Uthayan News

Uthayan News Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population

🧐அபுதாபிக்கான அனைத்து விமானங்களும் இந்த ஆண்டு இறுதி வரை ரத்து!👇👇👇அபுதாபிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அ...
11/03/2026

🧐அபுதாபிக்கான அனைத்து விமானங்களும் இந்த ஆண்டு இறுதி வரை ரத்து!
👇👇👇
அபுதாபிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் எயார்வேஸ் தெரிவித்துள்ளது.பிரிட்டிஷ் எயார்வேஸ் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பஹ்ரைன், அம்மான், தோஹா, டுபாய் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் இந்த மாத இறுதி வரை ரத்து செய்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

🧐மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு!
11/03/2026

🧐மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு!

🧐லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!👇👇👇இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் வி...
11/03/2026

🧐லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!
👇👇👇
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அதன் புதிய 3,990 ரூபாயாகும். இதன்படி, 5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய 1,602 ரூபாயாகும்.
2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 56 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதன் புதிய விலை 750 ரூபாவாகும்

🧐எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!👇👇👇மத்திய கிழக்கில் போரை அடுத்து ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சம...
10/03/2026

🧐எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!
👇👇👇
மத்திய கிழக்கில் போரை அடுத்து ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, இயன்றவரை சிக்கனமாக எரிபொருளை பயன்படுத்துமாறு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகங்கள் மத்தியில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.எரிபொருள் பயன்பாட்டை இயன்றவரை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் அதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்துள்ளனர்.எரிபொருள் தட்டுப்பாடானது இந்த விலை உயர்வுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இது நடக்கவில்லை என்றால், இந்த மாத இறுதி வரை இருந்த விலையில் எரிபொருளை வாங்க முடிந்திருக்கும். இருப்பினும், தற்போதைய எரிபொருள் நெருக்கடி முழு உலகையும் பாதித்து வருகிறது. கூட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

10/03/2026

🧐லெபனான் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!

🧐மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடு நிர்மாண கொடுப்பனவு அதிகரிப்பு
10/03/2026

🧐மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடு நிர்மாண கொடுப்பனவு அதிகரிப்பு

🧐நீர்கொழும்பு, கட்டான பகுதிகளில் நாளை மறுதினம் நீர்வெட்டு!👇👇👇பம்புகுலிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்...
10/03/2026

🧐நீர்கொழும்பு, கட்டான பகுதிகளில் நாளை மறுதினம் நீர்வெட்டு!
👇👇👇
பம்புகுலிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர்கொழும்பு மற்றும் கட்டான பகுதிகளில் நாளை மறுதினம் 12ஆம் திகதி முற்பகல் 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, நீர்கொழும்பு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகள், கட்டான பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் எத்தியாவல, ஜன்குரவெல, களுவரிப்புவ, மிரிஸ்வத்த, கோன்கொடமுல்ல, ஹல்பே, எண்டிமுல்ல, அம்பலாயாய, தோப்புவ, வைக்கால் ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

😎வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளமையால் மாற்று பாதையை தேர்ந்தெடுத்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
10/03/2026

😎வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளமையால் மாற்று பாதையை தேர்ந்தெடுத்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

🤨பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது; தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு!🌀 Full Story: https://newuthayan.com/  ...
10/03/2026

🤨பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது; தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு!
🌀 Full Story: https://newuthayan.com/

🧐இத்தாலியில் நிலநடுக்கம்!இத்தாலியின் டைர்ஹெனியன் கடலில் இன்று 10ஆம் திகதி  6.1 ரிச்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜ...
10/03/2026

🧐இத்தாலியில் நிலநடுக்கம்!
இத்தாலியின் டைர்ஹெனியன் கடலில் இன்று 10ஆம் திகதி 6.1 ரிச்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 377 கிலோமீட்டர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Address

361 Kasthuriyar Road
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Uthayan News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share