Abdur Rahman

Abdur Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdur Rahman, News & Media Website, Batticaloa kattankudy, Kattankudi.

23/05/2025
22/05/2025
“Connect – 2025 Youth Clubs’’ පිහිටුවීම පිළිබඳ  තරුණ සේවා සභාවේ සභා අධ්‍යක්ෂිකා නීතිඥ ජනහා සෙල්වරාජ් මෙනවිය සහභාගී වන"වන...
22/05/2025

“Connect – 2025 Youth Clubs’’ පිහිටුවීම පිළිබඳ තරුණ සේවා සභාවේ සභා අධ්‍යක්ෂිකා නීතිඥ ජනහා සෙල්වරාජ් මෙනවිය සහභාගී වන"වනක්කම් නේත්‍රා "වැඩඩටහන හෙට පෙ:ව 10.00 ට නේතා රූපවාහිනී නාලිකාවේ විකාශය වේ.
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர் கழக மீளுருவாக்கம் தொடர்பான தெளிவுப்படுத்தல்களுடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மன்ற பணிப்பாளர் ஜனா செல்வராஜ் அவர்கள்.
2025.05.23 மு. ப 10.00மணிக்கு தேசிய தொலைக்காட்சியின் வணக்கம் நேத்ரா நிகழ்ச்சி வாயிலாக..

A media awareness meeting about the youth club which is being built at the village service level across the country was ...
22/05/2025

A media awareness meeting about the youth club which is being built at the village service level across the country was held today under the leadership of Deputy Minister of Youth Affairs Mr. Eranga Gunasekara ....!

Mr. Supun Wijerathne, Chairman of Youth Service Council and Mrs. Janaha Selvaraj, Speaker of Open University were also joined in this press conference...!

காத்தான்குடி வட்டார எல்லைகள்...
05/05/2025

காத்தான்குடி வட்டார எல்லைகள்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழாமாளிகைக்காடு செய்தியாளர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்...
04/05/2025

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா

மாளிகைக்காடு செய்தியாளர்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா, இன்று சனிக்கிழமை (03) பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் பதில் உபவேந்தர் யூ.எல்.மஜீத் தலைமையில் சனி, மற்றும் ஞாயிர் இரு தினங்களாக நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் ஆறு அமர்வுகளில் 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

முதலாம் நாள் முதல் அமர்வில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி யசந்த கொடகொட பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இரண்டாம் அமர்வில் களனி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் கலாநிதி சீதா.பி. பண்டாரவும் மூன்றாவது அமர்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய நாட்டின் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானியும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இன்றைய முதல்நாளில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் 172 மாணவர்களும் பொறியியல் பீடத்திலிருந்து 82 மாணவர்களும் தொழினுட்பவியல் பீடத்திலிருந்து 102 மாணவர்களும் கலை கலாச்சார பீடத்திலிருந்து 314 மாணவர்களும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்திலிருந்து 342 மாணவர்களும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

நாளை இரண்டாம் நாள் முதல் அமர்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத்தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே.எல் வசந்த குமாரவும் இரண்டாம் அமர்வில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ துறையின் பேராசிரியர் கலாநிதி மனோஜ் சமரதுங்கவும் மூன்றாவது அமர்வில் யாழ் பலகலைக்கழகத்தின் பட்டப்படிப்பு பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் ரீ. வேல்நம்பியும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்திலிருந்து 378 மாணவர்களும் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்கள் (FAC & FMC) 687 மாணவர்களுமாக 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளதாக பதில் பதிவாளர் எம்.ஐ. நெளபர் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர் இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழுவினால் நடாத்தப்படும் தேசிய புத்தாக்குநர் கண்காட்சி மற்ற...
24/04/2025

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர் இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழுவினால் நடாத்தப்படும் தேசிய புத்தாக்குநர் கண்காட்சி மற்றும் போட்டி நிகழ்ச்சிக்கு தெரிவு..

இலங்கை புத்தாக்குநர் ஆணைக்குழுவினால் வருடம் தோறும் நடத்தப்படும் "சஹசக் நிமவும்" தேசிய மட்டத்திலான புத்தாக்குநர்களை தெரிவு செய்கின்ற போட்டி நிகழ்ச்சியில் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட எமது மாணவர் முஹம்மத் ரிபாய் முஹம்மத் அர்கம் எதிர்வரும் 25 தொடக்கம் 27 வரை கொழும்பு BMICH இல் நடைபெறவுள்ள தேசிய மட்டத்திலான புத்தாக்குநர்களை தெரிவு செய்கின்ற கண்காட்சி மற்றும் போட்டி தொடரில் பங்கு பங்குபற்றுவதற்காக இன்று (23.04.2025) கொழும்பு நோக்கி புறப்பட்டு செல்கின்றார்.

அவரை கல்லூரியின் அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள் கல்லூரியின் புத்தாக்குநர் கழக பொறுப்பாசிரியர்கள் வாழ்த்தி வழியனுப்பினர்,

மேற்படி தேசிய மட்ட போட்டியில் அம்மாணவர் வெற்றி பெற பிரார்த்திப்போம்.

🔴 2 நாள் பயணமாக இந்தியா  சென்றுள்ள துபாய் இளவரசர் பிரதமர் மோடியுடன் சந்திப்புமேலதிக விபரம் 1ஆவது கொமண்டில்....          ...
09/04/2025

🔴 2 நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள துபாய் இளவரசர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

மேலதிக விபரம் 1ஆவது கொமண்டில்....

Thinakaran

 வர்த்தக கண்காட்சியும் விற்பனைச் சந்தையும்- 2025 காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி  பிரிவு மற்றும் ச...
09/04/2025



வர்த்தக கண்காட்சியும் விற்பனைச் சந்தையும்- 2025

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி பிரிவு மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும் இணைந்து நடத்தும் சிறு சந்தை (SED Mini Fair ) மற்றும் சமுர்த்தி அபிமானி வர்த்தக கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் நிகழ்வு (08) திகதி பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் அவர்களின் தலைமையில் பிரதேச செயலகம் முன்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். தனுஜா, நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எம்.ரஊப், மற்றும் சமுர்த்தி தலைமை முகாமையாளர் பத்மா ஜெயராஜ், சமுர்த்தி முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக் கண்காட்சியின் போது சிறு தொழில் முயற்சியாளர்களின் ஆடைகள், பாதணிகள், இனிப்புப்பண்டங்கள், மற்றும் மரக்கறிகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Address

Batticaloa Kattankudy
Kattankudi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share