25/08/2026
கந்தளாய் பேராற்றுவெளியில் நீர் விநியோகம் தற்காலிகமாகத் துண்டிப்பு!
கந்தளாய் பேராற்றுவெளி பிரதேசத்தின் பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு காரணமாக, இன்றைய தினம் நீர் விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னரும் இப்பிரதேசத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் ஊடாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, குறித்த நீர் கசிவை சீரமைக்கும் திருத்தப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திருத்தப் பணிகள் நிறைவடைந்ததும், விரைவில் நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் தேவையை கருத்திற்கொண்டு உடனடியாக திருத்தப் பணிகளை முன்னெடுத்து வரும் கந்தளாய் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புத் திணைக்களத்தினருக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
#கந்தளாய் #பேராற்றுவெளி #நீர்விநியோகம் #நீர்கசிவு #திருத்தப்பணி