Sirakukal Media

Sirakukal Media independent Media Network from youngsters of Sirakukal Amaiyam. Give the Right News on Right time

UGC RTI மூலம் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்இலங்கையில் ஆயுர்வேத, சித்த, யுனானி மருத்துவ பட்டதாரிகளின் எதிர்காலம் த...
14/05/2026

UGC RTI மூலம் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்

இலங்கையில் ஆயுர்வேத, சித்த, யுனானி மருத்துவ பட்டதாரிகளின் எதிர்காலம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் குழு (UGC) வழங்கிய தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) பதில் பல முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

இம்முறை A/L பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர் ஒருவரின் சகோதரர் அனுப்பிய RTI கோரிக்கைக்கான பதிலிலேயே இத்தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

RTI மனுவில், “ஆயுர்வேத மருத்துவ பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் போதுமான அளவில் இல்லாததால், புதிய பணியிடங்களை உருவாக்க தற்போது முடியாத நிலை உள்ளது” என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை UGC தனது பதிலில் மறுக்காமல் ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும் “Delayed Appointment” தொடர்பில் கேட்கப்பட்டபோது, Internship முடிக்கும் பட்டதாரிகளுக்கான அரச வேலைவாய்ப்பு, புதிய Cadre உருவாக்கம், நோயாளர்களின் தேவையை சுதேச மருத்துவம் மூலம் பூர்த்திசெய்யும் திட்டம், நீண்டகால தேசிய Master Plan போன்ற முக்கிய விடயங்கள் குறித்து எந்தத் தெளிவான நடவடிக்கையும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் 2026 முதல் Internship பயிற்சியை வருடத்திற்கு இரு முறை (ஜனவரி 1 மற்றும் ஜூன் 1) ஆரம்பிக்கும் புதிய அட்டவணை அறிமுகப்படுத்தப்படுவதாக UGC தெரிவித்துள்ளது. இதன் மூலம் Internship தாமதத்தை குறைப்பதே நோக்கம் என கூறப்பட்டுள்ளது.

அதிலும் முக்கியமாக, “2024 A/L வரை பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களையும் வெளியேறும் பட்டதாரிகளையும் கருத்தில் கொண்டு நீண்டகால தேசிய திட்டம் உள்ளதா?” என்ற கேள்விக்கு UGC நேரடியாக “இல்லை” என பதிலளித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு A/L எடுத்த பட்டதாரி மருத்துவர்களுக்குக் கூட இதுவரை அரச நியமனம் வழங்கப்படாத நிலையில், மாணவர்களின் அடிப்படை உரிமையாகிய Internship வழங்கப்படுவதையே ஒரு சாதனையாக சுகாதார அமைச்சு வெளிக்காட்டுவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஆயுர்வேத பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு நெருக்கடி, அரசின் திட்டமிடல் பலவீனம், UGC, ஆயுள்வேத திணைக்களம், மாகாண சுதேச மருத்துவ திணைக்களங்கள், கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளின் பொறுப்பின்மை போன்ற விடயங்கள் குறித்து தற்போது நாடு முழுவதும் புதிய விவாதங்கள் உருவாகியுள்ளன.

*ஈழ விடுதலைக் கனவை உலகறியச் செய்த 'பாசறைப் பாணர்' தேனிசை செல்லப்பா மறைந்தார்!* 💛❤️ஈழத்தமிழர்களின் விடுதலைக் கனலைத் தமது ...
28/04/2026

*ஈழ விடுதலைக் கனவை உலகறியச் செய்த 'பாசறைப் பாணர்' தேனிசை செல்லப்பா மறைந்தார்!* 💛❤️

ஈழத்தமிழர்களின் விடுதலைக் கனலைத் தமது உணர்ச்சிபூர்வமான குரலால் மூட்டிய புரட்சிப் பாடகர் 'பாசறைப் பாணர்' தேனிசை செல்லப்பா இன்று (28.04.2026) தனது 85 ஆவது வயதில் காலமானார்.

👉 *பிறப்பும் ஆரம்பப் பயணமும்*

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், சிங்கிலிப்பட்டி கிராமத்தில் 1941 ஏப்பிரல் 21 ஆம் திகதி இவர் பிறந்தார். ஆரம்பக் காலத்தில் சிங்கிலிப்பட்டியில் நடைபெற்ற போராட்ட மேடையொன்றில் இசைநிகழ்ச்சி (பாட்டுக்கச்சேரி) நடத்த சி.பா. ஆதித்தனார் விரும்பினார். வேறு பாடகர்கள் எவரும் வராத நிலையில் தேனிசை செல்லப்பா மட்டும் அங்கு மேடையேறினார். அவரது பாடல் பிடித்துப்போனதால், ஆதித்தனார் அவரைத் தமது அரசியல் பரப்புரைக்காக நியமித்துக் கட்சி அலுவலகத்திலேயே தங்கவைத்தார். அங்கிருந்தபடியே திராவிடர் கழக மற்றும் கட்சி மேடைகளில் செல்லப்பா பாடி வந்தார்.

👉 *மலையகத் தமிழர்களுக்கான குரல்*

1964 ஒக்டோபர் 30 இல் கைச்சாத்திடப்பட்ட சிறிமாவோ ஒப்பந்தத்தின்படி, சுமார் ஐந்து இலட்சம் மலையகத் தமிழர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்குத் திருப்பியனுப்பப்பட்டனர். அந்தச் சூழ்நிலையை முன்னிட்டு, ஏ.எல். நாராயணன் வரிகளில் தேனிசை செல்லப்பாவின் குரலில் ஒரு பாடலை ஆதித்தனார் உருவாக்கினார்.

“செந்தமிழா மனம் பொங்குதடா.. சிங்களர் கொடுமை மிஞ்சுதடா.. இதை நேரு பண்டிதரும் பார்க்கவில்லை, சொந்த ஊரு மந்திரியும் கேட்கவில்லை..” என்ற அப்பாடலை மேடைதோறும் செல்லப்பா உணர்ச்சி மேலிடப் பாடினார்.

👉 *புலிகளுடனான தொடர்பும் ஈழப் பயணமும்*

திராவிட இயக்க மேடைகளில் ஒலித்த செல்லப்பாவின் குரலும் உணர்வும், 1980 களின் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியப் பிரமுகரான பேபி சுப்பிரமணியத்தைக் கவர்ந்தது. ஈழத்திலிருந்து வந்து சென்னையில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ஊடாக அவர் ஈழப் புரட்சிப் பாடல்களைப் பாடத் தொடங்கினார்.

இதனையடுத்து 1990 ஆம் ஆண்டு அவர் ஈழத்திற்கு அழைக்கப்பட்டார். யாழ். கோட்டை மைதானத்தில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் இலட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் அவரது கச்சேரி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் அவரது இசைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இதன்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனையும் அவர் சந்தித்தார்.

👉 *அழியாத பாடல்களும் நினைவுகளும்*

கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட பல கவிஞர்கள் எழுதிய உணர்ச்சிமிக்க பாடல்களுக்கு இவர் உயிர்கொடுத்தார். குறிப்பாக, "தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இரு விழிகள்" என்ற பாடல் ஈழத்தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் பெரும் புகழ்பெற்றது. மேலும் 'ஈழ விடுதலை எழுச்சி', 'தமிழர் தாகம்', 'வீரத்தின் வேர்கள்' போன்ற பல இசைத் தொகுப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஈழ விடுதலைப் போராட்டம் முடிவடையும் வரை விடுதலைப் பாடல்களைப் பாடிவந்த தேனிசை செல்லப்பா மறைந்தாலும், அவரது வீரம் செறிந்த பாடல்கள் ஈழத்தமிழர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும்.

07/12/2025

வடக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தச் சூழல் காரணமாகக் கால்நடைத் துறைக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பாகப் பொதுமக்கள் தொடர்புகொள்வதற்கென மாவட்ட ரீதியான தொலைபேசி இலக்கங்களை வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ளார்.

கால்நடை வளர்ப்பாளர்கள் தமது அவசரத் தேவைகளுக்குப் பின்வரும் உத்தியோகத்தர்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

📞 வவுனியா மாவட்டம்: நிர்மலன் பெர்னாண்டோ – 077 125 0461

📞 கிளிநொச்சி மாவட்டம்: எம்.ராகவன் – 077 625 7977

📞 யாழ்ப்பாணம் மாவட்டம்: வித்தியா நமசிவாயம் – 077 537 4464

📞 முல்லைத்தீவு மாவட்டம்: எஸ்.தமிழ்செல்வன் – 077 358 0720

📞 மன்னார் மாவட்டம்: ரேமன் – 076 649 9107

பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான சிகிச்சைகளைத் துரிதப்படுத்தவும், இழப்பீட்டு மதிப்பீடுகள் மற்றும் தரவு சேகரிப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்தவும் இந்த இலக்கங்களைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
06.12.2025

#வடக்கு_மாகாணம் #ஆளுநர்_வடக்கு.

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு கரம் கொடுப்போம்வவுனியா கந்தசாமி நகரில் மக்களுடன் இணைந்து அவர்களின் வாழ்விடங்களைத் தூய்மைப...
05/12/2025

வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு கரம் கொடுப்போம்
வவுனியா கந்தசாமி நகரில் மக்களுடன் இணைந்து அவர்களின் வாழ்விடங்களைத் தூய்மைப் படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்வோம்.

திகதி - 06-12-2025

வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட உயர்தரப் பரீட்சையினை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான கல்வி வளங்களை ஒன்றுதிரட்டுவதற்கான கலந்...
05/12/2025

வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட உயர்தரப் பரீட்சையினை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான கல்வி வளங்களை ஒன்றுதிரட்டுவதற்கான கலந்துரையாடல்

📍 Zoom மூலமான கலந்துரையாடல்
05.12.2025 வெள்ளி (இன்று)
இரவு 8.00 மணி

Meeting ID: 924 4331 3431
Passcode: 2025@Join

https://learn.zoom.us/j/92443313431?pwd=Rz12pl1pwx5Yt2v2o8R6YkTKjIopet.1

24/11/2025

A/L தகமையுடன் GS விண்ணப்ப முடிவுத்திகதி இன்றாகும்

இன்று மூட்டுவாத விழிப்புணர்வு நாள்ஆங்கில மருத்துவம் கைவிட்ட நிலையில் சித்த மருத்துவமனைகளை நாடி வருவதால் பூரண குணமடைய கால...
12/10/2025

இன்று மூட்டுவாத விழிப்புணர்வு நாள்

ஆங்கில மருத்துவம் கைவிட்ட நிலையில் சித்த மருத்துவமனைகளை நாடி வருவதால் பூரண குணமடைய காலதாமதம் ஏற்படுகிறது. ஆர்த்திரைட்டிஸிற்கு சுதேச மருத்துவத்தில் மட்டுமே சிகிச்சை உண்டு. ஆங்கில மருத்துவத்தால் கால்களை இழந்தவர்களே அதிகம்

தொகுப்பு : வாதநோயியல் அபிவிருத்திப் பிரிவு, அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம்

உலக ஆர்த்திரைட்டிஸ் விழிப்புணர்வு தினம் அக்டோபர் 12ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆர்த்திரைட்டிஸ் (Arthritis) என்பது மூட்டுகளில் ஏற்படும் நீடித்த வலி, வீக்கம், உறுதிப்பாடு போன்ற பிரச்சனைகளால் ஒருவரின் நாளாந்த வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் தமது இயல்பான இயக்கத்தை இழந்து, மனஅழுத்தத்துடனும் உடல் வலியுடனும் வாழ வேண்டிய சூழல் உருவாகிறது.

இந்நிலையில், பலர் முதலில் மேற்கத்திய (ஆங்கில) மருத்துவத்தை நாடுகிறார்கள்.

மேற்கத்திய மருத்துவத்தை நாடிச்சென்ற பல நோயாளிகள் தமது முழங்கால் மூட்டுகளை மேலும் பாதிப்புறச்செய்து கால்களை வளையச்செய்து ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட நிலையிலேயே சித்த மருத்துவமனைகளை நாடிவருகின்றனர். ஆங்கில மருந்துகள் தற்காலிக நிவாரணம் அளித்தாலும், அதன் பக்கவிளைவுகள் உடலை மேலும் பாதிக்கின்றன. வலி குறைப்பதற்கான மருந்துகள் காலப்போக்கில் சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் அபாயம் அதிகம். இவ்வாறு, “இருப்பதையும் இழக்க நேரிடும்” நிலையை நோயாளிகள் எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆங்கில மருந்துகள் உடலை மேலும் பாதிக்கின்றன. மாறாக, சுதேச மருத்துவம் – சித்தம், ஆயுர்வேதம், யுனானி போன்ற பாரம்பரிய முறைகள் – நோயின் மூல காரணத்தை ஆராய்ந்து, உடல் தாதுக்கள் சமநிலையைக் காக்கும் வழியில் செயல்படுகின்றன. சித்த மருத்துவத்தில் ‘வாத நோய்கள்’ என வகைப்படுத்தப்படும் ஆர்த்திரைட்டிஸ் நோய், உணவு பழக்கவழக்கம், வாழ்க்கை முறை, உடல் தாதுக்கள் சமநிலையின்மை ஆகியவற்றின் விளைவாக கருதப்படுகிறது.

இதற்கு சித்த மருந்துகள் மூலமாக உடலில் தேங்கிய வாதத்தை நீக்கி, இரத்தச் சுழற்சியை மேம்படுத்தி, மூட்டுகளில் ஏற்பட்ட கடினத்தன்மையையும் வலியையும் குறைத்து உடல் இயக்கத்தை மீட்டெடுக்க உதவுகின்றன. நோயாளி முழுமையாக ஆரோக்கியம் பெறுவது சாத்தியம்.

சுதேச மருத்துவம் நோயை குணப்படுத்துவதற்குப் பின், அதே நோய் மீண்டும் வராமல் தடுக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இவை உடலையும் மனதையும் ஒருங்கிணைந்த முறையில் குணப்படுத்தும் முழுமையான மருத்துவ முறை எனலாம்.

அதனால், ஆர்த்திரைட்டிஸ் நோய்க்கு சுதேச மருத்துவமே நம்பகமான, நீடித்த தீர்வு ஆகும். இம்மருத்துவம் தாய்மண்ணின் பாரம்பரிய ஞானத்தின் சான்றாக இருந்து, இன்றைய தலைமுறையினருக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் வழியாக திகழ்கிறது.

ஆங்கில வைத்திய முறையில் இதுவரை எந்தவிதமான நிரந்தர மருத்துவமும் இல்லை. நோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து இல்லாத நிலையில், நோயாளிகளை தவறாக வழிநடத்துவது நியாயமல்ல. ஆங்கில மருத்துவத்தில் தற்போது வழங்கப்படும் மருந்துகள் — வலி நிவாரணி (pain killers), வீக்கம் குறைக்கும் (anti-inflammatory) மற்றும் நோய் வளர்ச்சியை தாமதப்படுத்தும் மருந்துகள் — தற்காலிக நிவாரணத்தையே அளிக்கின்றன. ஆனால் இவை நோயின் அடிப்படை காரணத்தை குணப்படுத்துவதில்லை.

“மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி தவறான வாக்குறுதிகள் அளிப்பது மருத்துவ நெறிமுறைக்கு எதிரானது. மருத்துவர் ஒருவரின் கடமை உண்மையை வெளிப்படையாகச் சொல்லி, நோயாளிக்கு சரியான வழிகாட்டுதல் வழங்குவதாகும். ஆர்த்திரைட்டிஸ் போன்ற நீடித்த நோய்களுக்கு உணவு பழக்கம், வாழ்க்கை முறை, உடற்பயிற்சி மற்றும் சித்த மருத்துவ சிகிச்சைகள் இணைந்த முழுமையான அணுகுமுறையே அவசியம்.

“சித்த மருத்துவம் உடலின் தாதுக்கள் சமநிலை பெறும் வகையில் நோயின் அடிப்படைக் காரணத்தை தீர்க்கும் தன்மை கொண்டது. எனவே, மக்கள் பல மருத்துவ வழிமுறைகளையும் ஆராய்ந்து, தகுந்த நிபுணர்களின் ஆலோசனையுடன் சித்த மருத்துவத்தின் நன்மைகளைப் பெற வேண்டும்.

ஆங்கில மருத்துவர்கள் மக்களிடம் நேர்மையாக நடந்துகொள்வது அவசியம். ‘முழு குணம்’ என தவறாக கூறுவதற்குப் பதிலாக உண்மையை விளக்குவது தான் உண்மையான மருத்துவ சேவை.

இலங்கையின் அரசாங்க சித்த, ஆயுர்வேத மற்றும் யூனானி மருத்துவமனைகள், ஆர்த்திரைட்டிஸ் (arthritis) போன்ற வாத நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதுடன் இம் மருத்துவமனைகள் பாரம்பரிய சிகிச்சை முறைகளின் மூலம் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளை வழங்குகின்றன.

பொரளை தேசிய ஆயுர்வேத வைத்தியசாலை, கைதடி மற்றும் கோணேசபுரியில் அமைந்துள்ள சித்த போதனா வைத்தியசாலைகள், கம்பஹா விக்கிரமராச்சி ஆயுர்வேத போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை, கப்பல்துறை ஆதார வைத்தியசாலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி தளவைத்தியசாலை, மாதம்பே ஆதார மருத்துவமனை, மஞ்சந்தொடுவாய் மற்றும் நிந்தவூரில் அமைந்துள்ள யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி மருத்துவமனை, கொடிகாமம், பண்டத்தரிப்பு கிராமிய வைத்தியசாலை மேலும் பல.......

இவற்றுக்கு மேலதிகமாக அனைத்து பிரதேச சபைகளின் கீழே இயங்கும் இலவச சுதேச மருத்துவமனைகளினூடாக பொதுமக்கள் துல்லியமான சேவைகளை இலவசமாகப் பெற முடிந்தாலும் போதியளவு விழிப்புணர்வு இல்லாமையினால் பொதுமக்கள் இவற்றை அனுபவிக்கவில்லை என்றே கூறமுடியும்

இலங்கையில் சித்த மருத்துவ முறையில் புற சிகிச்சைகளாக பல்வேறு பரிசோதிக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட முறைகள் உள்ளன. அவையாவன,

1.தொக்கனம் (Thokkanam) – தாவர எண்ணெய்களால் செய்யப்படும். வாத நோய்கள், தசை வலிகள் மற்றும் மூட்டு வலிகளை குறைக்க உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடல் சக்தி சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது .

2.ஒற்றடம் (Ottradam) – வெப்ப சிகிச்சை. இது வெப்பம் மூலம் செய்யப்படும் சிகிச்சை முறையாகும். இது மூட்டு வலிகளை குறைத்து, தசை வலிகளை நீக்க உதவுகிறது .

3.பற்று (Pattru) – வெவ்வேறு தாவரங்களின் தூள்களை சேர்த்து தயாரிக்கும். வாத நோய்களை குறைக்கும் திறன் கொண்டது. இது மூட்டு வலிகளை நீக்குவதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது .

4.வர்மம் (Varmam) – புள்ளி சிகிச்சை- இது சித்த மருத்துவத்தில் முக்கியமான புற சிகிச்சையாகும். மூட்டு வலிகள் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சினைகளை குறைக்க, குறிப்பாக Shoulder pain போன்றவற்றை சிகிச்சை செய்ய உதவுகிறது .

5.பூச்சு (Poochu) – தடவுதல்- தாவரங்களின் திரவங்களை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் தடவுவதன் மூலம், வாத நோய்களை குறைக்க உதவுகிறது.

போன்ற பல்வேறு சித்த சிகிச்சை முறைகளை உதாரணமாகக் குறிப்பிடலாம்

இலங்கையில் பலர், குறிப்பாக ஆர்த்திரைட்டிஸ்ச் போன்ற நீண்டகால வலி மற்றும் மூட்டு பிரச்சினைகள் உள்ளவர்கள், சித்த மருத்துவம் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாததால், உடனடி சிகிச்சை தேடும் எண்ணத்தால் ஆங்கில மருத்துவத்தை (Western Medicine) நாடி செல்லுகின்றனர். இதனால் நோய் நிலை மேலும் மோசமடையக்கூடும். ஆதலால் இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள அரச சுதேச மருத்துவமனைகளினூடாக சிறந்த சேவையை இலவசமாகப் பெற்று பூரண குணமடையமுடியும்.

தொகுப்பு : வாதநோயியல் அபிவிருத்திப் பிரிவு, அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம்

மனநலனும் முதியோர் நலனில் சித்தமருத்துவமும்தொகுப்பு- முதியோர் நலப்பிரிவு, அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம...
10/10/2025

மனநலனும் முதியோர் நலனில் சித்தமருத்துவமும்

தொகுப்பு- முதியோர் நலப்பிரிவு, அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம்

1.மனநலமும் சித்த மருத்துவமும்

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் “உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் நோக்கம், மனநலத்தின் முக்கியத்துவத்தை உலகளாவிய அளவில் உணர்த்தி, மனநலப் பிரச்சினைகளுக்கு எதிராக சமூக ஆதரவை உருவாக்கி, மனநல சேவைகளின் அணுகுமுறையை மேம்படுத்துவதாகும்.

மனநலம் என்பது மனதின் அமைதி, உணர்ச்சியியல் சமநிலை மற்றும் வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் திறனை குறிக்கிறது. இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மனஅழுத்தம், மனச்சோர்வு, பயம் மற்றும் சமூக ஒதுக்கல் போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. இதனை சமாளிக்க குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவு முக்கிய பங்காற்றுகிறது.

மனநலம் குறித்த அவமதிப்பு (Stigma) நீங்கி, உதவி தேடுவது பலவீனம் அல்ல – அது வலிமையான முடிவு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நல்ல மனநலத்தை பேணுவதற்காக ஆரோக்கியமான உணவு, போதிய தூக்கம், உடற்பயிற்சி, தியானம், இயற்கையுடன் நேரம் செலவிடுதல், மற்றும் நெருங்கியவர்களுடன் திறந்த உரையாடல் ஆகியவை அவசியம்.

சித்த மருத்துவ நூல்களில் “மனநோய்கள்” (மனோ நோய்கள்) எனப்படும் பல வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றிற்கு தியானம், யோகம், ப்ராணாயாமம், ஹெர்பல் மருந்துகள், நச்யம் (மூக்கில் மருந்து), வாஸ்தி (குளியல்கள்) போன்ற சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

சித்த மருந்துகளில் உள்ள இயற்கை மூலிகைகள் நரம்பு அமைப்பை அமைதிப்படுத்தி, மன அமைதியை ஏற்படுத்தும். மேலும் சித்தம் “நல்ல எண்ணம், நல்ல செயல், நல்ல உணவு” என்ற மூன்று வழிமுறைகளின் மூலம் மனநலத்தை பேண முக்கியத்துவம் அளிக்கிறது.

மனநலம் என்பது உடல்நலத்திற்குச் சமமானது. நம் மனம் மற்றும் உடல் சமநிலையில் இருந்தால் மட்டுமே உண்மையான நலனும் சந்தோஷமும் சாத்தியம்.

2.மனநலனும் முதியோர் நலனில் சித்த மருத்துவமும்

இன்றைய சமூகத்தில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, அவர்களின் மனநலப் பிரச்சினைகளும் முக்கிய கவலையாக உருவாகியுள்ளது. வயதானவர்களில் தனிமை, உடல் குறைபாடுகள், நினைவாற்றல் குறைவு, மனச்சோர்வு, மற்றும் பயம் போன்ற பிரச்சினைகள் அதிகம் காணப்படுகின்றன. உடல் நலத்திற்குச் சமமான முக்கியத்துவம் மனநலத்திற்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, சித்த மருத்துவம் முதியோர் நலனில் முழுமையான அணுகுமுறையை வழங்குகிறது.

முதியோரின் மனநலப் பிரச்சினைகள்

முதுமை காரணமாக உடல் சக்தி குறைவு, குடும்ப மாற்றங்கள், சமூக ஒதுக்கல், மற்றும் அன்பு பிணைப்பு குறைவு போன்றவை மனஅழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் தூக்கக் கோளாறுகள், உணர்ச்சி மாற்றங்கள், மனச்சோர்வு, மற்றும் நினைவாற்றல் குறைவு ஏற்படும்.

சித்த மருத்துவத்தின் பார்வையில், சித்தம் மனிதனை உடல் (தேகம்), மனம் (மனம்), ஆவி (ஆத்மா) என்ற மூன்று கூறுகளின் ஒருங்கிணைந்த வடிவமாகக் காண்கிறது. அதில் மனம் சமநிலையிழந்தால் உடலும் பாதிக்கப்படும் என வலியுறுத்தப்படுகிறது. எனவே முதியோரின் மனநல பராமரிப்பில் சித்தம் முழுமையான (Holistic) முறையைக் கடைப்பிடிக்கிறது.

சித்த சிகிச்சைகள் மற்றும் பராமரிப்பு முறைகளில், மூலிகை மருந்துகள்- நரம்பு அமைப்பை வலுப்படுத்தி, மன அமைதியை ஏற்படுத்தும் மூலிகைகள் (அஷ்வகந்தா, ப்ரஹ்மி, சீரகாசாரம், சீரக தைலம்) போன்றவை பயன்படுகின்றன.

நச்யம் மற்றும் வாஸ்தி சிகிச்சைகள்- மூளையின் செயல்பாட்டை ஊக்குவித்து நினைவாற்றலை மேம்படுத்துகின்றன.

தியானம்மனஅழுத்தத்தை குறைத்து மன அமைதியை ஏற்படுத்துகின்றன.

ஆரோக்கியமான உணவுகள் - உடல் மற்றும் மன சமநிலையை பேணுகின்றன.

குடும்பத்தினரின் பாசமும் உரையாடலும் முதியோரின் மனநலத்துக்கு மிகுந்த துணைபுரிகின்றன.

சித்த மருத்துவம் கூறுவது போல, “மனம் அமைதியாக இருந்தால் உடல் நலம் தானாகவே வரும்.” எனவே முதியோரின் மனநலத்தை பராமரிப்பது அவர்களின் உடல் நலத்தை பேணுவதற்குச் சமம்.

3.மன நலனில் யோகாவின் பங்கினை எடுத்துக்கொண்டால், இன்றைய வேகமான வாழ்க்கை முறை, வேலைப் பளு, சமூக அழுத்தம், மற்றும் தொழில்நுட்ப சார்ந்த வாழ்வியல் காரணமாக பலரின் மனநலம் பாதிக்கப்படுகிறது. மனஅழுத்தம் (Stress), மனச்சோர்வு (Depression), கவலை (Anxiety) போன்ற பிரச்சினைகள் உலகளாவிய அளவில் அதிகரித்து வரும் நிலையில், யோகப்பயிற்சி ஒரு இயற்கையான தீர்வாக உருவெடுத்துள்ளது.

யோகம் என்பது உடல், மனம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பயிற்சி. இது வெறும் உடற்பயிற்சியாக அல்லாது, மன அமைதியும் உணர்ச்சி சமநிலையும் அளிக்கும் வாழ்க்கை முறையாக அமைகின்றது. மூச்சுக் கட்டுப்பாடு மூலம் நரம்பு அமைப்பை அமைதிப்படுத்தி, கார்டிசோல் (Cortisol) என்ற மனஅழுத்த ஹார்மோனை குறைக்க உதவுகின்றன. தியானம் (Meditation) மற்றும் யோக நித்ரா (Yoga Nidra) மனதை தற்போதைய தருணத்தில் நிலைநிறுத்தி, கவலைகளை குறைக்கின்றன. மன அமைதியை ஏற்படுத்தி, தூக்கத் தரத்தை மேம்படுத்துகிறது. சீரான யோகப் பயிற்சிகள் “செரோட்டோனின்” (Serotonin) அளவை உயர்த்தி மனநிலையை மேம்படுத்துகின்றன. உடல் மற்றும் மன இணைப்பை வலுப்படுத்தி, தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

சித்த மருத்துவமானது மனநல பராமரிப்பில் யோகாவுக்கு முக்கிய இடம் அளிக்கிறது. சித்தத்தில் “மனம் அமைதியாக இருந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்” என கூறப்படுகிறது. ஆகவே சித்த சிகிச்சைகளுடன் சேர்ந்து யோகம், தியானம், ப்ராணாயாமம், தாவர மருந்துகள் போன்ற இயற்கை முறைகள் மனநலத்தை முழுமையாக மேம்படுத்துகின்றன.

யோகம் ஒரு மருந்தல்ல – அது ஒரு வழி. மன அமைதி, உணர்ச்சி சமநிலை, மற்றும் வாழ்க்கை சமநிலைக்கு யோகம் ஒரு நம்பகமான தோழனாகும்.

நாள்தோறும் சில நிமிடங்கள் யோகத்திற்கு ஒதுக்குங்கள் – மனம் நிம்மதியாக, வாழ்க்கை சமநிலையாக மாறும்.

வாழ்க்கையை நேசிப்போம் – மனநலத்தை பேணுவோம்.
மனநலம் நம் உரிமை,அதேசமயம் நம் பொறுப்பும் ஆகும்.

தொகுப்பு- முதியோர் நலப்பிரிவு, அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம்

மொழியும் மரபும் சேரும் பாதை – “வேர்களை தேடி” திட்டம், ஒரு உயிர்மூச்சு அனுபவம்"எங்கே சென்றாலும் தமிழின் நிழல் நம்மைத் தொட...
30/09/2025

மொழியும் மரபும் சேரும் பாதை – “வேர்களை தேடி” திட்டம், ஒரு உயிர்மூச்சு அனுபவம்

"எங்கே சென்றாலும் தமிழின் நிழல் நம்மைத் தொடரும்" – இது வெறும் உவமையல்ல, உண்மை.
பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்திருந்தாலும், தமிழின் வாசல் வாசனை மனதிற்குள் காற்றாகவே நுழைகிறது.
இந்த உணர்வை நனவாக்க, தமிழ்நாடு அரசு இந்தியாவைத் தவிர உலகின் 17 நாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்களுக்காக தொடங்கிய “வேர்களை தேடி” திட்டம், ஒரு தலைமுறையைக் கலாசார வேர்களுடன் மீண்டும் இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது.

📌பயணத்தின் பிம்பம்: உலகம் சுற்றி வந்து தாயகத்தைத் தொடும் கைகள்

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 15 வரை, உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் பண்பாட்டு, வரலாற்று, தொழில்நுட்ப, மற்றும் இயற்கை தளங்களில் பயணித்தனர். இதில் இலங்கையைச் சேர்ந்த 9 மாணவர்கள் பங்கேற்றனர் என்பது, தமிழ் இனத்தின் ஒருமைப்பாட்டிற்கான பெருமை.

📌அரங்கேற்றம்: நூலகத்தில் நுழைந்து நெஞ்சில் பதிந்த நிகழ்ச்சி

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது.

சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், மாண்புமிகு சா.மு. நாசர் அவர்களும்,
மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் மாண்புமிகு திரு. வள்ளலார் IAS ஆகியோரின்,
தலைமையில் நிகழ்வு கோலாகலமாக துவங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, மாணவர்களுக்கு,
மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின்,
மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின்,
அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இது, அவர்களது வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாக அமைந்தது.

📌பாரம்பரிய மண் பேசும் மொழி: கோயில்கள், கல்வெட்டுகள், கலாச்சாரம்

தஞ்சை, சிதம்பரம், தாராசுரம், மதுரை, ராமேஸ்வரம் என தமிழகத்தின் முக்கிய கோயில்கள் மட்டுமல்ல, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் பயணமும் மாணவர்களின் பார்வையை ஆழப்படுத்தியது.

ஓலைச்சுவடி பயிற்சிகள், சிற்பக்கலை வேலைப்பாடுகள், பாரம்பரிய கலை நிகழ்வுகள் என, நம் மரபுகள் கற்றும் இடங்களாக இவர்கள் பயணம் செய்தனர்.

📌இயற்கைச் செல்வமும் தொழில் வளர்ச்சியும் – ஒரே பயணத்தில்

புதுச்சேரி, பிச்சாவரம், பாம்பன் பாலம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் இயற்கையின் சிறப்புகளை நேரில் கண்ட மாணவர்கள்,
கோயம்புத்தூர், சேலம், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் தொழில் முன்னேற்றங்களை பார்த்தனர்.
தொழில் முனைவோர்களுடன் சந்தித்து உரையாடிய அனுபவம், அவர்களின் எதிர்கால கனவுகளை நனவாக்கி விடக் கூடிய சக்தியாக மாறியது.

📌முடிவில் – மறக்க முடியாத தொடக்கம்

இந்திய சுதந்திர தினத்தில் நேரில் பங்கேற்ற மாணவர்கள், நாட்டின் பெருமையை உடனடியாக உணர்ந்தனர்.
பெரியார் திடலில் நடைபெற்ற நிறைவு விழாவில், மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தபோது, கண்ணீருடன் சொன்ன அந்தக் கணங்கள், தமிழின் அடையாளம் மனதுக்குள் வேர்விட்டதை உறுதி செய்தன. இறுதியில் மாணவர்களுக்கு தமிழர் பண்பாட்டு கலாச்சார தூதுவர் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது.

முக்கியமாக, தமிழ்மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்களுக்கு இவ்வாய்ப்பு தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பினை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சருக்கும், சித்தம் அழகியான் தலைவர், கனடியத் தமிழ்ச்சங்கம் திரு.இராசரத்தினம் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நேர்மையின் நிழலில் நாமே முன்னேறுவோம்!
தமிழ் எங்கள் உயிரின் உந்துசக்தி!
தமிழ்நாட்டே எங்கள் அடையாளப் பெருமை!

📌முடிவுரை: மொழி வழியாக மரபை மீட்டெடுக்கும் பயணம்

“வேர்களை தேடி” என்பது வெறும் கல்விச் சுற்றுலா அல்ல.
அது, ஒவ்வொரு தமிழ் இளைஞனும் தாயகத்தைத் தொடும் ஒரு உயிர்மூச்சு அனுபவம்.
மொழியின் நடையில், மரபின் இசையில், நம்பிக்கையின் நுணுக்கங்களில் இணைக்கப்பட்ட ஒரு இனக்குரல்.
இந்த முயற்சியின் மூலம் தமிழக அரசு கூறும் செய்தி தெளிவானது:
"தாயகத்தின் தொடுதல் ஒரு வாழ்க்கையை மாற்றக்கூடிய வேர்மூட்டல்."

தமிழின் பெருமையை உணர்ந்து பகிர்பவள் – நான் விஜயகுமாரன் தர்ஷிகா ✍️ இந்தியா மற்றும் இலங்கை இரு நாடுக்களுக்குமான தமிழ் கலாச்சார பண்பாடு தூதுவர்.

30/09/2025

சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் வகையில், சிறகுகள் அமையம் வழங்கும் சிறப்பு இணையவழி கலந்துரையாடல்! 🚀

தரம் 6 முதல் 9 வரையான மாணவர்களே, உங்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் என்னவென்று தெளிவாக அறிந்துகொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள்தான் நாளைய தலைவர்கள்!

தலைப்பு: உரிமைகளை அறிவோம், உலகை ஆளப் பழகுவோம்! 🌍👑

🗓️ திகதி: 2025.10.01 ⏰ நேரம்: இரவு 7.30 மணி 👨‍🏫 உரையாளர்: க.ராஜீவன் (பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்)

இணைப்பு விபரங்கள்:

Zoom ID: 983 7509 5137
Passcode: 25@Siraku

பங்கேற்கும் மாணவர்களுக்காகப் பல்வேறு போட்டிகளும் பரிசுகளும் காத்திருக்கின்றன.

#சிறுவர்_தினம் #சிறகுகள்_அமையம் #உரிமைகள் #உலகை_ஆள்வோம் #மாணவர்_போட்டி

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Sirakukal Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sirakukal Media:

Share