National Tamil News

National Tamil News உறுதிப்படுத்தப்பட்ட உண்மை செய்திகள்

பாகிஸ்தானுக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் இந்திய வான் பரப்பிற்குள் நுழையத் தடை !பாகிஸ்தானுக்கு சொந்தமான மற்றும் பாகிஸ...
01/05/2025

பாகிஸ்தானுக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் இந்திய வான் பரப்பிற்குள் நுழையத் தடை !

பாகிஸ்தானுக்கு சொந்தமான மற்றும் பாகிஸ்தான் நிறுவனங்களால் இயக்கப்படும் அனைத்து விமானங்களும் தனது வான் பரப்பிற்குள் நுழைய இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய நடவடிக்கையாக பாகிஸ்தான் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வழியை மூடியது.

பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட விமானங்களுக்கும், பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் இயக்கப்படும், சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்களுக்கும் இந்திய வான்வெளி மூடப்பட்டுள்ளது. இந்தத் தடை பாகிஸ்தான் இராணுவ விமானங்களுக்கும் பொருந்தும்.

இந்தியா - பாகிஸ்தானிடையே நேரடி விமான சேவைகள் இல்லை. சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளுக்கான விமானங்களுக்கு பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

தலைமைப்பீட அறிக்கை வெளியானது
05/09/2024

தலைமைப்பீட அறிக்கை வெளியானது

17/10/2023
17/10/2023

பிரித்தானிய தொலைக்காட்சியான செனல் 4 ஒளிபரப்பிய காணொளிக் கா

17/10/2023

இலங்கை செய்திகள் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் புதிய புத்தர் சிலை ! By AJANTHI - October 17, 2023 Facebook Twitter WhatsApp Linkedin Email ம....

17/10/2023

பிரதான செய்திகள் நேரத்தை நியாயமாக பகிர்ந்தளியுங்கள் : சபாநாயகரிடம் மைத்திரிபால கோரிக்கை! By AJANTHI - October 17, 2023 Facebook Twitter WhatsApp...

17/10/2023

பிரதான செய்திகள் சகல எதிர்க்கட்சிகளும் பொதுக்கொள்கையுடன் ஒன்றிணைய வேண்டும் – ஜி.எல் பீரிஸ் அறைகூவல் By AJANTHI - October 17,...

🔴இலங்கையில் பெண் ஒருவர் ஆறு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.ராகம பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொழும்பு காசல் வீதி பெண்க...
17/10/2023

🔴இலங்கையில் பெண் ஒருவர் ஆறு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

ராகம பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொழும்பு காசல் வீதி பெண்கள் மருத்துவமனையில் இன்று ( 17 ) இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா தெரிவித்துள்ளார்.ஆறு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்.

🔴பிரதி அதிபரால் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்-காலியில்!5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த...
17/10/2023

🔴பிரதி அதிபரால் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்-காலியில்!
5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் படி, பொலிஸார் பிரதி அதிபரை கைது செய்துள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி குறித்த பாடசாலையில் சந்தேகத்திற்குரிய பிரதி அதிபரால் மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று (16) கராப்பிட்டிய சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறுமியை ஆஜர்படுத்திய பின்னர் சந்தேகத்திற்குரிய பிரதி அதிபர் ஹபராதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

59 வயதான சந்தேகநபரான பிரதி அதிபர் காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் -இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் 41 நாடுகளை சேர்ந்த 105 பேர் உயிரிழப்பு
16/10/2023

இஸ்ரேல்-ஹமாஸ் போர் -இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் 41 நாடுகளை சேர்ந்த 105 பேர் உயிரிழப்பு

🔴மான்கொம்பு மற்றும் வெடிபொருட்களுடன் இருவர்கைது!அம்பாறை மாவட்டம் தமண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மிருக வேட்டையில்...
16/10/2023

🔴மான்கொம்பு மற்றும் வெடிபொருட்களுடன் இருவர்கைது!

அம்பாறை மாவட்டம் தமண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மிருக வேட்டையில் ஈடுபடுவதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுகமைய இன்று மாவட்ட பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இரு மான் கொம்புகள் உள்ளடங்களாக துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மாவட்ட பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வசம் இருந்து இரு மான் கொம்புகள், ரி 56 ரக துப்பாக்கி ரவைகள் -19 , எல்.எம்.ஜி ரக தோட்டாக்கள் - 03 , எம்.16 ரக தோட்டாக்கள் - 48 உள்ளிட்ட வெடி பொருட்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களிடம் தற்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் மாவட்ட பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

16/10/2023

விளையாட்டு அவுஸ்திரேலியாவை விட சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையில் இலங்கை – புதிய அணித் தலைவர் குசல.....

Address

Kilinochchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when National Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to National Tamil News:

Share