
16/08/2025
கலாசார அதிகார சபையின் நிர்வாக் கூட்டம்
ஏ.ரி.எம்.றியாஸ்
காத்தான்குடி பிரதேச கலாசார அதிகார சபையின் நிர்வாக சபைக் கூட்டம் (15) வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளரும் கலாசார அதிகார சபையின் தலைவருமான நிஹாரா மௌஜூத் தலைமையில் இடம் பெற்றது.
இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சில்மியா, கலாசார உத்தியோகத்தர்களான MIM.ஜவாஹிர்,திருமதி சிந்து உஷா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இக் கூட்டத்தில் கலாசார அதிகார சபையின் செயலாளர் கவிஞர் இல்மி அகமட்லெப்பை, பொருளாளர் கவிஞர் முஸ்தபா, பாவலர் சாந்தி முகைதீன்,கவிஞர் ஜவ்பர்கான்,கவிஞர் றபாய்தீன்,கவிஞர் அமீர் அலி,கவிஞர் றியாஸ், கவிஞர் இஸ்மாயில், கவிஞர் இக்பால்கான், பாடகர் கமர்தீன்,கவிதாயினி அஜீரா கலீல்தீன், கவிதாயினி திருமதி பெளசியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாகவும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் பிரதேச சாகித்ய விழாவினை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன் கலை, இலக்கியம்,ஊடகம் சார்ந்த துறைகளில் சமூகத்திற்கு பங்காற்றியமைக்காக ஐவருக்கு கெளரவம் வழங்கப்படவுள்ளதாகவும் இதற்கான தெரிவும் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டது.
வழமை போன்று இம்முறையும் ஸம் ஸம் சிறப்பு மலரினை வடிவமைத்து வெளியீடு செய்வதெனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.