Kattankudy

Kattankudy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kattankudy, Digital creator, Fowzi mawatha, Kattankudi.

சிலர் உங்களை
மட்டம் தட்டுவார்
நீங்கள் உயர்ந்தபின்
அவர்களே கையும் தட்டுவார்
நீங்கள் உங்கள் பாதையில்
போய்க்கொண்டேயிருங்கள்
விமர்சிப்போரை விட்டுவிடுங்கள்
ஏனெனில் அவர்களுக்குப் பாதை
என்பதே கிடையாது

ஓட்டமாவடி மாணவி அமானாவின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உதவுங்கள்ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் க.பொ.த...
08/08/2025

ஓட்டமாவடி மாணவி அமானாவின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உதவுங்கள்

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்று வரும் ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த பாத்திமா அமானா எனும் மாணவியின் இரண்டு சிறு நீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உடனடியாக மாற்று சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் கஸ்ட நிலையில் தங்களது வாழ்க்கையை நடாத்தி வரும் அந்த குடும்பத்தார் பெரும் தொகைப் பணத்தை திரட்டிக் கொள்வதில் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, நல்லுள்ளம் கொண்ட அனைவரும் மாணவியின் நலன் கருதி உங்களால் முடிந்த பணவுதவிகளை வாரி வழங்குங்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்வையும், அபிவிருத்தியையும் வழங்குவானாக.

தொடர்புகளுக்கு

கணக்கு இலக்கம்:
340200100038000 (மக்கள் வங்கி) ஓட்டமாவடி.
தொலைபேசி
0758994726
சித்தி ஸாபிரா (தாய்)
https://whatsapp.com/channel/0029Vb5rN0YL7UVa3hxQsa1H

🔴  #மூதூர் கோர விபத்தில் தோப்பூரைச் சேர்ந்த முஹம்மது ஜெம்சித் உயிரிழப்பு!இன்று அதிகாலை மூதூர் பிரதேசத்தில் ஏற்ப்பட்ட பார...
08/08/2025

🔴 #மூதூர் கோர விபத்தில் தோப்பூரைச்
சேர்ந்த முஹம்மது ஜெம்சித் உயிரிழப்பு!

இன்று அதிகாலை மூதூர் பிரதேசத்தில் ஏற்ப்பட்ட பாரிய விபத்தில் படுகாயமடைந்த தோப்பூர் அல்லை நகரைச் சேர்ந்த முகமது ஜெம்சித் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் ஹினாயதுல்லா (மு. தாதி. உத்) - காசறா (ஓ.ஆசிரியை) ஆகியோரின் புதல்வராவார்

விபத்தில் படுகாயமடைந்த
மற்றொரு இளைஞரான சிஹான்
என்பவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது திருகோணமலையில் இருந்து தோப்பூர் நோக்கி வந்த டிப்பர்
ரக லாரியுடன் தோப்பூரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த
காரும் மூதூர் பச்சநூர் சந்தியில்
வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
https://whatsapp.com/channel/0029Vb5rN0YL7UVa3hxQsa1H

🔵 ஓட்டமாவடி -பொத்தானைச் சந்தியில் விபத்து; இளம் குடும்பஸ்தர் வபாத்✍️ எச்.எம்.எம்.பர்ஸான்உழவு இயந்திரம் - மோட்டார் சைக்கி...
07/08/2025

🔵 ஓட்டமாவடி -பொத்தானைச் சந்தியில் விபத்து; இளம் குடும்பஸ்தர் வபாத்

✍️ எச்.எம்.எம்.பர்ஸான்

உழவு இயந்திரம் - மோட்டார் சைக்கிள் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (7) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - கொழும்பு வீதி, பொத்தானை சந்தியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

வேளாண்மை அறுவடை செய்யும் உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற காவத்தமுனை பனிச்சையடி வீதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் அச்சி முகம்மட் பரீட் என்பவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.

அவருடன் பயணித்த காவத்தமுனையை பிறப்பிடமாகவும், பிறைந்துரைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட அசனார் முகம்மட் நிப்ராஸ் என்பர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரணமடைந்த நபரின் ஜனாஸா பரிசோதனை நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
https://whatsapp.com/channel/0029Vb5rN0YL7UVa3hxQsa1H

அஸ்ஸலாமு அலைக்கும் பிறந்து 4 மதங்களை தாண்டியதும் தெலசீமிய நோயினால் இந்த குழந்தை ( அலீனா ) கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது ...
06/08/2025

அஸ்ஸலாமு அலைக்கும்

பிறந்து 4 மதங்களை தாண்டியதும் தெலசீமிய நோயினால் இந்த குழந்தை ( அலீனா ) கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது

நடுத்தர மக்கள் இவர்களால் ஒரு கோடி நாற்பது இலட்சம் சேர்ப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்

Alhamdulillah இப்பொழுது 2,300,000.00 வரை சேர்ந்து இருக்கிறது

நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள்
இன்ஷாஅல்லாஹ் எல்லோரும் முயற்சி செய்தால் இந்த குழந்தையை காப்பாற்ற முடியும்

All details including in the document

உதவ முடியாதவர் இந்த பதிவை ஷேர் செய்யவும் in Sha Allah உதவ கூடியவர் பார்க்க கூடும்

Account details Mohamed Niswar Fathima Ashra Account no -8023162910
Commercial Bank Katukasthota
Sri Lanka Contact number- +94 74 220 2341 +94 77 128 5451

https://whatsapp.com/channel/0029Vb5rN0YL7UVa3hxQsa1H

05/08/2025
05/08/2025

Follow the Kattankudy channel on WhatsApp:

டெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில்...  தரம் 5 புலமைப்பரிசில் இலவச இறுதிக் கருத்தரங்கு...அனுசரணை அஷ்ஷெய்க் முனீர் சாத...
04/08/2025

டெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில்... தரம் 5 புலமைப்பரிசில் இலவச இறுதிக் கருத்தரங்கு...

அனுசரணை அஷ்ஷெய்க் முனீர் சாதிக் (காஷிபி) தலைவர் பள்ளிவாயல்கள் சம்மேளனம் தெல்தோட்டை உறுப்பினர் பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை...

Deltota Alert - தெல்தோட்டை

Address

Fowzi Mawatha
Kattankudi
30100

Alerts

Be the first to know and let us send you an email when Kattankudy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share