10/05/2023
Last couple of seasons age caught him. அது உண்மை தான். ஆனால் உதைபந்தாட்ட உலகு கண்ட ஆக்ச்சிறந்த CDM களில் புஸ்கெட்ஸ் பெயர் எப்போதும் இருக்கும். He is one if the best or He is the best. Ball possession, Vision, defending , Game play, Creating moments என்று புஸ்கெட்ஸ் நுழையாத இடம் இல்லை. உதைபந்தாட்ட உலகில் அவன் சாதிக்கவென்று இனிமேல் எதுவும் இல்லை.
உலக கிண்ண வெற்றியாளன்.
சம்பியன்ஸ் லீக் வெற்றியாளன்.
ஸ்பானிஷ் லீக் வெற்றியாளன்.
ஸ்பானிஷ் கிண்ண வெற்றியாளன்.
கழக உலக கிண்ண வெற்றியாளன்.
பார்சினோனாவின் சொந்த பட்டறையான La massia இன் ஒரு மாணவனாய் ஆரம்பித்து, தலை சிறந்த அந்த கழகத்தின் அணித் தலைவராய் வளர்ந்த புஸ்கெட்ஸின் வளர்ச்சி அபரிமிதமானது. ஸ்பெயின் அணியின் மத்திய கள மும்மூர்த்தீகளில் ஒருவனாக சாவி, இனியெஸ்டாவுடன் களமாடி ஸ்பெயினுக்கு 2010 இல் உலக கிண்ணத்தை பெற்றுக்கொடுத்தவன்.
சில வருடங்களுக்கு முன்னர் எனது நண்பன் ஒருவனுக்கு சொன்ன பதிலை இங்கே தருகிறேன். " மெஸ்ஸி இல்லாத பார்சிலோனா பற்றி அனைவரும் கவலை கொள்கிறார்கள். ஆனால் peak புஸ்கெட்ஸ் இல்லாதா பார்சிலோனாவின் மத்திய களம் குறித்த கவலை எனக்கு "
Controlling midfield என்பதை அநாசயமாக செய்பவன். Ball control and his ability to do it so என்பதெல்லாம் தரவில் சேராத அதிசயங்கள். Barcelona would never find a midfielder close to him anytime sooner.
மன்செஸ்சர் சிட்டியின் பயிற்றுவிப்பாளர் பெப் குவார்டியோலா சொன்ன வார்த்தைகள் தான் எனக்கு ஞாபகம் வருகிறது..
" you follow Sergio Busquets. You follow the whole game "
அவன் எங்கள் அணியை அல்ஃபாவிலிருந்து டீட்டா வரை வழிநடத்தவனாக இருந்தான்.
எங்கள் சொந்த தயாரிப்பு, 18 ஆண்டுகளாக எங்களுக்காக கோலோச்சிய midfielder. Maestro announce his departure from.Barcelona.
Thank you and Good Luck Captain ❤️
பதிவு கிசோர்