08/05/2025
📖 *சத்தியவசனம்*
*மே 08 2025 வியாழக்கிழமை*
🌳 *இன்றைய வாக்கு*
*தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் (லூக். 12:31).*
🗓️ *இன்றைய வேதவாசிப்பு*
*காலை:* 2சாமுவேல் 14,15
*மாலை:* லூக்கா 24:13-35
🔰 *அனுதினமும் கிறிஸ்துவுடன்*
*பாவம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்!*
*நீ எகிப்தியனைக் கொன்று போட்டதுபோல, என்னையும் கொன்று போட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான் (யாத். 2:14).*
_இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 51:10-19_
குளிர்பிரதேசத்தில் ஓநாய்களைப் பிடிப்பதற்கு, கூரிய ஈட்டியில் இறைச்சித் துண்டுகளைக் குத்தி வைப்பார்களாம். அதை உண்ண வரும் ஓநாய்கள் ஈட்டியில் குத்தப் பட்டுள்ள இறைச்சியை சுவைத்துச் சாப்பிட ஆரம்பிக்கும். இறுதியில் குளிரில் மரத்துப் போன தன் நாவு குத்தப் படுவதைக்கூட அறியாமல் தன்னுடைய இரத்தத்தைத் தானே குடித்து பரிதாபமாய் இறந்து போகுமாம். தன் பாவத்தை அறியாமல் அல்லது பாவத்தை மறைத்து வாழ முற்படுவதும் இது போன்றதுதான். பாவம் உடனடியாகவோ, படிப்படியாகவோ நிச்சயம் நம்மை அழிவுக்கு நேரே இட்டுச்செல்லக் கூடியது.
அன்று மோசேயும் தனது பாவத்தை மறைக்க முயன்றான். எபிரெயன் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு அந்த எகிப்தியனைக் கொன்று போட்டான் மோசே. பின்னர் அவனது உடலை மணலில் புதைத்து விட்டான். மறுநாளில் எபிரெய மனுஷர் இருவர் சண்டை பண்ணுவதைக் கண்டு, அநியாயம் செய்கிறவனைப் பார்த்து, உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கூறி சமாதானம் பண்ணப் பார்த்தான். அப்போது மோசே செய்த பாவம் வெடித்தது, 'நீ எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ' என்றான் அவன். 24 மணி நேரத்துக்குள்ளாக காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று மோசே பயந்தான். நாம் பாவத்தை எவ்வளவு ஜாக்கிரதையாக மறைக்க முயன்றாலும் அதை ஒருபோதும் முற்றிலும் மறைத்துவைக்க முடியாது. அது ஒருநாள் வெளிப்பட்டே தீரும். *பாவத்தை மறைத்து, நமக்குநாமே தீங்கு வரவழைக்காமல், அதை அறிக்கையிட்டு விட்டு விடுவோமானால் அது நிச்சயம் விடுதலையைத் தரும், அதையே தேவனும் எதிர்பார்க்கிறார்.* வேதாகமத்திலே சிலரது பாவங்கள் வெளியரங்கமாக்கப்பட்டு கடவுளுடைய நியாயத்தீர்ப்பு அங்கு உடனடியாக வெளிப்பட்டதைக் காணலாம். ஆனால், வேறு சில சந்தர்ப்பங்களில் சிலரது பாவங்கள் மறைக்கப் பட்டு, கடவுளின் நியாயத்தீர்ப்பு உடனடியாக வெளிப்படாத சம்பவங்களும் உண்டு. ஆனால், எது எப்படியாயினும் பாவத்துக்கான கடவுளுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்படாமல் போகாது.
தேவபிள்ளையே, *உன் பாவத்துக்கான நியாயத்தீர்ப்பு இன்னமும் வெளிப்படாததால் தொடர்ந்து பாவம் செய்யத் துணிகரம் கொண்டுள்ளாயா?* சாக்குப் போக்குகள் கூறி உன்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாயா? உனது இதயத்தை வருத்தும் மறைவான பாவங்கள் எவை? இன்றே அதை தேவனிடம் அறிக்கையிடு. அவரது மன்னிப்புக்காகக் கெஞ்சு. பாவத்திலிருந்து விடுதலையடைய உனக்கு உதவிசெய்யக் கூடிய நல்ல நண்பர்களிடமோ அல்லது உன் சபைப் போதகரிடமோ அதைக்கூறி ஆலோசனை கேட்பதும் உனக்கு நன்மை பயக்கும்.
*நாம் ஒத்துக்கொள்ள மறுக்கும் பாவத்தைத்தவிர வேறு எந்தப் பாவத்தையும் தேவனால் மன்னிக்க முடியும்!*
🙇 *ஜெபம்:* நீதியின் தேவனே, உம் பார்வைக்கு மறைவானது எதுவுமில்லை.என் இதயத்தில் காணப்படும் துணிகரங்கள், அக்கிரமசிந்தை யாவற்றையும் எனக்கு மன்னியும். *ஆமென்.*
*Click on youTube link*
https://youtu.be/_W7ik2Dxqfg
☦️ *இன்றைய விண்ணப்பம்*
*1.* இந்தநாளில் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய் நமக்குச் செய்ய வல்லவராகிய தேவன் அனைத்து பிள்ளைகளும் மகிழ்ச்சியோடு தேர்வுமுடிவுகளைப் பெற்றுக்கொள்ள உதவி செய்ய வேண்டுமென்று அவர்களுக்காக ஜெபிப்போம்.
*2.* வேதாகமத்தை மொழி பெயர்க்கும் ஊழியப்பணிகளுக் காகவும், ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம். இதுவரை வெளியிடப் பட்ட புதிய மொழிகளின் மொழி பெயர்ப்பிற்காகவும், அந்த மொழிகளில் சுவிசேஷ பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் அச்சிடப் படுவதற்கு உள்ள தேவைகள் சந்திக்கப் படவும், புதியவிசுவாசிகள் கர்த்தருக்குள் நிலைத்திருப்பதற்கும் அவர்கள் சபைஐக்கியங்களில் இணைந்து கிறிஸ்துவுக்குள் வளர ஜெபிப்போம்.
✍️ *சத்தியவசனம் சஞ்சிகை*
```கர்த்தரால் வல்லமையாய் பயன்படுத்தப்படும் வேதபோதனையாளர்கள் எழுதிய ஆவிக்குரிய சத்தியங்களும் கட்டுரைகளும் அடங்கிய சத்தியவசன சஞ்சிகை இருமாதங்களுக்கொரு முறை வெளியிடுகிறோம்.```
_சஞ்சிகையின் வருடசந்தா ரூ.150/- மட்டுமே._
```விசுவாசப்பங்காளர்களாக இணைந்து இவ்வூழியத்தைத் தாங்குபவர்கள் இந்தப் புத்தகத்திற்கென சந்தா செலுத்தத் தேவையில்லை.```
Our Bank Account: Sathiyavasanam | A/C No:001802000001151 | IOB - Chokkikulam, Madurai – 2 | IFS Code: IOBA0000018 | Current Deposit
```(இலங்கையில் உள்ள Whatsapp வாசகர்கள் சத்தியவசன சஞ்சிகையை பெற விரும்பினால் கீழ்க்காணும் முகவரியுடன் தொடர்புகொள்ளவும்:
Sathiyavasanam, 120A - Dharmapala Mawatha,
Colombo 7, Srilanka;
Ph: (94) 11-4691 500;Email: [email protected]).```
Our Address: Sathiyavasanam, 21 Venkatraman Street, Chinnachokkikulam, Madurai -625002
Tel.No.: 0452-2532316,
Mobile No.: 9442532316,
Whatsapp: 6380692034
Email: [email protected]; [email protected] website: www.sathiyavasanam.in
About Sathiyavasanam MinistrySathiyavasanam Tamil Ministry is a unit of The Good News Broadcasting Society, Secunderabad which represents the world wide mini...