சிக்கு அடியாக மாற்றி, பிறர் வாழ்க்கையிலும் ஒளி வீசும் கடமையை ஏற்றுக்கொள்வோம். இதுவே ஒரு உண்மையான மனிதனின் அடையாளமாக அமையும்.
சி.ரவிச்சந்திரன்
விஞ்ஞான ஆசிரியர்
பரீட்சைக்காலத்தினை சிறப்பாக எதிர்கொள்வதற்கான கல்வியை எமது YouTube தளத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள் உங்கள் ஆதரவுகளை இன்றுபோல் என்றும் தொடர எமது YouTube channel இனை subscribe செய்ய மறவாதீர்கள்
தரம் 6 காணொளிகளின் தொகுப்பு -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePXWZ1Ew1FqKlSomlVVKElmx
தரம் 7 காணொளிகளின் தொகுப்பு -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePXeUjszRK9FQ3dd0sog-B9s
தரம் 8 காணொளிகளின் தொகுப்பு -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePUCghkpNOU-ZvcVmcY1CS7Q
தரம் 9 காணொளிகளின்தொகுப்பு -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePXOCSKE57GBSs8wjES4jatN
தரம் 10 காணொளிகளின் தொகுப்பு -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePWkYCd8rsLqcftmhZZq30yB
தரம் 11 காணொளிகளின் தொகுப்பு -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePXrjndFjqjp8Nq2ajH9U0gL
போட்டிப்பரீட்சைகளில் வினவப்படும் விஞ்ஞான பொது அறிவு தகவல்கள் தொகுப்பு -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePVuuZ2w4RsNDXNCv9LJmRdX
பரீட்சைகளில் வினவப்படும் விஞ்ஞான விளக்கங்களின் தொகுப்பு-https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePVDjXAAldwHc116G85KsZwD
தரம் 6-11 வரையான பரிசோதனைக்காணொளி-https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePWhJGVd0JdgJ7QbOG4kK80c
தரம் 10,11 உயிரியல் -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePXt6uMfLfzDopBArtGnuop1
தரம் 10,11 பெளதீகவியல் -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePWF0HqnzMTJVv012P-3TXFv
தரம் 10,11 இரசாயனவியல் -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePWjv5J3uvJEYPdA_8f28z4N
தரம் 10 பரிசோதனை காணொளிகளின் தொகுப்பு -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePUk9Eq84IbNPDQNGfhzLFVI
இலங்கையின் பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலங்கள் -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePXe7eKTrahD_ULnejNLpgAa
வீட்டிலிருந்தே சுலபமாக கற்கும் நுட்பங்கள் -https://youtube.com/playlist?list=PLFHA4FTGZePVJGDLAK1mWdPemrwI_VV_O
போதிய ஆய்வுகூட, ஆளணி வளங்கள் இன்றி கல்விக்காக ஏங்கும் எம் சிறார்களிடம் இத் தொகுப்பை கொண்டு சேர்ப்பதற்காக பலரின் உழைப்பில் உருவான இக் காணொளிகளின் தொகுப்பை Whatsup , viber , Facebook குழுக்களில் இதனை share செய்ய மறக்காதீர்கள்