26/11/2024
எம்மினத்தின் இறைவனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து நான்காம் ஆண்டினிலே//
காந்தள் பூ மலரும் கார்த்திகை மாதத்திலே//
மாண்புள்ளோர் பிறந்திட்ட இருபத்தி ஆறாம் தேதியிலே //
வேலுப்பிள்ளை பார்வதிக்கு வேங்கை கையாய் நீர் பிறந்தீர் //
மற்றவர் இன்புற உற்றவர் தனைப்பிரிந்தீர்//
பெற்றவர் மானம் காக்க மறவர்களை நீர் இணைத்தீர்//
தெய்வீக பிறவிகளின் தெய்வீக துறவறத்தை//
மாவீரர் எனப் போற்ற வழிவகை செய்தவர் நீர்//
மண்ணுக்காய் மரணிப்போம் மறுத்திடோம் சத்தியம் //
மறவர்க்கு இறப்பேது வாழ்வது நித்தியம்//
மகன் வர வேண்டுமென பெற்றோர்கள் பத்தியம் //
மனமது குளிரவே வராதது துர்ப்பாக்கியம்//
தற்துணிவு தந்திரம் படையணியின் லட்சியம்//
துணிந்து போராடினால் ஜெயமது நிச்சயம்//
வெற்றி கிடைத்திட பயிற்சி அவசியம் //
மடிந்தாலும் விதைகள் விதையாகும் சத்தியம்//
தனித்துமே ஜொலித்திடும் தமிழுக்கு நிகரேது //
தன்மான தலைவனின் புகழுக்கு இணையேது//
படித்திடு வரலாறு நமக்கு நிகர் வேறாரு//
பகலவன் வெயிலுக்கு வற்றுமோ காட்டாறு//
ஒன்றுபட்டிருந்துட்டால் ஒடுக்கிட முனைவோர் யார்//
ஒற்றுமை கண்டே தான் ஒதுங்கியே ஓடுவார் பார்//
வரலாறுஉண்டெமக்கு வழிகாட்டி அதுவே தான்//
சத்தியம் அங்கிருந்தே சாட்சியங்கள் சொல்லிடும்கேள் //
நெஞ்சுரத்தின் வலிமயது போர்க்களத்தில் தெரிந்தது பார்//
நச்சு மனம் கொண்டவரால் நம்மவர்கள் அழிந்ததை பார் //
மடிந்தாலும் மனங்களில் மறவர்கள் நினைவதைப் பார்//
மகத்தான காவியம் மடியாத வருவதை பார்//
யாதுமானவரே எம் தாயுமானவரே தலைவரானவரே இறைவனானவரே//
வரமானவரே எம்மினத்தின் கரமானவரே//
புது ரகமானவரே தனித்தரமானவரே
மேன்மை யானவரே மேதகுவானவரே//
தாயகத்தின் வித்தென ஒளிதரும் முத்தென //
வாசப்பூங்கொத்தென தமிழரின் சொத்தென//
வழிந்தோடும் ஊற்றென அசைந்தாடும் கீற்றென//
வானத்தின் நிலவென வல்வெட்டித்துறையானென//
வாழ்த்துக்கள் சொல்லியே வாழ்த்துவோம் வாழ்க என........
, அன்புடன் யூட் ஜீன்சியா
பாசையூர் கலைமகள்