Bingo International Media Network

Bingo International Media Network Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bingo International Media Network, News & Media Website, Wanguwakada, Madawala bazaar, Kandy, Madawala.

க.பொ.த . சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம்!2024 ஆம் ஆண்டுக்கான கல்விபொதுதராதரப்பத்திர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவு...
17/03/2025

க.பொ.த . சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விபொதுதராதரப்பத்திர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது.

குறித்த பரீட்சைக்காக 4 இலட்சத்து 74, 147 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், 3, 663 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 3 இலட்சத்து 98, 182 பேர் பாடசாலை பரீட்சாத்திகள் எனவும், 75, 965 பேர் தனியார் பரீட்சார்த்திகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஏதுவான வகையில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இரத்மலானை, தங்காலை, மாத்தறை மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மெகசின் சிறைச்சாலை மற்றும் வட்டரக்க சுமேதா வித்தியாலயத்தில் சிறைக்கைதிகள் மற்றும் புனர்வாழ்வு பெற்றுவருவோருக்காக பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையிலும் பரீட்சை நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது சீரற்ற காலநிலையினால் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமாயின் அது தொடர்பில் அறிவிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசேட தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளது.

அதன்படி, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் துரித இலக்கமான 117க்கு அல்லது 0113 668 020 அல்லது 0113 668 100 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பரீட்சைகள் தொடர்பில் ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்படுமாயின் பரீட்சார்த்திகள் அது குறித்து 1911 என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் துரித இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறியப்படுத்துமாறும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேநேரம், சகல பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையத்துக்கு உரிய நேரத்துக்கு வருகைத்தர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குக் கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் சென்றிருந்...
17/03/2025

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குக் கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் சென்றிருந்தனர்.

ஒரு வார காலம் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி ஸ்டார்லைனர் விண்கலம் வெறுமையாகப் பூமிக்குத் திரும்பியது.

இந்தநிலையில் கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நாளை (18) பூமிக்குத் திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.

நேற்று அதிகாலை சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷ்ய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்குத் திரும்பவுள்ளனர்.

இந்தநிலையில், நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி விண்வெளி குறித்த விண்வெளி வீரர்கள் அந்நாட்டு நேரப்படி நாளை மாலை 5.57 க்கு ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSI campus  இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  ஊடக கற்கை பாடத்தினை உயர் தரத்தில் கற்கும் மற்றும் கற்கும் நோக்கம் கொண்டவர்களு...
24/02/2025

BSI campus இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடக கற்கை பாடத்தினை உயர் தரத்தில் கற்கும் மற்றும் கற்கும் நோக்கம் கொண்டவர்களுக்கான இலவச ஆன்லைன் (online) வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் புதன்கிழமை 2025.02.25 ஆம் திகதி இரவு 8 .00 மணியளவில் நடைபெற உள்ளது ஆகவே இதில் கலந்து பயன்பெற்றுக்கொள்ளுங்கள்

Zoom link
https://us05web.zoom.us/j/82128478841?pwd=YXolrdGfjL5MuEy997tYbY3qXOMFGt.1

Facebook link

https://www.facebook.com/share/1C4EDsFpuE/

Season ticket வைத்திருப்பவர்களை பேருந்துகளில் ஏற்றி செல்ல மறுப்பது கடுமையான குற்றமாகும்பவபருவகால சீட்டை (Season ticket) ...
19/02/2025

Season ticket வைத்திருப்பவர்களை பேருந்துகளில் ஏற்றி செல்ல மறுப்பது கடுமையான குற்றமாகும்

பவபருவகால சீட்டை (Season ticket) வைத்திருக்கின்ற பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோரை, இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச் செல்வதைக் கட்டாயமாக்கியுள்ளது. யாரேனும் ஊழியர் ஒருவர் இந்த பவபருவகால சீட்டை (Season ticket) வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுத்தால், அது இலங்கைப் போக்குவரத்து சபை கொள்கையின்படி கடுமையான குற்றமாகும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பவபருவகால சீட்டை (Season ticket) வைத்திருப்பவர்கள் அனைவரையும் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவர்களை ஏற்றிச் செல்ல மறுக்கும் பேருந்து ஊழியர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் பருவகால சீட்டை (Season ticket) வைத்திருப்பவர்கள், 1958 என்ற எண்ணை அழைத்து SLTB தகவல் மையத்திற்கு தெரிவிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர் கருத்தரங்கும் கண்காட்சியும்                           கிழக்கு மாகா...
19/02/2025

கிழக்கு மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர் கருத்தரங்கும் கண்காட்சியும்

கிழக்கு மாகாணத்திற்கான தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தர இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் நேற்று (18) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜயசிங்க தலைமையில் கிழக்கு பல்கலைக்கழக Techno Park நிலையத்தில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

இந் நிகழ்விற் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக துறையின் பீடாதிபதி பேராசிரியர் என்.ராஜேஸ்வரன் உள்ளிட்ட ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது தொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதி சந்தையினுல் இணைத்து அவர்களை அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகள், மற்றும் வழிகாட்டுதல்கள் இதன்போது வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை சர்வதேச தரத்தில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு எற்றுமதி செய்து அந்நிய செலாவணியை பெற்றுக் கொள்வதற்கான விழிப்புணர்வுகள் இதன் போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த வருடம் இலங்கையில் இருந்த 12 பில்லியன் அமெரிக் டொலர் பெறுமதியான பொருட்கள் எற்றுமதி செய்யப்பட்ட போதிலும் 19 பில்லியன்

அமெரிக் டொலர் பெறுமதியான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதனால் இந் நிலையை மாற்றுவதற்கான செயற்றிட்டங்கள் மற்றும் முயற்சியாளர்களுக்கான வங்கி கடன்கள் வழங்குதல், குத்தகைக்கு காணி வழங்குதல் போன்ற மேலும் பல விடையங்கள் இதன் போது உயரதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.

அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து ஆரம்ப நிகழ்வாக கண்காட்சியினை பிரதமபிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகள் பார்வையிட்டு, அதனை ஆரம்பித்து வைத்ததனைத் தொடர்ந்து, அதிதிகள் உரை மற்றும் தெளிவு படுத்தல்கள் என்பன இடம்பெற்றது.

உணவு வகைகளின் விலையை திடீரென அதிகரிப்போர் மீது சட்ட நடவடிக்கை!உணவு வகைகளின் விலையை திடீரென அதிகரிக்குமாறு கோருகின்ற சங்க...
19/02/2025

உணவு வகைகளின் விலையை திடீரென அதிகரிப்போர் மீது சட்ட நடவடிக்கை!

உணவு வகைகளின் விலையை திடீரென அதிகரிக்குமாறு கோருகின்ற சங்கங்களின் சட்டத் தன்மை தொடர்பில் ஆராயப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போது பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும் திடீரென உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த முறை அரசாங்கம் சமர்ப்பித்துள்ள பாதீட்டில் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கப்படாமையினால் தேநீர், பால் தேநீர் உள்ளிட்டவற்றின் விலையை அதிகரிப்பதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த உணவு வகைகளின் விலையை அதிகரிப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

உப்பு, தேங்காய், முட்டை, கோழி இறைச்சி உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் தங்களது தொழிற்துறை வெகுவாக பாதிப்படைவதாகவும் அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

பொதுவான வானிலை முன்னறிவிப்புஇலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பி...
19/02/2025

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

2025 பெப்ரவரி 19 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2025 பெப்ரவரி 19 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பிற்பகலில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அம்பாறை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேலைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி நாளை!இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆ...
13/02/2025

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி நாளை!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது.

கொழும்பு ஆர் பிரேமதாதச விளையாட்டரங்கில் இந்தப் போட்டி நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகிறது.

நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 49 ஓட்டங்களினால் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

எல்ல வனப்பகுதியில் தீப்பரவல்!பதுளை எல்ல பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள எல்ல வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்...
13/02/2025

எல்ல வனப்பகுதியில் தீப்பரவல்!

பதுளை எல்ல பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள எல்ல வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட பகுதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும், தீயை அணைக்க மேற்கொள்ளப்பட்டு முயற்சிகள் வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அறுவைச் சிகிச்சைக்குப் பின் நோயாளியின் உடலில் ஊசி - அகற்ற முடியாது என்கிறது சீன வைத்தியசாலை!சீனாவில் அன்ஹுய் மாநிலத்தைச்...
13/02/2025

அறுவைச் சிகிச்சைக்குப் பின் நோயாளியின் உடலில் ஊசி - அகற்ற முடியாது என்கிறது சீன வைத்தியசாலை!

சீனாவில் அன்ஹுய் மாநிலத்தைச் சேர்ந்த 59 வயது ஆண் ஒருவருக்குக் கல்லீரல் புற்றுநோய் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடலில் ஊசி ஒன்று சிக்கியிருப்பதாக மருத்துவமனை அவரின் குடும்பத்திடம் தெரிவித்தது.

இதையடுத்து அந்த நபரை அவரது மகள் மற்றொரு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார்.

அவரின் உடலில் 11 மில்லிமீட்டர் நீளமும் 3 மில்லிமீட்டர் அகலமும் கொண்ட ஊசி வலப்பக்கக் கல்லீரல் பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை அகற்றக் குடும்பத்தார் மருத்துவமனையிடம் கேட்டுள்ளனர்.

ஆனால் மீண்டுமோர் அறுவைச் சிகிச்சை செய்வது ஆபத்தானது என்றுகூறி மருத்துவமனை மறுத்துவிட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்த நபரின் குடும்பத்துக்கும் மருத்துவமனைக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்க...
31/01/2025

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

பி.சி.சி.ஐயினால் இந்த விருது வழங்கப்படவுள்ளதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்காக 664 சர்வதேச போட்டிகளில் விளையாடிய டெண்டுல்கர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.

அத்தோடு ஒருநாள் போட்டிகளில் 18,426 ஓட்டங்களையும், டெஸ்ட் போட்டிகளில் 15,921 ஓட்டங்களையும் அவர் குவித்துள்ளார்.

இருப்பினும் அவர் தனது கிரிக்கெட் வாழ்வில் ஒரே ஒரு இருபதுக்கு 20 போட்டியில் மட்டுமே விளையாடினார்.

மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரரும் ஆவார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக இரட்டை சதங்களைப் பெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் ஆவார்

சச்சின் டெண்டுல்கருக்கு 2013ஆம் ஆண்டு இந்தியாவில் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இதன்மூலம் மிக இளம் வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப் பெறும் முதல் வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.

மேலும் 1994 ஆம் ஆண்டில் அருச்சுனா விருதையும் 1997 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும், 1999 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 2008 ஆம் ஆண்டு பத்ம விபூசண் விருதினைப் பெற்றார்

இந்நிலையில் பி.சி.சி.ஐ சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்குவதாக அறிவித்துள்ளது.

பி.சி.சி.ஐயினால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதை இதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டில், முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் விக்கெட் கீப்பிங் ஜாம்பவான் ஃபரூக் இன்ஜினியர் ஆகியோருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்குள் வளரும் கரு!இந்தியாவின் மகாராஷ்டிராவில் கர்ப்பிணிப் பெண்ணின் கருவில் கர...
29/01/2025

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்குள் வளரும் கரு!

இந்தியாவின் மகாராஷ்டிராவில் கர்ப்பிணிப் பெண்ணின் கருவில் கரு வளர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய அரிதான மருத்துவ நிலை கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் புல்தானா மாவட்டத்தின் அரசு பெண்கள் வைத்தியசாலையில் 35 வார [9 மாத] கர்ப்பிணியான 32 வயது பெண் ஒருவருக்கு சோனோகிராபி(scan) செய்தபோது அவரின் 'கருவில் கரு' [Foetus inside foetus] வளருவது கண்டறியப்பட்டது.

இது ஒரு மிகவும் அரிதான மருத்துவ நிலையாகப் பார்க்கப்படுகிறது, இதுபோன்ற ஒரு நிலை 5 இலட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே நிகழ்கிறது.

இதுகுறித்து அந்த வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவர் கூறுகையில்,

ஆரம்பத்தில் நான் ஆச்சரியமடைந்தேன், பின்னர், ஸ்கேனின் மறுபரிசீலனையின் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டது.

குழந்தை பிறந்த பிறகே இந்த நிலை பெரும்பாலும் கண்டறியப்படுவது வழக்கம்.

ஆனால், இப்பெண்ணுக்குப் பிரசவத்துக்கு முன்பே இது கண்டறியப்பட்டது.

இந்த நிலைக்கான சரியான காரணம் முழுமையாக அறியப்படவில்லை.

இருப்பினும், இது இரட்டையர்களின் வளர்ச்சியின் போது நிகழும் ஒழுங்கின்மையின் விளைவு என நம்பப்படுகிறது.

இந்த பெண் தற்போது பாதுகாப்பான பிரசவத்திற்காக சத்திரப்பதி சம்பாஜி நகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Address

Wanguwakada, Madawala Bazaar, Kandy
Madawala
20260

Telephone

+94755579997

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bingo International Media Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bingo International Media Network:

Share