08/05/2024
சமீபத்தில் நான் கண்ட புகைப்படம்.
தாய் உணவைக் கொண்டு வருவார் என்று காத்திருந்து, இறந்துபோன குஞ்சுகளின் பரிதாப நிலை இது. இதற்கான காரணம், உணவைத் தேடிச்சென்ற தாய், யாரோ ஒருவரால் கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட அல்லது காயப்பட்ட அந்த தாய் பறவையைப் போல், பலர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்.
# ஒவ்வொரு முறையும் நீங்கள் சண்டையிடும்போதும், ஒருவரை காயப்படுத்தும்மோதும், அவரைச் சார்ந்தவர்களையும் பாதிப்படையச் செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
# என்றைக்குமே, ஒருவருடைய வலிக்கு காரணம் ஆகாதீர்கள்.
# ஒருவரின் எண்ணங்களை நீங்கள் ஏற்கவில்லை என்பதற்காக, அவருடையக் கனவைக் கொல்லாதீர்கள்.
# அடுத்தவரின் வாழ்வாதாரம் மற்றும் குடும்பச் சூழலைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலேயே, தினமும் பலரைக் காயப்படுத்துகிறோம்.
# வார்த்தைகளுக்குச் சக்தி உண்டு, உங்கள் பேச்சு, அடுத்தவருக்கு வாழ்வையும் தரலாம், மரணத்தையும் தரலாம்.
# ஒருவரைத் தாழ்த்திப் பேசுவதற்குப் பதிலாக, ஊக்கமளிக்கும் வார்த்தைகளால் அவர்களை ஆதரியுங்கள். இறுதியில் அவர்களுடைய தீர்மானத்தின்படியே, அவர்களுடைய விதி வடிவமைக்கப்படுகிறது.
# ஒருவர் தன் கனவுகளை விட்டு விலக, நீங்கள் ஒருபோதும் காரணமாக இருக்க வேண்டாம்!