Puthiya Oli

Puthiya Oli Local News, World News, Viral Video, Sports News, Cinima News, Motivation and Extra Content. "Your Support Our Success"

⭕️இலங்கை ஜனாதிபதியின் மீலாதுன் நபி தின வாழ்த்துக்கள் # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #இஸ...
26/08/2026

⭕️இலங்கை ஜனாதிபதியின் மீலாதுன் நபி தின வாழ்த்துக்கள்
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

இஸ்லாமிய நாட்காட்டியின் 'ரபீஉல் அவ்வல்' மாதம் பிறப்பதன் மூலம், உலகவாழ் முஸ்லிம்கள், தியாகத்தை முன்நிறுத்தி மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் ஜனனதின கொண்டாட்டமான மீலாதுன் நபி விழா இன்றாகும். சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் தினம், வெறும் விழாவிற்கும் அப்பால் ஆழமான ஆன்மீக வடிவத்தை எதிர்பார்க்கும் ஒரு கொண்டாட்டமாகும்.

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வதற்காக, எல்லையற்ற பொறுமை மற்றும் கருணையின் வழியை வெளிப்படுத்திய முஹம்மது நபி(ஸல்) அவர்கள், மனிதகுலத்திற்கு அன்று முதல் இன்று வரை தோன்றிய மிகச் சிறந்த இறைத் தூதர்களில் ஒருவராவார். 23 ஆண்டுகள் அவர் எதிர்கொண்ட பல்வேறு இன்னல்கள் மற்றும் செய்த இணையற்ற தியாகங்களின் நோக்கம் அமைதி, சகோதரத்துவம், தூய்மை, நம்பகத்தன்மை மற்றும் நீதி நிலைகொண்ட ஒரு நல்ல சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும்.

இனம், சாதி, நிறம் அல்லது குலத்தின் அடிப்படையில் மனிதனை மதிப்பிடுவதை நிராகரித்த அன்னார், முழு மனிதகுலமும் ஒரே மூலத்திலிருந்து தோன்றியது என்பதையும், உண்மைத்தன்மை, சகிப்புத்தன்மை மற்றும் கருணை போன்ற உன்னத நற்பண்புகளால் மட்டுமே மேன்மையை அளவிட முடியும் என்பதையும் உணர்த்தினார். சமூகத்தில் உள்ள பணக்கார-ஏழை இடைவெளியை அகற்றி, ஒடுக்கப்பட்டவர்களுக்கும் உரிய உரிமைகளைப் பெற்றுத் தந்து, அவர் சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் முக்கிய அடித்தளத்தை அமைத்தார். சட்டத்தின் ஆட்சி நிலவும், நீதிமிக்க மற்றும் அனைவரையும் சமமாக நடத்தும் ஒரு நாட்டையும் சகவாழ்வுடனான சமூகத்தையும் உருவாக்கும் நமது எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு தேவையான வழிகாட்டுதல் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளில் ஏராளமாக காணப்படுகின்றன.

மனிதர்களின் உளத் தூய்மையையும், சமூகத்தின் நன்னடத்தையையும் சீர்குலைக்கும் அனைத்துக் தீமைகளையும் இஸ்லாம் நிராகரிக்கிறது. எனவே, நமது தாய்நாட்டில் பேரழிவாகப் பரவி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தேசிய செயற்பாடுகளைப் போன்ற, சமூக ஒழுக்கத்தை உயர்த்துவதற்கான திட்டங்களுக்கு நபிகளார் போதித்த இஸ்லாம் மார்க்கமும் அவரின் வாழ்க்கை முன்மாதிரியும் பெரும் பலத்தை அளிக்கின்றன.

உடைந்த உள்ளங்களைக் குணப்படுத்தி, வெறுப்பிற்குப் பதிலாக அன்பையும், பிணக்கிற்குப் பதிலாக சகோதரத்துவத்தையும் மதிக்கும் ஒரு புதிய யுகத்தை நோக்கிய பயணத்தில், நபிகள் (ஸல்) அவர்களினால் போதிக்கப்பட்ட இணையற்ற தியாகம் மற்றும் மனிதநேயத்தின் ஒளி அந்த பாதையைப் பிரகாசமாக்கும் என்பது எனது பலமான நம்பிக்கையாகும். நபிகளாரின் வாழ்க்கை முன்மாதிரி, அர்ப்பணிப்பு மற்றும் மேலான முயற்சிகளை உண்மையாக அர்த்தமுள்ளதாக்கி, நமது வாழ்க்கைப் பயணத்தை வடிவமைத்துக் கொள்ள உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அர்த்தமுள்ள மீலாதுன் நபி தின வாழ்த்துகள் உரித்தாகட்டும்!

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2026 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி

⭕️அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்: அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசரக் கோரிக்கை  # # # # # # # # # ...
25/08/2026

⭕️அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்: அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசரக் கோரிக்கை
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

✍️(மத்திய முகாம் செய்தியாளர்)

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில்இ அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுத்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராகக் கடமையேற்றுள்ள அனுபமா மங்கள விக்ரமாராச்சியை, சிலோன் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் இன்று (25) நேரில் சந்தித்துக் கௌரவித்ததுடன் இக்கோரிக்கையையும் முன்வைத்தனர்.

ஏனைய மாவட்டங்களில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று, அம்பாறை மாவட்டத்திலும் அரச காணி ஒன்றில் மாதிரி வீட்டுத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரச அதிபர், எதிர்வரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இது குறித்து ஆராய்ந்து, உரிய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.

இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சிலோன் மீடியா போரத்தினர் 'இன்றைய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் ஊடகவியலாளர்கள் தமது பணியை அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர். எனவேஇ தகுதியான ஊடகவியலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் , தேசிய அமைப்பாளர் எம்.வை. அமீர், செயலாளர் நூருல் ஹூதா உமர், பொருளாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், உப செயலாளர் என்.எம். அப்ராஸ் மற்றும் உப தலைவர்களான எஸ். தஸ்தகீர், எம்.எம். ஜபீர், உறுப்பினர் ஏ.எச்.எம். ஹாரீஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

⭕️அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை செயலமர்வு # # # # # # # # # # #  # # # # # # # # # # # # # #...
25/08/2026

⭕️அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை செயலமர்வு
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

✍️(ஏ.எச்.எம்.ஹாரீஸ்- மத்திய முகாம் செய்தியாளர்)

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான ஊடக பயிற்சிப் பட்டறை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை பத்திரிகைப் பேரவையின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்கிரமசிங்க மண்டபத்தில் (25) இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கல விக்ரமாரச்சி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை பத்திரிகைப் பேரவையின் செயலாளரும் சட்டத்தரணியுமான உபேந்திரா வளவாளராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மேலும் இந்நிகழ்வில் ஊடகத்தின் ஆரம்பம், அதன் செயற்பாடு, அதனால் ஏற்படும் சாதக பாதக விடையங்கள் என்ன என்பன போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன். ஊடகங்களில் தொழில்நுட்பம் எவ்வாறு செயற்படுகின்றது. அதன் செயற்பாடு என்ன, அதனை ஊடகவியலாளர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் போன்ற விடயங்கள் பேசப்பட்டது.

அத்தோடு ஏ.ஐ தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும் அது ஒரு சுதந்திரமான ஊடகவியலாளர்களின் அளவுக்கு இன்னும் வளர்ச்சியடையவில்லை. அதாவது ஒரு ஏ.ஐ. தொழில்நுட்பமானது மனித உணர்வுகளை புரிந்து செயற்படவும், அவர்களின் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவும் முடியாது. இதனால் ஏ.ஐ தொழில்நுட்பமானது ஒரு ஊடகவியலாளரை பொருத்தவரையில் இன்னும் பின் நோக்கியே உள்ளது என கூறிக்கொள்ளலாம்.

இவ்வாறு ஊடகவியலாளர்கள் செயற்பாடுகள் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் குறித்து தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களின் தொழில்முறைத் தன்மை மற்றும் சட்டப் பின்னணி போன்ற விடயங்களை இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி ஜெகத் லியன ஆராய்ச்சி கலந்து கொண்டு தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

⭕️சாய்ந்தமருது பொது நூலகத்தில் ‘நூலாசிரியர்களைச் சந்தித்தல் – 02’ நிகழ்வு # # # # # # # # # # # # # # # # # # # # # # # ...
23/08/2026

⭕️சாய்ந்தமருது பொது நூலகத்தில் ‘நூலாசிரியர்களைச் சந்தித்தல் – 02’ நிகழ்வு
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #

✍️நூருல் ஹுதா உமர், ஏ.எச்.எம். ஹாரீஸ், எம்.எஸ்.எம்.சாஹிர்

சாய்ந்தமருது பொது நூலகத்தின் ஏற்பாட்டில் ‘நூலாசிரியர்களைச் சந்தித்தல் – 02’ எனும் நிகழ்வு இன்று (23.08.2026) ஞாயிற்றுக்கிழமை காலை சாய்ந்தமருது பொது நூலகத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது பொது நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் வரவேற்புரையை நிகழ்த்தியதுடன், சிரேஷ்ட எழுத்தாளர் ஏ. பீர்முகம்மது நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.

இதன்போது நூலாசிரியர்களான அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி), கலாபூஷணம் யூ.எல். ஆதம்பாவா மற்றும் சிரேஷ்ட ஒலிபரப்பாளர், கலைஞர் ஏ. எல். அன்சார் ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டனர். இவர்களால் எழுதப்பட்ட ‘இஸ்லாமும் கவிதையும்’, ‘கிராமத்து மண்வாசம்’, ‘மலரும் மொட்டுகள்’ உள்ளிட்ட நூல்கள் தொடர்பிலும் நிகழ்வில் அறிமுகம் இடம்பெற்றது.

நிகழ்வின் சிறப்புரையை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முபிஸால் அபூபக்கர் நிகழ்த்தினார்.

தொடர்ந்து நூலாசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், நூலாசிரியர்களின் படைப்புகள், எழுத்துலக அனுபவங்கள் மற்றும் இலக்கியப் பங்களிப்புகள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வின் நன்றியுரையை சாய்ந்தமருது பொது நூலகத்தின் நூலக உதவியாளர் ஏ.ஏ.எஸ். நபீத் நிகழ்த்தினார்.

நூலாசிரியர்களையும் வாசகர்களையும் நேரடியாக இணைத்து இலக்கியம், அறிவு மற்றும் வாசிப்புப் பண்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

🚨முன்னாள் அமைச்சர் அகில விராஜ் விளக்கமறியலில்==================================முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எ...
05/08/2026

🚨முன்னாள் அமைச்சர் அகில விராஜ் விளக்கமறியலில்
==================================
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (05) முற்பகல் ஆஜரான நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஜனாதிபதி செயலக பணிக்காக ஆட்சேர்ப்பு செய்து, தனது சொந்த பணிகளுக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து இடம்பெற்று வந்த விசாரணைகளின் அடிப்படையில் இன்றையதினம் (05) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

02/08/2026

⭕ YWMA அமைப்பின் 40ஆம் ஆண்டு நிறைவு விழாவும் நூல் வெளியீட்டு நிகழ்வும் கோலாகலமாக நடைபெற்றது.
=======================================

02/08/2026

⭕️சிலோன் மீடியா போரத்தின் 7வது ஆண்டு நிறைவு விழா, மயோன் எக்ஸ்பிரஸ் அனுசரணையில் நுவரெலியாவில் விமரிசையாகக் கொண்டாட்டம்.
======================================

https://puthiya-oli.blogspot.com/2026/08/7.html

⭕கிழக்கு மாகாண சேர். ஜோன் டார்பெட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி; கல்முனை ஸாஹிறா  மாணவர்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு====...
12/07/2026

⭕கிழக்கு மாகாண சேர். ஜோன் டார்பெட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி; கல்முனை ஸாஹிறா மாணவர்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு
=====================================

✍️எம்.எஸ்.எம்.ஸாகிர்

இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கத்தினால் நாடுபூராக நடைபெறும் Sir John Tarbat கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தை உள்ளடக்கிய 2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுப் போட்டிகள் (11) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

14 வயதுக்குட்பட்ட ஆண்கள் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாணவன் எம்.ஜே. ஹுஸ்னி முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும் , 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்டப்போட்டியில் பாடசாலை அணி முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், 12 வயதுக்குட்பட்ட ஆண்கள் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாணவன் எப். அஹமட் ஹஸி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், 12 வயதுக்குட்பட்ட ஆண்கள் 4×50 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் பாடசாலை அணி மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும், எம்.ஏ.எம். அதீப், ஏ.அதீஸ் ஆகியோர் பங்குபற்றிய போட்டிகளில் திறமைச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.

இச்சாதனைக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி, ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஐ. ஜாபிர் (SLEAS) அவர்களுக்கும் மற்றும் பிரதி அதிபர்கள், மாணவனை பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர், இப் போட்டியில் பங்குபற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர், போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

⭕️சோஷியல் டிவி மீடியா நெட்வொர்க்கின் 6ஆம் ஆண்டு நிறைவு விழா===================================✍️எம்.எஸ்.எம்.ஸாகிர்சோஷியல...
12/07/2026

⭕️சோஷியல் டிவி மீடியா நெட்வொர்க்கின் 6ஆம் ஆண்டு நிறைவு விழா
===================================

✍️எம்.எஸ்.எம்.ஸாகிர்

சோஷியல் டிவி மீடியா நெட்வொர்க் (தனியார்) லிமிடெட் நிறுவனத்தின் 6ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று (11) சனிக்கிழமை நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) தேசிய அமைப்பாளருமான அஷ்ரப் தாஹிர் கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபைத் தலைவர் சட்டத்தரணி ரியாஸ் ஆதம், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம். லத்தீப், கிழக்கு மாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தைத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் எம்.பி. முகம்மது சுப்யான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் அக்கரைப்பற்று நகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ், நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த வெதகே, இலங்கை கடற்படை கல்முனை கட்டளை அதிகாரி, நிந்தவூர் பெரிய பள்ளிவாசல் தலைவர் அஷ்-ஷெய்க் மௌலவி எம்.ஐ. ஜௌபர் (பலாஹி), ZABCO நிறுவனத்தின் ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அல்-ஹாபிஸ் மௌலவி ஏ.ஏ.எம். அக்ரம் (ஷரஃபி) உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சோஷியல் டிவியின் ஆறு ஆண்டுகால பயணத்தையும் சாதனைகளையும் பதிவு செய்யும் "சோஷியல் டிவியின் வெற்றிப் பயணம்" எனும் நினைவு நூல் வெளியிடப்பட்டது.

நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிர்வாகத்தினர், குழு உறுப்பினர்கள், செய்தியாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், 6ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவுக் கேக்கும் வெட்டி கொண்டாடப்பட்டது.

சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்தும் வகையில், ஹியூமன் லிங்க் விசேட தேவையுடையோர் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், பரிசுப் பொதிகள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. அதேபோன்று, அல்-அதான் பாடசாலை மாணவர்களுக்கும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும், இவ்விரு கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களும் அவர்களது அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

சமூகப் பொறுப்புணர்வு, ஊடகப் பணியின் அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயச் சேவையை பிரதிபலிக்கும் இந்நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

⭕திரையுலகின் மகத்தான  பாடகர் எஸ்.ஜானகி மறைவு=======================================இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்...
11/07/2026

⭕திரையுலகின் மகத்தான பாடகர்
எஸ்.ஜானகி மறைவு
=======================================

இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக அவர் மறைந்த தகவலை, சமூக வலைதளத்தில் அவரது குடும்பத்தினர் பகிர்ந்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் (1938) பிறந்தவர். மூன்று வயதில் தொடங்கி 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது இவருக்கு 9 வயது.

‘விதியின் விளையாட்டு’ (1957) என்ற படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது’ என்பதுதான் இவர் பாடிய முதல் பாட்டு. அடுத்த நாளே ஒரு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து. கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.

17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்றவர். அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்தும் பாடியுள்ளார். ‘இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் - எஸ்.ஜானகி’ கூட்டணி தென்னிந்திய இசைத் துறையில் தனி முத்திரை பதித்தது.

பாடலில் பொதிந்துள்ள உணர்ச்சி மற்றும் நடிகைகளுக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றிப் பாடக்கூடியவர். குழந்தைக் குரலில் பாடுவதிலும் வல்லவர். இவர் பாடிய ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’, ‘செந்தூரப் பூவே’, ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’, ‘ராதைக்கேற்ற கண்ணனோ’, ‘அம்மா.. அம்மா..’ போன்றவை காலத்தால் அழியாதவை.

திரைப்படப் பின்னணிப் பாடல்கள், தனிப் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

கலைமாமணி, கேரள மாநில சிறப்பு விருது பெற்றவர். சிறந்த பாடகிக்கான தேசிய விருது 4 முறை, கேரள அரசு விருது 14 முறை, ஆந்திர அரசு விருது 10 முறை, தமிழக அரசு விருது 7 முறை பெற்றவர். இலங்கையில் 1992-ல் இவருக்கு ‘ஞான கான சரஸ்வதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

2013-ல் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. மிகவும் தாமதமாக கிடைக்கும் கெளரவம் என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார்.

‘காற்றில் ஜானகியின் கீதம்...’ எப்போதும் உலகோடு இரண்டறக் கலந்திருக்கும். எங்கோ, எவர் செவியிலோ கேட்டுக்கொண்டே இருக்கும்.

Address

Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when Puthiya Oli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puthiya Oli:

Shortcuts

Share