e-Tamil24

e-Tamil24 This is a media page. Everyone finds Global and Local news on this page.

கல்முனை கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் S.E. ரெஜினோல்ட் FSC அவர்களது அன்புத்தாயார்  #சந்தியாப்பிள்ளை_...
23/06/2026

கல்முனை கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் S.E. ரெஜினோல்ட் FSC அவர்களது அன்புத்தாயார் #சந்தியாப்பிள்ளை_திரேசாராணி இன்று காலை இறை அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு துயருற்றிருக்கும் அதிபர் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவிக்கின்றோம். Kalmunai Net TM News e-Tamil24

 ொலிஸ்_உத்தியோகத்தர்கள்_கொல்லப்பட்டு_36வருடங்கள்_நிறைவு;  #அம்பாறையில்_ஞாபகார்த்த_நிகழ்வு!பாறுக் ஷிஹான்தமிழீழ விடுதலைப் ...
11/06/2026

ொலிஸ்_உத்தியோகத்தர்கள்_கொல்லப்பட்டு_36வருடங்கள்_நிறைவு; #அம்பாறையில்_ஞாபகார்த்த_நிகழ்வு!

பாறுக் ஷிஹான்

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஸ்டிக்கும் முகமான நிகழ்வு இன்று வியாழக்கிழமை (11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு தூபியில் நடைபெற்றது.

1990 ஜூன் 11 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட 600 காவல்துறை அதிகாரிகளின் நினைவாக அமைதி என்ற பெயரில் இம்மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அம்பாறை பிரதேச பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவன் தந்தநாராயண அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரை வரவேற்றார்.

குறித்த நிகழ்வின் போது அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள், பொலிஸார், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்ட பொலிஸார் உட்பட யுத்தத்தினால் உயிர்நீத்த மற்றும் கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின் குடும்பங்களின் நலன் குறித்து இதன் போது ஆராயப்பட்டன.

இது தவிர முதலில், அனைத்து மத சடங்குகளும் நடைபெற்ற பின்னர், நிகழ்வின் ஆரம்பத்தில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவினால் பொலிஸ் கொடி அரை கம்பத்தில் ஏற்றப்பட்டதுடன் உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களை முற்றுகையிட்ட புலிகள் சகல சிங்கள, முஸ்லிம் பொலீசார்களையும் ஆயுதங்களையும் அள்ளிச் சென்றார்கள். அதன் பின்பு திருக்கோவில் பகுதியில் உள்ள ரூபஸ் குளம் காட்டுப் பகுதியில் சகல பொலிசாரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. e-Tamil24 Kalmunai Net TM News

 #இளம்_பௌத்த_பிக்கு_துஸ்பிரயோகம்;  #அம்பாறை_மாவட்டத்தில்_சம்பவம்! பாறுக் ஷிஹான்14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சிய...
03/06/2026

#இளம்_பௌத்த_பிக்கு_துஸ்பிரயோகம்; #அம்பாறை_மாவட்டத்தில்_சம்பவம்!

பாறுக் ஷிஹான்

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்த கம பகுதியில் அமைந்துள்ள விகாரையில் செவ்வாய்க்கிழமை (2) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது விகாரையில் தங்கி இருந்த 5 இளம் பிக்குகில் 3 இளம் பிக்குகள் அண்மையில் தப்பி சென்ற சம்பவம் தொடர்பில் அறிந்த ஊர் மக்கள் விகாரையை நோக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள தயாரான வேளை குறித்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் 2 இளம் பிக்குகள் பொலிஸாரினால் வாக்குமூலம் பெறுவதற்காக விகாரையில் இருந்து அழைத்து செல்லப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபரான 41 வயது பௌத்த தேரர் தீகவாவி பிரதேசத்திற்கு தப்பி சென்றிருந்தார் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

பின்னர் மற்றுமொரு பௌத்த பிக்கு சகிதம் 41 வயதுடைய பௌத்த தேரர் தீகவாபி பகுதியில் இருந்து மத்திய முகாம் பொலிஸாரிடம் சரண் அடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

அத்துடன் குறித்த சம்பவத்தில் வாக்குமூலம் வழங்கிய இரு இளம் பிக்குகளில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய இளம் பிக்குவிடம் மத்திய முகாம் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதுடன் மருத்துவ பரிசோதனைக்காக அம்பாரை மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தில் ஈடுபட்டு சந்தேகத்தில் கைதான 41 வயது சந்தேக நபரான பௌத்த தேரரை இன்று (3) அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய மகாம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். TM News Kalmunai Net e-Tamil24

 #ஹெரோயின்_மற்றும்_போதை_மாத்திரைகளை_பாடசாலை_பல்கலைக்கழக_மாணவர்களுக்கு_விநியோகித்த_இருவர்_கைது! #கைது_செய்ய_சென்ற_பொலிஸார...
03/06/2026

#ஹெரோயின்_மற்றும்_போதை_மாத்திரைகளை_பாடசாலை_பல்கலைக்கழக_மாணவர்களுக்கு_விநியோகித்த_இருவர்_கைது!

#கைது_செய்ய_சென்ற_பொலிஸாரும்_காயம்; #சம்மாந்துறையில்_சம்பவம்!

பாறுக் ஷிஹான்

நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பல குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டதுடன் மற்றுமொருவரும் போதை மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவமானது செவ்வாய்க்கிழமை (2) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளதுடன் போதைப் பொருளுடன் நடமாடிய 2 சந்தேக நபர்கள் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த நிலையில் பொலிஸார் தமது உயிரை பணயம் வைத்து அச்சந்தேக நபரை கைது செய்திருந்தனர். குறித்த 36 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ய சென்ற நிலையில் சந்தேக நபர் பொலிஸாரை தாக்க முற்பட்டதுடன் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி சென்றிருந்தார். பின்னர் நீண்ட தேடுதலின் மீண்டும் அச்சந்தேக நபர் கைதானார்.

இதன்போது இச்சம்பவத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் காயமடைந்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்திருந்தார் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

மேலும், நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சூட்சுமமாக விநியோகத்து வந்த மற்றுமொரு 25 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் அன்றைய தினம் இரவு கைது செய்துள்ளனர்.

அத்துடன் கைதான குறித்த 2 சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸார் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த கைது நடவடிக்கையானது மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ. ஏ. என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். TM News Kalmunai Net e-Tamil24

 #கல்முனையில்_ஓரினச்சேர்க்கையில்_ஈடுபட்ட_வர்த்தகர்;  ாட்கள்_விளக்கமறியல்!   பாறுக் ஷிஹான்ரூபா பத்தாயிரம் தருவதாக கூறி  ஓ...
26/05/2026

#கல்முனையில்_ஓரினச்சேர்க்கையில்_ஈடுபட்ட_வர்த்தகர்; ாட்கள்_விளக்கமறியல்!

பாறுக் ஷிஹான்

ரூபா பத்தாயிரம் தருவதாக கூறி ஓரினச்சேர்க்கையில் (தன்னினச்சேர்க்கை) ஈடுபட்ட வர்த்தகருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் நீண்ட காலமாக குறித்த ஓரினச்சேர்க்கை (தன்னினச்சேர்க்கை) செயற்பாடு இடம்பெற்று வந்துள்ளது.

இதனை அறிந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது அங்கு சென்ற இரு சிறுவர்களையும் வரவேற்ற குறித்த வர்த்தகர் ஓரினச்சேர்க்கை (தன்னினச்சேர்க்கை) செயற்பாட்டிற்காக ரூபா பத்தாயிரம் தருவதாக பேரம் பேசியுள்ளார். பின்னர் சிறுவர்களில் ஒருவரை அச்செயற்பாட்டியில் ஈடுபடுத்தியுள்ளார். இதன்போது மற்றுமொரு சிறுவன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட காணொளியினை வர்த்தகரின் கைத்தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் ஏற்கனவே பேரம் பேசிய ரூபா பத்தாயிரம் கிடைக்கப்பெறாமையினால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட காணொளியினை பதிந்த வர்த்தகரின் கைத்தொலைபேசியினை இரு சிறுவர்களும் அடாத்தாக எடுத்துச்சென்றுள்ளனர். அதுமாத்திரமின்றி அச்சிறுவர்கள் குறித்த செயற்பாட்டிற்கு பேரம் பேசிய பணத்தை தருமாறு கோரி மிரட்டி அச்சுறுத்தியதுடன் தரவேண்டிய தொகை (ரூபா பத்தாயிரம்) கிடைக்கப்பெறாத பட்சத்தில் சமூக ஊடகங்களில் பிரசுரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். (தற்போது குறித்த காணோளி சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டு வைரலாகி வருகின்றது)

இதனை அடுத்து சுதாகரித்த குறித்த 56 வயது திருமணமான வர்த்தகர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக கடந்த மே மாதம் 06 ஆந் திகதி சென்று முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டில் தனது வர்த்தக நிலையத்திற்கு வருகை தந்த 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்கள் மேசையில் இருந்த விலையுயர்ந்த கைத்தொலைபேசியினை திருடிச் சென்றிருப்பதாக அம்முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

வர்த்தகரின் குறித்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன் போது அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியில் வைத்து 17 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்களையும் கைது செய்து கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதன்போது பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் விடயங்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து கடந்த மே 21 ஆந் திகதி குறித்த வழக்கானது கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த காணொளியை இரு சிறுவர்கள் சார்பாக ஆஜரான எதிர்தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றிற்கு சமர்ப்பித்த நிலையில் வழக்கின் சான்றுப்பொருளாக எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிவான் கைதான இரு சிறுவர்களில் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரை சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திய பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறும் பிரதான சந்தேக நபரான வர்த்தகரை கைது செய்யுமாறும் கட்டளை பிறப்பித்ததுடன் குறித்த வழக்கினை ஒத்தி வைத்திருந்தார்.

இதன் போது பிரதான சந்தேக நபரான வர்த்தகர் தலைமறைவாகி இருந்ததுடன் குறித்த வழக்கும் மே மாதம் திங்கட்கிழமை (25) விசாரணைக்காக மறுதவணை இடப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த வழக்கானது மன்றில் விசாரணைக்கு திங்கட்கிழமை (25) நேற்று கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் எடுத்திருந்த போது 4 நாட்கள் தலைமறைவாகி இருந்த வர்த்தகர் 5 சட்டத்தரணிகளுடன் மன்றில் சரணடைந்திருந்தார். இதன்போது சந்தேக நபரான வர்த்தகர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சட்ட நடவடிக்கைக்காக வாக்கு மூலம் சந்தேக நபரிடம் பதியப்பட்டு பின்னர் மீண்டும் மன்றிற்கு அழைத்து வரப்பட்டு மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான வர்த்தகருக்கு எதிர்வரும் யூன் மாதம் 08 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், இவ்விடயம் குறித்து கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைக்கமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் வழிகாட்டுதலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையிலான பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம். முஸ்தபா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #𝗞𝗮𝗹𝗺𝘂𝗻𝗮𝗶 TM News Kalmunai Net e-Tamil24

 #அம்பாறை_மாவட்ட_அபிவிருத்தி_மற்றும்_பேரிடர்_மீட்பு_நடவடிக்கைகள்_குறித்து  #ஜனாதிபதி_அனுர_குமார_திசாநாயக்க_விசேட_கவனம்!A...
22/05/2026

#அம்பாறை_மாவட்ட_அபிவிருத்தி_மற்றும்_பேரிடர்_மீட்பு_நடவடிக்கைகள்_குறித்து #ஜனாதிபதி_அனுர_குமார_திசாநாயக்க_விசேட_கவனம்!

Anura Kumara Dissanayake தலைமையில் அம்பாறை மாவட்ட மக்களின் அபிவிருத்தி தேவைகள் மற்றும் “டிட்வா” சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆராயும் நோக்கில் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (22) பிற்பகல் அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்காக 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் இதுவரை இல்லாத அளவிலான 22,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அந்த நிதியின் கீழ் முன்னெடுக்கப்படும் வீதி, நீர்ப்பாசனம், குடிநீர் மற்றும் வீடமைப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி, ஒதுக்கப்பட்ட நிதிகளை 2026 நிதியாண்டுக்குள் முறையாக பயன்படுத்தி மக்களுக்கு விரைவாக பயன்களை வழங்குவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக காணிகள் கைப்பற்றப்படுவது காரணமாக கிழக்கு மாகாணத்தில் உருவாகியுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, கிழக்கு மாகாண காணிகளை பாதுகாக்க பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரைப் பகுதியை பாதுகாப்பது தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதுடன், கடற்கரை பாதுகாப்பையும் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டையும் ஒருங்கிணைக்கும் வகையில் விரைவான திட்டமொன்றை தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் களு ஓயா பெருக்கு மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண அவசர ஆய்வு மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மேலும், பிரதேச செயலகங்கள் மற்றும் கல்வி வலயங்கள் போன்ற நிர்வாக அமைப்புகள் இன அடிப்படையில் அல்லாது, நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகை போன்ற பொதுவான அளவுகோல்களின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு துறை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். TM News Kalmunai Net e-Tamil24

 #அம்பாறை_பலநோக்கு_நகர_மண்டப_நிர்மாணப்_பணிகளை  #ஜனாதிபதி_அனுர_குமார_திசாநாயக்க_ஆரம்பித்து_வைத்தார்!Anura Kumara Dissanay...
22/05/2026

#அம்பாறை_பலநோக்கு_நகர_மண்டப_நிர்மாணப்_பணிகளை #ஜனாதிபதி_அனுர_குமார_திசாநாயக்க_ஆரம்பித்து_வைத்தார்!

Anura Kumara Dissanayake தலைமையில் இன்று (22) அம்பாறையில் நடைபெற்ற நிகழ்வில், திகாமடுல்ல மக்களின் நீண்டகால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள அம்பாறை பலநோக்கு நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அம்பாறை நகர சபைக்கு சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்துதல், வர்த்தக சமூகத்திற்கு சட்டப்பூர்வமான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட சூழலில் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க வாய்ப்பளித்தல் மற்றும் அம்பாறை மாவட்ட மக்களின் கலாசார மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு பொருத்தமான மையத்தை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கில் 2027 ஆம் ஆண்டை நாட்டின் வரலாற்றில் அதிகூடிய மூலதனச் செலவீன ஆண்டாக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக 2,000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி குறித்த திட்டங்களுக்கு உரிய காலப்பகுதிக்குள் செயற்திறனுடன் பயன்படுத்தப்பட்டு அதன் பலன்கள் மக்களிடம் விரைவாக கொண்டு செல்லப்படுவதை உறுதிப்படுத்துவது அரச அதிகாரிகளின் முக்கிய பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள், உள்ளூராட்சி பிரதிநிதிகள், வர்த்தக சமூக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
TM News Kalmunai Net e-Tamil24

 #முதியோர்_செயலகம்...!    TM News Kalmunai Net e-Tamil24
13/05/2026

#முதியோர்_செயலகம்...!
TM News Kalmunai Net e-Tamil24

 #ஐஸ்_ஹெரோயின்_போதைப்பொருள்_கடத்தல்_குழுவிற்கு_6_நாட்கள்_தடுப்புக்காவல்_உத்தரவு! பாறுக் ஷிஹான்ஐஸ் ஹெரோயின் போதைப்பொருள் ...
11/05/2026

#ஐஸ்_ஹெரோயின்_போதைப்பொருள்_கடத்தல்_குழுவிற்கு_6_நாட்கள்_தடுப்புக்காவல்_உத்தரவு!

பாறுக் ஷிஹான்

ஐஸ் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் குழுவிற்கு 6 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

சுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் 6 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (09) இரவு அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது குறித்த இரண்டு சந்தேக நபர்கள் அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம். பிரியங்கர தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை (10) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் கைதான இரு சந்தேக நபர்களையும் 6 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அத்துடன் நீண்ட காலமாக சூட்சுமமாக கடல் மற்றும் தரை வழியாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைதான சந்தேக நபர்களில் கடற்குதிரை என பட்டப்பெயருடன் அழைக்கப்படும் சந்தேக நபரிடம் இருந்து 50 கிராம் ஐஸ் போதைப் பொருளும் மற்றுமொரு சந்தேக நபரிடம் இருந்து 20 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் 5 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டது.

குறித்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள், 80 ஆயிரம் ரூபா பணம், இலத்திரனியல் தராசு, நவீன கைத்தொலைபேசிகள் என்பன சோதனை நடவடிக்கையின் போது மீட்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம். பிரியங்கரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு ஐஸ் ஹெரோயின் போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்விரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதன் போது 40 மற்றும் 31வயது மதிக்கத்தக்க குறித்த இரு சந்தேநபர்களில் ஒருவர் தலைமுடி வெட்டும் தொழில் செய்பவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. இச்சந்தேதக நபர்கள் புத்தளம், மன்னார் மாவட்டங்களில் இருந்து தரை மற்றும் கடல் வழியாக போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்பவர்கள் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், புத்தளம் மாவட்டம் உடப்பு பகுதி மற்றும் கல்முனை பகுதியை குறித்த சந்தேக நபர்கள் நிரந்திர வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பதுடன் காரைதீவு பகுதியில் வாடகை அடிப்படையில் வீடு ஒன்றினை பெற்று இக்கடத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளமை மேலதிக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கைதான இரு சந்தேக நபர்களும் முரணான வாக்குமூலங்களை ஏற்கனவே பொலிஸாருக்கு வழங்கி விசாரணைகளை திசை திருப்ப முயன்றுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

அத்துடன் கைதான சந்தேக நபர்கள் மற்றும் சான்றுப்பொருட்கள் யாவும் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில் அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம். பிரியங்கர தலைமையிலான குழுவினரால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. TM News Kalmunai Net e-Tamil24

10/05/2026

🔥 Trisha Entry at Vijay CM Swearing Ceremony 🗳️💥 Viral Scenes!
#விஜய் #திரிஷா #விஜய்பதவியேற்பு #மாஸ்என்ட்ரி #தமிழ்ஷார்ட்ஸ் #வைரல்வீடியோ #தளபதி #திரிஷா_என்ட்ரி #தமிழ்சினிமா #டிரெண்டிங் TM News Kalmunai Net e-Tamil24

Address

#70, Main Street, Periyaneelavanai-01A
Kalmunai
32316

Website

Alerts

Be the first to know and let us send you an email when e-Tamil24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share