ஈழமுரசு EelaMurasu

ஈழமுரசு EelaMurasu “ஈழமுரசு” (EelaMurasu) என்பது ஈழம் தொடர்பான செய்திகள், நிலவரங்கள் வழங்கும் ஊடகமாகும்.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் வழங்கும் “மெல்லிசை” நிகழ்வில், யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில...
20/07/2025

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் வழங்கும் “மெல்லிசை” நிகழ்வில், யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் 20/07/2025 அன்று நடைபெற்ற நிகழ்வில், உயிரே உயிரே…! பாடலை, யாழ் பிரபல நாதஸ்வர வித்துவான் திரு. கே.பி. குமரன் மற்றும் தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் ஒரே மேடையில் கலந்தாடிய கவித்துவமான இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்மறந்து ரசிக்க வைத்தது.


srinivasconcert...

🛑சற்றுமுன்! கவலையுடன் இந்தியா திரும்பிய தென்னிந்திய பாடகர் ஶ்ரீநிவாஸ்..! ஈழத்தையும் ஈழமக்கள் பற்றிய கூறிய வார்த்தைகள்…! ...
20/07/2025

🛑சற்றுமுன்! கவலையுடன் இந்தியா திரும்பிய தென்னிந்திய பாடகர் ஶ்ரீநிவாஸ்..! ஈழத்தையும் ஈழமக்கள் பற்றிய கூறிய வார்த்தைகள்…!


...

தோண்டத் தோண்டத் தமிழரின் மண்டை ஓடுகள், யாழ்ப்பாணம் செம்மணியில் உள்ள புதைகுழியில் இருந்து வெளிவரும் மனித எச்சங்கள், 400க்...
05/06/2025

தோண்டத் தோண்டத் தமிழரின் மண்டை ஓடுகள், யாழ்ப்பாணம் செம்மணியில் உள்ள புதைகுழியில் இருந்து வெளிவரும் மனித எச்சங்கள், 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கலாம்

இதற்கு சர்வதேச ரீதியான வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு பகுப்பாய்வு விசாரணையே தேவை, ஏனென்றால் இத்தனைபேரையுமா கொலை செய்யச் சொன்னவன்தான் இப்போது காவல் துறையிலும், இராணுவத்திலும் அதிகாரியாக இருப்பான், இதற்கான நீதி எப்போதும் கிடைக்கப் போவதில்லை

During today’s excavation at the Chemmani Siththupaththi mass grave site, a few more human skeletons were recovered, bringing the total number of recovered skeletons to 18 so far.

The process continues under court supervision, with families of the disappeared and human rights activists calling for international oversight to ensure transparency and proper forensic investigation.

#ஈழமுரசு

32 வயதான சுவர்ணலதாவின் 21 வயதுக் காதலன் ஜெயந்திரராசா அருட்குமரன் இவர்தான், இந்த மன்மதனின் மறுபெயர் சசி, இவர்தான் நடந்த எ...
05/06/2025

32 வயதான சுவர்ணலதாவின் 21 வயதுக் காதலன் ஜெயந்திரராசா அருட்குமரன் இவர்தான், இந்த மன்மதனின் மறுபெயர் சசி, இவர்தான் நடந்த எல்லாவற்றுக்கும் தூண்டுசக்தி

சுவர்ணலாதாவின் கணவருக்கு சுவர்ணலதாவுடன் தான் உள்ள அந்தரங்கக் காட்சிகளை அனுப்பிய மன்மதக்குஞ்சு ஜெயந்திரராசா அருட்குமரனை அனந்தர் புளியங்குளம் ஊருக்கு இன்று சந்திக்கச் சென்றோம், ஆனால் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார்! புகைப்படம் கிடைத்தது

அருட்குமரன் பற்றிய விபரம் அறிந்தவர்கள் எமக்குத் தகவல் வழங்கவும், இவன் சமூகத்தில் நடமாடத் தகுதி இல்லாதவன்!

அருட்குமரன் அடையாள அட்டை இலக்கம் இதோ 200402010302

#ஈழமுரசு

ரயிலை நிறுத்தி பாரிய ரயில் விபத்தை தடுத்து பலரது உயிரை காப்பாற்றிய நிஜ ஹீரோ❤️இன்று (05) காலை ரயில்வே துறைக்குச் சொந்தமான...
05/06/2025

ரயிலை நிறுத்தி பாரிய ரயில்
விபத்தை தடுத்து பலரது உயிரை
காப்பாற்றிய நிஜ ஹீரோ❤️

இன்று (05) காலை ரயில்வே துறைக்குச் சொந்தமான சாகரிகா ரயிலில் ஏற்படவிருந்த பெரிய விபத்தை தடுத்து
பல விலைமதிப்பற்ற உயிர்களையும் காப்பாற்றிய ஹீரோ பற்றிய செய்தியே இது.

பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் பாதை உடைந்திருப்பதைக் கண்டு, தான் அணிந்திருந்த டி-சர்ட்டைக் கழற்றி, அதை எடுத்துக்கொண்டு, முன்னால் ஓடிச் சென்று அந்த ரயில் மார்க்கத்தினூடாக பயணித்த ரயிலை நிறுத்தி பாரிய விபத்தை தடுத்து பலரது உயிரை காப்பாற்றினார் பாணந்துறையை சேர்ந்த நபர்

உண்மையில் இவரது செயலை
நாமும் மனதாபாராட்டுகிறோம்.

#ஈழமுரசு

04.06.2025வவுனியாவில் ஆசிரியையின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவனனின் பரபரப்பு வாக்குமூலம்!! 35 வயதான யாழ்ப்பாணம், மானிப்பா...
04/06/2025

04.06.2025

வவுனியாவில் ஆசிரியையின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவனனின் பரபரப்பு வாக்குமூலம்!!

35 வயதான யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் என்ற இளம் குடும்பஸ்தரான மரணமடைந்த பெண்ணின் கணவர் வழங்கிய வாக்கு மூலத்தில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவர்ணலதா என்ற 32 வயதான தனது மனைவி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருப்பதாகவும் அதில் ஏற்பட்ட சந்தேகமே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் கொழும்பில் தங்கி இருந்து கட்டட வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள குறித்த இளம் குடும்பஸ்தர், நீண்ட காலமாக தனக்கும் மனைவிக்கும் இடையில் பல சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை தனது தொலைபேசிக்கு ஒரு 21 வயது அருட்குமரன் என்ற இளைஞனினால் அனுப்பப்பட்ட புகைப்படங்களால் தனது கோபம் உச்சம் அடைந்த நிலையில் தான் கொழும்பிலிருந்து நொச்சிக்குளம் கிராமத்திற்கு வருகை தந்து என் மனைவியுடன் பல்வேறு விடயங்களில் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அருட்குமரனை நான் தீர விசாரித்த போது மனைவியில்தான் முழுப்பிழையும் உள்ளதை தான் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் இதில் தீர்வு கிடைக்காத நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம், மானிப்பாய் சென்று பின்னர் திங்கட்கிழமை மீண்டும் வருகை தந்து மனைவியை தாய் சேய் பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்த அவர், இந்த குழந்தைக்கு காரணம் யார் என்பது தொடர்பில் தனக்கு நீண்ட கால சந்தேகம் ஏற்பட்டு இருந்ததாகவும் இது தொடர்பாக தன் மனைவியிடம் கேட்டபோதிலும் அவர் எவ்விதமான பதிலும் கூறவில்லை.

(03.06) காலை அவர் அதை ஒத்துக் கொண்டதையடுத்து தனது மனைவியை புளியங்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியே சின்ன பூவரசங்குளம் காட்டுப்பாதையினால் அழைத்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

அந்த காட்டுப் பாதையின் வழியே 200 மீட்டர் அளவில் சென்றதன் பின்னர் மனைவி ஏன் இந்த வீதியால் செல்கிறீர்கள் என கேட்டபோது, தான் அந்த குறித்த 21 வயது இளைஞன் இந்த பகுதிக்கு வருவதாகவும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு காண்பதற்காக தன்னை அழைத்து வந்திருக்கிறதாகவும் கூறியதாகவும் காவல்துறையிடம் கூறி இருக்கின்றார்.

இதன் பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியின் மூலம் தனது மனைவியை வெட்டியதாகவும், அவர் சிறிது தூரம் ஓடி விழுந்ததன் பின்னர் தான் மனைவியை மூன்று முறை வெட்டி கழுத்தை துண்டாக்கி அதனை அவர் அணிந்திருந்த மழைக் கவசத்தினால் மூடி மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் வைத்து கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையினர் குறித்த மோட்டார் சைக்கிளையும், தலையையும் கைப்பற்றியதோடு அவரையும் கைது செய்திருந்தனர். இதனை அடுத்து உயிரிழந்து இறந்த பெண்ணின் கணவன் சுகிர்தரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்ன பூவரசங்குளம் காட்டுப் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி இருந்தனர்.

குறித்த பகுதிக்கு தடயவியல் காவல்துறையினரும் வருகை தந்து அங்கிருந்த சான்று பொருட்களை சேகரித்ததோடு, குறித்த விடயம் தொடர்பாக புளியங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை ஆசிரியையுடன அந்தரங்கத் தொடர்பு வைத்திருந்த குறித்த 21 வயது அருட்குமரன் தலைமறைவாகியுள்ளார். அவனை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தேடி வருவதாகவும் தெரியவருகின்றது.

#ஈழமுரசு

🚨அவசர விழிப்புணர்வுக்காக!சிக்கன் குன்யா தொற்று என கூறியதால் கம்பஹா வைத்தியசாலையில் தனக்கு வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமை (A...
04/06/2025

🚨அவசர விழிப்புணர்வுக்காக!

சிக்கன் குன்யா தொற்று என கூறியதால் கம்பஹா வைத்தியசாலையில் தனக்கு வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமை (Allergic) காரணமாக தான் பட்ட அவல நிலைமையை திருமதி செபாலி டயஸ் விளக்குகிறார்…

"இப்படி ஓர் விபரீதம் உலகத்தில் வேறு யாருக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக பதிவு செய்ய நினைத்தேன்...

2025/02/22 அன்று சிக்கன் குன்யா நோயினால் பாதிக்கப்பட்ட பின்னர் எனக்கு ஏற்பட்ட மூட்டு வலி காரணமாக கம்பஹா வைத்தியசாலை வைத்தியர் ஹிமந்த அத்துகோரலவின் கீழ் உள்ள ருமடோயிட் கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

அங்கு ஒரு மாதத்திற்கு தேவையான 4 வகை மருந்துகள் வழங்கப்பட்டது.

2025/04/29 அன்று அதிகாலை மீண்டும் மட்டும் கிளினிக்கில் கொடுக்கப்பட்ட SULFASALAZINE எனும் மருந்தை 11 நாட்கள் தொடராக குடித்ததனால் STEVEN JOHNSON SYNDROOME என்று பெயரிடப்பட்ட ஓர் அபாயகரமான ஒவ்வாமை திடீரென ஏற்பட்டு 2025/05/10 அன்று களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன்,

ஏற்பட்ட ஒவ்வாமையின் புகைப்படங்களை இணைத்துள்ளேன்!

சுமார் 16 நாட்கள் உடம்பு முழுதும் (வெளியேயும் உள்ளேயும்) dermaid, சிகிச்சை அளிக்கப்பட்டது. மிகவும் கடுமையான வேதனை மற்றும் வலியுடன், மருத்துவர்களின் இடைவிடாத முயற்சியின் காரணமாக ஓரளவு ஆரோக்கியமடைந்துள்ளேன்.

அப்போது என் கண்கள் கூட குருடாய் போய் விடக்கூடிய நிலைமை ஏற்பட்டது, இருந்தாலும் பெரும் முயற்சி செய்து எளிதில் குணமாகிவிட்டது.

ஆனால் இப்போது நான் முன்பு இருந்த தோற்றம் இல்லை. 2025/05/26 அன்று நான் மருத்துவமனையிலிருந்து வெளியேறினேன், ஆனால் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. மருந்ததுகளால் மறுபடியும் ஒவ்வாமை வந்தால் என் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறினர்.

ஆக......
இதை பார்த்த பிறகு நீங்கள் அனைவரும் மருந்துகளை சாப்பிடும் போது கொஞ்சமேனும் சிந்தித்து ஆராய்ந்து சாப்பிடுங்கள். கண்டது கிடைத்தது எல்லாம் மருந்தாக எடுத்து உட்கொண்டு தலையெழுத்து வீணாகப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்....!!!.

வீட்டில் இருக்கும் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள், கர்ப்பிணித்தாய்மாருக்காக கொடுக்கப்படும் மருந்துகளில் மிகவும் கவனமாக இருங்கள்!!!

நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்!
நலம் பெறுக !
வாழ்க வளமுடன்!

செபாலி டயாஸ்
சிங்களத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது!!

#ஈழமுரசு

வவுனியாவில் மனைவியை கொலை செய்து தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர்.  வவுனியா அனந்தர் புளியங்குளம் சொச்சிகுளம் கி...
03/06/2025

வவுனியாவில் மனைவியை கொலை செய்து தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர்.

வவுனியா அனந்தர் புளியங்குளம் சொச்சிகுளம் கிராமத்தில் குடும்பத்தகராறினால் மனைவியின் வெட்டிய தலையுடன் புளியங்குளம் பொலிஸ்நிலையத்தில் சரணடைந்த கணவன்- தனது மனைவியின் கழுத்தை அறுத்து தலையை மோட்டார்சைக்கிளில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அரச பாடசாலையில் ஆரம்பப்பிரிவு ஆசிரியையாக கடமையாற்றும் ரஜூட் சுவர்ணலதா (32) என்பவரே கொல்லப்பட்டுள்ளார். ஆசிரியையின் கணவரே கொலையை செய்துள்ளார்.

இன்று காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன் மனைவியை கொலைசெய்து நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கணவன் - மனைவிக்கிடையில் குடும்பத்தகராறு நிலவி வந்துள்ளது. இதனால் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர் கழுத்தை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து மோட்டார் சைக்கிள் டிக்கிக்குள் வைத்து புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து பொலிசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

#ஈழமுரசு

ராப் பாடகர் வாகீசன் இராசையா குறித்து எழுதாமல் வேடன் குறித்து எழுதுவது உங்கள் இந்திய மோகத்தைக் காட்டுகின்றது. முதலில் நமத...
02/06/2025

ராப் பாடகர் வாகீசன் இராசையா குறித்து எழுதாமல் வேடன் குறித்து எழுதுவது உங்கள் இந்திய மோகத்தைக் காட்டுகின்றது. முதலில் நமது மக்களை ஊக்குவிப்போம் என்று நண்பர்கள் சிலர் பொறுமியிருக்கிறார்கள். வேடனுக்கு முதலே வாகீசன் இணையத்தில் பரவலாக வந்துவிட்டார். அடுத்த கட்டமாக தமிழக பிரபலங்களை ஓடி ஓடிச் சந்தித்து ஒளிப்படங்களை எடுத்து சினிமா வாய்ப்பையும் பெற்றுவிட்டார். (அதில் எந்த தவறும் இருப்பதாக நான் எண்ணவில்லை.) இதற்கு மேல் நாம் செய்வதற்கு என்ன இருக்கிறது. வாழ்த்துச் சொல்லலாம் அவ்வளவு தான்.

வேடன் போல அவர் மக்களை வரிகளாலும் உணர்வாலும், ஏன் தன்னுடைய சறுக்கலாலும் வந்தடையவில்லை. அவர் யாருக்காக தீவிரமாக பேசுகிறார்?. அவருடைய வரிகளின் வீச்சு கேட்பவர்களை என்ன செய்கின்றது என்பதை குறித்து நான் கவனம் செலுத்துகிறேன். அவருடைய மொழி தூய தமிழ் கூட இல்லை... மலையாளக் கலப்பு. ஆனால் அதன் வீரியம்!.

ஒருவர் கலைஞனாக இருப்பது கொண்டாடப்பட வேண்டியது தான். ஆனால் அதற்கும் மேலான இடம் ஒன்று இருக்கிறது. அதற்கு அந்த கலைஞனின் தேர்வுகள் & பயணம் தான் அளவுகோலாகின்றது. உலகப் புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சன் என்னைக் கவர்ந்தவர்தான். சர்வ நிச்சயமாக அனைத்து வகையிலும் நல்ல கலைஞன்தான். ஆனால் பாப் மார்லியின் இடத்தை மைக்கேல் ஜாக்சனுக்கு என்னால் கொடுக்க முடியாது. என்னுடைய உணர்வுக்கு நெருக்கமானவர் பாப் மார்லிதான்!. வேடனுக்கான எனது மனதின் இடமும் அதுவேதான். Rap Ceylon Vaaheesan Ra Arul

💥 2025 ன் முதலாவது கொவிட் தொற்று மரணம் பதிவு | எல்பிடிய பிரதேசத்தில் உயிரிழந்த ஒன்றரை மாத சிசுவுக்கு | கொவிட் 19 தொற்று ...
01/06/2025

💥 2025 ன் முதலாவது கொவிட் தொற்று மரணம் பதிவு | எல்பிடிய பிரதேசத்தில் உயிரிழந்த ஒன்றரை மாத சிசுவுக்கு | கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!
-அவதானமாக இருங்கள்-

#ஈழமுரசு

01.06.2025 #முல்லைத்தீவு குமுழமுனை கொட்டுக்கிணற்று  பிள்ளையார் ஆலய கேணியில் தவறி விழுந்து இரு மாணவிகள்  #உயிரிழப்பு -கும...
01/06/2025

01.06.2025

#முல்லைத்தீவு குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் தவறி விழுந்து இரு மாணவிகள் #உயிரிழப்பு -

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் இன்றையதினம் (01.06.2025) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர்.

கேணிக்குள் இறங்கி படமெடுக்கும் போது இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#ஈழமுரசு

01.06.2025 #முல்லைத்தீவு அலம்பில் உடுப்புகுளத்தில் கோவிலுக்கு தாமரை பூ பறிக்கும் போது சகதியில் சிக்குண்டு  #இருவர்  #பலி...
01/06/2025

01.06.2025

#முல்லைத்தீவு அலம்பில் உடுப்புகுளத்தில் கோவிலுக்கு தாமரை பூ பறிக்கும் போது சகதியில் சிக்குண்டு #இருவர் #பலி.

ஊர் மக்களால் சடலங்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒருவர் உடுப்புக்குளத்தை சேர்ந்த சாரதியாக பணியாற்றும் நிசாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

#ஈழமுரசு

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when ஈழமுரசு EelaMurasu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share