ARM Hilmy

ARM Hilmy Member of Karaitivu Pradeshiya Sabha |Mavadippalli Ward | All Ceylon Makkal Congress 🦚

    உங்கள் திருமணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! அல்லாஹ் உங்கள் இருவரின் வாழ்க்கையிலும் பரக்கத், அன்பு, அமைதி மற்றும் ...
02/07/2026


உங்கள் திருமணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அல்லாஹ் உங்கள் இருவரின் வாழ்க்கையிலும் பரக்கத், அன்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியை நிரப்புவானாக.
#பாரகல்லாஹுலக, #வபாரக #அலைக், #வஜமஅ #பய்னகுமா #ஃபீகைர்.
இனிய இல்லற வாழ்வை அல்லாஹ் அருள்வானாக. #ஆமீன். 💐🤲

29/06/2026
கட்டார் அறக்கட்டளை Qatar Charity  நிறுவனத்தின் அணுசரனையுடன் மாவடிப்பள்ளி ஜூம்மா பள்ளிவாசலுக்கு நீர் குளிரூட்டி இயந்திரம்...
22/06/2026

கட்டார் அறக்கட்டளை Qatar Charity நிறுவனத்தின் அணுசரனையுடன் மாவடிப்பள்ளி ஜூம்மா பள்ளிவாசலுக்கு நீர் குளிரூட்டி இயந்திரம் அன்பளிப்பு
**************************************************************************
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கௌரவ காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ARM. ஹில்மி அவர்கள் சோசியல் ரூட்ஸ் சிறிலங்கா அமைப்பிடம் விடுத்த வேண்டு கோளின் அடிப்படையில் Qatar charity நிறுவனத்தின் அணுசரனையுடன் மாவடிப்பள்ளி ஜூம்மா பள்ளிவாசள்மற்றும் மாவடிப்பள்ளி ரஹ்மானியா பள்ளிவாசல் என்பவற்றுக்கு குடி நீர் குளிரூட்டி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த குடி நீர் குளிரூட்டி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு 13.06.2026 அன்று மாவடிப்பள்ளி ஜூம்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது
நிகழ்வில் Social roots SriLanka அமைப்பின் தலைவர் சட்டத்தரணி M.I.M றிஸ்வான், கட்டார் சரிட்டி நிறுனத்தின் செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர்
எம். எப். எம். கப்ளீன் ,காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ARM.ஹில்மி உட்பட பள்ளிவாசல் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்குபற்றினர்.
இவ் உதவிக்கு நிதி அளித்த கட்டார் நாட்டு தனவந்தர்களுக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக....

18/06/2026
Eid Mubarak 🌙تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنكُمْ
20/03/2026

Eid Mubarak 🌙
تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنكُمْ

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி மத்திய குழுவின் ஏற்பாட்டில், மாவடிப்பள்ளி கமு/அல் அஷ்ரப் மகா வித்தியாலய ஆராத...
14/03/2026

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி மத்திய குழுவின் ஏற்பாட்டில், மாவடிப்பள்ளி கமு/அல் அஷ்ரப் மகா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நேற்று (13) இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் போது...

ARM. ஹில்மி,
காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்,
மாவடிப்பள்ளி வட்டாரம்.

காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (12) காரைதீவு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றத...
12/03/2026

காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (12) காரைதீவு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்கள் ஊடாக காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் ARM ஹில்மி அவர்களால் பின்வரும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன:

1. மாவடிப்பள்ளியின் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்திற்கு (PMCU) நிரந்தரமாக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிற்றூளியர்களை நியமித்தல்.

2. மாவடிப்பள்ளியின் ஆதம் வீதி - ஆதம் குறுக்கு வீதியினை (900m) நீளத்திற்கு கார்பட் வீதி அமைத்தல்.

3. மாவடிப்பள்ளியின் பிரதான வீதியில் உள்ள அரச காணியில் அரச காரியாலயங்களை ஒரே இடத்தில் கொண்டுவரும் நோக்குடன் மூன்றுமாடி கொண்ட பல்தேவைக் கட்டடம் அமைத்தல்.

4. மாவடிப்பள்ளியில் I Project மூலமாக அமைக்கப்பட்டுள்ள கார்பட வீதிகளுடன் உள்ள வடிகாண்களுக்கு மூடி (Cover Slab) இட நடவடிக்கை எடுத்தல்.

5. மாவடிப்பள்ளியில் தபாலக வீதியின் 120m நீளத்திற்கு 3 - அவத்தை வடம் (Three Phase Line) அமைக்க நடவடிக்கை எடுத்தல்.

மேற்கண்ட முன்மொழிவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் உள்ளிட்ட அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்ள் காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ARM. ஹில்மி,
காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்,
மாவடிப்பள்ளி வட்டாரம்.

மாவடிப்பள்ளி கிராமத்தின்  அனைத்து குடும்பங்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினாள் பேரிச்சம்பழம் விநியோகிக்கப்பட்டது....
05/03/2026

மாவடிப்பள்ளி கிராமத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினாள் பேரிச்சம்பழம் விநியோகிக்கப்பட்டது.
***********************************************************************
அல்ஹம்துலில்லாஹ்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் ரிஷாத் பதியுடீன் அவர்களின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட பேரிச்சம்பழம் மாவடிப்பள்ளி கிராமத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் விநியோகிக்கும் நிகழ்வு கடந்த 2026.03.03ம் திகதி செவ்வாய் கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டு மாவடிப்பள்ளி கிராமத்தின் பெரும்பாலான அனைத்து குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் .

ARM. ஹில்மி,
காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்,
மாவடிப்பள்ளி வட்டாரம்.

நன்றி TamilCNN
21/02/2026

நன்றி TamilCNN

காரைதீவில் மூன்று மாதங்களாக ஒளிராத மின் விளக்குகள் சீரமைப்பு : யானை அச்சுறுத்தலையும் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை

அம்பாறை மாவட்ட காரைதீவு எல்லையான மாவடிப்பள்ளி பெரிய பாலத்திலிருந்து மாவடிப்பள்ளி ரஹ்மானியா பள்ளி (சியாரம்) வரையிலான பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் கடந்த மூன்று மாதங்களாக ஒளிராது காணப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் இரவு நேரங்களில் பயணிக்கும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அசௌகரியத்தையும் பாதுகாப்பு சிக்கல்களையும் எதிர்கொண்டனர்.

குறிப்பாக, அண்மைக் காலமாக அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக இருள் சூழ்ந்த இந்த வீதி பகுதி மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இரவு நேரங்களில் யானைகள் நடமாடும் அபாயம் நிலவிய நிலையில், மின் விளக்குகள் செயலிழந்திருந்தமை பாதுகாப்பு சவாலாக மாறியிருந்தது.

இந்நிலையை உணர்ந்து, காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.ஹில்மி அவர்கள், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ்.பாஸ்கரன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கல்முனை நிறைவேற்று பொறியியலாளர் எந்திரி செய்னுலாப்தீன் முஹம்மட் அஸ்மீர் அவர்களின் கவனத்திற்கு இப்பிரச்சினையை கொண்டு சென்றார்.

அதனைத் தொடர்ந்து, கல்முனை நிறைவேற்று பொறியியலாளர் எந்திரி செய்னுலாப்தீன் முஹம்மட் அஸ்மீர் அவர்களின் விரைவான தலையீட்டின் மூலம், இன்று (20) குறித்த மின் விளக்குகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் ஒளிரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் இரவு நேரப் பயணங்கள் பாதுகாப்பாக அமைய வழிவகை செய்யப்பட்டுள்ளதுடன், யானை அச்சுறுத்தலையும் கட்டுப்படுத்த உதவியாக அமையும் என பொதுமக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இக்குறித்த பிரச்சினைக்கு துரித தீர்வு வழங்க ஒத்துழைத்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ்.பாஸ்கரன் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கல்முனை பொறியியலாளர் எந்திரி செய்னுலாப்தீன் முஹம்மட் அஸ்மீர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.ஹில்மி ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் நன்றியும் பாராட்டுதலும் தெரிவிக்கப்படுகின்றன.

Address

Mavadippalli
Karaitivu
32250

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARM Hilmy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share