11/05/2025
வெலம்பொடை பிரபல வியாபாரியின் 21கோடி ரூபாய் பணம் கொள்ளை!..அதிர்ச்சி சம்பவம்!.. கொள்ளையர்களை கைதுசெய்ய பொலிஸாரின் விரிவான விசாரணை ஆரம்பம்!..
----------------------------------------------------------
உடுநுவர,வெலம்பொடையை சேர்ந்த பிரபல கோடீஸ்வர வியாபாரி ஒருவரிடமிருந்து சுமார் 210 மில்லியன் ரூபாய்களை கொள்ளையிட்டு தப்பியோடிய ஒரு சூத்திரதாரி கும்பலைக் கைது செய்வதற்காக விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெலம்பொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
වෙලම්බොඩ ප්රදේශයේ කෝටිපති ව්යාපාරිකයෙකුගෙන් රුපියල් කෝටි 21 කට ආසන්න මුදලක් කොල්ලකා පලා ගිය සංවිධානාත්මක කල්ලියක් අත්අඩංගුවට ගැනීම සඳහා පුළුල් පරීක්ෂණ ආරම්භ කර ඇති බව වෙලම්බොඩ පොලිසිය පවසයි.
රුපියල් කෝටි 28 කට රත්තරන් කිලෝ 5.5 ක් ලබා දෙන බවට එම පුද්ගලයා පොරොන්දු වීමෙන් පසු මෙම කොල්ලය සිදු කර ඇති බව පොලිසිය පවසයි.
280 மில்லியன் ரூபாய்களுக்கு 5.5 கிலோ தங்கத்தை வழங்குவதாக கோரி இந்தக் பணக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தங்கம் சம்பந்தமான ஒப்பந்தம் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நபர் மூலம் பல மாதங்களாகப் பேசப்பட்டு வந்ததாகவும்,அந்த கையிருப்பில் இருந்து வந்ததாகக் கூறி, ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் மாதிரியாகக் காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், மறுநாள், 7 பேர் கொண்ட குழு பரிவர்த்தனையை மேற்கொள்வதற்காக பிரபல வியாபாரியின் வீட்டிற்கு வந்து,மீன் லாரியில் மறைத்து தங்கத்தை கொண்டு வருவதாகவும், பரிவர்த்தனையின் போது வியாபாரியும் அவரது மூத்த மகனும் மட்டும் இருந்தால் போதுமானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அந்த நேரத்தில் பிரபல வியாபாரியான ஹாஜியார், அங்கு வந்த நான்கு பேருடன் தனக்குச் சொந்தமான வேறொரு வீட்டிற்குச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட நேரத்தில் வீட்டில் தந்தையும் மகனும் மாத்திரம் இருந்ததனால்,அங்கு வந்த கும்பல், பிரபல வியாபாரியான ஹஜியரையும் அவரது மகனின் கை, கால்களையும் பிளாஸ்டர்களால் கட்டி, அறைகளுக்குள் தள்ளி, அடித்து, அவர்களிடம் இருந்த பணத்தையும் பறித்துள்ளனர்.
அந்த நான்கு பேரும் பைகளில் இருந்து பணத்தை எடுத்து மற்ற வேறொரு பையில் வைத்து எடுத்துக் கொண்டு ஒரு வாகனத்தில் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னர் வியாபாரியும் அவரது மகனும் பிளாஸ்டரை அகற்றி, இது குறித்து தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் வந்த (வேகன் ஆர்) வாகனமும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்.
கண்டியின் பல்லேகலே மற்றும் பொல்கம்விட்ட பகுதிகளைச் சேர்ந்த மற்ற இருவரும், அவர்கள் வந்த முச்சக்கர வண்டியுடன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலம்பொடை வியாபாரி இவ்வளவு பெரிய தொகையைப் பெற்றது குறித்து பொலிஸாரின் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
குறித்த பிரபல வியாபாரி, தனியார் வங்கியின் நண்பர் ஒருவரிடமிருந்து 150 மில்லியன் ரூபாயையும், மாவன்னல்லயில் உள்ள ஒரு தங்க நகைக்கடை உரிமையாளரிடமிருந்து 1 மில்லியன் ரூபாயையும் பெற்றதாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் தனது தங்கத்தையும் 7 மில்லியங்களுக்கு அடமானம் வைத்து,அவரது சகோதரரிடமிருந்து 5 மில்லியன் மற்றும் அவரது மகனிடமிருந்து 1 மில்லியன்யும் எடுத்து தனது ஜீப்பையும் அடகு வைத்து 3 கோடி ரூபாய் பெற்றதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
புகார் அளிக்கப்பட்டு, பணப் பைகள் மாற்றப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வெலம்பொடை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-Fastnews1st முதல்வேகச்செய்தி පළමුවේගපුවත්-