Dharussafa NEWS

Dharussafa NEWS Dharussafa Organization

✍️ ‘ஸ்பைடர் வுமன்’ வலை விரித்து தூக்கிய சாய்ந்தமருது பொலிஸார்.!3-வது மாடியிலிருந்து பாய்ந்து தப்பித்த போதைப்பொருள் தலைவி...
14/08/2026

✍️ ‘ஸ்பைடர் வுமன்’ வலை விரித்து தூக்கிய சாய்ந்தமருது பொலிஸார்.!

3-வது மாடியிலிருந்து பாய்ந்து தப்பித்த போதைப்பொருள் தலைவி கால் உடைந்த நிலையில் கைது.!

(பாறுக் ஷிஹான்)

பொலிஸார் வருவதைக் கண்டதும் கட்டிடத்தின் 3-வது மாடியிலிருந்து பிற மாடிகளுக்குப் பாய்ந்து தப்பிச் செல்வதால், அப்பகுதி மக்களால் ‘ஸ்பைடர் வுமன்’ (சிலந்தி பெண்) எனச் செல்லமாக அழைக்கப்பட்ட பெண் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை சாய்ந்தமருது பொலிஸார் சினிமா பாணியில் கைது செய்துள்ளனர்.

கல்முனைக்குடி கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் மறைந்திருந்து நீண்ட காலமாக ஐஸ் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களை விநியோகித்து வந்த 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

👉மாறுவேடத்தில் சென்று வளைத்துப் பிடித்த பொலிஸார்.

அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வியாழக்கிழமை (13) மாலை விசேட அதிரடி சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸார் வருவதை அறிந்தால் உடனடியாகக் கட்டிட மாடிகளில் லாவகமாகப் பாய்ந்து தப்பி ஓடும் திறமை படைத்த இந்தச் ‘சிலந்தி பெண்ணை’ச் சிக்க வைக்க, பெண் பொலிஸாரின் உதவியுடன் பொலிஸ் குழுவினர் மாறுவேடத்தில் சென்று சுருக்குப் பொறி வைத்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 2,310 மில்லி கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் அச்சந்தேக நபர் பிடிபட்டார்.

கைது செய்யப்பட்ட போது, தொடர்ச்சியாக மாடிகளில் இருந்து குதித்ததால் அவரது கால் உடைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

👉பொலிஸாருக்கு ‘சிம்ம சொப்பனம்’!

கணவனை இழந்த இவர், தனது உறவினர்களின் ஒத்தாசையுடன் கல்முனைப் பகுதியில் நீண்ட காலமாகப் போதைப்பொருள் நெட்வொர்க்கை நடத்தி வந்துள்ளார். இதற்கு முன்னரும் இருமுறை கைதான இவர், கல்முனை தலைமையக பொலிஸாருக்குப் பெரும் சவாலாகவும் சிம்ம சொப்பனமாகவும் இருந்து வந்துள்ளார்.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி ஆகியோரின் ஆலோசனையில், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி வி.பிரகலாதன் தலைமையிலான குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வி.ஜீவரத்தினம் பொலிஸ் உத்தியோகத்தர்களான அதுவார் (91775) நிவேதன்(94680)பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சாமிலி(10669) உள்ளிட்ட குழுவினர் இந்த விசேட அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

நீண்ட நாட்களாகத் தலைவலி கொடுத்து வந்த போதைப்பொருள் பெண் வியாபாரியைக் கைது செய்த பொலிஸாருக்கு அப்பகுதி பொதுமக்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணையும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களையும் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

✍️பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை... எந்தவொரு வினாத்தாளும் முன்கூட்டி வெளியாகவில்லை என்கிறார் ஆணையாளர்... "...
13/08/2026

✍️பரீட்சைகள் ஆணையாளர்
நாயகத்தின் விசேட அறிக்கை...

எந்தவொரு வினாத்தாளும் முன்கூட்டி வெளியாகவில்லை என்கிறார் ஆணையாளர்...

"வினாத்தாள் அடங்கிய பொதியானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திறக்கப்படவோ அல்லது ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து வெளியாகவோ இல்லை. அத்துடன், எந்தவொரு வினாத்தாளும் எந்த வகையிலும் முன்கூட்டியே வெளியாகவில்லை என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்”என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

பொய்யான தகவல்களால் பதற்றமடையாமல், நாளை (14) வெள்ளிக்கிழமை நடைபெறும் பரீட்சைக்கு முகங்கொடுக்குமாறு அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் அன்புடன் அறிவிக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி அனைத்து பரீட்சை மையங்களிலும் பரீட்சைகள் இடம்பெறும் என்பதால், அனைத்து பரீட்சார்த்திகளும் தமக்குரிய அட்டவணைப்படி குறித்த பரீட்சை மையங்களுக்கு சமுகமளித்து பரீட்சைக்கு முகங்கொடுக்குமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

-vidiyal.lk

✍️ நாளை நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் அம்பாலாந்தோட்டை மீட்புஅம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றி...
13/08/2026

✍️ நாளை நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் அம்பாலாந்தோட்டை மீட்பு

அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில், பரீட்சை வினாத்தாள் பெட்டியொன்றிலிருந்து நாளை (14) நடைபெறவிருந்த பெளதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எவ்வாறாயினும், அந்த வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தற்போது நடைபெற்று வருகின்றது.

இவ்வாறான பின்னணியில், உயர்தர ஒருங்கிணைப்பு மையமான அம்பாலாந்தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில், இன்று நடைபெறும் பாடங்களுக்குப் புறம்பாக நாளை நடைபெறவிருந்த பாடத்தின் 6 வினாத்தாள் பொதிகள் பெட்டியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்று நடைபெறவுள்ள இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியில் இருந்தே, நாளை நடைபெறவிருந்த பெளதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

✍️ தற்போது நாடுபூராகவும் பரீட்சை நிலையங்களில் A/L  பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருப்பதனை கவனத்தில்கொண்டு ஜும்'ஆவுடைய நேரத்தை...
13/08/2026

✍️ தற்போது நாடுபூராகவும் பரீட்சை நிலையங்களில் A/L பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருப்பதனை கவனத்தில்கொண்டு ஜும்'ஆவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்ளல், ஒலிபெருக்கி பாவனை தொடர்பாக..

✍️ இலங்கையின் கல்வி மற்றும் மதிப்பீட்டு முறையானது, பரீட்சைகளை மாத்திரம் மையமாகக் கொண்ட அணுகுமுறையைத் தாண்டி, மாணவர்களின்...
13/08/2026

✍️ இலங்கையின் கல்வி மற்றும் மதிப்பீட்டு முறையானது, பரீட்சைகளை மாத்திரம் மையமாகக் கொண்ட அணுகுமுறையைத் தாண்டி, மாணவர்களின் திறன்கள், படைப்பாற்றல் மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கற்றல் செயன்முறையாகவும், ஒரு முழுமையான வளர்ச்சிச் செயன்முறையாகவும் நவீனமயமாக்கப்பட வேண்டும்.

ஆகஸ்ட் 12ஆம் திகதி கொழும்பில் அமெரிக்க - இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவினால் (US-Sri Lanka Fulbright Commission) ஏற்பாடு செய்யப்பட்ட “250 வருட கால கல்விச் சிறப்பு: இலங்கை-அமெரிக்கரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்” (250 Years of Educational Excellence: Lessons from a Sri Lankan American) என்ற தலைப்பிலான பொதுச் சொற்பொழிவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.

✍️ கல்முனை வடக்கு வைத்தியசாலை ஆடை விவகாரம்: ஆதம்பாவா எம்.பி. விளக்கம்.( மின்மினி மின்ஹா + ARM. மஜீட் )கல்முனை வடக்கு ஆதா...
13/08/2026

✍️ கல்முனை வடக்கு வைத்தியசாலை ஆடை விவகாரம்: ஆதம்பாவா எம்.பி. விளக்கம்.

( மின்மினி மின்ஹா + ARM. மஜீட் )

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட 9 முஸ்லிம் பெண் ஊழியர்கள் ஆடை விவகாரம் காரணமாக கடமையில் இணைவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தாம் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ. ஏ.ஆதம்பாவா தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இன்று (13) நடைபெற்ற சமுர்த்தி வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர், தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இன, மத வேறுபாடுகளை மறந்து விட்டுக் கொடுப்புடன் வாழ்வதே நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை எனக் குறிப்பிட்டார்.

அரசியல் நோக்கங்களுக்காக இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதைத் தவிர்த்து, வாழ்வாதார மேம்பாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து அல்ஹாஜ் எஸ்.எல். முகம்மது ஹணீபா, அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.கரன்,உதவி பிரதேச செயலாளர், பிரஜா சக்தி வலயத் தலைவர்கள் , சமூர்த்தி வலய முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

✍️ அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அரசகரும மொழி விழிப்புணர்வு நிகழ்வு!(எஸ்.எம்.அறூஸ்)நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அ...
13/08/2026

✍️ அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அரசகரும மொழி விழிப்புணர்வு நிகழ்வு!

(எஸ்.எம்.அறூஸ்)

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அனுசரணையில், அரசகரும மொழி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் சட்டத்தரணி எப். நஹீஜா முஷாபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, அரச நிர்வாகத்தில் இருமொழி மூலமான சேவைகளை மேம்படுத்துவதையும், பொதுமக்களுக்கு உரிய மொழிகளில் சேவைகளைத் தடையின்றி வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவின் அம்பாறை மாவட்ட செயலக தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உதவியாளர் மகேஸ்வரன் தீபன் அவர்களின் ஒருங்கிணைப்பிலும், தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். முஹம்மட் றிஸான் (JP) அவர்களின் நெறிப்படுத்தலிலும் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது

அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சேவை பெறும் போது மொழி மூலமான தடைகளை நீக்குவது குறித்தும், அலுவலக ஆவணங்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களை அரசகரும மொழிக் கொள்கைக்கிணங்க கையாள்வது குறித்தும் இதன்போது விரிவாக விளக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் எம்.எப். பர்ஹான், நிர்வாகப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் கே.எம்.எம். அன்சார், திட்டமிடல் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி நவரத்தினராசா, கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம். சினாஸ், பாட போதனாசிரியர் எம்.எம். பாஸில் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தந்த பயனாளிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் ஆர்வமுடன் கலந்துகொண்டதுடன், மொழி உரிமை தொடர்பான தமது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.

✍️ இலங்கைக்கான புதியஅமெரிக்க தூதுவராகஎரிக் மேயர் பதவிப்பிரமாணம்இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric M...
13/08/2026

✍️ இலங்கைக்கான புதிய
அமெரிக்க தூதுவராக
எரிக் மேயர் பதவிப்பிரமாணம்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) உத்தியோகபூர்வமாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இராஜாங்கத் திணைக்களத்தில் அவர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் நீண்டகால அனுபவம் கொண்ட சிரேஷ்ட இராஜதந்திரியான இவர், இலங்கை - அமெரிக்கா இடையிலான நட்புறவை மேலும் பலப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான நலன்களை மேம்படுத்தவும் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

12/08/2026

ஒரு கோடி ஸலவாத் சமர்ப்பணம்

அன்புசால் ஈமானிய சகோதர, சகோதரிகளே!

அண்ட கோடிகளின் அருட்கொடை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் 1501வது மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு, கல்முனை முஹ்யித்தீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் ஒரு கோடி ஸலவாத்தை சமர்ப்பணம் செய்யவுள்ளோம், இன்ஷா அல்லாஹ்!

நீங்களும் உங்கள் குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்களும் சமர்ப்பணம் செய்யவுள்ள ஸலவாத்துக்களின் எண்ணிக்கையை கீழேயுள்ள லிங்கின் ஊடாக பதிவு செய்யமுடியும்.

🕌 ஒருவர் தங்களால் முடியுமான எத்தனை ஸலவாத்துக்களையும் பொறுப்பெடுக்க முடியும்.

🕌 எதிர்வரும் 25-08-2026ம் திகதி இரவு 09.00 மணிக்கு முன்னர் இப்புனித ஸலவாத் நிகழ்வில் இணைந்துகொள்ளலாம்.

🕌 பொறுப்பெடுத்த ஸலவாத்துக்களை 26-08-2026ம் திகதி தஹஜ்ஜுத் தொழுகை நேரத்திற்குள் ஓதி முடிக்க வேண்டும்.

உங்கள் ஸலவாத்துக்களின் எண்ணிக்கையை பதிவுசெய்ய:
https://forms.gle/rXinVzonq1AcAtx38

இதுவரை பொறுப்பெடுக்கப்பட்ட ஸலவாத்துக்களின் எண்ணிக்கையை பார்வையிட:
https://docs.google.com/spreadsheets/d/1pB-126hxFmRbWUQwI4ctfVYT4NdcVFbtMa4gySTOs24/edit?usp=sharing

வாட்சப் குழுமத்தில் இணைந்துகொள்ள:
https://chat.whatsapp.com/GmSd2BLBt4RDmrVTYEsbYD

நீங்களும் இப்புனித ஸலவாத் நிகழ்வில் பங்குதாரர்களாகி அண்ணலாரின் ஷஃபாஅத்துக்கு சொந்தக்காரர்களாக ஆகுங்கள்.

நம்பிக்கையாளர் சபை,
முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃப் - கல்முனை.
+94775150860 | +94779897551 | +947723261

✍️ சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக தனது கடமையை பொறுப்பேற்றார் ஏ.சி.எம்.பளீல்கல்முனை பிரதேச செயலகத...
12/08/2026

✍️ சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக தனது கடமையை பொறுப்பேற்றார் ஏ.சி.எம்.பளீல்

கல்முனை பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த ஏ.சி.எம்.பளீல் அவர்கள் இடமாற்றம் பெற்று இன்று (13.08.2026) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக
தனது கடமையை பொறுப்பேற்றார்.

Address

Kalmunai

Telephone

+94779977474

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dharussafa NEWS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share