Madawala Sun News

Madawala Sun News எமது உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை”
0774114074 0756916161

🔹 மனிதாபிமான பணிகளும், கல்விச் சேவைகளும் செய்துவரும் சட்டத்தரணி முஜீப் அமீன்..!கிழக்கு மாகாணத்தில் சமூக நலனுக்காகவும் , ...
07/07/2025

🔹 மனிதாபிமான பணிகளும், கல்விச் சேவைகளும் செய்துவரும் சட்டத்தரணி முஜீப் அமீன்..!

கிழக்கு மாகாணத்தில் சமூக நலனுக்காகவும் , கல்வி வளர்ச்சிக்காகவும் ஆர்வத்துடனும் பாடுபட்டு வருகின்றவர் சட்டத்தரணி முஜீப் அமீன். இவரைப் பற்றி பலர் “அவர் ஒரு அரசியல்வாதி” என்ற அளவில் மட்டுமே அறிந்து இருக்கலாம். ஆனால், உண்மையில் இவரது சேவைபாதை அரசியல் எல்லைகளைக் கடந்தவை.

இவர் கடந்த காலத்தில் கிண்ணியா நகர சபையின் பிரதித் தவிசாளராக பணியாற்றியவர். சமீபத்தில் நடைபெற்ற நகர சபைத் தேர்தலில் பத்துக்கும் குறைவான வாக்குகளால் தோல்வியடைந்தபோதிலும், மனமுடைந்து நின்றுவிடாமல், அதே நாளிலிருந்து தனது சேவையை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

இவரது அண்மைக்கால பணிகளை சுருக்கமாக இப்படி கூறலாம்.

குச்சவெளி அல் நூரியா ஆரம்ப பிரிவு பாடசாலைக்கு ஏற்கனவே 02 வகுப்பறை பாடசாலை கட்டிடம் வழங்கப்பட்டுள்து.

இன்னொரு பாடசாலை கட்டிடமும் அதே பாடசாலையில் கட்டப்பட்டு அதுவும் இம் மாதம் திறக்கப்படவுள்ளது.

முதூர் அல் ஹுசைனியா பாடசாலைக்கு ஏற்கனவே 02 வகுப்பறை கட்டிடம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சகல வசதிகளுடனான IT Centre கட்டப்பட்டு இம்மாதம் திறக்கப்படவுள்ளது.

தோப்பூர் பிரதேசத்தில் அல் சல்மா பாடசாலைக்கும் 02 வகுப்பறை கட்டிடம் கட்டப்படவுள்ளது. தற்போது நாட்டின் பல பாகங்களிலுமிருந்து 200 மாணவர்கள் புலமைப்பரிசில் நிதியுதவி பெறுகிறார்கள்.

அதேபோன்று, அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் தொடர்சிச்சியாக உதவி வருகிறார்.

இவரது பணிகள் தொடர எமது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.

- எஸ். சினீஸ் கான்.

உலகிற்கே முன்னுதாரணமாக திகழும் மன்னர் சல்மானின் மனிதநேயப் பணிகள்..!✍️ எஸ். சினீஸ் கான்சவூதி அரேபியாவின் மன்னரும், இரு பு...
25/06/2025

உலகிற்கே முன்னுதாரணமாக திகழும் மன்னர் சல்மானின் மனிதநேயப் பணிகள்..!

✍️ எஸ். சினீஸ் கான்

சவூதி அரேபியாவின் மன்னரும், இரு புனித தலங்களின் பாதுகாவலராகவும் விளங்கும் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ், உலக நாடுகளுக்கெல்லாம் உதவிக்கரம் நீட்டிவரும் மனிதபிமானம், மனித நேயம், சகோதரத்துவம் மிகுந்த தலைவராகவும் திகழ்கிறார்.

மன்னர் சல்மான், 2015 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் மன்னராக பொறுப்பேற்றதிலிருந்து, உலகின் பல்வேறு பகுதிகளில் துன்புற்ற மக்களுக்கு உதவுவதிலும், உலக மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அவர் ஆற்றிவரும் நற்பணி உலக மக்களால் புகழப்படுட்டுக் கொண்டிருக்கிறது.
இயற்கை அனர்த்தங்கள் உட்பட உலகில் எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும், சவூதி அரசாங்கம், மன்னர் சல்மானின் வழிகாட்டுதலின் கீழ், உடனடியாக நிவாரண உதவிகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது.

மன்னர் சல்மானுடைய மனிதாபிமானப் பணியின் முக்கிய அமைப்பாக "மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் " (King Salman Humanitarian Aid and Relief Centre – KSRelief) இயங்கிவருகிறது.

இவ்வமைப்பானது உலக நாடுகளின் நம்பிக்கையின் மையமாக இன்று மாறியுள்ளது. இயற்கை அனர்த்தங்கள், பேரழிவுகள், பசி, பட்டிணி, வறுமை, என எந்தவொரு சூழ்நிலையிலும் மனிதர்களுக்குத் தேவையான உதவிகளை மிகச் சிறப்பாக வழங்கிவரும் அமைப்பாக இது காணப்படுகிறது.

இவ் அமைப்பானது மக்கள் மத்தியில் ஊட்டச்சத்துப் குறைபாட்டை தவிர்க்க உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குதல், வறுமை ஒழிப்பிற்காக உணவு பொருட்கள் விநியோகம், அகதிகளுக்கான தங்குமிடம், உணவு, மருத்துவமனைகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை எமன், பலஸ்தீன், சிரியா, துருக்கி, ஸ்ரீலங்கா போன்ற 100 க்கு மேற்பட்ட நாடுகளுக்கு இவ்வமைப்பு செய்துவருகிறது.

2015 இல் நிறுவப்பட்டதிலிருந்து, KSrelief 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 3,100க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தியுள்ளது, இதற்கான மொத்த பங்களிப்பு சுமார் $7.1 பில்லியன் ஆகும்.

அவ்வாறு, 1996–2024 காலப்பகுதிக்குள் சவூதி அரேபியா இதுவரையில் 170க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான உதவியாக $130 பில்லியனுக்கும் மேற்பட்ட உதவிகளையும் வழங்கியுள்ளது எனலாம்.

இவை அனைத்தும் சவூதி அரேபியாவினுடையதும் மன்னனுடையதும் மனிதநேயம் சார்ந்த தாராள பண்புகளின் வெளிப்பாடுகளே.
உலகம் முழுவதும் பாராட்டப்படும்
மன்னர் சல்மானின் சேவைகளை ஐநா உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் பாராட்டி விருதுகள் வழங்கியுள்ளன.

அவரது பணிகள் உலக மனிதநேயம் வளர்ச்சிக்கும் மிகுந்த பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் சவூதி அரேபியா உலகில் மனிதநேயமிக்க நாடாக அனைவராலும் போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மன்னர் சல்மானின் மனிதநேயப் பணிகள் உலகுக்கே ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.

14/06/2025

காணவில்லை

மடவளை கபீர சாப்பட்டு கடையில் சாப்பிட்டு விட்டு மாத்தளை நோக்கி பயணித்த போது) வாகன பதிவு பத்திரங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை, வாகன சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் சில ஆவணங்கள் தவறவிடப்பட்டுள்ளது தயவுசெய்து யாராவது கண்டுபிடித்தால் தொடர்பு கொள்ளவும்👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

இல:-0754901028
இல்ஹாம் கப்ரடி ரொட் காத்தாங்குடி

✨ இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்களின் ஈத் அல்-அழ்ஹா தியாகத் திருநாள் வாழ்த்துச்செய்தி..!-...
07/06/2025

✨ இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்களின் ஈத் அல்-அழ்ஹா தியாகத் திருநாள் வாழ்த்துச்செய்தி..!
--------------------------------------------------------------------------------

(எஸ். சினீஸ் கான்)


2025 ஆம் ஆண்டு ஈத் அல்-அழ்ஹா பெருநாளை முன்னிட்டு, இரண்டு புனித பள்ளிவாயில்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அசீஸ் மற்றும் சவூதி மக்கள், அங்கு வசிக்கும் பிற நாட்டவர்கள் மற்றும் முழு இஸ்லாமிய சமூகத்தினருக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்புனிதமிகு நன்னாளில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை குடியரசு, அதன் தலைமை மற்றும் மக்களுக்கு எனது நட்புறவையும் நன்றியையும் வெளிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறைகளில் காணப்படும் நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்கு நமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது நமது இரு நட்பு நாடுகளின் நலன்களை பேணவும் , அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கிறேன்.

நமது இரு நட்பு நாடுகள் மற்றும் மக்களுக்கும் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை நிலைநிறுத்தவும், இந்த அருள்நிறைந்த சந்தர்ப்பத்தை நன்மை மற்றும் அமைதியுடன் மீண்டும் மீண்டும் எமக்களிக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

ஈத் அல்-அழ்ஹா தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

- இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
காலித் ஹமூத் அல்கஹ்தானி

சவூதி அரபியா மற்றும் சுற்றுச்சூழல்: நிலைத்த எதிர்காலத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பு.!ஆக்கம் -இலங்கைக்கானசவூதி அரேபிய தூத...
05/06/2025

சவூதி அரபியா மற்றும் சுற்றுச்சூழல்: நிலைத்த எதிர்காலத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பு.!

ஆக்கம் -
இலங்கைக்கான
சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி

ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இது நமது புவியின் யதார்த்தத்தைப் பற்றி சிந்திக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு உலகளாவிய சந்தர்ப்பமாகும்.

இந்த சந்தர்ப்பத்தில், சுற்றுச்சூழல் நீதியின் கொள்கைகள் மற்றும் சவூதி விஷன் 2030 இன் இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு லட்சிய தேசிய தொலைநோக்கு கட்டமைப்பிற்குள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் நிலையான வளர்ச்சியை அடைவதற்கும் சவூதி அரேபியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சார்ந்த தீவிர சவால்களையும், அவற்றை தீர்க்க வேண்டும் என்பதற்கான அவசியத்தையும் கண்டறிந்து, தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச நிலைகளில் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் இந்த பிரச்சனைகளுக்கு முடிவுகாண, சவூதி அரேபியா, சுற்றுச்சூழல்பாதுகாப்பை முழுமையான அபிவிருத்தி மாற்றத்தின் மையமாகக் கொண்டு, இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கும், காலநிலை மாற்றம் மற்றும் வறண்ட நிலமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கும், மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயற்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், "சவூதி பசுமை முனைவு” (Saudi Green Initiative)" ஒரு முன்னேற்றமான மாதிரியை வெளிப்படுத்துகிறது. இது, நாட்டிற்குள் பத்து பில்லியன் மரங்களை நட்டல், பசுமை பரப்புகளை அதிகரித்தல், மற்றும் வருடத்திற்கு 2030 ஆம் ஆண்டுக்குள் 278 மில்லியன் டன் கார்பன் வாயு வெளியீட்டை குறைத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. இந்த முயற்சி, "மத்திய கிழக்கு பசுமை முனைவு" உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில், 30க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து, மத்திய கிழக்கு பகுதி முழுவதிலும் 50 பில்லியன் மரங்களை நட்டலைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் பரப்பு மற்றும் தாக்கம் ஆகியவற்றின் அடுப்படையில் உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் முயற்சிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இந்த முயற்சிகள், சுற்றுச்சுழற்சி கார்பன் பொருளாதார அணுகுமுறையின் கீழ், 2060 ஆம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழலுக்கு ஊடுருவும் கார்பன் வெளியீடுகளை பூச்சியத்துக்கு கொண்டுவர வேண்டும் என்ற சவூதி அரபிய அரசின் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகக் கூடியதாக அமைகின்றன. இந்த அணுகுமுறை, 2020 ஆம் ஆண்டு சவூதி அரபியா G20 யின் தலைமை பொறுப்பேற்ற போது அந்நாட்டின் வழிகாட்டுதலின்படி ஆதரிக்கப்பட்டது. இதில், கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் (mitigation), மீள் பயன்படுத்தும் (reuse), மீள்சுழற்சி செய்யும் (recycling), மற்றும் அகற்றும் (removal) தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இந்தச் சூழலில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் சகாகா சூரிய ஒளி மின்சக்தி திட்டம் (Sakaka Solar Energy Project), துமத் அல்-ஜண்டல் காற்றழுத்த மின்சக்தி திட்டம் (Dumat Al-Jandal Wind Energy Project), மற்றும் எதிர்கால சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரத் திட்டங்களான NEOM மற்றும் The Line போன்றவற்றைத் தொடங்குவது போன்ற பல மூலோபாயத் திட்டங்களை இராச்சியம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இவை சுத்தமான எரிசக்தி மற்றும் ஸ்மார்ட் இயக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் நிலையான நகரங்களுக்கான உலகளாவிய மாதிரியைப் பிரதிபலிக்கின்றன.

2030ஆம் ஆண்டுக்குள், மின்னுற்பத்தியின் 50% ஐ புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களிலிருந்து பெறும் இலக்கை நோக்கி சவூதி அரபியா முன்னேரிச் செல்லுகிறது. இது, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார துறைகளில் முழுமையான மாற்றத்தை அடைவதற்கான சவூதியின் முயற்சியை பிரதிபலிக்கிறது. இந்த முயற்சிகள், கடந்த மூன்று ஆண்டுகளில் தலா எரிசக்தி பயன்பாட்டை 7% ஆக குறைக்கும் வகையில் உதவியுள்ளன. மேலும், பல்வேறு துறைகளில் தண்ணீர் மற்றும் எரிசக்தி பயன்பாட்டு திறனையும் மேம்படுத்தியுள்ளன, இது சவூதியின் சுற்றுச்சூழலுடன் ஒன்றிணைந்து செல்லும் வளர்ச்சியின் நோக்கில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.

இந்த சுற்றுச் சூழல் சார் முயன்சிகளின் இன்னொரு ஆரம்ப கட்டமாக சவூதி அரபியா சுற்றுச்சூழல் துறையை மறுசீரமைத்து பல முக்கிய நிறுவனங்களை நிறுவியுள்ளது. இதில் முக்கியமானவையாக தேசிய சுற்றுச்சூழல் இணக்கமான பணிநிலை மையம், தேசிய செடிகள் வளர்ச்சி மையம், மற்றும் தேசிய வானிலை மையம் போன்றன அடங்குகின்றன.

மேலும், சுற்றுச்சூழல் முறைமைகளை மேம்படுத்தும் தேசிய யோசனை (National Environmental Strategy) க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக, உயிரினங்கள் வாழும் பருவ அமைப்புகளை பாதுகாப்பது, காற்றின் தரத்தை மேம்படுத்துவது, குப்பை மேலாண்மை திறனை உயர்த்துவது, மற்றும் சுற்றுச்சூழல்காக்கப்பட்ட பகுதிகளின் விகிதத்தை அரசின் மொத்த பரப்பளவில் 30%ஐக் கடந்த அளவிற்கு உயர்த்துவது அடங்குகின்றன. ரியாத் போன்ற முக்கிய நகரங்களில், நகராட்சி குப்பை மறுசுழற்சி விகிதம் 35% ஐ விட உயர்ந்துள்ளது. மேலும், 2021ஆம் ஆண்டிலிருந்து, சுமார் 2,00,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் புனரமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சவூதி அரபியாவின் முயற்சிகள் தேசிய மட்டத்தில் மட்டும் இல்லாமல், சர்வதேச அளவில் மற்றும் நட்பு நாடுகளுக்கும், குறிப்பாக ஆபிரிக்க மற்றும் ஆசிய பகுதிகளில் இருக்கும் நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளன. இம்முயற்சிகள் வழியாக: வறண்ட நிலமாக்கலை எதிர்க்கும் திட்டங்களுக்கு நிதி உதவி, தண்ணீர் மேலாண்மை திறன்களை மேம்படுத்தும் பயிற்சி மற்றும் வசதிகள் உருவாக்கல், சுற்றுச்சூழல் சார் கண்டுபிடிப்புகளுக்கான தொழில்நுட்ப உதவித்தொகைகள் வழங்கல் மற்றும் பசுமை காலநிலை நிதியத்தின் (Green Climate Fund) மற்றும் உலக சுற்றுச்சூழல் வசதியின் (Global Environment Facility) வாயிலாக காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப மாற்றம் செய்யும் திட்டங்களுக்கு ஆதரவு வழங்கல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சவூதி அரபியா பல்வேறு சுற்றுச் சூழல் பாதுகாப்பு சார் சர்வதேச ஒப்பந்தங்களில் மிக ஆர்வமாக பங்கேற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது அவற்ளுள் முக்கியமாக, ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மேலமைப்பு உடன்படிக்கை, பாரிஸ் காலநிலை ஒப்பந்தம், உயிரியல் பல்வகைமைக்கான ஒப்பந்தம், மற்றும் ஓசோன் படலத்திற்கு சேதம் விளைவிக்கும் பொருட்கள் தொடர்பான மான்ட்ரியால் நெறிமுறை (Montreal Protocol) ஆகியவையை குறப்பிடலாம். குறிப்பாக இந்த நெறிமுறையின் கீழ், சவூதி அரபியா ஓசோன் அடுக்கை சேதப்படுத்தும் அனைத்து வகை பொருட்களையும் 100% அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது, சர்வதேச தரநிலைகள் மற்றும் சிறந்த சுற்றுச்சூழல் நடைமுறைகளைப் பின்பற்றுவதில் சவூதி அரசின் உறுதியான அர்ப்பணத்தை வெளிப்படுத்துகிறது.

பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் நீரோடு தொடர்பான சவால்களை நிவர்த்தி செய்வதற்கான அதன் வளர்ந்து வரும் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகவும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் நிலைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் இராச்சியத்தின் தொலைநோக்கு 2030 க்கு இணங்கவும், ரியாத்தை தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய நீர் அமைப்பைத் தொடங்குவதில் சவூதி அரேபியா இராச்சியம் முன்னணி மற்றும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

G20 உறுப்பினராக தனது வழிகாட்டும் பங்கை மற்றும் பொறுப்பை அடிப்படையாகக் கொண்டு, சவூதி அரபியா பசுமை பொருளாதாரத்தை கட்டியமைக்கும் முயற்சிகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. இந்த பசுமை பொருளாதாரம், புதுமை, தொழில்நுட்பம், மற்றும் அறிவுத் திறன் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். மேலும், சவூதி அரபியா தூய்மையான ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பயனுள்ள கூட்டு முயற்சிகளை (effective partnerships) உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

சவூதியின் பொது முதலீட்டு நிதி (PIF) மற்றும் தேசிய வளர்ச்சி நிதி (NDF), சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்களை ஆதரிக்க சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், புதிய முதலீட்டுத் திட்ட வாய்ப்புகளை உருவாக்குவதிலும், பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலைகளில் நிலைத்த வருவாய்களை (sustainable returns) அடைவதிலும் பெரும் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.

சவூதி அரபியாவில் இதுவரை சுற்றுச்சூழல் துறையில் அடைந்துள்ள சாதனைகள், நீண்ட கால உறுதியான மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியின் தொடக்கமாகும். இது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒரு விருப்பத் தெரிவு அல்ல மாறாக ஒரு அவசியமான இருப்புப் பிரச்சினை (existential necessity) என உறுதி கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அரச தலைமையின் வழிகாட்டலின் கீழ் இயக்கப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, சவூதி அரேபியா புவியைப் பாதுகாப்பதற்கும் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் நிலையான எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் சர்வதேச ஒற்றுமை, நிபுணத்துவ பரிமாற்றம் மற்றும் கூட்டு நடவடிக்கையின் முக்கியத்துவத்தை இராச்சியம் வலியுறுத்துகிறது.

மனிதநேயத்தின் முன்மாதிரி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி.- ✍️ எஸ். சினீஸ் கான்இரு நாடுகளுக்கிடை...
03/06/2025

மனிதநேயத்தின் முன்மாதிரி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி.

- ✍️ எஸ். சினீஸ் கான்

இரு நாடுகளுக்கிடையிலான நட்பு, புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் பணியில் தூதுவர்களே முக்கிய பங்காற்றுகிறார்கள். அவர்கள் செயலில் மட்டும் அல்ல, செயல்முறையிலும் மனிதநேயத்தைக் கொண்டு இந்த பணியை மிகுந்த அர்ப்பணிப்பு, நேர்மையுடன் நிறைவேற்றிக்கொண்டிருப்பவர்தான் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அவர்கள், தனது சேவைக்காலத்திலே இலங்கையின் பல துறைகளில், குறிப்பாக சமூக நலன், கல்வி, பொருளாதாரம், பண்பாட்டு பரிமாற்றம் மற்றும் மனிதாபிமான பணிகளில் அதிகமான அளவு தனது முழுமையான பங்களிப்புக்களை வழங்கிவருகிறார். எளிய மக்களோடு நேரில் தொடர்பு கொண்டு அவர்களது தேவைகளை நிறைவேற்றும் உன்னத பணியை மேற்கொண்டுவருகிறார்.

இலங்கை - சவுதி உறவுகள் வலுப்பெறுவதற்கான தூணாக அவர் திகழ்வதுடன், இருநாடுகளுக்கிடையே உயர் மட்ட சந்திப்புகள், வர்த்தக ஒப்பந்தங்கள், கல்வி பரிமாற்ற திட்டங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்த அவர் மேற்கொள்ளும் முயற்சிகள், இலங்கை மக்களுக்கும் பல நன்மைகளை பெற்றுத்தந்திருக்கிறது. இலங்கையின் பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் ஹஜ் வழிப்பாட்டுக்காகச் சவுதிக்கு செல்லும் போது ஏற்படும் சவால்களை களத்தில் நின்று தீர்ப்பது மட்டுமல்லாமல், சக மத மக்களுக்கும் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அவர் வெளிப்படுத்தும் பணிவும், பாரம்பரியத்தை மதிக்கும் நெறிமுறையும் இலங்கை மக்களின் மனதில் இடம் பெற்றுள்ளது. தனது அதிகார பூர்வத்தை தாண்டியும் மனித நேயத்தின் அடிப்படையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

அவர் தனது செயல், சொல் மற்றும் செயல்களால், தூதுவர் என்பது அதிகாரத்தின் பிரதிநிதி மட்டுமல்ல, ஒரு அர்ப்பணிப்பு மிக்க மனித நேயத்தின் தூது என்பதைக் எமக்கு காட்டியுள்ளார்.

இன்றைய உலகில் சமாதானம், நம்பிக்கை, நட்பு போன்றவை மிக முக்கியமாக போற்றப்பட வேண்டிய நேரம் இது. அத்தகைய சூழலில் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்களின் சேவை ஒளிக்காற்றாகத் திகழ்கிறது.

அவர் விதைக்கும் மனித நேயத்தின் விதைகள், நாளைய தலைமுறைகளுக்கும் நிச்சயமாக ஒரு ஒளி வீசும் வழிகாட்டியாக இருக்கும்.

24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ சேவை அறிமுகம்..!- சவுதி அரேபியா அறிவிப்பு(எஸ். சினீஸ் கான்)சவூதி அரேபியாவின் 'Vision 2030'...
02/06/2025

24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ சேவை அறிமுகம்..!

- சவுதி அரேபியா அறிவிப்பு

(எஸ். சினீஸ் கான்)

சவூதி அரேபியாவின் 'Vision 2030' திட்டத்தின் ஒரு பகுதியாகவும், சுகாதாரத் துறை மாற்றத் திட்டம் மற்றும் ஹஜ் பயண அனுபவ மேம்பாட்டு திட்டத்தின் கீழாகவும், சுகாதார அமைச்சகம் "சேஹா டிஜிட்டல் வைத்தியசாலை" மூலம் ஹஜ் பயணிகளுக்காக 24 மணி நேர டிஜிட்டல் மருத்துவ ஆலோசனை சேவைகளை தொடங்கியுள்ளது.

937 என்ற அழைப்பு மையம், “சிஹாட்டி” செயலி மற்றும் “X” தளத்தின் மூலம் இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. அரபு, ஆங்கிலம், பிரஞ்சு, துருக்கி, பாரசீக, உருது மற்றும் இந்தோனேசியம் ஆகிய ஏழு மொழிகளில் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. பயணிகள் ஆடியோ, வீடியோ அல்லது உரை வடிவ ஆலோசனைகளைப் பெறலாம், மருத்துவ ஆவணங்கள் மற்றும் சோதனை முடிவுகளை பதிவேற்றலாம், தேவைப்பட்டால் மின்னணு மருந்து குறிப்புகளும் பெறலாம்.

“Sehhaty” செயலி மூலம் பயணிகள் தங்கள் எல்லை எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம், இது முழுமையான டிஜிட்டல் சுகாதார அனுபவத்தை வழங்குகிறது. மக்கா, மதீனா மற்றும் ஹஜ் முகாம்கள் உள்ளிட 300க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக மருத்துவ நிலையங்களுடன் இணைந்து செயல்படும் “Consult Plus” சேவை (அரபு மற்றும் ஆங்கிலத்தில்) அவசர மருத்துவ பதில்கள் மற்றும் விரைவான தீர்மானங்களை எடுக்க உதவுகிறது.

இந்த முன்முயற்சி, ஹஜ் 1446 காலப்பகுதியில் உலகம் முழுவதிலும் இருந்து வரும் பயணிகளுக்கு எளிமையான, விரைவான, தரமான சுகாதார சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது.

இவ்வருடமும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் கோரிக்கைக்கமைய "மன்னரின் விருந்தினராக" 20 பேருக்கு ஹஜ் செய்ய சந்தர்ப்பம்....
30/05/2025

இவ்வருடமும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் கோரிக்கைக்கமைய "மன்னரின் விருந்தினராக" 20 பேருக்கு ஹஜ் செய்ய சந்தர்ப்பம்.!

(எஸ். சினீஸ் கான்)

இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களால் உலகளாவிய ரீதியில் 100 நாடுகளைச் சேர்ந்த 1300 பேருக்கான தனது முழு செலவில் "மன்னர் விருந்தினராக" அழைக்கப்பட்டு ஹஜ் செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

இஸ்லாமிய உலகம் முழுவதும் உள்ள மத, கல்வி மற்றும் அறிவுசார் தலைவர்களுடன் உறவுகளை வலுப்படுத்தவும், நாகரிக மற்றும் மத உரையாடலை ஊக்குவிக்கவும், தனித்துவமான மற்றும் மூலோபாய முயற்சியாக இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நஸார் அல்தஸம் அல்கஹ்தானி அவர்களின் கோரிக்கைக்கமைய
இம்முறையும் இலங்கைக்கு 20 பேர் பயணிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.

அதேபோல் வருடாவருடம் இலவசமாக உம்ரா செய்யும் சந்தர்ப்பமும் தூதுவர் மூலமாக இலங்கை மக்களுக்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் பல ஊழல் விவகாரங்கள் – முஜிபுர் ரஹ்மானின் குற்றச்சாட்டுதேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கம்...
21/04/2025

ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் பல ஊழல் விவகாரங்கள் – முஜிபுர் ரஹ்மானின் குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கம் ஆட்சியமைத்து 6 மாதங்களில் பல ஊழல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று(20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் அற்ற அரசாங்கம் என்று கருத்துரைக்கும் ஜனாதிபதி இந்த விடயங்களுக்குப் பதிலளிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

12/04/2025
உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் வறுமை ஒழிக்கப்பட்டு நாடு அபிவிருத்தியை நோக்கி நகரும்....சம்மாந்துறை பிரதேச ...
12/04/2025

உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் வறுமை ஒழிக்கப்பட்டு நாடு அபிவிருத்தியை நோக்கி நகரும்....

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தெரிவிப்பு!
===========================
(சர்ஜுன் லாபீர்)

உள்ளூர் உற்பத்தியாளர்களையும் அவர்களின் உற்பத்திப் பொருட்களையும் ஊக்குவித்தல் மற்றும் சந்தைவாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் நாட்டின் வறுமை இல்லாதொழிக்கப்பட்டு நாடு அபிவிருத்தி அடையும் என சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தெரிவித்தார்.

அண்மையில் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் சம்மாந்துறை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சமுர்த்தி அபிமானி" வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் மற்றும் சிப்தொர புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது அந் நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றும் போதே மேற்கூறியவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்..

ஒவ்வொரு முஸ்லிம்,தமிழ் பண்டிகைகளையும் சிறப்பிக்கும் முகமாக இவ்வாறான சந்தைகளைக் கொண்டு ஆரம்பம் செய்வது வழமையான விடயமாகும்.

இச் சந்தையில் எமது உள்ளூர் உற்பத்திகளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியுள்ளோம். அவ் உள்ளூர் உற்பத்திகளை ஊக்கிவிப்பதற்கான வாய்பாக இதனை அமைத்திருக்கின்றோம். அதனடிப்படையில் நாம் வாடிக்கையாளர்கள் எனும் வகையில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

அதுபோல் இவ் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை மேம்படுத்தி உற்பத்தி திறன்மிக்கதாக்குவதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்
குறிப்பாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தின் மூலமாக இவர்களை பரீசீலனை செய்து அவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி இருக்கின்றோம்.

சமூர்த்தி திட்டம் மட்டுமன்றி உற்பத்தி திறன் சார்ந்த கைத்தொழில் மற்றும் ஏனைய துறைசார்ந்த உத்தியோகத்தர்களையும் இதில் இணைத்து அவர்களை மேற்பார்வை செய்து இவ் உற்பத்தியாளர்களுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளும் வழங்கி இருக்கின்றார்கள்.

இவ்வாறு அவர்களின் உற்பத்திகளை மேம்படுத்த கூடிய சகல செயற்பாடுகளையும் எமது காரியாலயத்தின் ஊடாகவும் ஏனைய நிறுவனங்களின் ஊடாகவும் அறிவுறுத்தல்களை வழங்கி சிறப்பாக செய்து இருக்கின்றோம்.

எனவே எமது மக்களுக்காக உற்பத்தி செய்யபட்ட இப் பொருட்களை நாங்கள் கொள்வனவு செய்வதன் ஊடாக அவர்களை ஊக்குவிக்க முடியும். என்பதோடு அவர்களை விளம்பரம் செய்து நிரந்தர சந்தைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கலாம் என்பதனையும் தெரிவித்து கொள்கின்றேன்.

இங்கு வருகை தந்திருக்கின்ற சமூகமட்ட அமைப்புகளின் தலைவர்கள் இவ் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து அவர்களின் தொழில்சார் நடவடிக்கைகளுக்கு உதவ முன்வர வேண்டும்.

இதற்கு மேலதிகமாக இந் நிகழ்வில் சிப்தொர புலமைப்பரிசில் பெறுவதற்கு மாணவர்கள் கலந்து கொண்டு இருக்கின்ர்கள். சமூர்த்தி திணைக்களமானது வறுமை ஒழிப்பு என்கின்ற விடயத்தை மையப்படுத்தி பல்வேறுபட்ட செயற்திட்டங்களை பல வருடங்களாக முன்னெடுத்து செயற்படுத்தி வருகின்றது.

இன்று நாம் வறுமை என்று பேசிக் கொள்கின்றோம் அதன் மூலமாகத்தான் பொருளாதார சிக்கல்கள் சமூகத்திலே எழுகின்றன. சில பிறழ்வான நடத்தைகள் மேலோங்குகின்றன.குற்றத்தை செய்கின்ற மனப்பாங்கு அதிகரிக்கின்றது.சட்டங்களுக்கு கட்டுப்படாத சமூகம் என்றெல்லாம் நாங்கள் வறுமைய காரணமாக காட்டி அதன் விளைவுகளாக பேசிக்கொள்கின்றோம்..
எனவே நாம் வறுமையில் இருந்து மீள்வதாக இருந்தால் அதற்கான ஒரேயொரு வழி கல்வியை மட்டும் குறிப்பிட முடியும். கல்வி மேம்பாட்டின் மூலமாக வறுமையை நிரந்தரமாக நீக்க முடியும்.

வேறு செயற்பாடுகளும், அபிவிருத்திகளும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தாக்கு பிடிக்குமே ஒழிய கல்வியை போன்று நீடித்து நிலைத்து நிற்க முடியாது.

கல்வி என்பது நாம் எல்லோரும் குறிப்பிடுவது போல வறுமை என்கின்ற இருளை அகற்றுகின்ற ஒளி ஆகும். சூரியன் உதிக்கின்ற போது எவ்வாறு இருள் மெல்லமெல்ல விலகுகின்றதோ அது போல கல்வி மேம்படுகின்ற போது குறித்த சமூகத்தில், பிராந்தியத்தில், நாட்டில் இருந்து வறுமையானது ஒழிந்துபோய் நாடு அபிவிருத்தி அடையும் என குறிப்பிட்டு இருந்தார்.

இவ் சமூர்த்தி திட்டத்தின் ஊடாக அதனுடைய பயனாளர்கள் சேமித்த பணத்தினைக் கொண்டு அவர்களின் உண்டியல் மூலமான பணங்களில் இருந்து தான் இந்த புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது.உங்களைப் போல பல மாணவர்கள் இந்த புலமைப்பரிசில்களுக்காக ஏங்கிக் கொண்டு இருந்தாலும் நீங்கள் அதிர்ஸ்டசாலிகளாக தெரிவு செய்யப்பட்டு இருகின்றீர்கள்.எனவே இவ்வாறான மக்களின் பணத்தில் இருந்து எதற்காக வழங்கப்படுகின்றது என்று சிந்தித்து உங்களை வளப்படுத்தி எதிர்காலத்தை வெற்றி கொள்ளக்கூடிய சமூகத்திற்கு தலைவர்களாக கூடிய ஆளுமைகளை மாற்றுவதற்காக வேண்டித்தான் இவ்வாறான புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.

எனவே மாணவர்கள் நன்றாக கல்வி கற்று வெற்றிகரமான அடைவை அடையக்கூடியவர்களாக மாறவேண்டும்.
கல்வி என்பதன் ஊடாக பரீட்சையில் சித்தியடைவது மாத்திரமல்லாது ஆளுமை விருத்தி ,ஒழுக்க விழுமியங்கள் ,சவால்களை எதிர்கொள்ள கூடிய திறன் அபிவிருத்தி என்கின்ற விடயங்களை எல்லாம் உள்வாங்கியதாக எமது கல்வியை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எ.பி.எம் ஹுசைன்,கிராம நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.எம் நளீர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றுதெரிவித்தார். என பலரும் கலந்து கொண்டனர்.

12/04/2025

Address

Madawala Baggala Gedara
Madawala

Alerts

Be the first to know and let us send you an email when Madawala Sun News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madawala Sun News:

Share