Sk views

Sk views Cenima & all news...

வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ட...
12/08/2026

வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது..
விபத்தில் முச்சக்கவண்டியில் பயணித்த ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

OMG 🤯 🤯 🚨 கிளிநொச்சி A9 வீதியில் கோர விபத்து – 21 வயது இளைஞன் பலி!கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் A9 பிரதான வீதியில் இன...
12/08/2026

OMG 🤯 🤯
🚨 கிளிநொச்சி A9 வீதியில் கோர விபத்து – 21 வயது இளைஞன் பலி!

கிளிநொச்சி தொண்டமாநகர் பகுதியில் A9 பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களுடன் பயணித்த இரண்டு பாரஊர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முன்னால் சென்ற பாரஊர்தி வீதியில் நிறுத்தப்பட்டு பொருட்களை இறக்க முற்பட்ட வேளையில், பின்னால் வந்த பாரஊர்தி அதன்மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பின்னால் வந்த பாரஊர்தியின் உதவியாளராக பணியாற்றிய 21 வயதான இளைஞர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

📍 இடம்: தொண்டமாநகர், கிளிநொச்சி – A9 வீதி
🕐 நேரம்: இன்று அதிகாலை
💔 உயிரிழப்பு: 21 வயது இளைஞர்

⚠️ A9 வீதியில் தொடரும் விபத்துகள் – சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்கவும்!

09/08/2026

ReeCha Food Festival-ல் பரபரப்பு! 🔥 மக்கள் முறுகல் நிலை!

ஆ… றீச்சாவில் குடுத்த சாப்பாடு சரியில்லை என்று சொல்கிற அத்தனை பேருக்கும் காசைத் திருப்பித் தரலாம் என்று பாஸ்கரன் அறிவிச்...
09/08/2026

ஆ… றீச்சாவில் குடுத்த சாப்பாடு சரியில்லை என்று சொல்கிற அத்தனை பேருக்கும் காசைத் திருப்பித் தரலாம் என்று பாஸ்கரன் அறிவிச்சிட்டார்.

சூ பேந்தென்ன!

எனக்குத் தெரிஞ்சு ஒருத்தருமே சாப்பாடு நல்லா இருந்ததாகச் சொல்லவில்லை. 😂

போகிற போக்கில் அவ்வளவு பேரும் காசைத் திருப்பிக் கேட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். 🤣

ஏற்கனவே 1,500 பேருக்கு காசைத் திருப்பிக் குடுத்திருக்கிறதாக பாஸ்கரன் அறிவிச்சிருக்கிறார்.

அப்பிடிப் பார்த்தால் ஆளுக்கு 3,000 ரூபா படி பாஸ்கரனுக்கு இது வரை 45 இலட்சம் ரூபா நட்டம்.

யம்மாடியோவ்!

இதுக்குள்ள சுமந்திரனின்ரை உதவியாளர்மாராக இருக்கிற சட்டத்தரணிமார் பாதிக்கப்பட்ட ஆட்கள் கொஞ்சப் பேருக்கு telephone எடுத்து நட்ட ஈடு பெற்றுத் தரலாம் என்று கதைச்சிருக்கீனமாம்.

உது போதாது என்று அருச்சுனாவின் சட்டத்தரணியாக இருக்கிற கௌசல்யாவும் கொஞ்சப் பேரோடு telephone எடுத்து நட்ட ஈடு பற்றிக் கதைச்சிருக்கிறாவாம்.

இனி என்ன நடக்கப் போகுதோ!

ஆ…

07/08/2026

சற்று நாளாகவே பிக் மீ மற்றும் பார்க் காரர்களுக்கிடையே இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டு இருக்கிறது….
( மீட்டர் ஆவது பூட்டினால் இந்த பிரச்சனை குறையும் வாய்பு இருக்கலாம்)

இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை பெண் உட்பட இருவர் கைது!பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவு...
05/08/2026

இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை பெண் உட்பட இருவர் கைது!

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு மற்றும் மல்வத்தை ஆகிய பகுதிகளில் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த இரு சட்டவிரோதக் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் புதன்கிழமை (05) சம்மாந்துறை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளன.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இச்சோதனை நடவடிக்கையின் போது மல்வத்தை மல்வத்தை – கணபதிபுரம் பாடசாலை முன்பகுதியில் கசிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1 இலட்சம் மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதுடன், 57 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.அதேபோன்று, மல்லிகைத்தீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5 கேன்களில் அடைக்கப்பட்டிருந்த 1 இலட்சம் மில்லி லீற்றர் கோடாவுடன் 43 வயதுடைய பெண் சந்தேகநபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக் கமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி வழிகாட்டலில், ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி என். ரிபாய்டீன் ,போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி விஜேவர்தன, பொலிஸ் சார்ஜன்ட்களான அசோக (43940), அனுர (63715), பொலிஸ் கான்ஸ்டபிள் நிரஞ்சன் (90096) மற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் நிலாந்தி (2472) ஆகியோர் பங்கேற்றிருந்தனர் பொலிஸ் குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களும் சட்ட நடவடிக்கைகளுக்காகச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (4)  கைது செய்யப்பட்டார். தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பி...
04/08/2026

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (4) கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தவெக அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, உதயநிதியின் பேச்சு விவகாரத்தில் அவரை கைது செய்ய, நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டின் முன்பு இன்று காலையில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர். திமுக நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினரிடம் பொலிஸார் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் நடந்த விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு.!கிளிநொச்சி, இயக்கச்சி பகுதியில் இன்று (03) ம...
03/08/2026

கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் நடந்த விபத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு.!

கிளிநொச்சி, இயக்கச்சி பகுதியில் இன்று (03) மோட்டார் சைக்கிள் ஒன்றும், ஹயஸ் வாகனம் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளன.

வீதியில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பெண் மீது அதே திசையில் பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்துச் சம்பவித்துள்ளது.

விபத்தில் காயங்களுக்குள்ளான பெண் உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பொதுப் பணிகளில் முன்னின்று செயற்பட்டு வந்த முகாவில் பகுதியைச் சேர்ந்த திருமதி.சந்திரன் சசிகலா (வயது- 49) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

''வீதி விபத்துகளைத் தவிர்க்க போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுங்கள். உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்".

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!
03/08/2026

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

வலி.வடக்கில் காணி விடுவிப்பை வலியுறுத்தி வசாவிளான் மக்களும் தொடர் போராட்டம் ஆரம்பம்!
02/08/2026

வலி.வடக்கில் காணி விடுவிப்பை வலியுறுத்தி வசாவிளான் மக்களும் தொடர் போராட்டம் ஆரம்பம்!

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sk views posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share