Falaah Media Natpiddimunai

Falaah Media Natpiddimunai நற்பிட்டிமுனை பலாஹ் ஜூம்ஆ மஸ்ஜித் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் (Falaah Media Natpiddimunai)

°°° இன்ஷாஅல்லாஹ்......
16/05/2024

°°° இன்ஷாஅல்லாஹ்......

°°° இன்ஷாஅல்லாஹ்.....
08/05/2024

°°° இன்ஷாஅல்லாஹ்.....

07/05/2024

இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார் நபி (ஸல்) அவர்கள் 'மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு.

தேன் அருந் துவது, இரத்தம் வெளி யேற்றும் கருவி யால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக் கொள்வது ஆகிய னவே அந்த மூன்று மாகும்.

(ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டா மென என் சமுதாயத் தாருக்கு நான் தடை விதித்கிறேன் என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது என வந்துள்ளது (புஹாரி - 5680)

07/05/2024

இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.

( *அல்குர்ஆன்:* 17:82 )

07/05/2024

தொழிலாளர்களின் உரிமைகளைப்
பேணுவோம்.
____________________________________________

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏

நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக (பாங்கு சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதனை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!
(அல்குர்ஆன் : 62:9)

فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏
(ஜுமுஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளியிலிருந்து புறப்பட்டுப்) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்.
(அல்குர்ஆன் : 62:10)

1) உழைப்பின் சிறப்பு:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்.'
என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2072.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துச் சென்று விறகுக் கட்டு ஒன்றை (கட்டி) எடுத்து வந்து விற்(று சம்பாதிக்)க, அதன் காரணத்தால் அல்லாஹ், அவரின் முகத்தை (இழிவிலிருந்து) காப்பாற்று வதானது, அவர் மக்களிடம் சென்று யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். (ஏனெனில், அவ்விதம் அவர்களிடம் கேட்கும்போது) அவருக்குக் கிடைக்கவும் செய்யலாம்; கிடைக்காமலும் போகலாம்.
என ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2373.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக்கொண்டு காலைப் பொழுதில் மலைக்குச் சென்று (மலையேறி) விறகு வெட்டி விற்று, தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தருமம் செய்வது மக்களிடத்தில் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும்.'
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1480.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

'அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; அப்போது நபித்தோழர்கள், 'நீங்களுமா?' என்று கேட்டார்கள். 'ஆம்! மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்!' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2262.

நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே ‘நீங்கள் குளிக்கக் கூடாதா?’ என்றுஅவர்களிடம் கூறப்பட்டது. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 2071

2) தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் சிறப்பு:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தை மனப்பூர்வமாக நிறைவேற்றக் கூடிய, நம்பகமான கருவூலக் காப்பாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்!'
என அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2260.

ஒரு பெண் வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும் அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்துவிட முடியாது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி: 1425.

3) தொழிலாளர்களின் ஊதியத்தை நேரத்துக்கு வழங்குவோம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!' என்று அல்லாஹ் கூறினான்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

ஸஹீஹ் புகாரி : 2270.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.
'நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி, எடுத்தார்கள்; இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தவருக்கு அதற்கான கூலியைக் கொடுத்தார்கள்!'

ஸஹீஹ் புகாரி : 2278.

அனஸ்(ரலி) அறிவித்தார்கள்.
'நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வார்கள்; எவருடைய கூலியிலும் நபி (ஸல்), அவர்கள் அநீதி இழைக்க மாட்டார்கள்!'
ஸஹீஹ் புகாரி : 2280.

4) உழைப்பாளிகளின் கண்ணியம் காப்போம்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக்கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக்கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு 'ஒரு பிடி அல்லது இருபிடிகள்' அல்லது 'ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்' உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்.
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்.

ஸஹீஹ் புகாரி : 5460.

(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும்,. அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்” என அபூதர் கூறினார்கள்” என மஃரூர் கூறினார்.
புகாரி: 30.

அனஸ்(ரலி) அறிவிக்கிறார்.

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ‘ச்சீ” என்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்” என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?’ என்றோ அவர்கள் சொன்னதில்லை.
புகாரி: 6038.

5) உழைக்காமல் யாசகம் கேட்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

” (தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூட சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’.
புகாரி: 1474,

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறியதாவது. நபி (ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, 'உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது' என்றும் கூறினார்கள்.
*ஸஹீஹ் புகாரி : 1429.*
*அத்தியாயம் : 24*

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.'
ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அறிவித்தார்.
அபூஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 1427 1428

 #ஜூம்ஆ_நேரத்தில்_மாற்றம்க.பொ.த சாதாரண தர மாணவர்களின் பரீட்சையின் காரணமாக குத்பா பிரசங்கம் 12.10pm ஆரம்பிக்கப்பட்டு 12.4...
02/05/2024

#ஜூம்ஆ_நேரத்தில்_மாற்றம்

க.பொ.த சாதாரண தர மாணவர்களின் பரீட்சையின் காரணமாக குத்பா பிரசங்கம் 12.10pm ஆரம்பிக்கப்பட்டு 12.40pm முடிவடையும்.....

#ஏற்பாடு:-
பலாஹ் ஜூம்ஆ மஸ்ஜித் நிருவாக சபையினர் மற்றும் தஃவா குழு நற்பிட்டிமுனை

02/05/2024

உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது.
*திருக்குர்ஆன் 8:11*

உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம்.
*திருக்குர்ஆன் 78:9*

அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார்.
'நபி (ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.'
*ஸஹீஹ் புகாரி : 568*

°°° இன்ஷாஅல்லாஹ்....
30/04/2024

°°° இன்ஷாஅல்லாஹ்....

30/04/2024

இமாம் ஹஸனுல் பஸரி ரஹிமஹுழ்ழாஹ் அவர்கள் கூறினார்கள்,

"வாலிப சமூகமே! மறுஉலகு உங்களுக்கு மிக அவசியமானது.எனவே, நீங்கள் அதனைத் தேடுங்கள். மறுமையைத் தேடி அதனுடன் இவ்வுலகையும் அடைந்துள்ள பலரை நாம் பார்த்துள்ளோம்.
ஆனால், உலகைத் தேடி அதனுடன் மறுமையையும் அடைந்து கொண்ட எவரையும் நாம் கண்டு கொண்டதில்லை..

30/04/2024

யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம்.

சூரா ( அஃராப் - 6 )

30/04/2024

இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இது கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் - ஸுஹைப் (ரலி)
ஸஹீஹ் முஸ்லிம் : 5726

29/04/2024

Address

Maruthamunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Falaah Media Natpiddimunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share