SL1st Tamil News

SL1st Tamil News உண்மைக்கு முதலிடம்
வாய்மையே வெல்லும்
ஒற்றுமையே எமது பலம்

🚫 ஆல்கஹால் – உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது தெரியுமா? 🧠❤️பலர் “சிறிது தான் குடிக்கிறேன்… என்ன ஆகும்?” என்று நினைப்பார்...
23/02/2026

🚫 ஆல்கஹால் – உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது தெரியுமா? 🧠❤️

பலர் “சிறிது தான் குடிக்கிறேன்… என்ன ஆகும்?” என்று நினைப்பார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால்… ஆல்கஹால் உங்கள் உடலின் ஒவ்வொரு முக்கிய உறுப்பையும் மெதுவாக பாதிக்கிறது.

👉 இது ஒரு பானம் மட்டும் இல்லை…
👉 இது உடலுக்குள் நச்சு போல் செயல்படும் ஒரு இரசாயனம்.

💥 மூளை (Brain)
ஆல்கஹால் நரம்பு செயல்பாட்டை பாதிக்கிறது. நினைவாற்றல் குறைவு, கவனம் குறைவு, முடிவெடுக்கும் திறன் பாதிப்பு… நீண்ட காலத்தில் நிரந்தர சேதம் கூட ஏற்படலாம்.

❤️ இதயம் (Heart)
இதய துடிப்பு மாறுதல், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் அபாயம் அதிகரிப்பு. அதிகமாக குடிப்பவர்கள் திடீர் இதய பிரச்சனைகளுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.

🩸 இரத்தம் (Blood)
இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உடல் முழுவதும் ஆக்சிஜன் சீராக செல்லாமல் பிரச்சனைகள் உருவாகும்.

🫁 நுரையீரல் (Lungs)
சுவாச செயல்பாடு பாதிப்பு. உடல் சக்தி குறைவு, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

🟤 கல்லீரல் (Liver)
ஆல்கஹால் அதிகமாக பாதிக்கும் உறுப்பு இதுதான்.
கொழுப்பு கல்லீரல் → கல்லீரல் அழற்சி → சிரோசிஸ் → கல்லீரல் செயலிழப்பு…
இது மெதுவாக ஆரம்பித்து உயிருக்கு ஆபத்தாக முடியும்.

🍽 வயிறு (Stomach & Digestion)
அமிலம் அதிகரிப்பு, வயிற்று எரிச்சல், செரிமான கோளாறுகள், குடல் சேதம்.

⚠️ உண்மை என்ன?
ஆல்கஹால் உடனடியாக பாதிக்காமல் இருக்கலாம்…
ஆனால் அது மெதுவாக உங்கள் உடலை உள்ளிருந்து சிதைக்கத் தொடங்கும்.

💬 நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:
உங்கள் உடல் ஒரு இயந்திரம் அல்ல… மாற்று spare parts கிடையாது.

💚 உங்கள் உடலை பாதுகாப்பது உங்கள் பொறுப்பு.
இன்று நீங்கள் எடுக்கும் நல்ல முடிவு… நாளைய உங்கள் ஆரோக்கியத்தை காப்பாற்றும்.

👉 நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை தேர்வு செய்கிறீர்களா?
அல்லது பழக்கத்தை தேர்வு செய்கிறீர்களா?

பகிருங்கள்… ஒருவரின் வாழ்க்கையை காப்பாற்றலாம்
🙏

#ஆரோக்கியவிழிப்புணர்வு #மது_விலக்கு #உடல்நலம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் ஒரு ரகசியம் இது.உலகின் முதலாவது விமானந்தாங்கி கப்பல் (Aircraft Carrier) HMS Hermis இ...
23/02/2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் ஒரு ரகசியம் இது.உலகின் முதலாவது விமானந்தாங்கி கப்பல் (Aircraft Carrier) HMS Hermis இலங்கையில் மட்டக்களப்பு கடலின் அடியில் 50 மீற்றர் ஆழத்தில் 1942 ஏப்ரல் மாதத்தில் இல் ஜப்பானிய குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல் காரணமாக விமானங்களோடு மூழ்கி ஒரு ஆழ்கடல் நூதனசாலையாக கிடக்கிறது.

கீழே தரப்பட்டுள்ள படங்களில் இந்த விமானந்தாங்கி கப்பலின் அழகான காட்சிகளை காணுங்கள். தனியாக ஒரு முருங்கைக்கல் சூழற்தொகுதியாக (ecosystem) மாறி கண்ணுக்கு இனிமையான காட்சியாக மாறிநிற்கிறது ஆனால் இந்த துயரமான சம்பவம் காரணமாக 309 பேர் பலியாகி இருக்கிறார்கள் 589 பேர் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள் குறிப்பாக உள்ளூர் மீனவர்கள் காரணமாக பலர் உயிரோடு மீட்கப்பட்டு இருக்கிறார்கள் இதேடு சேர்ந்து இந்த கப்பலை வழிநடத்தும் escorting ship ஆன HMAS Vampire கப்பலையும் ஜப்பான் மூழ்கடித்துள்ளது வரலாற்று குறிப்புகள் அடிப்படையில் 90 ஜப்பானிய விமானங்கள் இந்த தாக்குதலின் போது ஈடுபட்டு பத்து நிமிடங்களில் HMS Hermis விமானந்தாங்கி கப்பலை மூழ்கடித்துள்ளன. உள்ளூர் மீனவர்கள் HMS vita வைத்தியசாலை கப்பல் வரும் வரை பல நூறு Royal Navy வீரர்களை காப்பாற்றி இருக்கிறார்கள்.

மட்டக்களப்பு நகரில் இருந்து ஐந்து மைல் தொலைவில் இந்த அற்புதமான shipwreck அமைந்துள்ளது அது நிச்சயமாக மிகவும் சிறந்த ஒரு உல்லாசப் பயணிகள் attraction குறிப்பாக Marine diving tourism மற்றும் மிகச்சிறந்த Advertisement Material ஆக இருக்கும் ஆனால் தொல்லை மட்டுமே கொடுக்கும் தொல்பொருள் திணைக்களம் அதை பாதுகாக்க தவறி அதிலிருந்து திருடர்கள் பாகங்களை வெட்டி எடுத்து போனதோடு அதை முறையாக உல்லாசப் பிரயாண துறையோடு இணைந்து சிறந்த Tourist Attraction ஆக மாற்ற தடையாக இருக்கும் பிற்போக்கு சிந்தனையில் இருக்கிறது. இலங்கை உலகின் மிகச் சிறந்த ship wreck tourism hot spot ஆக இருக்க வேண்டும் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 109 முழ்கிய கப்பல்கள் இருக்கின்றன. இவை 1500 களில் போர்த்துக்கேயர் காலம் முதல் ஓசினயன் பேர்ள் வரை நீண்ட பட்டியலை கொண்டுள்ளது.

1942 ஏப்ரல் மாதத்தில் காலை 10:30- 10:45 முழு அளவில் HMS Hermis ஜப்பான் Imperial Navy விமானங்கள் மூலம் மூழ்கடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு யாராவது நேரடியாக அறிந்தவர்கள் இருக்கிறீர்கள்? 80-100வயதுடையவர்கள் நிச்சயமாக இதை அறிந்து இருப்பீர்கள்.

10/05/2025
02/03/2025
22/12/2024

மலிவான விமான டிக்கெட்டுகளை வாங்க 7 குறிப்புகள்

1. செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பதிவு செய்யுங்கள்

செவ்வாய் மற்றும் புதன் ஆகியவை விமான டிக்கெட்டுகளை வாங்க சிறந்த நாட்கள் ஆகும். பெரும்பாலான விமான நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை மாலை 7:00 மணிக்கு தங்கள் முன்பதிவு அமைப்புகளை அமைக்கின்றன. ஏனென்றால், பெரும்பாலான பயணிகளுக்கு வார நாட்களில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய நேரம் கிடைக்கும் என்பது விமான நிறுவனங்களுக்குத் தெரியும். புள்ளிவிவரங்களின்படி, நம்மில் பெரும்பாலோர் வெள்ளி, சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே டிக்கெட் விலைகளை உலாவுகிறோம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

2. முன்பதிவு செய்யுங்கள், ஆனால் மிக விரைவாக இல்லை

அனுபவத்தின் அடிப்படையில், உங்கள் பயணத் தேதிக்கு குறைந்தது 21 நாட்களுக்கு முன்னதாக நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். பெரும்பாலான விமான நிறுவனங்கள் முடிந்தவரை அதிக டிக்கெட் விற்பனையை அடைய தங்கள் அமைப்புகளை அமைத்துள்ளன. எனவே, கணினி மிகவும் மலிவான டிக்கெட்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது. உதாரணமாக, அமைப்பில், கோலாலம்பூரில் இருந்து லண்டன் செல்லும் விமானங்களுக்கு, முதல் 20 பயணிகளுக்கு மட்டுமே குறைந்த விலை கிடைக்கும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த 200 பயணிகளுக்கு நடுத்தர விலை கிடைக்கும், மீதமுள்ளவை அதிக விலை கொண்டதாக இருக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், கோலாலம்பூரில் இருந்து லண்டனுக்குப் பறக்கும்போது அவர்கள் விரும்பும் மார்ஜின் அடிப்படையில் விமானச் சேவையின் அமைப்பு டிக்கெட் விலையை நிர்ணயிக்கும்.

3. பொருத்தமான பறக்கும் நாட்கள்

செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிக்கவும். பெரும்பாலான விமான நிறுவனங்கள் இந்த இரண்டு நாட்களையும் முன்பதிவு அமைப்புகளுக்கு 'குறைவான பிஸியான நாட்கள்' என அமைக்கின்றன. முன்பதிவு அமைப்பு மற்றும் விமான நிலையங்கள் மிகவும் பிஸியாக இருக்கும் போது வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுடன் ஒப்பிடும்போது இந்த இரண்டு நாட்களில் விமான நிலையங்களும் பொதுவாக குறைவாகவே இருக்கும்.

4. சர்வதேச விமானங்களுக்கான 'சிறந்த ஒப்பந்தத்தை' தேடுங்கள்

பெரும்பாலான விமான நிறுவனங்கள் சர்வதேச விமானங்களுக்கு 11 முதல் 12 வாரங்களுக்கு முன்னதாகவே 'சிறந்த ஒப்பந்தத்தை' வழங்கும். எனவே, இந்த காலக்கட்டத்தில் டிக்கெட் விலையை நீங்கள் தவறாமல் சரிபார்க்க வேண்டும்.

5. சிறிய விமான நிலையங்களில் தரையிறங்க தேர்வு செய்யவும்

அந்த இலக்குக்கான 'முக்கிய விமான நிலையம்' இல்லாத விமான நிலையத்தில் தரையிறங்கும் இந்த நுட்பத்தை நீங்கள் முயற்சி செய்யலாம். உதாரணமாக, நீங்கள் லண்டனுக்குச் செல்ல விரும்பினால், பலர் பொதுவாக ஹீத்ரோவில் தரையிறங்குவதைத் தேர்ந்தெடுப்பார்கள். அடுத்த முறை, ஹீத்ரோவில் தரையிறங்க வேண்டாம், ஆனால் மான்செஸ்டரில் உள்ள விமான நிலையம் போன்ற ஹீத்ரோவுக்கு அருகிலுள்ள 'சிறிய' விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சிக்கவும். பிறகு, மான்செஸ்டரிலிருந்து லண்டனுக்கு ரயிலில் செல்லலாம். இந்த முறையை முயற்சிக்கவும். இது மலிவானதாக இருக்க வேண்டும்!

6. 'குக்கீகளை' அழி

பலருக்கு இது தெரியாது. நீங்கள் 30 நாட்களுக்கு முன்பு விமானத்தின் இணையதளத்திற்குச் சென்றிருந்தால், உங்கள் லேப்டாப், ஸ்மார்ட்போன் மற்றும் பிசியில் உள்ள குக்கீகளை அழிக்கவும். ஏனென்றால், இந்த குக்கீகள் மூலம், விமானத்தின் முன்பதிவு அமைப்பு நீங்கள் அவர்களின் இணையதளத்தை மீண்டும் மீண்டும் பார்வையிட்டதாகக் கருதும். எனவே, இணையதளத்தை பலமுறை பார்வையிட்டாலும், முன்பதிவு முறை ஒரே விலையை நிர்ணயிக்கும். சில சமயம் விலை கூட அதிகரிக்கலாம்! எனவே, உங்கள் இணைய உலாவியில் குக்கீகளை அழிக்கும் பழக்கத்தை நடைமுறைப்படுத்துங்கள். அவற்றை எப்படி நீக்குவது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், திரு. கூகுளிடம் கேளுங்கள்!

7. விலைகளை ஒப்பிடுக

மற்ற இணையதளங்களில் நீங்கள் விரும்பும் டிக்கெட் விலைகளை கூகிள் செய்து ஒப்பிட்டுப் பார்க்க சோம்பேறியாக இருக்காதீர்கள். ஒரு இணையதளத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டாம். நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், ஏனெனில் சில சமயங்களில் அதே விமான நிறுவனத்திலிருந்து மலிவான டிக்கெட் விலைகளைக் காணலாம். பயணத்திற்கு அடிக்கடி பயன்படுத்தப் படும் சில தேடுபொறிகள் இங்கே:

1. Skyscanner
2. CheapFlight
3. Momondo
4. Kayak
5. Google Flight
6. Ita Software

ஏறாவூர் மண்ணில் மாபெரும் பொதுக்கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து ஏறாவூர் மண்ணில் மாபெரும் பொதுக்கூட்டம் கௌ...
12/08/2024

ஏறாவூர் மண்ணில் மாபெரும் பொதுக்கூட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து ஏறாவூர் மண்ணில் மாபெரும் பொதுக்கூட்டம் கௌரவ வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 23.08.2024 திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. அனைத்து ஆதரவாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

ஏற்பாட்டுக் குழு

"சுபிட்சமான வாழ்விற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் எமது ஒரே தெரிவு RW"

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இடம் பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற நியமனங்களில் ஓட்டமாவடி பிரதேச சபையில் மிக நீண்ட காலங்க...
17/07/2024

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இடம் பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற நியமனங்களில் ஓட்டமாவடி பிரதேச சபையில் மிக நீண்ட காலங்களாக நிரந்தர நியமனமற்று கடமையாற்றிய பல ஊழியர்கள் புறக்கணிப்பு.

பல ஆண்டு காலங்களாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் கடமையாற்றிய நிரந்தரமற்ற ஊழியர்களான 17 பேர்களுக்கு நியமனங்கள் வழங்காமல் இன்றைய தினம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்தது ஒரு சில வாரங்களுக்கு முன்னர் இவர்கள் திருகோணமலையில் இடம்பெற்ற நேர்முக பரிட்சையில் தோற்றி எவ்வித பிரச்சினைகளும் அற்று நேர்முக பரீட்சையை சிறப்பான முறையில் தோற்றி இருந்தார்கள். இருந்தபோதிலும் இவர்களை பிரதேசத்தில் காணப்படும் அரசியல் வாங்குரத்து நிலைமை காரணமாக பழிவாங்கப்பட்டு இவர்களின் நியமனங்கள் பிற் போடப்பட்டுள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதனால் மிக நீண்ட காலங்களாக வேறு எவ்வித தொழில்களிலும் ஈடுபடாமல் தற்போது வழங்கப்பட இருக்கும் நிரந்தர நியமனத்தினையே! இந்த 17 பேர் எதிர்பார்த்து இருந்தார்கள் இவர்களுக்கு இணைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் பரிசீலனை செய்து உடனடியாக இவர்களுக்கான நியமனங்களை வழங்க துரிதகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊடக வெளியீடு – 27.11.2023சுற்றாடல் அமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் தனக்கு பயன்படுத்த வழங்கப்பட்டிருந்த சுமார் 20 கோட...
28/11/2023

ஊடக வெளியீடு – 27.11.2023

சுற்றாடல் அமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் தனக்கு பயன்படுத்த வழங்கப்பட்டிருந்த சுமார் 20 கோடி ரூபா பெறுமதியான 02 அதிசொகுசு வண்டிகளை அமைச்சுப்பதவியை இழந்ததை தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைத்து விட்டதாக முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

அமைச்சராக பதவி வகித்த போது தனக்கு பயன்படுத்தவென வழங்கப்ட்டிருந்த 02 அதி சொகுசு ஜீப் வண்டிகளை மீள் ஒப்படைக்காது தாம் பயன்படுத்துவதாக சிங்கள மொழி பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இவ்விரு ஜீப் வண்டிகளையும் ஜனாதிபதி செயலகத்திடம் தாம் கையளித்து இருப்பதாக உறுதிப்படுத்தினார். ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச்செயலாளர் (போக்குவரத்து) புத்திக ஜெயதிஸ்ஸ 2023.11.02ம் திகதி எழுத்து மூலம் தனக்கு அனுப்பியிருந்தார். (ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது.)

இது தொடர்பாக மேலதிக தகவல்களை ஜனாதிபதி செயலகத்தின் போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் அவர்களிடம் கேட்டறிய முடியும் என தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரின் ஊடகப்பிரிவு

08/09/2023
26/08/2023

2022 ஆண்டு ஹஜ் குழுவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அமைச்சர் நஸீர் அஹமட் அவர்கள் தனது சொந்த நிதியிலேயே! ஹஜ்ஜுக்கு பயணித்துள்ளார்.

2022 ஆண்டு ஹஜ் பயணம் சம்பந்தமாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் அவர்கள் உரையாற்றிய காணொளி (2022.07.31)

பொய்களைப் பரப்புபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்

Address

Kandy

Alerts

Be the first to know and let us send you an email when SL1st Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SL1st Tamil News:

Share