New Lanka

New Lanka New Lanka is are sri lankan Based Registered Online Media News Company The Official New Lanka Media page
(240)

குரு பகவான் தற்போது தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பலவீனமாக பயணித்து வருகிறா...
08/08/2026

குரு பகவான் தற்போது தனது உச்ச ராசியான கடக ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பலவீனமாக பயணித்து வருகிறார். இந்நிலையில் குரு பகவான் ஆகஸ்ட் 10 ஆம் திகதி கடக ராசியில் உதயமாகவுள்ளார். கடக ராசியில் குரு பகவான் இருப்பதால், ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகியுள்ளது.

குரு பகவான் கடக ராசியில் உதயமாவதால் வலுவடைந்து சில ராசிக்காரர்களுக்கு இருமடங்கு நன்மைகளை வழங்கவுள்ளார். இப்போது குரு பகவான் கடக ராசியில் உதயமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 10 முதல் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணியிடத்தில் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குரு பகவானின் அருளால் நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல நேர்மறையான பலன்களைப் பெறுவீர்கள். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்கும், அரசு பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில்...
08/08/2026

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்கும், அரசு பகுப்பாய்வாளர் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் தாமதத்தைத் தவிர்ப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில்,இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளிப்பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசு பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமானதால் விளக்கமறியலில் உள்ள கைதிகள் பிணை பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில், அதனை நிவர்த்தி செய்ய 70 புதிய பணியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய நவீன இயந்திரங்களும் கொண்டுவரப்படவுள்ளன.

இதன் மூலம் மாதமொன்றிற்கு 7,500 முதல் 9,000 வரையிலான அறிக்கைகளை விரைவாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் தொடர்பான சட்டத் திருத்தங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், மேல்நீதிமன்றங்கள் மூலமாகவே விரைவாக பிணை பெறும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படவுள்ளது.

எனவே, சிறைச்சாலைக்குள் ஒரு சிலர் ஏற்படுத்தும் வன்முறைகளுக்கோ அல்லது சதித்திட்டங்களுக்கோ பலியாகாமல் பொறுமையுடன் செயற்படுமாறும், அரச உடைமைகளுக்கோ அல்லது சிறைச்சாலைச் சொத்துக்களுக்கோ சேதம் விளைவிக்க வேண்டாம் என்றும் கைதிகளிடம் தெரிவித்துக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களைப் பரிந்த...
07/08/2026

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும், அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கான சட்டமூலத்தை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

இன்று (7) வெளியான இந்த விசேட வர்த்தமானியின்படி,

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது 67 ஆண்டுகளாகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது 65 ஆண்டுகளாகவும் உயர்த்தப்படும்.

மேலும், பிரதம நீதியரசர் தனது 67ஆவது வயதை எட்டும் போதோ அல்லது ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த பிறகோ, இவ்விரண்டில் எது முதலில் நிகழ்கிறதோ அதன்படி ஓய்வு பெறுவார் என்றும் இந்த சட்டமூலம் குறிப்பிடுகிறது.

இந்த முன்மொழியப்பட்ட திருத்தம், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை 19இலிருந்து 24ஆக உயர்த்தவும் கோருகிறது.

அரசியலமைப்பின் இருபத்தி இரண்டாவது திருத்தம் எனப் பெயரிடப்பட்ட இந்த சட்டமூலத்தை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் வெளியிடுமாறு உத்தரவிட்டார்.

See less

யாழ்.பல்கலைக்கழக இசைத்துறை மாணவி நிரோஷினி திடீர் மறைவு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறை மாணவி ந...
07/08/2026

யாழ்.பல்கலைக்கழக இசைத்துறை மாணவி நிரோஷினி திடீர் மறைவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறை மாணவி நிரோஷினி புதன்கிழமை (05.08.2026) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 😔

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்...
07/08/2026

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகின்றது.

சில கைதிகள் பிரதான கதவை முற்றுகையிட்ட சூழ்ந்துள்ள காட்சிகளும் வெளியாகியுள்ளன.நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

குறித்த சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவுக்கு அருகில் பெருந்திரளான கைதிகள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அதிகளவான பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் சிலர் பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

See less

மட்டக்களப்பு – வெல்லாவெளி 35ஆம் கொலனி பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது பெண்கள்...
07/08/2026

மட்டக்களப்பு – வெல்லாவெளி 35ஆம் கொலனி பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிடச் சென்ற பொலிஸார் மீது பெண்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதில் இரு பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான 7 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் ஜீப் வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்று இரவு 7 மணியளவில் குறித்த இடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது, அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களின் உறவினர்கள் எனக் கூறப்படும் பெண்கள் உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவினர் பொல்லுகளால் பொலிஸாரை தாக்கி, முற்றுகை நடவடிக்கையை தடுக்க முயற்சித்துள்ளனர்.

தாக்குதலில் இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பொலிஸார் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து மேலதிக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

See less

07/08/2026

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள NOLIMIT காட்சியறை வாகனத் தரிப்பிடப் பகுதிகளில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலித்தீன் குப்பைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

கொட்டப்பட்டுள்ள கழிவுகள் சில இடங்களில் தீ வைத்து எரிக்கப்படுவதாகவும், இதனால் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்களின் உடல்நலனுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்தக் கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படும் காட்சிகள் வீடியோ ஆதாரங்கள் மூலமாகவும் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, கழிவுகளை அகற்றுவதுடன், இனி இதுபோன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஒரு கிரகம் மற்ற கிரக...
07/08/2026

ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் தொடர்ந்து தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஒரு கிரகம் மற்ற கிரகத்துடன் இணையும் போது அவை சக்திவாய்ந்த ராஜயோகங்களை உருவாக்குகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் சக்திவாய்ந்த பல ராஜயோகங்கள் உருவாகிறது. ஜோதிடத்தின்படி, 'மகாலட்சுமி ராஜயோகம்' என்பது மிகவும் மங்களகரமான கிரக அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த யோகம் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்குப் பொருளாதார ஆதாயம், தொழில் முன்னேற்றம், அங்கீகாரம் மற்றும் வெற்றியைத் தரக்கூடும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு, அவர்களின் சொந்த ராசியில் 'மகாலட்சுமி ராஜயோகம்' உருவாகிறது. இதனால் அவர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி மற்றும் வணிக முன்னேற்றத்தைக் கொண்டுவரும். இந்த யோகத்தால் அவர்களின் பல கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது. நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வரும். அவர்களின் முயற்சிகள் அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும். பெற்றோரின் ஆசீர்வாதத்தால் அவர்கள் பல சாதனைகளை அவர்கள் செய்யலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் வலுவாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இந்த சக்திவாய்ந்த கிரக அமைப்பின் மூலம் வலுவான நிதி நிலை மற்றும் புதிய வருமான வழிகளைப் பெறக்கூடும். இந்த யோகத்தால் அவர்களின் செயல்திறன் மற்றும் நம்பிக்கை இரண்டும் பன்மடங்கு அதிகரிக்கப் போகிறது. வேலையில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் சிறப்பாக செயல்பட பொருத்தமான வாய்ப்புகளைப் பெறுவார்கள், மேலும் மூத்த அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். இந்த மகாலட்சுமி யோகம் வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக நீங்கள் நிலம், சொத்து அல்லது கட்டிடம் தொடர்பான வேலைகளைச் செய்பவர்கள் பெரிய லாபத்தை எதிர்ப்பார்க்கலாம். பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரிய லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த காலம் பொன்னான வாய்ப்புகளைத் தரும், மேலும் வெற்றிக்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு, மகாலட்சுமி ராஜயோகம் நிதி ஆதாயங்களையும் ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றத்தையும் கொண்டுவரக்கூடும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் அவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், மேலும் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாட்டுப் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகலாம். அவர்களின் காதல் வாழ்க்கை இந்த காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும், மேலும் சிங்கிளாக இருப்பவர்கள் அவர்கள் தேடிக்கொண்டிருந்த சரியான துணையைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை சரியான திட்டமிடல் மற்றும் குடும்பத்தினரின் உதவி மூலம் தீர்த்து வைப்பார்கள். அவர்களின் கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு பணியிடத்தில் பாராட்டுகளும், அங்கீகாரமும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.

மக்களே எச்சரிக்கை🚨- முடிந்தவரை பகிருங்கள் ✅எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்ட...
07/08/2026

மக்களே எச்சரிக்கை🚨- முடிந்தவரை பகிருங்கள் ✅

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், அதற்கமைய இன்று (07) பல பிரதேசங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடுவதுடன், அப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 - 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் உள்ளூர் சிறு வியாபாரிகள் கடும...
07/08/2026

யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் உள்ளூர் சிறு வியாபாரிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் தகவலின்படி, வலிகாமம் வடக்கு பகுதியில் இன்னும் விடுவிக்கப்படாமல் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் பூர்வீகக் காணிகளில் மேற்கொள்ளப்படும் விவசாயப் பயிர்ச்செய்கையிலிருந்து அறுவடை செய்யப்படும் சோளங்களே யாழ்ப்பாண நகருக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வலிகாமம் வடக்கில் பல குடும்பங்களின் சொந்த நிலங்கள் நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அவற்றை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தங்களது வீடுகள் மற்றும் காணிகளுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல், பல குடும்பங்கள் வாடகை வீடுகளிலும் உறவினர்களின் இல்லங்களிலும் இடம்பெயர்ந்த வாழ்க்கையைத் தொடர்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த காணிகளில் படையினர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அறுவடை செய்யப்படும் சோளங்களை தங்களது வாகனங்களில் யாழ்ப்பாண நகருக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமையால், யாழ்ப்பாண நகரில் சோள விற்பனையை நம்பி வாழும் சிறு வியாபாரிகள் கடுமையான சந்தைப் போட்டியை எதிர்கொள்வதுடன், தங்களது அன்றாட வருமானம் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், மக்களின் சொந்த நிலங்கள் இன்னமும் உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாத நிலையில், அவற்றைப் பயன்படுத்தி பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுவது தங்களுக்கு வேதனையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, படையினரின் வியாபார நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதுடன், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் காணிகள் தொடர்பிலும் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை இராணுவம் அல்லது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பதில் இதுவரை வெளியாகவில்லை.

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when New Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to New Lanka:

Shortcuts

Share