
26/07/2025
2025/2026 ஆம் ஆண்டுக்கான பொத்துவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளன பொதுக் கூட்டமும் நிருவாக தெரிவும்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை
நடைமுறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம்
புனரமைக்கப்பட்டு வருகின்றது. அதன் பிரகாரம் பொத்துவில் பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிர்வாகத் தெரிவும், பொதுச் சபைக கூட்டமும். 2025.07.25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொத்துவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் AG.அன்வர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் அதிதிகாளாக பொத்துவில் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திரு. ராமக்குட்டி அவர்களும், பொத்துவில் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் சுபையிர் அவர்களும், நிந்தவூர் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி MIM. பரீட் அவர்களும், கிராமா நிலதாரி அல் அமீன் அவர்களும், சிசிரா வானு Do (NDDCB ) அவர்களும், முன்னாள் சம்மேளனத் தலைவைர் நௌபல் அவர்களும் மற்றும் சமூக செயற்பாட்டாளர் அரபாத் அவர்களும் என பலரும் கலந்து கொண்டனர்.
தலைவர் : ACM. இர்பாஸ்கான்
செயலாளர் : AG. அன்வர் ( இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்)
பொருளாளர் : MNM. சம்றத்
அமைப்பாளர் : AM. றிப்லான்
உப தலைவர் : K.விஜினி காந்த்
உப செயலாளர் : NA. பஹத்
உப அமைப்பாளர் : K. ஐனரந்தன்
ஆகியோரும் பிரிவுக்கான செயலாளர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.