Kalmunai Echo - கல்முனை எகோ

  • Home
  • Kalmunai Echo - கல்முனை எகோ

Kalmunai Echo - கல்முனை  எகோ News! Only from Kalmunai and it’s suburbs

04/09/2024

மனச்சாட்சியுள்ள முஸ்லிமாக உங்களை எப்படி ஆதரிப்பது??
…………………
சஹ்ரானின் பிரச்சனை வந்த போது நீங்கள் பிரதமர்.

அன்று முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என சித்தரிக்கப்பட்டு முத்திரை குத்தப்பட்ட போதும் நீங்கள் பிரதமர்.

வீதிகளில் வாகனங்களில் செல்லும் போது பொலிஸ் சோதிக்கும் போது அவர் முஸ்லிமாக இருந்தால் கேள்விகள் அதிகம் கேட்டு அதட்டும் போதும் நீங்கள் பிரதமர்.

வீடு வீடாக முஸ்லிம் நபர்களை அழைத்து விசாரிக்கும் போது நீங்கள் பிரதமர்

வீடுகளை சென்று சோதனை செய்து மக்களை அச்சத்தில் ஆழ்த்திய காலத்தின் போதும் நீங்கள் பிரதமர்.

அப்பாவிகள் பலரை கைது செய்து கொடுமைப்படுத்திய போதும் நீங்கள் பிரதமர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் திகன, அக்குரன, அம்பாறை, அழுத்கம என்று பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட கலவரங்களின் போதும் நீங்கள் பிரதமர்.

ஜனாஷா எரிப்பின் போது ஊடகங்களை அழைத்துக்கூட வாய் திறக்காத நீங்கள் இப்போது வாய் பேச காரணம் எங்களது வாக்குகள் வேண்டும்.

50 வருட கால அரசியல் பயணத்தில் நீங்கள் செய்தது என்ன? கடந்த இரண்டு வருடங்களாக பொருளாதாரம் பொருளாதரம் என்று அரசியல் செய்கின்றீர்கள்.

தற்போது நாட்டின் ஜனாதிபதி நீங்கள். ஆனால் பொருளாதாரம் அதலபாதாளத்தில் இருக்க உங்களுக்கு வேண்டிய MPக்கள், அமைச்சர்களுக்கு அதிக பட்ச பணத்தை லஞ்சமாக கொடுத்து உங்களுடன் சேர்த்து இருக்கின்றீர்கள்.

தேர்தல் நெருங்கும் வேளையில் அபிவிருத்தி செய்கிறோம் என்ற பெயரால் அப்பாவி மக்களை அடகு வைத்துப் பெற்ற கடன் பணத்தை எங்கள் பிரதிநிதிகளுக்கு அள்ளிச் சொரிந்து அதை அவர்கள் அறிந்த தெரிந்த கொந்தராத்துகார கள்வர்கள் கைகளுக்கு பகிர்ந்தளித்து வீண் செலவுகள் செய்யப்படுகிறதே....
இந்தப் பணம் உங்களது சொந்தப் பணமா???

மக்களின் கரன்ட் பில், தண்ணீர் பில், வரிப்பணம் இதை எல்லாம் அதி உச்ச கட்டம் உயர்த்தி விட்டு நான்தான் நாட்டை மீட்டு எடுத்தேன் என்பது எப்படி நியாயம்?

நாட்டின் தற்போது கடன் நிலை என்ன?? அதிக கடன் உங்கள் ஆட்சியில்தான் வாங்கப்பட்டது.

கடனில் இருந்து மீள நீங்கள் மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள்தான் என்ன??

வேலியே பயிரை மேய்ந்த கதையாக உங்கள் தலமையில் நடக்கும் பாரிய ஊழல்களை நாங்கள் அறியாதவர்களாக இல்லை!!!

அப்பாவி ஏழை மக்களின் சமூர்த்தி கொடுப்பனவை இல்லாமல் செய்து வாழ்வதாரத்தை கேள்விக்குறியாக்கினீர்கள்.

எல்லாவற்றையும் சகித்துக் கொண்டாலும்...
பச்சிளம் பலஸ்தீன பாலகர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்கு ஆதரவாய் இலங்கையிலிருந்து படைகளை அனுப்பிய உங்களை ஒரு உண்மையான முஸ்லிமாக எப்படி ஆதரிப்பது???

எதிர்காலத்தை நோக்கி என்ற சொல் உங்கள் நாவில் இருந்து 50 வருடங்களாக ஒலிக்கின்றது. எப்போது அந்த எதிர்காலம் வந்து சேரும்?

தற்போது உங்களுக்கு சொந்த கட்சியே இல்லாமல் ஆக்கியது உங்களின் இயலாமை அரசியல்!!

கோத்தாவின் ஆட்சியில் கூட அநீதிக் கெதிராய் போராடும் சுதந்திரம் இருந்தது, ஆனால் உங்களது ஆட்சிக் காலத்தில் அதைக் கூட இழந்தோம்!!!
(மீறிப் போராடியவர்களின் நிலையை யாவரும் அறிவோம்)

உங்கள் பக்கம் இருக்கும் பல இனவாதிகள் மற்றும் ஊழல் வாதிகளால் மட்டுமே வெற்றி பெற முடியும் எனக் கனவு காணாதீர்கள். மக்களின் தீர்ப்பு என்று ஒன்றுள்ளது .

ஏமாறும் மக்கள் இருக்கும் வரை உங்களை போல் உங்கள் பின்னால் இருப்பவர்கள் ஆட்சிபீடம் ஏறி மக்களை மேலும் ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழத்தான் போகின்றார்கள்

"உங்கள் கைகளாலே நாசத்தை தேடிக் கொள்ளாதீர்கள்"
(அல் குர்ஆன் 2:195)

31/08/2024

அஷ்ரப்:

11 வருடங்கள் நாடாளுமன்ற வாழ்வு
(1989- 2000)

#தேர்தல் முறையில் 5% வெட்டுப்புள்ளி கேட்டு வெற்றி.
இது சிறுபான்மை கட்சிகளுக்கு மட்டுமல்ல, சிறிய கட்சிகளுக்குமான வெற்றி

#இலங்கை நாடாளுமன்றத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறிக்காட்டிய தெனாவெட்டு!

#துறை முக அமைச்சராக இருந்த போது ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர், யுவதிகளுக்கு துறை முகத்தின் தளங்களில் வேலைவாய்ப்பு!

#தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்கிற அறிவின் கருவூலத்தை நிறுவிய சாதனை.

#ஒலுவில் துறை முகம் அவரது கனவு, உயிர் போனதால் தகர்ந்து போனது அந்த கனவு.

#தீகவாபிக்காக டீவியில் சோம ஹாமதுருவோடு விவாதம் புரிந்த ஓர்மை..!!!

இன்னும் எத்தனையோ தடங்களை விட்டுச்சென்ற தலைவனின் அஞ்சலோட்ட கம்பை தனது நப்ஸு கேட்பதாக பறித்தெடுத்தவர்……

#நாடாளுமன்றத்தில் இது வரை 30 ஆண்டுகள்

#கட்சித்தலைவராக 24 ஆண்டுகள்….

#ஒன்றாக இருந்த கட்சி பல கூறுகளாக உடைந்தது.

#எழுத முடியாத இழி கதைகளின் வரலாறு.

#கட்சியின் கோட்டையான தென்கிழக்கில் சவூதி அரசாங்கம் கட்டிக்கொடுத்த சுனாமி வீடுகளை மக்களுக்கு கையளிக்க வக்கற்ற தலைமை.
அதற்கெதிராக வழக்குப்போட்ட சம்பிக்க ரணவக்க இப்போது கூட்டாளி.

#வாக்கு கேட்டு ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றம் வரும் கண்டி மாவட்ட மக்களுக்காக இதுவரை என்னதான் செய்தாரோ யார் அறிவார்!

#அக்குரணை பிரதேசத்தில் வெள்ளம் வருகிறது. வருடக்கணக்கில் தீர்வு கேட்டு போராடுகிறார்கள் அந்த மக்கள். தீர்வு கொடுக்க நாதி இல்லை. வெறும் ஃபைல்களை காட்டுகிறார்!

#மீண்டும் மந்திரிப்பதவிக்காகவும், சுகபோக வாழ்விற்காகவும் பொய் மூட்டைகளை சுமந்தபடி துள்ளிப்பாய்ந்து ஓடித்திரிகிறார்.

#30 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றுவதெல்லாம் பெரிய சாதனைதான்!

இதைவிட எம் தலைவனுக்கு வேறென்ன சாதனை வேண்டும்?

நாரே தக்பீர்.

28/08/2024

அனுர முன்னிலையில் ....
அமெரிக்காவில் இருந்துகொண்டே
ஆய்வு செய்த பசில் .....................................
அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் இரண்டு மாதங்கள் ஒய்வைக் கழித்தார் பசில் ராஜபக்ச.

உண்மையில்,அவர் ஓய்வில் இருக்கவில்லை.நாட்டின் அரசியல் நிலைமையை அங்கிருந்தவாறே கவனமாக ஆய்வு செய்யத் தொடங்கினார்.

கிராம மட்டத்தில் உள்ள மொட்டு கட்சி நிர்வாகிகளின் உதவியுடன் அந்த ஆய்வை மேற்கொண்டார்.

எல்லா ஆய்வுகளிலும் கிடைத்த பெறுபேறு என்னவென்றால் அனுர முன்னிலையில் இருக்கின்றார் என்பதுதான்.

ஒட்டுமொத்தமாக வெறும் ஐந்து வீத வாக்குகள்தான் மொட்டு கட்சி இருப்பதையும் அதைவிடக் குறைவான அளவே ஐக்கிய தேசிய கட்சிக்கு இருப்பதையும் அந்த ஆய்வின் ஊடாக உணர்ந்தார் பசில்.

அப்படியென்றால்,வெல்வதற்கு என்ன வழி..????

நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதுதான் ஒரே வழி .அதுவும் வெற்றிக்கான வழியல்ல.ஒரு முயற்சிதான்.

நாடாளுமன்றத் தேர்தலில் மொட்டு மற்றும் ஐ.தே .கவுக்குக் கிடைக்கின்ற ஆசனங்களை வைத்துக்கொண்டு ஏனைய கட்சிகளின் ஆசனங்களையும் விலைக்கு வாங்கி நாடாளுமன்ற ஆட்சியைப் பிடித்துக்கொள்ள முடியும்.

நாடாளுமன்ற ஆட்சி கைக்கு வந்துவிட்டால் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தமக்கே வாக்களிப்பர்.அதாவது,வெற்றி பெற்ற கட்சிக்கே மக்கள் வாக்களிப்பர் என்ற அடிப்படையில்...

உடனே இந்தத் திட்டத்தை எடுத்துக்கொண்டு நாட்டுக்கு ஓடி வந்த பசில் ரணிலைச் சந்தித்து இந்த அறிக்கையைக் காட்டி நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துமாறு கூறினார்.

ஆனால்,மொட்டு கட்சி எம்பிக்கள் யாரும் இதை விரும்பவில்லை.

காரணம் அதில் உள்ள அதிகமான எம்பிக்கள் அடுத்த தேர்தலில் வெல்லமாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரியும்.

உரிய காலத்துக்கு முன் தேர்தலை நடத்தி அவர்கள் தோற்றுப் போனால் அவர்களுக்கு பென்ஷனும் இல்லாமல் போகும் என்பதால் ரணிலைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டாம்..முதலில் ஜனாதிபதி தேர்தலையே நடத்துங்கள்.நாங்கள் அனைவரும் உங்களுடன் வந்து இணைகிறோம் .உங்களை வெல்ல வைப்பதற்கு பாடுபடுவோம் என்றனர்.

அதன் அடிப்படையில்தான் ஜனாதிபதி பசிலின் வார்த்தையை உதாசீனம் செய்துவிட்டு ஜனாதிபதி தேர்தலுக்குச் சென்றார்.வாக்குறுதியளித்ததுபோல் அந்த மொட்டு எம்பிக்கள் ரணிலுடன் போய்ச் சேர்த்துக்கொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பசில் வருவது வரட்டும் என்று நாமலை மொட்டு வேட்பாளராக நிறுத்தும் மஹிந்தவின் முடிவோடு இணைந்து போனார்.

பசில் அமெரிக்காவில் இருந்து வந்த புதிதில் ரணிலுக்கு ஆதரவாக அதிகம் அதிகமாகப் பேசினார்.

எல்லோரது பார்வையிலும் மொட்டின் வேட்பாளர் ரணில்தான் என்றே பட்டது.

அப்படி இருக்கும்போது பசில் திடீரென பல்டி அடித்தது ஏன் என்று பலரும் கேற்கிறார்கள்.

நான் மேலே கூறியுள்ள சம்பவம்தான் அதற்குக் காரணம்.

ஆனால்,அனுரதான் ,வெல்வார் என்றும் தான் சொல்வதைக் கேட்டிருந்தால் நாடாளுமன்ற ஆட்சியையாவது பிடித்திருக்கலாம் என்றும் பசில் இப்போது புலம்பித் திரிகிறார்.

ரணிலை விட நான் மூளைக்காரன் என்பதை தேர்தல் முடிந்ததும் ரணில் புரிந்துகொள்வார் என்று பசில் அவருக்கு நெருக்கமானவர்களுடன் கூறியுள்ளார்.

[ ஊடகவியலாளர் எம்.ஐ.முபாறக் ]

08/08/2024

ஈட்டி எறிதலில் 92.97 மீட்டர் தூரம் எறிந்து
ஒலிம்பிக் சாதனை!!! அர்சத் நதீம் !

19/05/2024

:)

15/05/2024

கல்முனையில் அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம் !

15/05/2024

2024 T20 உலகக் கிண்ண போட்டி தொடர்பில் I C C யின் புதிய தீர்மானம்!

13/05/2024
24/04/2024

நான் எத்தனையோ பேச்சை கேட்டு இருக்கிறேன்.....கேட்டுக்கொண்டே இருக்கலாம்.... எவ்வளவு அழகான பேச்சு!! வார்த்தைகள் ஒவ்வொன்றும் கணீர் என்று...

19/11/2023
31/10/2023

நீங்கள் குடும்பத்துடன் கொழும்பு வந்தால் பாதுகாப்பான முறையில் தங்குவதற்க்கு சகல வசதிகளுடன் வெல்லம்பிட்டியில்.Black Moon Family Rest In.
தொடர்புகளுக்கு.
0772307571 / 0772457341

Address


Telephone

+94769732230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalmunai Echo - கல்முனை எகோ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share

Kalmunai Echo - கல்முனை எகோ

கல்முனையில் இடம்பெறும் நிகழ்வுகளை மட்டும் உடனுக்குடன் அறிய இந்த பக்கத்தை லைக் செய்து இணைந்திருங்கள்.

நீங்களும் உங்கள் செய்திகள், அறிவித்தல்கள் , விளையாட்டு நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்!

Send Message பட்டனை கிளிக் செய்து இலகுவாக உங்கள் செய்திகளை அனுப்பலாம்!