Mother Land View

Mother Land View Discover the beauty, heritage, and culture of our homeland! Join Mother Land View to explore stunning landscapes, timeless traditions, and hidden gems.

Let's celebrate our land together! True News only

மாற்றத்தை நோக்கிய பயணம்!இளம் தலைமுறைக்கு வாய்ப்பளித்து எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை உறுதி செய்வோம்!முசல்பிட்டி - முதல...
15/04/2025

மாற்றத்தை நோக்கிய பயணம்!

இளம் தலைமுறைக்கு வாய்ப்பளித்து எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை உறுதி செய்வோம்!

முசல்பிட்டி - முதலைப்பாளி - கண்டல்குடா - அம்மாதோட்டம் மக்களே!
இது உங்கள் நேரம்! இது உங்கள் தீர்மானம்!

உண்மை சேவை, மக்களுக்கு நேரடியான ஒத்துழைப்பு, மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும் வாக்களிப்பு... இதற்காகவே நாங்கள் களத்தில்!

நம் வட்டாரத்தின் முன்னேற்றத்திற்காக உண்மையான மாற்றத்திற்கு ஆதரவாக வாருங்கள்!

உங்கள் வாக்கு – உங்கள் வலிமை
உங்கள் தீர்மானம் – நம் எதிர்காலம்

நெடு கால காத்திருப்பின் பின்பு பெரியசந்தி கிராமம் ஈன்றெடுத்த சன்மார்க்க முத்துக்கள்.====================================...
27/01/2025

நெடு கால காத்திருப்பின் பின்பு பெரியசந்தி கிராமம் ஈன்றெடுத்த சன்மார்க்க முத்துக்கள்.
=====================================

26.01.2025 ஆம் ஆண்டு கல்முனை ஜாமியா மன்பயில் ஹிதாயா அரபுக்கல்லூரியினால் நடாத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் பெரியசந்திகிராமத்தை சேர்ந்த
01. Al Alim Moulavi Mohamed Fasmi Mohamed Dilsath (Manbae)
02. Al Alim Moulavi Mohamed Aswar Mohamed Arshath (Manbae)
03. Al Alim Moulavi Mohamed Hasleem Mohamed Aseef (Manbae)
04. Al Alim Moulavi Mohamed Niyas Mohamed Nifran (Manbae) ஆகியோர் சன்மார்க்க முத்துக்களாக பட்டம் பெற்று வெளியேறினர்.

இராஜாங்க அமைச்சர்கள் இனி இல்லை: அரசாங்கம் அறிவிப்புமுன்னைய விதிகளின்படி நடைமுறையில் இருந்த, ராஜாங்க அமைச்சர் பதவிகளை இரத...
19/11/2024

இராஜாங்க அமைச்சர்கள் இனி இல்லை: அரசாங்கம் அறிவிப்பு

முன்னைய விதிகளின்படி நடைமுறையில் இருந்த, ராஜாங்க அமைச்சர் பதவிகளை இரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதற்கு பதிலாக 26 - 28 துணை அமைச்சர்கள் ஓரிரு நாட்களில் நியமிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சரும், அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னதாக நாட்டிற்கு முன்வைக்கப்பட்ட கொள்கை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஆடம்பர உணவு இல்லை!!!வீட்டுச் சாப்பாடு தான் கிடைக்கும்!அதிக செலவை கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உற...
19/11/2024

பாராளுமன்றத்தில் ஆடம்பர உணவு இல்லை!!!
வீட்டுச் சாப்பாடு தான் கிடைக்கும்!

அதிக செலவை கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் வழங்கப்படும் உணவு ஆடம்பர உணவாக அன்றி வீட்டில் சமைக்கப்படும் சாதாரண உணவாகவே வழங்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி றோஹனதீர தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வி அமைச்சு.
08/11/2024

பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வி அமைச்சு.

குறைந்த வருமானம் கொண்டோருக்கு சீன நிதியுதவியில் புதிய வீடுகுறைந்த வருமானமுடையவர்களுக்கு சீன அரசின் நிதியுதவி வேலைத்திட்ட...
07/11/2024

குறைந்த வருமானம் கொண்டோருக்கு சீன நிதியுதவியில் புதிய வீடு

குறைந்த வருமானமுடையவர்களுக்கு சீன அரசின் நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் 1996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கிராமிய, நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் கட்டுமானங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, தற்போதைய அரசியல் சூழலில் மக்களால் திரும்ப வர அழைக்கப்பட்டு, அரசியலில் மீண்டும் ப...
06/11/2024

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, தற்போதைய அரசியல் சூழலில் மக்களால் திரும்ப வர அழைக்கப்பட்டு, அரசியலில் மீண்டும் பங்கு பெற வாய்ப்பு குறித்து பரிசீலனை செய்து வருகிறார். பல்வேறு ஊடகங்கள், அவரின் ஆதரவு பெருக்கம் மற்றும் அரசியல் நிலவரம் மாற்றியமைக்க புதிய வாய்ப்புகளை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக, முன்னாள் எம்.பி. பிரேமநாத் டொலவத்தே, ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் அரசியலில் சேர வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது புதிய மின்னணு கடவுச்சீட்டுகளை (e-passports) அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இது...
06/11/2024

இலங்கையில் தற்போது புதிய மின்னணு கடவுச்சீட்டுகளை (e-passports) அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இது பயணங்களில் உயர்ந்த பாதுகாப்பு அளிக்கவும், பயோமெட்ரிக் தகவல்களைச் சேமிக்கவும் உதவும். மின்னணு கடவுச்சீட்டுகளின் முதல்கட்டப் பகுதி விரைவில் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது, மேலும் இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதற்கான முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது​.

இப்போதைய கடவுச்சீட்டு பற்றாக்குறை காரணமாக, பொதுமக்கள் தங்களின் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை முன்னே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனால், முக்கிய தேவைகளுக்காக தாமதமின்றி விண்ணப்பங்களை செயலாக்க முடியும். அத்துடன், அரசாங்கம் 50,000 வழக்கமான கடவுச்சீட்டு புத்தகங்களை வெளியூர் நிறுவனம் மூலம் பெற்றுக் கொள்கிறது, இது ஒக்டோபர் இறுதிக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது​.

பொதுமக்கள் குறிப்பாக வேலை, கல்வி அல்லது அவசர தேவைகளுக்காக நீண்ட காலமாகக் கடவுச்சீட்டு வரிசையில் காத்திருப்பது பற்றாக்குறை மற்றும் முந்திய கால வினவல் முறையின் நீக்கம் ஆகியவை இப்போது ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ முறையின்கீழ் செயல்படுகிறது

இன்றைய கனமழையால் பல இடங்களில் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்படக்கூடும் என்பதால், இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் எட்டு மாவ...
06/11/2024

இன்றைய கனமழையால் பல இடங்களில் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்படக்கூடும் என்பதால், இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் எட்டு மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் நிலச்சரிவுக்கு முந்திய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது​.

மேலும், மழை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாயத்தை உருவாக்கியதால், மக்களை அச்சுறுத்திய பகுதிகளில் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு உட்பட்ட மாவட்டங்கள்:

பதுளை
கொழும்பு
காலி
கம்பஹா
களுத்துறை
கேகாலை
மாத்தறை
ரத்னபுரி

இந்த பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், இவை மலைப்பகுதிகளுக்கு அருகிலுள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும், நிலச்சரிவு அபாய குறிப்புகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் எழுச்சி மாநாடு; புத்தளத்தில் அலையென திரண்ட மக்கள்!
06/11/2024

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் எழுச்சி மாநாடு; புத்தளத்தில் அலையென திரண்ட மக்கள்!

இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமச்சந்திர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் வீட்டுக்கு முன்னால் ...
23/06/2022

இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமச்சந்திர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் வீட்டுக்கு முன்னால் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்,அந்தவேளை போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் முற்பட்ட போது வெளியில் தெரிந்த ஹிருணிக்காவின் மார்பகங்களை வைத்து சமூக வலைத்தளத்தில் மீம்ஸ்களை சிலர் உருவாக்கி வருகின்றனர்.

அவ்வாறானவர்களுக்கு ஹிருணிக்கா தனது சமூக வலைத்தளத்தில் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.....


"எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்!

அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன்.

நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு சௌகரியமளித்து, எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன்.

(பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக) வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

எப்படியென்றாலும், எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்!"

#ஹிருணிகாபிரேமச்சந்திர

Address

Redbana
Kalpitiya
61354

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 18:00

Telephone

+94753891135

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mother Land View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mother Land View:

Share