12/05/2026
மாத்தளை வீர கெப்பெட்டிபொல மண்டபத்தில் இன்று (12) முற்பகல் நடைபெற்ற மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.
'டித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல், வீடுகள் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டதுடன், மாத்தளை நகர அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட 2026 வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்
'டித்வா' பாதிப்புகளுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள 500 பில்லியன் ரூபாய் நிதியை, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் அப்பிரதேசங்களையும் மேம்படுத்துவதற்காகப் பயனுள்ள முறையிலும் வினைத்திறனாகவும் பயன்படுத்துவது அரசியல் அதிகாரத்தினதும் அரச அதிகாரிகளினதும் பொறுப்பாகும் எனச் சுட்டிக்காட்டியதுடன், அந்த அனைத்துத் திட்டங்களையும் இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறுஜனாதிபதி வழியுறுத்தினார்.
அதேபோல், நீண்டகாலப் பிரச்சினையாகக் காணப்படும் கலேவெல - மாத்தளை வீதி நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்துமாறும், சூறாவளியினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை வழங்கினேன். அத்துடன், உற்பத்திப் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு மாவட்டத்தின் கிராமிய விவசாயத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்த ஜனாதிபதி
நாடென்ற வகையில் முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால் அனைவரும் சட்டத்தின் முன் சமமாக இருக்க வேண்டும் என்பதையும், அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும் என்பதோடு சட்டத்திற்கு அஞ்ச வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டினேன். இது அரச அதிகாரிகள் தமது எல்லைக்குள் நின்று கடமைகளை ஆற்றுவதற்கு எவ்விதத்திலும் தடையாக அமையாது என்றும், தேவைக்கேற்ப சட்டங்களைத் திருத்த முடியும் என்றும் குறிப்பிட்டேன். நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பிற்குள் இருந்து மக்களுக்கு உச்ச அளவில் சேவையாற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.