E TV

E TV இது மக்களின் "தெவிட்டாத குரல்"
♦ நேரடி ஔிபரப்பு
♦ விளம்பரங்கள்
♦அறிவிப்பாளர்கள்
♦Sound system
(0742392323/0752392325/0715441444)

அம்பாறை மாவட்ட தேசிய விளையாட்டு விழாவில் விபுலானந்தா மல்வத்தை பாடசாலை மாணவர்கள் சாதனை!மஜீட். ARM ​அம்பாறை மாவட்ட தேசிய வ...
28/07/2026

அம்பாறை மாவட்ட தேசிய விளையாட்டு விழாவில் விபுலானந்தா மல்வத்தை பாடசாலை மாணவர்கள் சாதனை!

மஜீட். ARM

​அம்பாறை மாவட்ட தேசிய விளையாட்டு விழாவில், சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவின் சார்பில் கலந்துகொண்ட "சது விபுலானந்தா மல்வத்தை" பாடசாலை மாணவர்கள் இரு தங்கப் பதக்கங்களை வென்று மாகாண மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

​விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தொடரில், குறித்த பாடசாலையைச் சேர்ந்த M. Sahani உயரத் தாண்டுதலில் தங்கப் பதக்கத்தையும், A. Dathiska ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும் வென்று அசத்தியுள்ளனர்.

​மாணவர்களின் இந்தச் சாதனை பாடசாலைக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், மாகாண மட்டப் போட்டியிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.மேலும், இப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பினை வழங்கிய சம்மாந்துறை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் S. Sulaksan அவர்களுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​ #விளையாட்டு #மாணவர்கள்சாதனை #தங்கப்பதக்கம் #மாகாணப்போட்டி

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள் : பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு சாய்ந்தமருது நொத்தாரிசுகள் கூட்...
28/07/2026

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள் : பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு சாய்ந்தமருது நொத்தாரிசுகள் கூட்டாக எச்சரிக்கை!

நூருல் ஹுதா உமர்

மோசடிகளைத் தடுக்கும் சட்டக் கட்டளைச் சட்டம் (Prevention of Fraud Ordinance) மற்றும் நொத்தாரிசுகள் சட்டக் கட்டளைச் சட்டத்தின் (Notaries Ordinance) கீழ், நிலம் தொடர்பான எந்தவொரு உறுதியும், தகுதியும் உரிமமும் பெற்ற பிரசித்தி பெற்ற நொத்தாரிசு அல்லது நொத்தாரிசு உரிமம் கொண்ட சட்டத்தரணிகள் முன்னிலையிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். மாறாக, ஒரு நொத்தாரிசின் கிளாக் அல்லது சட்டவிரோத முகவர்கள் முன்போ உறுதிகளை நிறைவேற்றினால், அவை சட்டப்படி போலி உறுதிகளாகவே கருதப்படும் என சாய்ந்தமருது நொத்தாரிசுகள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சாய்ந்தமருது பகுதியில் பலர் தமக்கு நொத்தாரிசு உரிமம் இல்லாதிருந்தும், தம்மை நொத்தாரிசு எனக் பொய்கூறி நம்ப வைத்தோ அல்லது நொத்தாரிசு கிளாக் என அடையாளப்படுத்தியோ சட்டவிரோதமாக உறுதிகளை நிறைவேற்றி வருகின்றனர். இவ்வாறான ஏமாற்றுப் பேர்வழிகள் பணத்தை உறிஞ்சும் நோக்கில் செய்யும் நடவடிக்கைகளால், பொதுமக்கள் தங்களின் சிறுகச் சிறுகச் சேர்த்த பெருந்தொகை பணத்தை வழங்கி வாங்கிய நிலங்களை சட்டப்படி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளில் சில அரசு ஊழியர்களும் ஈடுபட்டு வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நொத்தாரிசு பெயர் பலகை இல்லாத இடங்களில் உறுதிகளை எழுதுவது முற்றிலும் முறையற்றதும் சட்டவிரோதமானதும் ஆகும். உறுதி நிறைவேற்றப்படும் முன்னர், சம்பந்தப்பட்ட நபர் பிரசித்தி பெற்ற நொத்தாரிசாக அல்லது உரிமம் பெற்ற சட்டத்தரணியாக உள்ளாரா என்பதை பொதுமக்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இடைத்தரகர்கள் அல்லது எழுத்தர்களிடம் நேரடியாகப் பணத்தைக் கொடுத்து சான்றிதழ் அற்ற உறுதிகளைப் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தங்களின் வாழ்நாள் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் செயல்படுமாறு சாயந்தமருது பிரதேசப் பிரசித்தி பெற்ற நொத்தாரிசுகள் தங்களது கூட்டு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

💔 சமூக ஊடகங்கள் தீர்ப்பு சொன்னது...! சட்டம் உண்மையை கண்டறிந்தது.....!***********************📍 இடம் : மருதமுனை“ஒரு மரணத்த...
24/07/2026

💔 சமூக ஊடகங்கள் தீர்ப்பு சொன்னது...!
சட்டம் உண்மையை கண்டறிந்தது.....!
***********************

📍 இடம் : மருதமுனை

“ஒரு மரணத்தின் உண்மையை உறுதிப்படுத்துவதற்காக, வழக்கமான நடைமுறையை விட கூடுதல் சட்ட மற்றும் அறிவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட ஒரு மரண விசாரணையின் அனுபவம்.”

━━━━━━━━━━━━━━━━━━

சமீபத்தில், மருதமுனையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மரண விசாரணை நடத்தப்பட்டது.

ஆரம்ப விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கருத்துகளும் ஊகங்களும் சமூகத்தில் பரவின. அவற்றில் சில சமூக ஊடகங்களின் ஊடாகவும் வேகமாகப் பகிரப்பட்டன.

ஒரு மரண விசாரணை அதிகாரியாக, எனது கடமை எந்தவொரு கருத்தையும் முன்கூட்டியே ஏற்றுக்கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ அல்ல. சம்பவத்தின் உண்மையை சட்ட நடைமுறைகள், அறிவியல் ஆய்வுகள் மற்றும் கிடைக்கப்பெறும் ஆதாரங்களின் அடிப்படையில் பக்கச்சார்பின்றி உறுதிப்படுத்துவதுதான்.

அதனால், இம்மரண விசாரணை வழக்கமான நடைமுறையை விட கூடுதல் கவனத்துடனும், சட்ட மற்றும் அறிவியல் அடிப்படையிலும் முன்னெடுக்கப்பட்டது.

வழமையாக, இத்தகைய மரண விசாரணைகள் சம்பவம் இடம்பெற்ற பிரதேச காவல்துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், இச்சம்பவத்தின் தன்மையையும் சமூகத்தில் எழுந்திருந்த சந்தேகங்களையும் கருத்தில் கொண்டு, பெரியநீலாவணை பிரதேச காவல்துறை பொறுப்பதிகாரியிடம் நிலைமை முழுமையாக எடுத்துரைக்கப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, உண்மையை எந்தவித ஐயப்பாடும் இன்றி அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்த வேண்டிய தேவையின் அடிப்படையில், அம்பாறையிலிருந்து குற்றப்புலனாய்வு இட ஆய்வு அதிகாரிகள் (SOCO) வரவழைக்கப்பட்டு, சம்பவ இடம் முழுமையாக மீளாய்வு செய்யப்பட்டது.

அதேவேளை, அருகிலுள்ள வைத்தியசாலையில் நீதிமருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை இருந்தபோதிலும், சமூகத்தில் ஏற்பட்டிருந்த சந்தேகங்களுக்கு தெளிவான மருத்துவ மற்றும் சட்ட விளக்கம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, கல்முனை சட்ட வைத்திய அதிகாரியுடன் (JMO) கலந்தாலோசிக்கப்பட்டது.

அவரின் இணக்கப்பாட்டின் பின்னர், எனது மரண விசாரணையின் கீழ், வழக்கு அம்பாறை பொது வைத்தியசாலையின் ஆலோசகர் நீதிமருத்துவ அதிகாரியிடம் (Consultant JMO) முழுமையான உடற்கூற்று (பிரேத) பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

காவல்துறை விசாரணை, SOCO அதிகாரிகளின் அறிவியல் ஆய்வு, பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் பல கோணங்களில் ஆராயப்பட்டமை, மரண விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட சான்றுகள் மற்றும் ஆலோசகர் நீதிமருத்துவ அதிகாரியின் விரிவான உடற்கூற்று பரிசோதனை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து மதிப்பீடு செய்த பின்னரே, இளம் பெண் மன அழுத்தத்தின் காரணமாக தன்னைத்தானே தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் என்பது மருத்துவ மற்றும் சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த விசாரணை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, சமூகத்தில் பரவியிருந்த சில தகவல்கள் உண்மையல்ல; அவை ஆதாரமற்ற வதந்திகளாக இருந்தன என்பதும் தெளிவானது.

இந்த அனுபவம் மீண்டும் ஒரு முக்கியமான உண்மையை நினைவூட்டுகிறது.

ஒரு மரணம் நிகழும்போது பல்வேறு கருத்துகளும் சந்தேகங்களும் உருவாகலாம். ஆனால் அவற்றில் எது உண்மை என்பதைத் தீர்மானிப்பது பொதுக் கருத்துகளோ ஊகங்களோ அல்ல; சட்ட நடைமுறைகள், அறிவியல் ஆய்வுகள், வாக்குமூலங்கள், சான்றுகள் மற்றும் நீதிமருத்துவ ஆதாரங்கள்தான்.

ஒரு மரண விசாரணை அதிகாரியாக, எந்தவொரு சமூக அழுத்தத்தையோ, தனிப்பட்ட கருத்தையோ அல்லது முன்கூட்டிய முடிவையோ அடிப்படையாகக் கொண்டு நான் தீர்மானம் மேற்கொள்வதில்லை. ஒவ்வொரு சாத்தியக்கூறும் பக்கச்சார்பின்றி ஆராயப்பட்டு, கிடைக்கப்பெறும் அனைத்து ஆதாரங்களும் ஒருங்கிணைத்து மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் எதிர்கால சமூகத்திற்கும் ஒரு முக்கியமான பாடமாக அமைய வேண்டும்.

ஒரு தகவல் கிடைத்தவுடன் அதனை உண்மை என நம்புவதற்கோ, மற்றவர்களுடன் பகிர்வதற்கோ முன் ஒரு கணம் சிந்திப்போம்.

அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டதா?

அது பாதிக்கப்பட்ட குடும்பத்தின் துயரத்தை மேலும் அதிகரிக்குமா?

அல்லது உண்மையைத் தேடும் சட்ட நடைமுறைக்கு இடையூறு ஏற்படுத்துமா?

உண்மையை கண்டறிவது சட்டத்தின் பொறுப்பு.

உண்மை வெளிவரும் வரை பொறுமை காப்பதும், விசாரணைக்கு இடமளிப்பதும், ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பாமல் இருப்பதும் சமூகத்தின் பொறுப்பு.

✍️
B.Fahad Zaman( Coroner)
Inquer into Sudden Deaths,
Base Hospital
Kalmunai.

#மரணவிசாரணை #உண்மையைஅறிவோம் #சட்டமும்அறிவியலும் #நீதிமருத்துவம் #சமூகப்பொறுப்பு #விழிப்புணர்வு

ஓய்வு பெற்ற உதவி மாகாண காணி ஆணையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு**************************(எம்.பி.எம்.றாஜிட்)கிழக்கு மாகாணத்த...
24/07/2026

ஓய்வு பெற்ற உதவி மாகாண காணி ஆணையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு
**************************
(எம்.பி.எம்.றாஜிட்)

கிழக்கு மாகாணத்தில் உதவி மாகாண காணி ஆணையாளர்களாக கடமையாற்றி ஓய்வு பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சம்மாந்துறையில் இடம் பெற்றது
நிகழ்வில் பிரதம அதிதியாக
K .குருநாதன் - முன்னாள் உதவி மாகாண காணி ஆணையாளர் அவர்கள் கலந்து கொண்டதுடன்
N. கணபதிப்பிள்ளை
G. ரவிராஜன்
KLM.முஸம்மில்
ஆகிய முன்னாள் உதவிக்காணி ஆணையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்

இந் நிகழ்வு கிழக்கு மாகாண காணி நிருவாக திணைக்கள உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது

முஸ்னி எனும் பேராசான்****************************அண்மையில் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தெ...
23/07/2026

முஸ்னி எனும் பேராசான்
****************************

அண்மையில் தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய ஆத்மார்த்த ஆசான் நாபி எம் முஸ்னி சேர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... மாஷா அல்லாஹ்

இத்தனை வருடத்தில் இப்போதுதான் குறித்த சங்கம் அவரை இனங்கண்டுள்ளமை தாமதமான தெரிவு என்பதே எனது அபிப்பிராயமாகும்... ஏனெனில், எப்போதோ அவர் அந்த தரத்தை அடைந்து விட்டார். 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே Glistens Youth Club இளைஞர் கழகத்தை உருவாக்கி வெற்றிகரமாக வழிநடாத்தியது மாத்திரமல்லாமல் பல இளைஞர்களுக்கான தலைமைத்துவ மற்றும் மென்திறன் பயிற்சிகளையும் அவரது கழகத்தால் மட்டுமல்ல அவரது நடத்தையால் வழங்கியவர்.

தற்போதும் செஸ்டோ சிறீலங்கா Sesdo Sri Lanka அமைப்பின் தலைவராக தொண்டு நிறுவனத்தை நடாத்திச் செல்கிறார். ஆவணங்களைப் பேணுவதிலும் அறிக்கைப்படுத்துவதிலும் வல்லவர் அவர். கிடைப்பதற்கரிய பல நிகழ்வுகளையும் புகைப்படங்களையும் இன்றும் தொகுத்துப் பேணிவருகிறார். 2002ஆம் ஆண்டு அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் Glistens Youth Club Office ஐ தனது உத்தியோகத்தர்களுடன் தரிசித்து அதன் அலுவலக முறைமையை பார்வையிட்டு மெச்சியிருந்தமை இவரின் நிர்வாக திறமைக்கு சிறந்த சான்று.

இன்று மருதமுனை மண்ணில் பிரகாசிக்கும் இளம் ஆளுமைகளில், ஆலிம்களில், பட்டதாரிகளில், பதவி நிலை உத்தியோகத்தர்களில் பலருக்குப் பின்னால் முஸ்னி சேர் என்ற ஒற்றை நாமம் எங்கோ ஓர் மூலையில் ஒளிந்திருக்கும். சிலர் வெளிப்படையாக நன்றி நவிலலாம். சிலர் மனதினுள்ளே அந்த நன்றியுணர்வை வைத்துக் கொள்ளலாம். ஆனால் எவரின் பாராட்டையும் எதிர்பாராமல் பணியை மட்டும் இடைவிடாது தொடரும் அவரது பெருந்தன்மை அவருக்கே உரியது.

பிரம்மிப்பூட்டும் அவரது பொறுமையும் கோபத்தை விழுங்கிக் கொண்டு புன்முறுவலோடு கடந்து செல்லும் பண்பும் பலபோது மெய்சிலிர்க்க வைத்துள்ளன. கையிலிருக்கும் எல்லாவற்றையும் பிரித்துக் கொடுத்துவிட்டு வீசிய கையும் வெறுங் கையுமாக அருணாச்சலம் திரைப்படப் பாணியில் அவர் நடந்து சென்ற பல பொழுதுகளை நினைவுகூற முடியும்.

ஒரு சிறந்த மனிதனுக்கும் தன்னலமில்லா தலைவனுக்கும் மிகச்சிறந்த முன்னுதாரணமாக தைரியமாக முஸ்னி சேரின் பெயரை முன்மொழியலாம். முஸ்னி பாடசாலையில், டியூசனில் அல்லது வேறு எங்கும் கற்றல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் என்பதாலோ அல்லது பெரும் பதவி நிலையில் இருந்து பயத்தின் வெளிப்பாடுகளினாலோ 'சேர்' என்று அழைக்கப்படுவதில்லை. என்றாலும் 'நாநா', 'அங்கிள்' என்றெல்லாம் அழைக்கப்படுவதும் பொருத்தமில்லை. என்னைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் நற்பண்பாடுகளையும் ஆளுமைப்பண்புகளையும் தன் நடத்தையால் போதித்துக் காட்டிய பேராசான் அவர்... அதனால் எப்பவும் முஸ்னி.. 'சேர்'.. 'முஸ்னி சேர்' தான்..

இன்னும் முஸ்னி சேரைக் கொண்டு சமூகம் பயனடைய வேண்டும். வல்லவர்களான நல்லவர்கள் வாழ்வாங்கு வாழட்டும்..

றாபி எஸ் மப்றாஸ்
23.07.2026

அதிபர்களுக்கு அநீதி :  கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகா...
20/07/2026

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தியும் இன்று (20) காலை 10.00 மணியளவில் திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக அமைதியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் இன்று (20) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்க பிரதிநிதிகள், அப்பேச்சுவார்த்தை வெற்றியளிக்காதமையை அடுத்தே ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக அமைதியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த கடமைநிறைவேற்று அதிபர்கள் கலந்துகொண்டு, பல ஆண்டுகளாக அதிபர் பொறுப்பில் பணியாற்றிய போதிலும் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாதமை தமக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் எனக் குறிப்பிட்டனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள், நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம், 2004 சுனாமி, வெள்ளப் பேரழிவுகள், பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட்-19 தொற்றுக் காலம் உள்ளிட்ட பல்வேறு சவாலான சூழ்நிலைகளில் கூட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை இடையறாது முன்னெடுத்து, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் பாதுகாப்பதில் கடமைநிறைவேற்று அதிபர்கள் முக்கிய பங்காற்றியதாக தெரிவித்தனர்.

பல ஆண்டுகளுக்கு மேலாக அதிபர் பொறுப்பில் பணியாற்றிவரும் பலர் இன்றளவும் நிரந்தர நியமனம் இன்றி சேவையாற்றி வருகின்றனர். பல பாடசாலைகளில் அதிபர் தர அதிகாரிகள் பொறுப்பேற்காத காலகட்டங்களில், மாணவர்களின் நலனையும் கல்வியின் தொடர்ச்சியையும் உறுதிப்படுத்தும் வகையில் இக்கல்வியாளர்கள் தன்னலமின்றி பணியாற்றியதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், நீண்டகாலமாக அதிபர் பொறுப்பில் செயல்பட்டவர்களை திடீரென ஆசிரியர் பணிக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தொழில்முறை கௌரவத்தையும் மனநிலையையும் கடுமையாக பாதிப்பதோடு, பல ஆண்டுகளாக நிர்வாக அனுபவம் பெற்ற கல்வியாளர்களுக்கு பெரும் அநீதியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதால், அதில் நீண்டகாலமாக சேவையாற்றிவரும் கடமைநிறைவேற்று அதிபர்களையும் உள்ளடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அத்துடன், நாட்டின் ஏனைய மாகாணங்களில் நடைமுறையில் இல்லாத வகையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் கடமைநிறைவேற்று அதிபர்களுக்கு எதிராக அநீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதனையடுத்து பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

* நீண்டகாலமாக சேவையாற்றும் கடமைநிறைவேற்று அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல்.
* வயது எல்லையை கடந்த முன்னாள் கடமைநிறைவேற்று அதிபர்களுக்கும் சம வாய்ப்பு வழங்குதல்.
* அதிபர் சேவைக்குரிய சம்பளம், பதவி உயர்வு மற்றும் ஓய்வூதிய நலன்களை வழங்குதல்.
* திடீர் இடமாற்றங்கள் மற்றும் ஆசிரியர் பணிக்கு மீள அனுப்பும் நடவடிக்கைகளை நிறுத்தி மனிதநேயமான தீர்வுகளை வழங்குதல்.
* கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களங்கள் மற்றும் பொது சேவை ஆணைக்குழு இணைந்து நிலையான கொள்கையொன்றை உருவாக்குதல்.

மேலும், நீண்டகால நிர்வாக அனுபவம் கொண்ட கடமைநிறைவேற்று அதிபர்களை மீண்டும் ஆசிரியர் சேவைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, வலயக் கல்வி அலுவலகங்களில் நிர்வாகம், திட்டமிடல், கண்காணிப்பு, கல்வி அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற பொறுப்புகளில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இலங்கையின் கல்வி அமைப்பை பல்வேறு நெருக்கடி காலங்களிலும் தாங்கி நிறுத்திய கடமைநிறைவேற்று அதிபர்களுக்கு உரிய அங்கீகாரமும் நீதியும் வழங்கப்படுவது காலத்தின் அவசியமாகும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், "எமது சேவைக்கு நீதி வேண்டும்; காலதாமதம் வேண்டாம்!", "கடமை செய்தோம்; உரிமையையும் வழங்குங்கள்!", "உழைப்புக்கு மதிப்பு வேண்டும்; வாக்குறுதி அல்ல, தீர்வு வேண்டும்!", "நிர்வாகம் இயங்க எம்மை மதியுங்கள்!", "எமது குரலைக் கேளுங்கள்; நீதியை வழங்குங்கள்!", "சேவையை மதிக்கும் அரசு – மக்களை மதிக்கும் அரசு!", "கடமையில் உறுதி; உரிமையில் சமரசமில்லை!", "நீதி தாமதமானால் அது அநீதியே!", "எமது அர்ப்பணிப்புக்கு உரிய அங்கீகாரம் வேண்டும்!", "சேவையை தொடர்கிறோம்; நீதியை எதிர்பார்க்கிறோம்!", "வாக்குறுதி போதாது; நடைமுறை தீர்வு வேண்டும்!", "எமது உழைப்பை மதியுங்கள்; எமது உரிமையை வழங்குங்கள்!", "அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பு நாமே!", "சம உரிமை – சம அங்கீகாரம் – சம நீதி!", "இன்று எமக்கான நீதி; நாளை சிறந்த அரசுச் சேவை!", "கடமையை நிறைவேற்றினோம்; கடமையை அரசு நிறைவேற்றட்டும்!", "எங்கள் பொறுமையை பலவீனமாக நினைக்க வேண்டாம்!", "அரசியல் வேண்டாம்; நிர்வாக நீதி வேண்டும்!", "எமது கோரிக்கை சலுகையல்ல; நியாயமான உரிமை!", "நீதியே எமது பலம்; ஒற்றுமையே எமது குரல்!" போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் மற்றும் சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மகஜரை ஆளுநர் கையேற்க மறுத்துள்ள இந்நிலையில் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இப்போராட்டம் சுழற்சி முறையில் நடைபெறவுள்ளதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

ஊடகச் செய்திஇறை இல்லப் பணியாளர்கள் நலன்புரிச் சங்கத்தின் (MEWS - Mosque Employees' Welfare Society) 13ஆவது வருடாந்த பொது...
19/07/2026

ஊடகச் செய்தி

இறை இல்லப் பணியாளர்கள் நலன்புரிச் சங்கத்தின் (MEWS - Mosque Employees' Welfare Society) 13ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது

மருதமுனை | 2026.07.19

மருதமுனை – பெரியநீலாவணை – பாண்டிருப்பு இறை இல்லப் பணியாளர்கள் நலன்புரிச் சங்கத்தின் (MEWS) 13ஆவது வருடாந்த பொதுக்கூட்டம், 2026 ஜூலை 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு, பிர்ருல் வாலிதைன் பள்ளிவாசல், ஸகாத் வீட்டுத்திட்டத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

2013.06.23 அன்று SESDO SRI LANKA தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முன்னெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கத்தின் 13வது பொதுக்கூட்டம், SESDO SRI LANKA தலைவர் ஜனாப். நாஃபி எம். முஸ்னி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.

கூட்டம் திருக்குர்ஆன் ஓதல் மற்றும் துஆவுடன் ஆரம்பமானது.

வரவேற்புரையாற்றிய ஜனாப். நாஃபி எம். முஸ்னி அவர்கள், கடந்த 13 ஆண்டுகளாக சங்கம் கடந்து வந்த பயணத்தையும் அதன் சாதனைகளையும் எடுத்துரைத்தார். மேலும், சங்கம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் முஅத்தின்களின் நலன், வாழ்வாதார மேம்பாடு மற்றும் அதிகாரமளிப்பை நோக்கமாகக் கொண்டு SESDO SRI LANKA பல்வேறு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள், நலத்திட்டங்கள் மற்றும் சமூகப் பணிகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளரும் மனார் பள்ளிவாசல் முஅத்தினுமான ஜனாப். ILM. இர்பான் அவர்கள், MEWS அமைப்பை சட்டரீதியாகப் பதிவு செய்வதன் அவசியம் மற்றும் சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

பின்னர், SESDO SRI LANKA அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் அஷ்ஷெய்க் FMA. அன்சார் மௌலானா (நளீமி) அவர்கள் ஒட்டமாவடியிலிருந்து WhatsApp அழைப்பின் ஊடாக இணைந்து, திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸின் வெளிச்சத்தில் முஅத்தின்களின் சிறப்புகள் குறித்து உரையாற்றியதுடன், முஅத்தின்களின் நலனுக்காக SESDO SRI LANKA ஆற்றி வரும் சேவைகளையும் பாராட்டிப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற புதிய நிர்வாகத் தெரிவில்,
தலைவராக AA. முபர்றத்
உப தலைவராக MI. ஆஷிக் அஹ்மத்
செயலாளராக ZM. பௌஸான்
உதவிச் செயலாளராக ILM. இர்பான்
பொருளாளராக MB. அபுல் கலாம்
ஆகியோர் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

பொதுக்கூட்டத்தில் மாதாந்த உறுப்பினர் சந்தாவாக ரூ.300/- அறவிடுதல், மரண மற்றும் நலன்புரி உதவித்திட்டங்களை அறிமுகப்படுத்துதல், முஅத்தின்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள், களப்பயணங்கள் மற்றும் தொடர்ச்சியான பயிற்சிப் பட்டறைகள், ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல், முன்னாள், இன்னாள், மரணித்த முகத்தின் களின் விபரங்கள் உள்ளடங்கிய தொகுப்பு நூலொன்றை வெளியிடுதல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், முஅத்தின்களுக்கான வீட்டுத்திட்டம், ஸ்கூட்டர் உதவித்திட்டம், ஹஜ்/உம்ரா வாய்ப்பு, மாதாந்த கௌரவக் கொடுப்பனவு மற்றும் SMART முஅத்தின் திட்டம் போன்ற நீண்டகால திட்டங்களும் முன்மொழியப்பட்டன.

புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாப். AA. முபர்றத் அவர்கள் தெரிவுக்கு நன்றி தெரிவித்து, சங்கத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளித்தார்.

புதிய செயலாளர் ஜனாப். ZM. பௌஸான் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

கூட்டம் காலை 7.25 மணியளவில் துஆவுடன் நிறைவுற்றது.

இறையடியெய்திய முன்னாள் முஅத்தின்களுக்காக விசேட துஆவும் இடம்பெற்றது.

பின்னர் நினைவாக குழுப் புகைப்படமும் எடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் SESDO SRI LANKA சார்பில் அதன் ஊடகச் செயலாளர் ஜனாப். MBM. ராஜித் (Mega TV) மற்றும் உதவிச் செயலாளர் ஜனாப். மிசாஜ் சுபைர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

– ஊடகப் பிரிவு
SESDO SRI LANKA
"தன்னார்வ சேவையால் சமூக முன்னேற்றம்"

விடைபெறுகிறேன் - இலங்கைக்கான சவூதி அரேபியத்தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி உருக்கமான செய்தி இரு புனிதத்தலங்களின் காவலரின...
19/07/2026

விடைபெறுகிறேன் - இலங்கைக்கான சவூதி அரேபியத்தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி உருக்கமான செய்தி

இரு புனிதத்தலங்களின் காவலரின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான தூதுவராக எனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் இவ்வேளையில், எனது பதவிக்காலம் முழுவதும் இலங்கை அரசாங்கமும் மக்களும் வழங்கிய சிறந்த விருந்தோம்பலுக்கும் ஒத்துழைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சவூதி அரேபிய இராச்சியத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்குமிடையிலான நெருக்கமான மற்றும் நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதற்குப் பங்களித்தமை எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகும்.

நமது இரு நாடுகளுக்குமிடையிலான நீடித்த உறவுகள் குறித்த மிகுந்த பெருமையுடனும், நமது நட்பு நாடுகளினதும் மக்களினதும் நலன்களுக்குப் பயனளிக்கும் வகையில் நமது இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வளர்ந்து செழித்தோங்கும் என்ற முழுமையான நம்பிக்கையுடனும் நான் இலங்கையிலிருந்து விடைபெறுகிறேன் என இலங்கைக்கான சவூதி அரேபியத்தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தனது பிரியாவிடை செய்தியில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

🔴அக்கரைப்பற்றில் ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வும் - 2026🖋️(எம்.எஸ்.எம்.ஸாகிர்)ஹல்லா...
17/07/2026

🔴அக்கரைப்பற்றில் ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வும் - 2026

🖋️(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வும் - 2026 எனும் நிகழ்வு அக்கரைப்பற்று மஹ்ழறதுல் காதிரிய்யா பள்ளிவாசல் நூறுல் இர்பான் அறபுக்கல்லூரி வளாக ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்ற மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை (17) மாலை 03.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஓய்வுநிலை விஞ்ஞான பிரிவுக்கான உதவி கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. அப்துல் வாஹித் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில், ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றத்தின் போசகர் முகல்லம் அப்துல் ஸமத் ஆலிம் அப்துல் மஜீத் (மக்கத்தார் (றஹ்) மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி. மேனகா புவிக்குமார் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வில், முக்கிய நிகழ்வாக அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தராக இருந்து கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராகப் பதவி உயர்வு பெற்றமைக்காக தேசகீர்த்தி ஏ.எல். தௌபீக் (JP) அவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம் அதாஉல்லா, அக்கரைப்பற்று மஹ்ழரதுல் காதிரிய்யா பள்ளிவாசலின் தலைவரும் ஓய்வு நிலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஏ.எம். நவாஸ், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் வை. றாசித், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மொழித்துறை விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக் ஆகியோர் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாகக் கலந்து சிறப்பிக்கின்றனர்.

இந்நிகழ்வில் கல்விமான்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், கவிஞர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அனைவரும் கலந்து கொள்ளலாம் என
ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்ற ஏற்பாட்டுக் குழு திறந்த அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்- முஸ்லிம் கட்சிகள் கூட்டணியமைத்துள்ள இந்நிலையில் கல்முனை உப செயலக வழக்கை சுமந்திரன் வாபஸ் பெறுவாரா? - அலறி கேள்விய...
17/07/2026

தமிழ்- முஸ்லிம் கட்சிகள் கூட்டணியமைத்துள்ள இந்நிலையில் கல்முனை உப செயலக வழக்கை சுமந்திரன் வாபஸ் பெறுவாரா? - அலறி கேள்வியெழுப்புகிறார் !

நூருல் ஹுதா உமர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் அடையாளமாக, முஸ்லிம் சமூகத்துடைய தலை நகரமாக இருக்கின்ற கல்முனையை எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தினூடாக வழக்காடி வெல்லுவதை அனுமதிக்கின்றதா? அல்லது இந்த இக்கட்டான தருவாயில் சுமந்திரனை வழக்கிலிருந்து வாபஸ் பெறச் செய்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வை பெற்றுத் தருவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்குமா என்ற கேள்வி இன்று பரவலாக மக்கள் மத்தியில் எழுப்பப்படுகின்றது என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர், சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் (அலறி) தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்,

ஆறு தமிழ் முஸ்லிம் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள இந்தச் சூழ்நிலையில் இந்தக் கூட்டணியில் அங்கமாக இருக்கின்ற இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கல்முனை உப பிரதேச செயலக பிரச்சனைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணக்கமாக பேசி ஒரு நிலையான தீர்வுக்கு முன்வருவாரா என்ற கேள்வி பரவலாக இன்று பேசப்படுகின்றது.

குறிப்பாக இந்தக் கூட்டணியின் நோக்கத்தில் ஒன்று வட கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை பேச்சுவார்த்தை ஊடாகத் தீர்வு காண்பது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கல்முனை மாநகரத்தை துண்டாடுவதற்காக எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கடந்த வாரம் கூட மூன்று மணி நேரத்துக்கு மேல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். அந்த அடிப்படையில் இன்று பொதுமக்கள் கேட்கின்ற கேள்வி என்னவென்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் அடையாளமாக, முஸ்லிம் சமூகத்துடைய தலை நகரமாக இருக்கின்ற கல்முனையை எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தினூடாக வழக்காடி வெல்லுவதை அனுமதிக்கின்றதா? அல்லது இந்த இக்கட்டான தருவாயில் சுமந்திரனை வழக்கிலிருந்து வாபஸ் பெறச் செய்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வை பெற்றுத் தருவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்குமா என்ற கேள்வி இன்று பரவலாக மக்கள் மத்தியில் எழுப்பப்படுகின்றது.

ஏனென்றால் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கல்முனை உப பிரதேச செயலக வழக்குக்காக கடுமையாக வாதாடுகின்ற அதே நேரம் அந்த வழக்குக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதற்கு எதிராக தன்னுடைய செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாம் காரியப்பரை எதிர் வழக்கொன்றை தாக்கல் செய்து அதற்கு எதிராக வாதிடாமல் மௌனமாக இருப்பது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இலங்கை முஸ்லிம்களின் உயிர்நாடியான இந்த விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுமென்றே Same Side Goal அடிப்பது போன்று சுமந்திரன் நீதிமன்றத்தின் ஊடாக வென்று கல்முனையை துண்டாடி எடுக்கட்டுமென்று தானாக Same Side Goal அடித்துள்ளதா என்ற கேள்வி எழுகின்றது. ஏனென்றால் சாய்ந்தமருது நகரசபை விவகாரத்தில் காரியப்பர் அவர்கள் ஓடோடிச் சென்று அதில் ஒரு இடையீட்டு மனிதராக வழக்காட முடியும் என்றால் அதைவிட ஆயிரம் மடங்கு பாரதூரமான இலங்கை முஸ்லிம்களின் உயிர்நாடியான இந்தக் கல்முனை விவகாரத்தில் ஏன் காரியப்பர் சுமந்திரனுக்கு எதிராக வழக்காடவில்லை என்ற கேள்வி இன்று எழுகின்றது.

எனவேதான். இவ்வாறான ஒரு நிலைமையில் இன்று புதிய கூட்டணி ஊடாகச் சரி ஒரு பேச்சு பேசுவதற்கான ஒரு தளம் உருவாகியுள்ள சூழ்நிலையில், அவசர அவசரமாக முஸ்லிம் காங்கிரஸ் இதனை சுமந்திரனுடன் பேசி ஒரு சமாதான மேடையில் ஒரு தீர்வை கல்முனை முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். அதே நேரம், இந்த வழக்கிலிருந்து சுமந்திரனை வாபஸ் பெறச் செய்து இரு சமூகங்களும் பேச்சுவார்த்தை, இணக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்வை பெற்றுக் கொடுக்க முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுகின்றது.

கல்முனையில் விரைவில் மாநகர சபை தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கும் சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பரபரப்பாக கல்முனையில் அரசியல் செய்ய முற்பட்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், கல்முனை தொகுதி மக்களின் வாக்குகளுக்காக மட்டும் அந்த மக்களை இயந்திரமாகப் பாவிக்காமல் அந்த மக்களுடைய உயிர்நாடி கல்முனை நகரத்தைக் காப்பாற்றுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் எத்தகைய முயற்சி எடுக்கப்போகின்றது என்பதை மக்கள் மத்தியில் இதயசுத்தியாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.- என்று தெரிவித்துள்ளார்.

Address

Kalmunai
Kalmunai

Telephone

+94752392325

Website

Alerts

Be the first to know and let us send you an email when E TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E TV:

Shortcuts

Share