Central Express News

Central Express News "தமிழ் பேசும் மக்களின் குரல்" தெரிந்த?

அம்மா! அம்மா!✏ 'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :கடைசி உருண்டையில்தான் எல்லாசத்தும் இருக்கும்,இத மட்டும் வாங்கிக்...
10/05/2026

அம்மா! அம்மா!

✏ 'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :
கடைசி உருண்டையில்தான் எல்லா
சத்தும் இருக்கும்,
இத மட்டும் வாங்கிக்கோடா
கண்ணா!

✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் 'அம்மா'வின் பால்தான்.

✏ தன் 'அம்மா' தனக்கு என்னவெல்லாம்
செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை.
அவன் அதை உணரும்போது, அவள் உயிரோடு இருப்பதில்லை.

✒ 'அம்மா' என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.
*
✏ சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் இருந்து பார். தாய்நாட்டின் அருமை புரியும். இதேபோல, 'தாயை' விட்டு தள்ளி இருந்து பார். தாயின் அருமை புரியும்.

✒ என் முகம் பார்க்கும் முன்பே, என் குரல் கேட்கும் முன்பே, என் குணம் அறியும் முன்பே என்னை நேசித்த ஒரே மனித இதயம், என் 'அம்மா' மட்டும்தான்.

✏ ஓர் 'அம்மா'வின் இறுதி ஆசை. என் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை. உன்னை நினைப்பதற்கு அல்ல, அங்கும் உன்னைச் சுமப்பதற்கு!

✒ என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, நான் விழுந்து விடக்கூடாது என்ற கவலையில்தான் இருந்தது என் 'அம்மா' வின் கவனம்.

✏ நான் ஒருமுறை அம்மா என்று அழைப்பதற்காக, பிரசவ நேரத்தில் ஆயிரம் முறை அம்மா, அம்மா என்று கதறியவள்தான் என் 'அம்மா'

✒ குழந்தைகளின் பல்வேறு அழுகைகளின் அர்த்தம் புரிந்த ஒரே டிஸ்னரி புக், 'அம்மா' மட்டும்தான்

✏ தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால்தான் அன்று 'அம்மா' வுடன் சேர்ந்து நானும் அழுதேன் பிறக்கயில்

✒ தேங்காய் திருகும்போது, 'அம்மா' விடம் திட்டு வாங்கிக் கொண்டே சாப்பிடும் சுகமே தனி!

✏ அம்மா...! அப்பா, ஆடம்பரமாய் கட்டிக் கொடுத்த வீட்டை விட, உன் ஆடையில் கட்டித் தந்த அந்த (தொட்டில்) வீடுதான் பெரும் நிம்மதியைத் தந்தது.
நோய் வரும்போது ஓய்வுக்கு பாயைத் தேடுவதை விட, என் 'தாயை'த் தேடுது மனசு

✏ உலகில் மிகவும் அழகான வார்த்தை எது தெரியுமா? எனக்கு 'அம்மா'! உங்களுக்கு..?

✒ 'அம்மா' என்பது வெறும் பெயரல்ல, மறப்பதற்கு! அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.

✏ ஆயிரம் கைகள் என் கண்ணீரைத் துடைத்துப்
போனாலும், ஆறாத துன்பம் 'அம்மா' வின் சேலைத் தலைப்பில் துடைக்கும்போதுதான் நீங்கியது.

✒ கடைசி தோசை சாப்பிடும் போது, சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து, சட்னியை காலி செய்வதற்காக, இன்னொரு தோசை வைக்கிறதுதான் 'அம்மா'வின் அன்பு.

✏ நான் நேசித்த முதல் பெண்ணும், என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே 'அம்மா'!

✒ மண்ணறையில் உறங்கச் சொன்னால் கூட, தயங்காமல் உறங்குவேன். 'அம்மா', நீ வந்து ஒரு தாலாட்டுப் பாடினால்...!

✏ மூச்சடக்கி ஈன்றாய் என்னை
என் மூச்சுள்ள வரை காப்பேன் 'அம்மா' உன்னை.

✒ அன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம் தவறாமல் வந்து போகிறது 'அம்மா' வின் முகம்.

✏ உலகில் தேடித் தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம், 'அம்மா' வின் கருவறை.

✒ வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா. வாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'அம்மா'!

✏ 'அம்மா...!' அன்று நம் தொப்புள்கொடியை அறுத்தது, நம் உறவைப் பிரிக்க அல்ல. அது நம் பாசத்தின் தொடக்கத்துக்கு வெட்டப்பட்ட திறப்பு விழா ரிப்பன்!

09/05/2026
விற்பனைக்கு Central Camp / 3ம் வட்டாரம்இயற்கை சூழல் நிறைந்த வீடு கட்டக்கூடிய  20 purch நிலம் விற்பனைக்கு உண்டு Call. 078...
10/04/2026

விற்பனைக்கு
Central Camp / 3ம் வட்டாரம்
இயற்கை சூழல் நிறைந்த வீடு கட்டக்கூடிய 20 purch நிலம் விற்பனைக்கு உண்டு
Call. 0785014997

எங்கள் மதிப்பிற்குரிய ஆசான் (Central Camp, 12th colony) லாபிர் சேர் அவர்கள் தற்போது உடல் நலக்குறைவால் அவசர சிகிச்சை பிரி...
02/04/2026

எங்கள் மதிப்பிற்குரிய ஆசான் (Central Camp, 12th colony) லாபிர் சேர் அவர்கள் தற்போது உடல் நலக்குறைவால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்… அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவதற்காக உங்கள் பெருமதியான துஆக்களில் சேர்த்து கொள்ளுங்கள் 🤲 🤲 🤲

31/03/2026

மழலையின் மொழியில் அழகிய தமிழ் படித்தேன்.

🚨 எச்சரிக்கை: மட்டக்களப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - பெண்களே விழிப்புடன் இருங்கள்! 🚨​மட்டக்களப்பு பகுதியில் சமீபத்தில்...
31/03/2026

🚨 எச்சரிக்கை: மட்டக்களப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - பெண்களே விழிப்புடன் இருங்கள்! 🚨

​மட்டக்களப்பு பகுதியில் சமீபத்தில் நடந்த ஒரு கொடூரமான குற்றச்சம்பவம் நம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கும்பல் பெண்களை திட்டமிட்டு ஏமாற்றி, நகைகளை கொள்ளையடித்துவிட்டு, அவர்களை பாழடைந்த கிணற்றில் வீசி கொலை செய்ய முயன்றுள்ளது.

​இந்த கும்பல் கையாண்ட தந்திரங்களை அறிந்து, நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்:

​⚠️ குற்றவாளிகளின் தந்திரங்கள்:

​குறைந்த வாடகை ஆசை: பேருந்துக்காக காத்திருக்கும் பெண்களிடம் "நாங்களும் அந்தப் பக்கம்தான் போகிறோம், 100 ரூபாய் தந்தால் போதும்" என்று ஆட்டோவில் ஏறுமாறு அழைக்கிறார்கள்.

​பெண்களைப் பயன்படுத்தி ஏமாற்றுதல்: ஆட்டோவில் ஒரு பெண் (குற்றவாளி) இருப்பதால், மற்ற பெண்கள் பயமின்றி ஏறுகிறார்கள்.

​நம்பிக்கையை வெல்லுதல்: உங்களுடன் நகைக்கடைக்கோ அல்லது வங்கி்க்கோ கூடவே வந்து உதவி செய்வது போல நடித்து உங்கள் நக விபரங்களை தெரிந்துகொள்கிறார்கள்.

​மயக்க மருந்து பானங்கள்: வழியில் "தாகமாக இருக்கிறது" என்று கூறி, மயக்க மருந்து கலந்த பழச்சாறு (Juice) அல்லது குளிர்பானங்களை குடிக்கக் கொடுத்து மயக்கமடையச் செய்கிறார்கள்.

​✅ நாம் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்:

​🛑 தெரியாத வாகனங்களைத் தவிர்க்கவும்: அறிமுகமில்லாத நபர்களின் ஆட்டோ அல்லது வாகனங்களில், அவர்கள் எவ்வளவு குறைந்த வாடகை சொன்னாலும் ஏறுவதைத் தவிர்க்கவும்.

​🛑 உணவு/பானங்களை மறுக்கவும்: முன்பின் தெரியாதவர்கள் கொடுக்கும் தண்ணீர், பழச்சாறு அல்லது தின்பண்டங்களை எக்காரணம் கொண்டும் உட்கொள்ளாதீர்கள்.

​🛑 தகவல் பகிரவும்: தனியாகப் பயணம் செய்யும்போது ஆட்டோவின் இலக்கத்தையோ (Number Plate) அல்லது உங்கள் இருப்பிடத்தையோ (Live Location) உறவினர்களுக்கு அனுப்பி வைக்கவும்.

​🛑 குழந்தைகளிடம் எச்சரிக்கை: குழந்தைகளுடன் பயணிக்கும்போது கூடுதல் கவனத்துடன் இருங்கள்.
​நமது விழிப்புணர்வோ நம் உயிரைக் காக்கும்! இந்தத் தகவலை உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

31/03/2026

Ampara

Address

Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when Central Express News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Central Express News:

Share