15/09/2025
காத்தான்குடி – 01, மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலுக்கான சம்மேளன தலைவர் நியமனம் தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விடுக்கும் ஊடக அறிக்கை
2025/2026ஆம் நடப்பாண்டுக்கான சம்மேளன தலைவர் பதவியானது சுழற்சி முறையின் அடிப்படையில் இம்முறை காத்தான்குடி – 01, மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலுக்குரியதாகும்.
குறித்த பள்ளிவாயலுக்கான தலைமைப்பதவியினை ஏற்று தலைவர் ஒருவரினை பொதுச் சபைக கூட்டத்திற்கு முன்னராக நியமித்து தருமாறு சம்மேளனத்தினால் உத்தியோகபுஸ்ரீர்வ கடிதம் அனுப்பப்பட்டிருந்தும் குறித்த பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்கிடையிலான உள்ளக முரண்பாடுகள் காரணமாக தலைவர் நியமித்து அனுப்பப்படாத நிலையிலே கடந்த 2025.06.15ஆம் திகதி 2025/2026ஆம் ஆண்டுக்கான பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்றிருந்தது.
அதற்கமைவாக, சம்மேளன நிருவாக சபையினை தொடர்ந்தும் வழிநடாத்துவதற்காக சம்மேளனத்தின் நடைமுறைகள் தொடர்பான யாப்பின் பிரகாரம் சம்மேளன பிரதித் தலைவர் அவர்களே சம்மேளன பதில் தலைவராக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார்கள்.
மேற்படி பள்ளிவாயலுக்கான, தலைவர் நியமனம் தொடர்பாக சம்மேளன வாராந்த நிர்வாக சபைக் கூட்டங்களில் தொடர்ச்சியாக ஆராயப்பட்டு வந்துள்ளதுடன், நிர்வாகத்திலுள்ள சம்பந்தப்பட்ட இருதரப்பினர்களையும் ஒரே மேசையில் அழைத்து கலந்துரையாடி சுமுகமானதொரு நிலையினை ஏற்படுத்த முடியாதொரு சூழ்நிலை காணப்பட்டு வந்துள்ளது.
அந்தவகையில், இது விடயமாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மற்றும் பிராந்திய அபிவிருத்தி உத்தியோகத்தருடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி அதனது முன்னேற்றங்கள் தொடர்பில் அவ்வப் போது கேட்டறிந்து இந் நிர்வாக உள்ளக பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து சுமுகமான நிலையை ஏற்படுத்த கேட்டுக் கொண்ட போதிலும் வக்பு சபையினால் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு வழிகாட்டல்களும் அறிவுறுத்தல்களும் வழங்கப்படுமெனவும் அதற்கமைவாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் குறித்த பள்ளிவாயல் நிர்வாகம் செயற்படுவதற்கு வழிகாட்டல்களினை வழங்குமெனவும் அறிவித்திருந்தது.
அதற்கமைவாக பள்ளிவாயல் நிர்வாகத்தினை தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கான உதவி ஒத்தாசைகளினை சம்மேளனம் வழங்குவதென 2025.08.24ஆம் திகதிய சம்மேளன நிர்வாக சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இதற்கு மேலதிகமாக மேற்படி விடயம் தொடர்பாக நிருவாகிகளுக்கிடையே சுமுகமானதொரு நிலையினை ஏற்படுத்தும் முகமாக காத்தான்குடி பிரதேச செயலாளருக்கு 2025.09.08ஆம் திகதிய கடிதமொன்று அனுப்பப்பட்டதுடன் இது விடயமாக அவருடன் நேரடி கலந்துரையாடலொன்றும் கடந்த 2025.09.11ஆம் திகதி அவர்களது உத்தியோகபுஸ்ரீர்வ அலுவலகத்தில் இடம்பெற்றிருந்ததுடன், மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாக சபையையும் சம்மேளனத்தினையும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையினையும் அழைத்து தங்களின் தலைமையில் ஓர் சுமுகமான கலந்துரையாடல் ஒன்று நடாத்தி இதனை தீர்த்து வைக்குமாறு சம்மேளனத்தினால் கோரிக்கையும் விடப்பட்டது.
இந்நிலையில், காத்தான்குடி – 01, மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் கடிதத் தலைப்பில் 19.08.2025ஆம் திகதியிடப்பட்ட காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கான இம்முறைக்கான தலைவர் தொடர்பாக எனத் தலைப்பிடப்பட்டு தலைவர், செயலாளர் பதவி நிலை இடப்படாத நிலையில் நான்கு பேரின் கையொப்பத்துடன் மாத்திரம் அனுப்பப்பட்டிருந்த கடிதமானது கடந்த 06.09.2025ஆம் திகதி எமக்கு கிடைக்கப்பெற்றிருந்தது.
மேற்படி கடிதமானது கடந்த 07.09.2025ஆம் திகதிய சம்மேளன நிர்வாக சபைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டதுடன், சம்மேளனத்தின் நடைமுறைகள் தொடர்பான யாப்பின் பிரகாரம் அத்தியாயம் 5 வாசகம் 15 (அ) தலைவர் பதவி ஏ இன் பிரகாரம் 'தலைமைத்துவத்தை ஏற்பதற்கு குறித்த ஜும்ஆப் பள்ளிவாயல் பிரதம நம்பிக்கையாளர் மறுக்குமிடத்து குறித்த ஜும்ஆப் பள்ளிவாயலின் நிருவாக சபை பெரும்பான்மையாகக் கொண்டு எடுக்கின்ற தீர்மானத்தின் அடிப்படையில் அப்பள்ளிவாயலின் நிருவாக சபை உறுப்பினர்களுல் ஒருவரை எழுத்து மூலம் சம்மேளனத்தின் நிருவாக சபையின் தலைவர் பதவிக்கு பெயர் குறித்து அறிவித்தால் அத்தகைய நம்பிக்கையாளரை சம்மேளனத்தின் தலைவராக நியமித்தல் வேண்டும்' எனும் விதிக்கமைவாக தலைவர் நியமிக்கப்படுதல் வேண்டும்.
அந்தவகையில், மேற்படி அனுப்பப்பட்ட கடிதத்தில் சம்மேளன தலைவருக்கான நியமனத்தின் போது சம்மேளனத்தின் நடைமுறைகள் தொடர்பான சம்மேளனத்தின் மேற்படி யாப்பு விதிகள் பின்பற்றப்படாமையினை சுட்டிக்காட்டி குறித்த கடிதத்தினை பரிசீலிக்க முடியாதுள்ளதுடன், தங்களினால் நியமிக்கப்படும் தலைவரினை மேற்படி சம்மேளன யாப்பு விதிகளினைப் பின்பற்றி அதனடிப்படையில் தெரிவு செய்து அனுப்பி வைக்குமாறு கோரி கடந்த 13.09.2025ஆம் திகதிய கடிதம் மூலம் பதில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந் நிலையில் சமூகக் கட்டமைப்பினை சீர்குலைக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகள் சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்பட்டிருந்ததுடன், மேற்படி சம்மேளனத்தின் நடைமுறைகள் தொடர்பான சம்மேளன யாப்பு விதிகள் பின்பற்றப்படாமல் இருந்த காரணத்தினால் மேற்படி சம்மேளன யாப்பு விதிகளுக்கமைவாக அனைத்து நிருவாகிகளும் ஒன்று சேர்ந்து பெயர் குறித்து ஏகோபித்த தீர்மானத்தின் அடிப்படையில் ஒருவரை அனுப்புமாறு ஆலோசகைன வழங்கப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டிருந்ததுடன், மேற்படி யாப்பு விதிகளுக்கமைவாக ஒருவரை யெயர் குறித்து அனுப்பும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொண்டு செயற்படுத்த சம்மேளனம் தயாரகவுள்ளது.
எனவே இது விடயமாக மேற்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதனை தெளிவுபடுத்துவதுடன், இதற்கு புறம்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும்/வெளியிடப்படும் செய்திகளிலும் கருத்துக்களிலும் உண்மை இல்லையென்பதுடன்;, எமதூரிலுள்ள அனைத்து பள்ளிவாயல்களும் நிறுவனங்களும் சம்மேளனத்தின் வழிகாட்டல்களிலேயே இயங்கி வருகின்றது என்பதை இத்தால் பொறுப்புடன் அறியத்தருகின்றோம்.
நன்றி.
இவ்வண்ணம்,
பதில் தலைவர்/ பொதுச் செயலாளர்,
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,
காத்தான்குடி.
2025.09.15