Yarldevinews

Yarldevinews Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Yarldevinews, News & Media Website, Jaffna.

01/08/2026

🚨Breaking
ராகம பொலிஸ் பிரிவில் உடனடி பொலிஸ் ஊரடங்கு!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சம்பவத்தைத் தொடர்ந்து, ராகம பொலிஸ் பிரிவு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை உடனடி அமலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பொதுமக்கள் தேவையற்ற வகையில் வெளியே செல்லாமல், பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

மஹர சிறைச்சாலை மோதலில் கைதி ஒருவர் உயிரிழப்பு,6 பேர் ராகம வைத்தியசாலையில் அனுமதி..!!! 👇https://www.yarldevinews.net/2026...
01/08/2026

மஹர சிறைச்சாலை மோதலில் கைதி ஒருவர் உயிரிழப்பு,6 பேர் ராகம வைத்தியசாலையில் அனுமதி..!!! 👇

https://www.yarldevinews.net/2026/08/6.html

10.07.2026 வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணி2026/2027 எல்நினோ நிகழ்வவைப் பொறுத்தவரை இன்றைய நாள் மிக முக்கியமான ஒரு நாள். ஏனென...
10/07/2026

10.07.2026 வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணி

2026/2027 எல்நினோ நிகழ்வவைப் பொறுத்தவரை இன்றைய நாள் மிக முக்கியமான ஒரு நாள். ஏனெனில்.................

1. பசுபிக்கின் நினோ குறிகாட்டி 3.4 பிராந்தியத்தில் இன்றைய தினம் வெப்பநிலை 1.44 பாகை செல்சியஸ் என்ற வகையில் அதிகரித்துள்ளது.

2. இன்றைய தினம் அயனப் பசுபிக் சமுத்திரப் பிராந்தியத்திலிருந்து சமுத்திர வெப்பநிலை ஆபிரிக்கா மற்றும் இந்துசமுத்திரப் பிராந்தியம் நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

3. மிக வலுவான எல்நினோவின் உருவாக்கம் உறுதியாகியுள்ளது.

4. கடந்த 1876ம் ஆண்டின் பின் உருவாகும் சூப்பர் எல்நினோ இதுவாகும்.

5. கடந்த 75 ஆண்டுகளில் இது 7வது எல்நினோ நிகழ்வு ஆனால் முதலாவது சூப்பர் எல்நினோ.

6. உருவாகியுள்ள சூப்பர் எல்நினோ இலங்கைக்கு வரட்சி மற்றும் வெள்ளம் என இருவகையான பாதிப்புக்களையும் உருவாக்கும்.

7. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட இலங்கைக்கு ஜுலை மாதம் முதல் செப்டம்பர் வரை அதிக சமுத்திர மற்றும் நில வளிமண்டல வெப்பநிலை ± 2.5 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

8. ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மிக அதிக, செறிவான மழைவீழ்ச்சி மிகக் குறுகிய நாட்களில் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் வெள்ள அனர்த்த நிகழ்வுகள் பெரும் பாதிப்புக்களை உருவாக்கும் வாய்ப்புள்ளது.

9. மீண்டும் 2026 டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதி முதல் 2027 ஜுன் வரை அதிக வெப்பநிலை ± 3.2 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

10. எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் ஆரம்பம் முதல் 2027 ஜுன் மாதத்தின் இறுதிவரை இலங்கையின் விவசாயம் மற்றும் மீன்பிடிச் செயற்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன.

11. இலங்கை ஒன்றுக்கொன்று முரணான, ஆனால் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இரண்டு வேறுபட்ட தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ள வேண்டும்.

12. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஜுலை மாதமே அதிகூடிய வெப்பநிலை (Hotest Month)கிடைக்கும் மாதம். ஆனால் இவ்வாண்டு ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்கள் அதிகூடிய வெப்பநிலை மாதங்களாக இருக்கும். அதேவேளை கனமழை கிடைத்து வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டாலும் இவ்வாண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் அதிகூடிய சமுத்திர வெப்பநிலை மற்றும் நில வளி வெப்பநிலை மிக மிக உயர்வாக இருக்கும்.

13. இம்முறை தென்மேற்கு பருவக்காற்று மூலம் இலங்கைக்கு கிடைக்கும் மழையின் சராசரியின் 60 முதல் 70 வீதமே கிடைக்க வாய்ப்புள்ளது.

14. வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கடந்த 60 நாட்களில் சராசரியாக 12 மி.மீ. மழையே கிடைத்துள்ளது. ஆனால் இந்த 60 நாட்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சராசரியாக 287 மி.மீ ஆவியாக்கம் நிகழ்ந்துள்ளது. இக்காலப்பகுதியில் அதிக வெப்பநிலை இல்லையாயினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தற்போது வீசுகின்ற வரண்ட தென்மேற்கு பருவக்காற்று அதிக ஆவியாக்கத்தைத் தூண்டியுள்ளது. தற்போது அதிக வெப்பநிலையும் கிடைக்க தொடங்கியுள்ளது. எல்நினோவும் உச்சமடையவுள்ளது.

15. எல்நினோ ஒரு இயற்கையான நிகழ்வு. இதனை நாம் தடுக்க முடியாது. ஆனால் போதுமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் திட்டமிட்ட தயார்ப்படுத்தல்கள் மூலம் இதனை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.

- நாகமுத்து பிரதீபராஜா -

08/07/2026

அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது கடுமையான தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமுலில் இருந்த போர்நிறுத்தமும் இடைக்கால ஒப்பந்தமும் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.


08/07/2026

முன்னாள் அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

08/07/2026

🚨 மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தீவிரம்

🔹 ஹோர்முஸ் நீரிணையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரானின் பல நகரங்களை இலக்காகக் கொண்டு பதிலடி தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை தலைமையகம் (CENTCOM) அறிவித்துள்ளது.

🛢️ இதன் தாக்கமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் (Crude Oil) விலை சுமார் 3% வரை உயர்ந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

📌 மேலும், ஈரான் மசகு எண்ணெயை விற்பனை செய்ய வழங்கப்பட்டிருந்த பொது அனுமதிப்பத்திரம் (General License) 2026 ஜூலை 8 முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க திறைசேரி திணைக்களம் அறிவித்துள்ளது.

06/07/2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று இடம்பெற்ற மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு : மேலதிக பாதுகாப்பிற்காக இராணுவ வீரர்கள் களமிறக்கம்

எல்-நினோ நிலைமையின் கட்டுப்பாட்டையும் மீறி இந்து சமுத்திரம் இயங்க ஆரம்பித்திருக்கிறது. கிழக்கிந்திய பெருங்கடலில் பூமத்தி...
04/07/2026

எல்-நினோ நிலைமையின் கட்டுப்பாட்டையும் மீறி இந்து சமுத்திரம் இயங்க ஆரம்பித்திருக்கிறது. கிழக்கிந்திய பெருங்கடலில் பூமத்திய ரேகைக்கு கீழே உருவாகியிருக்கும் சுழற்சியானது இதனை குறிகாட்டி நிற்கிறது.

குறித்த சுழற்சியானது மேற்கு நோக்கி ஈர்க்கப்படும் Jet Stream அலையின் செல்வாக்கை அதிகரிக்கப்பதோடு, தென்மேற்கு வங்காளவிரிகுடாவில் ஒடிசா மாநிலம் அருகே நீடித்துக்கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் தீவிரம் பெற வழிசெய்கிறது.!

இதன் விளைவாக, இந்தியாவின் மும்பை மாநகரம் உள்ளடங்கலான மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஒடிசா, கொல்கத்தா உள்ளிட்ட கிழக்கு இந்திய பகுதிகளிலும் அடுத்துவரும் 48 மணிநேரங்களில் பாரிய வெள்ள அனர்த்தத்துக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Red 🔴 alert for

இலங்கையில் காலி, கொழும்பு,கம்பஹா மற்றும் நுவரெலியா கண்டி ஹட்டன் உள்ளிட்ட மத்திய மலைநாட்டு பகுதிகளிலும் மிதமான மழையுடனான வானிலை எதிர்வுகூறப்படுகிறது.

வடக்கில் மேகமூட்டம் மற்றும் பருவக்காற்றின் தீவிரம் தொடர்ந்தும் காணப்படுவதுடன் கிழக்கு உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் சற்று அதிகரித்த வெப்ப நிலையும் பதிவாகக்கூடும்.

04.07.2026 - 04.00PM

- Senthil Kumaran -

03/07/2026

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ கேஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது.

👉12.5 கிலோ ரூ. 300 குறைந்து
ரூ. 4,465 ஆகவும்,

👉5 கிலோ ரூ. 118 குறைந்து
ரூ. 1,792 ஆகவும்,

👉2.3 கிலோ ரூ. 55 குறைந்து
ரூ. 835 ஆகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
- லிட்ரோ கேஸ்.

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when Yarldevinews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share