Riyas Multi Talks

Riyas Multi Talks Art activities

*காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு மாத்திரமின்றி காத்த நகரின் கல்வி வளர்ச்சியில் கலைப்பிரிவில் அசைக்க முடியாத ஆ...
02/02/2026

*காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு மாத்திரமின்றி காத்த நகரின் கல்வி வளர்ச்சியில் கலைப்பிரிவில் அசைக்க முடியாத ஆளுமைகளில் ஒருவர்– ஆசிரியர் M. H.A.றசூல் M.A. அவர்கள் இன்றுடன் ஓய்வு பெறுகின்றார்.*

பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் விசேட துறையில் சிறப்பு பட்டம் பெற்று இலங்கை ஆசிரியர் சேவையில் 06.10.1994 ல் இணைந்து கொண்ட எமது ஆசிரியர் காத்தான்குடி மத்திய கல்லூரியில் கலைப் பிரிவு, தொழில்நுட்பவியல் பிரிவு உட்பட உயர்தர பிரிவின் வளர்ச்சியில் சுமார் 20 வருட காலம் பங்காற்றியிருந்தார். பின்னர் பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று அங்கு பணியாற்றிய பின்னர் 04.01.2021 ல் எமது மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றார். எமது பாடசாலையின் கலைப் பிரிவின் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார்.

எமது ஊரின் கல்வி வளர்ச்சியில் எமது ஆசிரியரின் கற்பித்தல் மற்றும் வழிகாட்டுதலில் பல நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக் கல்லூரிகளில் பட்டம் பெற்று சட்டத்தரணிகளாகவும் கல்வி நிர்வாகிகளாகவும் அதிபர்களாகவும்ஆசியர்களாகவும்மற்றும் முகாமையாளர்களாகவும் கடமையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது ஊரின் கல்விவளர்ச்சியில் இலைமறை காயாக பல அதிபர்களின் வெற்றிச் செயற்பாடுகளுக்கு பங்காற்றியவர் எமது ஆசான் என்றால் அது மிகையாகாது.

ஒழுக்கம் பண்பாடு விழுமியங்கள் பற்றி போதிப்பதும் மாணவர்களை வழிப்படுத்துவதும் அவரின் சிறப்பம்சமாகும்.

கல்வி ,அரசியல் மற்றும் சமூகப் பற்றிய தெளிவான பார்வை அவருக்கே உரியதாகும்

இன்று எமது ஆசிரியர் ஓய்வு பெறுவதை முன்னிட்டு மீரா பாலிகா தேசிய பாடசாலையில் திங்கள் காலை ஒன்று கூடலின் போது வாசிப்பின் முக்கியத்துவம் தொடர்பாக விசேட உரை ஒன்றை நடாத்தியதுடன் அதிபர் ஆசிரியர்கள் மாணவிகள் பாடசாலை கல்வி அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து எமது ஆசிரியருக்கு விசேட கெளரவம் வழங்கினர்.

*APM. Jalaaldeen BBA*
*Assistant Principal,*
*BT/BC/MEERA BALIKA NATIONAL SCHOOL*
*Kattankudy*

02/02/2026

தனது 08 வது நகர சபை அமர்வுக்கான கொடுப்பணவும் தனது தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதி போன்று பொதுமக்களுக்காகவே வழங்கி வைப்பு!

இன்று (29.01.2026)எமது நகர சபை உறுப்பினர் MFM.கலீல்பாரி தலைமையிலான குழுவினர் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் எமது குழுவின் உயர் பீட உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவருக்கான பாடசாலை சென்று வருவதற்கு மிக நீண்ட நாள் தேவையாக காணப்பட்ட துவிச்சக்கர வண்டி ஒன்று இன்று கௌரவ நகர சபை உறுப்பினர் MFM . கலீல் பாரி தலைமையிலான எமது அணியின் உயர் பீட உறுப்பினர்களின் பங்களிப்போடு இன்று அம் மாணவனுக்கு நேரில் கையளித்து வைக்கப்பட்டது.

இவ்வாறான பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வாறான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்ல எம் அனைவருக்கும் வல்ல இறைவன் அருள் புரிந்துடுவானாக, ஆமீன்...

அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே!எனது இந்த முகநூல் பக்கத்தில் அதிகம் காணொளிகளை பதிவேற்றம் செய்ய உள்ளேன்.இந்தப் பக்கத்தை தொடருங...
26/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே!
எனது இந்த முகநூல் பக்கத்தில் அதிகம் காணொளிகளை பதிவேற்றம் செய்ய உள்ளேன்.

இந்தப் பக்கத்தை தொடருங்கள்..
பதிவுகளைப் பகிருங்கள்..
ஆதரவு தாருங்கள்..

26/01/2026

அழிந்து போகக்கூடிய இந்த அற்ப உலகில் எதுவுமே நிரந்தமில்லை என்பதை கடந்த வருட டித்வாப் புயல் எமக்கு ஞாபகப்படுத்திச் சென்றது.

எனவே வாழும் வாழ்க்கை மிகக்குறுகியது. ஆதலால் அடுத்தவனுக்கு அநியாயம் செய்யாமல், அடுத்தவனின் மானத்தில் கைவைக்காமல், அடுத்தவனின் சொத்தை ஆட்டயப் போடாமல், கடும் சொற்களால் வசைபாடாமல் அன்பாகவும், பண்பாகவும் இனிய முறையில் பேசி பணிவோடு நடப்போம். எம்வாழ்வில் வசந்தம் எம்மைத் தேடி வரும்.

25/01/2026

Good Afternoon All.. This is my new page. Warmly well come to my page.
Please flow my page and like share my all posts.
Thanking you,
Riyas Muhammad

Art activities

Address

Kattankudi/01
Kattankudi
30100

Alerts

Be the first to know and let us send you an email when Riyas Multi Talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share