Kalmunaiwin

Kalmunaiwin எமது செய்திச்சேவையானது அனைத்துவிதமான செய்திகளையும் தமிழ் மொழியில் வழங்கிவருகிறது. உங்கள் அனைவரின் ஒத்துழைப்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்
(2)

03/08/2026

🚨 கல்முனையில் கோர விபத்து – சிசிடிவி காணொளி

💢 செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது சேனலினை பின்தொடரவும் 💢

https://whatsapp.com/channel/0029VaDz4SWIyPtJzkSCRs0d

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

எழுச்சி பெற்றுவரும் பாண்டிருப்பு மகா வித்தியாலயம்கல்முனை வலயமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தி...
03/08/2026

எழுச்சி பெற்றுவரும் பாண்டிருப்பு மகா வித்தியாலயம்

கல்முனை வலயமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் இருந்து பங்குபற்றி வெற்றியீட்டி மாகாண மட்டத்திற்க்கு தெரிவாகிய செல்வி.பி.வர்ஷா, செல்வி.வ.ரித்திகா, செல்வி.கு.சஜித்தா ஆகிய மாணவிகளுக்கு கெளரவிப்பு நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு.K.அருண்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. வெற்றியீட்டிய மாணவர்கள் மற்றும் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்முனைவின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

💢 செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது சேனலினை பின்தொடரவும் 💢

https://whatsapp.com/channel/0029VaDz4SWIyPtJzkSCRs0d

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

🎯 உங்கள் குழந்தையின் அறிவை மேலும் கூர்மையாக்க ஒரு சிறந்த வாய்ப்பு! ♟️🔥​Pro Knights Chess Academy வழங்கும் புதிய சதுரங்க ...
02/08/2026

🎯 உங்கள் குழந்தையின் அறிவை மேலும் கூர்மையாக்க ஒரு சிறந்த வாய்ப்பு! ♟️🔥

​Pro Knights Chess Academy வழங்கும் புதிய சதுரங்க வகுப்புகள் 2026 இப்போது NILA Tuition Center-இல் ஆரம்பமாகிறது! 🥳✨

​சதுரங்கம் வெறும் விளையாட்டு மட்டுமல்ல; அது உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை செதுக்கும் சிறந்த பயிற்சி! 🧠💡

​🌟 இந்த வகுப்பின் நன்மைகள்:

​🎯 கவனம் வளரும் (Focus & Concentration)

🧠 சிந்தனை திறன் மேம்படும் (Problem Solving & Critical Thinking)

🏆 தன்னம்பிக்கை அதிகரிக்கும் (Self-Confidence)
📈 தீர்மானிக்கும் திறன் வளரும் (Decision Making Skills)

​⏰ வகுப்பு நேரங்கள் (Class Schedule):
​சனிக்கிழமை (Saturday): மாலை 4.00 PM - 6.00 PM

​ஞாயிற்றுக்கிழமை (Sunday): மதியம் 2.00 PM - 4.00 PM OR மாலை 4.00 PM - 6.00 PM

​📍 முகவரி & தொடர்புக்கு:
​🏢 NILA Tuition Center
📍 Boundary Road, Pandiruppu - 02, Kalmunai

📞 இன்றே தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யுங்கள்: 076 011 5813

​♟️ "சதுரங்கம் விளையாடு... சிந்தனை வளர்த்து... வெற்றியை நோக்கி நடைபோடு!" 🚀🏆

இன்றே முன்பதிவு செய்யுங்கள்! இடங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன!

விளம்பர தொடர்புகளிக்கு +94763274070 எனும் வாட்ஸ்அப் ஐ தொடர்பு கொள்ளுங்கள்

💢 செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது சேனலினை பின்தொடரவும் 💢

https://whatsapp.com/channel/0029VaDz4SWIyPtJzkSCRs0d

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர்கள் இருவர் விளக்கமறியலில்!அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இ...
02/08/2026

அஸ்வெசும ஊழல் மோசடி: நோர்வூட் பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர்கள் இருவர் விளக்கமறியலில்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று (02) காலை ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் நாராயணன் பார்த்திபன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகக் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 33 மற்றும் 30 வயதுடைய இரு பெண் உத்தியோகத்தர்களும் 2025 ஆம் ஆண்டு முதல் இதுவரை 29 இலட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் வரை மோசடி செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நோர்வூட் பிரதேச செயலகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய இவ்விரு அரச ஊழியர்களுக்கும் எதிராகத் தொடர்ச்சியாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இரு அதிகாரிகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும், மற்றொருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றப்பட்டிருந்தனர்.

அதன்பின்னர் நோர்வூட் பிரதேச செயலாளரினால் ஹட்டன் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை (31) மாலை இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களிடம் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதுடன், உள்ளக கணக்காய்வு அதிகாரிகள் ஊடாகத் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன், அஸ்வெசும திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கணினிகளும் கணக்காய்வு அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து ஹட்டன் விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

💢 செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது சேனலினை பின்தொடரவும் 💢

https://whatsapp.com/channel/0029VaDz4SWIyPtJzkSCRs0d

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

சிறைச்சாலைகளையே நிர்வகிக்க முடியாவிட்டால், நாட்டை எப்படி நிர்வகிப்பீர்கள்?" – சஜித் பிரேமதாசஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...
02/08/2026

சிறைச்சாலைகளையே நிர்வகிக்க முடியாவிட்டால், நாட்டை எப்படி நிர்வகிப்பீர்கள்?" – சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டை திறம்பட நிர்வகிக்கும் திறன் அரசாங்கத்திடம் இல்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொரளை மாளிகாகந்த பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், நிபுணர்கள் குழுவை அமைத்து நாட்டை முன்னேற்றுவதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம், சிறைச்சாலை நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்தார்.

அண்மையில் வெளிநாட்டு கடன் செலுத்தும் நடவடிக்கையுடன் தொடர்புடைய இணையத் தாக்குதல் சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியதுடன், மக்களின் நிதியைப் பாதுகாக்கவும், கடன் செலுத்தல்களைச் சரியாக நிர்வகிக்கவும் அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

நீதி மற்றும் சிறைச்சாலை அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தோற்கடித்த சில நாட்களிலேயே மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டதாகவும், தற்போது மீண்டும் அதே சிறைச்சாலையில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"ஒரு சிறைச்சாலையைக் கூட சரியாக நிர்வகிக்க முடியாத அரசாங்கத்தால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது" எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச, நாட்டின் 30 முதல் 40 சதவீத மக்கள் தற்போது வறுமைக்கோட்டிற்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

💢 செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது சேனலினை பின்தொடரவும் 💢

https://whatsapp.com/channel/0029VaDz4SWIyPtJzkSCRs0d

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

கல்முனையில் வீதி விபத்து -கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கடையில் மோதி இருவர் படுகாயம்!​அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்திய...
02/08/2026

கல்முனையில் வீதி விபத்து -கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கடையில் மோதி இருவர் படுகாயம்!

அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் இன்று மாலை (02.08.2026)ஆம் திகதி திடீர் வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

​மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக பட்டாரக (Batta) வாகனம் ஒன்று, கல்முனை தாழவட்டுவான் சந்திக்கு அருகாமையில் பயணித்தபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த அவ்வாகனம் வீதியோரத்தில் அமைந்திருந்த அபிவிருத்தி லொத்தர் விற்பனை நிலையத்திற்குள் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

​இந்தக் கொடூர விபத்தில் லொத்தர் விற்பனை நிலையத்தின் தூண்கள் பலத்த சேதமடைந்து கடை தரைமட்டமாகியுள்ளதுடன், தலைகீழாகப் புரண்டுள்ளது.

​இவ்விபத்தின் போது பட்டாரக வாகனத்தின் சாரதியும், லொத்தர் விற்பனை செய்யும் கடையில் இருந்தவரும் படுகாயமடைந்துள்ளனர்.

​காயமடைந்தவர்கள் உடனடியாக அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

படம் : Ai

💢 செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது சேனலினை பின்தொடரவும் 💢

https://whatsapp.com/channel/0029VaDz4SWIyPtJzkSCRs0d

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

02/08/2026

இந்த வீடியோ மட்டக்களப்பு கல்லடி ஆற்றில் சுதந்திரமாக நீந்தும் முதலை இது .

முதலை : இது நம்ம ஏரியா! 🐊 🐊 🐊

💢 செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது சேனலினை பின்தொடரவும் 💢

https://whatsapp.com/channel/0029VaDz4SWIyPtJzkSCRs0d

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்ப...
02/08/2026

5 ஆம் தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை

2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இத்தடை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவதோ அல்லது விநியோகிப்பதோ கூடாது.

மேலும், பரீட்சை வினாத்தாள்களுக்குரிய வினாக்கள் அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறானவற்றைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டிற்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

💢 செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது சேனலினை பின்தொடரவும் 💢

https://whatsapp.com/channel/0029VaDz4SWIyPtJzkSCRs0d

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

தாய்லாந்திலிருந்து வந்த 'பரிசுப் பார்சலில்' ரூ.10.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்...
01/08/2026

தாய்லாந்திலிருந்து வந்த 'பரிசுப் பார்சலில்' ரூ.10.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இலங்கைக்கு விமான சரக்காக அனுப்பப்பட்டிருந்த பார்சலிலிருந்து ரூ.10 கோடியே 60 இலட்சம் மதிப்புள்ள ஹஷிஷ் உள்ளிட்ட போதைப்பொருட்களை இலங்கை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

கடந்த ஜூலை 24 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL405 விமானம் மூலம் வந்த இந்த சரக்கு, பரிசுப் பொருள் (Gift Shipment) என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜூலை 31 ஆம் திகதி TRICO UPB கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, உலோகக் கொள்கலன்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.608 கிலோ ஹஷிஷ், கஞ்சா மற்றும் ஹஷிஷ் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் தெருமுனை சந்தை மதிப்பு ரூ.10 கோடியே 60 இலட்சத்து 80 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சுங்கத்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

💢 செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது சேனலினை பின்தொடரவும் 💢

https://whatsapp.com/channel/0029VaDz4SWIyPtJzkSCRs0d

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை 9ஆம் திகதி ; உயர்தரப் பரீட்சை 10ஆம் திகதி ஆரம்பம்கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எ...
01/08/2026

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை 9ஆம் திகதி ; உயர்தரப் பரீட்சை 10ஆம் திகதி ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு, ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வரும் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளன. பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே உரிய வலையக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பாடசாலை அதிபர்கள் தத்தமது வலையக் கல்வி அலுவலகங்களில் பரீட்சைகளுக்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளர்களிடமிருந்து இவற்றைச் சென்று பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட வீட்டு முகவரிகளுக்குத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அனுமதி அட்டைகளில் ஏதேனும் தவறுகள் அல்லது திருத்தங்கள் காணப்படின், அவற்றை இணையவழியில் திருத்துவதற்கான வசதிகளும் பரீட்சைத் திணைக்களத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை ஐந்தாம் தர மாணவர்களுக்கான பரீட்சைகள் இம்மாதம் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்தர மாணவர்கள் மற்றும் ஐந்தாம் தர மாணவர்களுக்கான கருத்தரங்கள் மற்றும் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கான இறுதி தினம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

💢 செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது சேனலினை பின்தொடரவும் 💢

https://whatsapp.com/channel/0029VaDz4SWIyPtJzkSCRs0d

( வாட்ஸ்அப் சனல் என்பதால் தங்களின் தொலைபேசி இலக்கங்களை யாராலும் பெற்றுக்கொள்ளமுடியாது அதுமட்டுமன்றி குழு அட்மினால் கூட தங்களின் தகவல்களை பெறமுடியாது )

Address

Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when Kalmunaiwin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kalmunaiwin:

Shortcuts

Share