Malwana News

Malwana News மள்வானையின் முதற்தர செய்தி வழங்குனர்

*Grand Carnival & Food Zone* எதிர்வரும் சிறுவர் தினத்தை முன்னிட்டு  மள்வானை அல் முபாரக் கனிஷ்ட வித்தியாலய பெற்றோர் நலன்ப...
27/09/2025

*Grand Carnival & Food Zone*

எதிர்வரும் சிறுவர் தினத்தை முன்னிட்டு மள்வானை அல் முபாரக் கனிஷ்ட வித்தியாலய பெற்றோர் நலன்புரி சங்கம் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யும்

*மாபெரும் கார்னிவல் மற்றும் பல்சுவை கடைதொகுதி*
*(GRAND CARNIVAL & FOOD ZONE)*

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

📅 *திகதி:* 2025 October 4ஆம், 5ஆம், மற்றும் 6அம் திகதிகளில்.

🕒 *நேரம்:* மாலை 2 மணி முதல் இரவு 10 மணி வரை

📍 *இடம்:* அல் முபாரக் கனிஷ்ட
வித்யாலயம், மல்வானை

🎉 *அன்றைய தின சிறப்புகள்*🎉

👑 சிறியோருக்கும், பெரியோருக்குமான
விளையாட்டு நிகழ்ச்சிகள் *(Roaler Coaster, Galaxy, Marry Go Round, 9D Cenima, Jet Rides, Bouncers)*

👑 சிறியவர்களுக்கும்
பெரியவர்களுக்கும் ஏற்ற பல்சுவையான உணவுகள்.*(Sri Lankan, Indian, Arabian)*

👑 விஷேட உணவு கடைத் தொகுதிகள். *(Special Food Zone)*

👑 சிறுவர்களுக்கான டிஜிட்டல் திரை வீடியோக்கள். *(Mega Digital Screen Videos)*

👑 இளைஞர்களுக்கான சிறப்பு விளையாட்டு நிகழ்ச்சிகள். *(Fun Games Activities)*

👑 மேலும் பல சுவையான அம்சங்கள்.

🌈 *மல்வானை மக்கள் அனைவரும் சேர்ந்து, இந்த மகிழ்ச்சியான விழாவை கொண்டாடி மகிழ வருக வருக என அழைக்கின்றோம்!* 🎊

ஏற்பாட்டுக் குழு.

Grand carnival……..
27/09/2025

Grand carnival……..

மாலைதீவுகளில் கௌரவிக்கப்பட்ட கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பௌசுல் ஜிப்ரி மாலை தீவு ஜனாதிபதி அலுவலகத்தின் அனுசரனையில் மாலைதீவ...
27/09/2025

மாலைதீவுகளில் கௌரவிக்கப்பட்ட கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பௌசுல் ஜிப்ரி

மாலை தீவு ஜனாதிபதி அலுவலகத்தின் அனுசரனையில் மாலைதீவுகள் ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் இஸ்லாமிய கலாச்சார அமைச்சர் தலைமையில் மாலை தீவுகளில் இடம் பெற்று வரும் 37 ஆவது தேசிய குர்ஆன் மனனப்போட்டிகளின் இறுதி சுற்று நேற்று மாலை (26 /09/2025) மாலை தீவு தலைநகர் மாலே இல் உள்ள king salman Islamic center இல் பெற்றது

நிகழ்வுகளுன் பிரதம அதிதியாக மாலை தீவுகள் ஜனாதிபதி மற்றும் மாலைதீவு இஸ்லாமிய கலாச்சார் அமைச்சர் கலாநிதி மொஹமத் சஹீம் அலி ஸஹீத் அவர்களன் விசேட அழைப்பில்
அங்கு விஜயம் செய்துள்ள எமது இலங்கையை சேர்ந்த கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பௌசுல் ஜிப்ரி அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்

நிகழ்வுகளில் போட்டியிட்ட சுமார் ஆயிரம் போட்டியாளர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்றனர்.

அதேவேலை மாலைதீவு இஸ்லாமிய கலாச்சார் அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கல்வி முன்னேற்ற செயற்பாட்டு வேலைத்திட்டங்களையும் பர்வையிட்டார்

மாபெரும் வரைதல் மற்றும் வர்ணம் தீட்டும் போட்டிஇன்று காலை இடம்பெறவுள்ளது
27/09/2025

மாபெரும் வரைதல் மற்றும் வர்ணம் தீட்டும் போட்டி
இன்று காலை இடம்பெறவுள்ளது

ஜும்ஆ முபாரக் ……!
25/09/2025

ஜும்ஆ முபாரக் ……!

ஜும்ஆ முபாரக் …….!
19/09/2025

ஜும்ஆ முபாரக் …….!

இலங்கையில் கௌரவம் பெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் - பெருமிதம் கொள்கிறோம்.இந...
18/09/2025

இலங்கையில் கௌரவம் பெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் - பெருமிதம் கொள்கிறோம்.

இந்தியாவின் 79வது சுதந்திர தினக்கொண்டாட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களால் தமிழ்நாடு அரசின் உயரிய கௌரவமாக விளங்கும் “தகைசால் தமிழர் விருது” இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ்மொழி, இலக்கியம், கலை, அறிவியல், கல்வி, சமூகம், மருத்துவம், தொழிநுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகச்சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது “தமிழ்நாடு அரசின் மிக உயர்ந்த விருது” எனக்கருதப்படுகிறது.

ஏன் “தகைசால் தமிழர் விருது” பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு வழங்கப்பட்டது?

பேராசிரியர் காதர் முஹைதீன் அவர்களின் மனிதநேயம், மத நல்லிணக்கம், அறிவார்ந்த சொற்பொழிவு, சமூக நலப்பணிகள் ஆகியவை இவ்விருதிற்கு அவரைத் தகுதியானவராக மாற்றியது.

2010ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் “தமிழ்நாட்டிற்கும் அரபு நாடுகளுக்குமுள்ள தொடர்புகள்” குறித்த ஆய்வுக் கட்டுரையை வழங்கியுள்ளார்.

தாருல் குர்ஆன் இதழில் எட்டாண்டுகள் தொடர்ச்சியாக “தமிழருக்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்தமா?” என்ற தலைப்பில் ஆழமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

“வாழும் நெறி”, “குர்ஆனின் குரல்”, “இஸ்லாமிய இறைக் கோட்பாடு” உள்ளிட்ட ஆறு நூல்களை எழுதி சமூக, அறிவுத்தளங்களில் பங்களித்துள்ளார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 15 ஆண்டுகள் பேராசிரியராக இருந்து, மாணவர்களின் மனங்களில் சமூக நல்லிணக்கம், தன்னம்பிக்கை ஆகியவற்றை விதைத்துள்ளார்.

யார் இந்த பேராசிரியர் கே. எம். காதர் முஹைதீன்?

புதுக்கோட்டை மாவட்டத்தின் திருநல்லூரில், 1940 ஆம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி, பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தார்.

கல்வியில் பெரும் நாட்டம் கொண்டவராக தனது பயணத்தைத்தொடங்கிய அவர், அதன் பலனாக மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் முதுகலை (M.A.) பட்டம் பெற்றார். மேலும், அரபு மற்றும் உருது மொழிகளிலும் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தார்.

எழுத்தாளர், பத்திரிகையாளர்:

மாணவராக இருந்த போதே “மறுமலர்ச்சி” இதழில் கட்டுரைகள் எழுதத்தொடங்கிய அவர், முபாரக், தாருல் குர்ஆன் போன்ற பத்திரிகைகளில் முக்கியக் கட்டுரைகளை வழங்கினார். மேலும், மணிச்சுடர் நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தமிழில் முக்கியமான நூல்களையும் நூற்றுக்கணக்கான கவிதைகளையும் எழுதியுள்ள அவர், மத ரீதியான ஒப்பீடுட்டு நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அதில் குறிப்பாக "வாழும் நெறி" என்ற நூல் குறிப்பிடத்தக்கது.

அவரது எழுத்துகள் சமூக ஒற்றுமை, கல்வி முன்னேற்றம், மத விழிப்புணர்வு ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தன.

அரசியல் பங்களிப்பு:

மாணவர் நிலையிலிருந்தே அரசியல் மீது ஆர்வம் கொண்டிருந்த அவர், இந்திய முஸ்லிம்களின் இருப்பை உறுதி செய்வதில் அடையாளமாகத்திகழ்ந்த "இந்திய யூனியன் முஸ்லிம் லீக்" கட்சியின் செயற்பாடுகளில் ஈர்க்கப்பட்ட காதர் முஹைதீன் மாணவர் சங்கம் மூலம் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில உதவியாளராக, மாநில செயலாளராக பதவி வகித்து, தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராகவும் உயர்ந்திருக்கிறார்.

2004–2009 காலத்தில் மக்களவை உறுப்பினராக வேலூர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பல நாடாளுமன்றக்குழுக்களில் பணியாற்றினார். உள்துறை, வக்ஃப் தொடர்பான குழுக்கள், ஹஜ் குழு, பல்கலைக்கழகக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் சமூக நலனுக்காக உழைத்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, அரசியல், கல்வி இரு துறைகளிலும் ஆழமான பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றார்.

இவர் மனித நேயம், மத நல்லிணக்கம், அறிவார்ந்த சொற்பொழிவு, சமூதாய நலன் என்பவற்றிற்கு தன்னையே அர்ப்பணித்தார். அதில் அவருடைய எழுத்து, கல்விப்பணி மற்றும் சமூகப்பங்களிப்பும் முக்கியமானதாகும்.

மனிதநேயப்பண்பு

பேராசிரியர் காதர் முஹைதீன் அவர்களின் உயர்ந்த பண்புகளின் அடையாளம். மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, சமூக நீதிக்கான உறுதி ஆகியவற்றில் முன்னோடியாக இருந்தவர். பெண்கள், ஏழைகள், அனைத்து மதத்தினரும் அவரிடம் அணுகி உதவி பெற்றனர்.

மஹல்லா ஜமாத் கூட்டமைப்பைத்தொடங்கி, வட்டியில்லாத கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

பல்வேறு மதம் சார்ந்தவர்களிடையே கலந்துரையாடல்கள், ஒப்பீட்டு மதம் வகுப்புகள் நடத்துதல் போன்றவற்றால் மத நல்லிணக்கத்துக்கு வழிவகுத்தார். சகிப்புத்தன்மையை வளர்த்தார்.

உரிமைகளை வென்றெடுக்கவும் அநீதிக்கெதிராகவும் உரத்த குரலில் போராடியவர். அவர், அரசியல் ரீதியாக உரிமைகளை வென்றெடுக்க கையாண்ட முக்கியமான போராட்டங்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளன.

2013ம் ஆண்டு ஏப்ரல் 2 – தமிழ்நாடு முழுவதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சில கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டது.

அவை,
முஸ்லிம்களுக்கு தனித்த ஒதுக்கீடு உயர்த்த வேண்டும். நிர்ப்பந்த கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். மது விற்பனையைத்தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பேரணியை நேரடியாக தனது தலைமையிலே நடத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தார்.

வக்ஃப் சட்டத்திருத்தங்களுக்கெதிரான போராட்டத்தில் வக்ஃப் சொத்துகளின் உரிமை குறையும் வகையிலான மசோதாவைத்திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இப்போராட்டத்தில் அவரின் பங்களிப்பாக நாடளாவிய உரைகள், ஊடகக்கருத்துரைகள், பொதுக்கூட்டங்கள் மூலம் போராடினார். “இது வக்ஃப் திருத்தம் அல்ல, வக்ஃப் நிர்மூலமாக்குதல்” என உரையாற்றி பெரிய எதிர்ப்பை எழுப்பினார்.

மத்திய, மாநில அரசுகளுக்கெதிரான கட்சித்தீர்மானங்கள் மற்றும் போராட்டங்கள்

ரயில்வே கட்டண உயர்வுக்கெதிரான பிரசாரம்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு நடவடிக்கைகள்.

இலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கும் பொதுக்கூட்டங்கள்.

இந்திய மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கெதிரான சட்டங்களைக்கொண்டு வந்த போது, மத்திய அரசை நோக்கி "இறைவனின் சட்டத்தை மாற்ற நீங்கள் யார்?" என பொங்கியெழுந்து காரசாரமான கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினார்.

இவை அனைத்திலும் காதர் முஹைதீன் முன்மொழிந்த தீர்மானங்கள், ஆர்ப்பாட்ட அழைப்புகள், தெருப்போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

கே.எம்.காதர் முஹைதீன் தலைமையில் நடத்தப்பட்ட போராட்டங்களில் முழுமையாக அல்லது பகுதியளவில் வெற்றியைத்தந்தன.

*முஸ்லிம்களுக்கு இடவொதுக்கீடு உயர்வு கோரிக்கை (2013 ஆர்ப்பாட்டம்)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பல ஆண்டுகளாகக் கொண்டு வந்த கோரிக்கையாக இருந்தது.

2007-ல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆணையம் அடிப்படையில் தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு தனியொதுக்கீடு வழங்கப்பட்டது.

பின்னர் அதனை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை 2013 ஆர்ப்பாட்டங்கள் மூலம் மீண்டும் எழுப்பினர்.

இதனால், தமிழ்நாடு அரசு 2010களின் இறுதியில் முஸ்லிம் சமூக நலத்திட்ட நிதியை அதிகரித்து, கல்வி உதவித்தொகை மற்றும் சமூகப்பங்கு அதிகரிப்பை நடைமுறையில் கொண்டு வந்தது.

வக்ஃப் சட்டத்திருத்த எதிர்ப்பு :
அவர் “இது வக்ஃப் திருத்தம் அல்ல, வக்ஃப் நிர்மூலமாக்குதல் எனக்கண்டித்த போது, கடும் எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு திருத்தச்சட்டத்தில் சில பிரிவுகளைத்தளர்த்தி மாற்றங்களைச்செய்தது. இது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் முஸ்லிம் தலைவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தால் ஏற்பட்ட வெற்றி.

இந்தி திணிப்பு எதிர்ப்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடர்ந்து எடுத்துக்கொண்ட போராட்டத்தில் அவர் முக்கிய பங்காற்றினார்.

தமிழ்நாடு முழுக்க “இந்தி விரோத மனப்பான்மை” வலுவானதால், அரசுகள் “இந்தி கட்டாயம்” என்பதை பின்வாங்கியுள்ளன. இது நடைமுறையில் வெற்றி கண்ட போராட்டமாகும்.

இலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் கண்டனப் போராட்டங்கள்
2013–14 காலகட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் காதர் முஹைதீன் தலைமையில் கண்டனப் பேரணிகள் நடந்தன.

இதனால் இந்திய அரசு வெளிநாட்டுக்கொள்கையில் இலங்கை தொடர்பான வாக்கெடுப்பில் மனித உரிமை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தள்ளப்பட்டது. இது சர்வதேசளவில் ஒரு அரசியல் அழுத்த வெற்றி.

இவ்வாறு சமூகநலப்போராட்டங்களில் பல்வேறு வெற்றிகளை தனது தலைமைத்துவத்தின் கீழ் பெற்றுக் கொடுத்தார்.

அவரின் சமூக நீதிக்காகப்போராடும் உயர்ந்த குணம், மொழிப்பற்று, மக்கள் பணிகளைக்கண்டு மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் மாண்புமிகு கருணாநிதி பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களை தனக்கு நெருக்கமாக வைத்துக் கொண்டார்.

தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் இந்த உயர்வான “தகைசால் தமிழர் விருதை” பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு வழங்கியதுடன், மிகப்பொருத்தமான ஒருவருக்கு வழங்கியதில் திருப்திப்படுவதாக பெருமிதமடைந்தார்.

அரசியலில் எதிர்முகாமிலிருப்பவர்களும் பேராசிரியருக்கான கன்னியத்தைக் கொடுப்பதற்கு ஒரு போதும் தவறுவதில்லை.

இவ்வாறு பல முக்கிய அரசியல் தலைவர்களின் கண்ணியத்தையும், நெருக்கத்தையும், நன்மதிப்பையும், வாழ்த்தையும் தன் வாழ்நாளில் பெற்றவராக பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் திகழ்கிறார்.

அவர், இளமைப்பருவம் தொடக்கம் தற்போது வரை தான் ஏற்றுக்கொண்ட பல பணிகளை சிறப்பாக மேற்கொண்டு தனக்கான தனித்துவமான இடத்தை மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்டார்.

அரசியல் ரீதியாக பெரும் பதவிகளைப்பெற்றுக் கொண்ட போதும் மற்றவர்களுக்கு உதாரணமாக எளிமையான வாழ்வையே இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறார். தனது ஊதியத்தையும் மாணவர்களின் கல்விக்காக செலவு செய்து வருகின்றார்.

சமூகத்திற்கான வழிகாட்டியாகவும், அதன் நலனுக்காகப் பணியாற்றுபவராகவும் கருதப்படுவதால் "முனீருல் மில்லத்" (சமூகத்தின் ஒளி) என மக்களால் கௌரவமாக அழைக்கப்படுகிறார்.

பேராசிரியரின் உயர் பண்பு, ஆளுமை, அறிவார்ந்த பேச்சுக்களால் இந்தியாவில் மற்றுமன்றி தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகளிலும் அவரை நேசிக்கும் பல தலைவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இலங்கை வாழ் முஸ்லிம்களைப்பொறுத்தவரை இந்திய முஸ்லிம்களை தொப்புள் கொடி உறவாகத்தான் பார்க்கிறார்கள். இலங்கை முஸ்லிம்கள் விவகாரங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கரிசணையோடு கடந்த காலங்களில் தங்களால் முடிந்த பங்களிப்புகளை வழங்கி வந்திருக்கிறது.

இலங்கையிலுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்களோடு தொடரான நெருக்கத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொண்டு வருகிறது.

இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத்தலைவர் உட்பட ஏனைய நிருவாகிகளுக்கும் இலங்கையிலுள்ள பெரும்பான்மை முஸ்லிம்களின் ஆதரவைப்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர், சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது.

பேராசிரியரை நேசிப்பவராகவும், அவரின் ஆலோசனைகளுக்கு மதிப்பளிப்பவராகவும், அவரின் வழிகாட்டல்களை ஏற்பவராகவும் ரவூப் ஹக்கீம் இருக்கிறார்.

எனவே தான், இந்திய - இலங்கை முஸ்லிம்கள் தொப்புள் கொடி உறவைப்பலப்படுத்தவும், முஸ்லிம்கள் ஒரு சமூதாயமாகப்பரந்துபட்டவர்கள் என்ற அடிப்படையிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அதன் தலைவரின் உறவு இன்றியமையாதவொன்றாக இலங்கை முஸ்லிம்களுக்கு இருப்பதால் “தகைசால் தமிழர்” என்ற உயர்வான விருது மிகத்தகுதிவாய்ந்த பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றதையிட்டு இலங்கை முஸ்லிம்களும் பெருமிதம் கொள்கின்றார்கள்.

அந்த வகையில், இலங்கையில் இம்மாதம் (செப்டம்பர்) 19 ம் திகதி தலைநகர் கொழும்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் மற்றும் இலங்கையர்களோடு நட்புறவு கொண்ட திருச்சி ஊடகவியலாளர் சாகுல் ஹமீத் ஆகியோர் இணைந்து "தகைசால் தமிழர்" விருது வென்ற மூத்த அரசியல் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத்தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு இலங்கையில் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பல தலைமுறை கண்ட பேராசிரியர் எல்லோருக்கும் சிறந்த முன்மாதிகளுடையவராகத்திகழ்கிறார். எதிர்கால சந்ததிகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகவே தனது வாழ்வியலை அமைத்துக் கொண்டிருக்கிறார். நாடு கடந்து பலரது கவனத்தை ஈர்த்த தலைவராகவும் இருக்கிறார்.

இவ்வாறான உயர்ந்த ஆளுமைச்சிறப்புகளுடன் வாழ்ந்து வருகின்ற பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களை வாழ்த்துவதற்கு எனக்கு வயது, அனுபவம் போதாது.

எனினும், அவரின் எளிமையான வாழ்க்கை, நற்குணங்கள், வீரியமிக்க பேச்சு ஆகியவற்றைக் கண்டு வியந்து போகும் இளைஞனாக, அவரிடமிருந்து வாழ்வுப் பாடங்களைப் பெறுகிறேன்.

அவரது வாழ்வியல் ஒரு நூலாகத்தொகுக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு வழங்கப்பட வேண்டும். அது நிகழ்ந்தால், நிச்சயம் சமூக அக்கறையுடனும், நெறியுடனும், நல்ல அரசியல் பண்புகளுடனும் கூடிய புதிய தலைமுறைத் தலைவர்கள் உருவாக பாடமாகவும் அறிவுரையாகவும் இருக்கும்.

பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அறிவார்ந்த சமூதாயத்திற்கும், எதிர்கால சந்ததிக்கும் மிகப்பெரும் பொக்கிஷம் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாதென்பது நிதர்சனம்.

இவ்வளவு பொருத்தமான ஒருவருக்கு “தகைசால் தமிழர்” விருதினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நாடு கடந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இலங்கையில் மாபெரும் கௌரவம் மூத்த அரசியல் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களுக்கு வழங்கப்படுவதை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிருவாகிகள், ஆதரவாளர்கள், அபிமானிகள், இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் தமிழக மக்கள், கடல் கடந்து வாழும் அன்னாரை நேசிக்கும் நல்லுள்ளங்கள் அனைவரும் பெருமிதம் கொள்வார்கள் என்பது திண்ணம்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத்
இளங்கலை மாணி பட்டதாரி (B.A.), தீவு முழுவதற்குமான சமாதான நீதவான்,
சமூக செயற்பாட்டாளர் – ஓட்டமாவடி.

கால் நூற்றாண்டு கடக்கும் அஷ்ரபின் மரணம் நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின் நுட்ப அ...
16/09/2025

கால் நூற்றாண்டு கடக்கும் அஷ்ரபின் மரணம்

நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின் நுட்ப அரசியல்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

இலங்கை அரசியலிலும் முஸ்லிம் அரசியலிலும் மர்ஹும் அஷ்ரப் என்ற ஆளுமை தவிர்க்க முடியாத சக்தி. சிறுபான்மைத்தலைவராக பெரும்பான்மை இன ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகத்திகழ்ந்தார்.

அதிகார அரசியலில் சிறிது காலப்பயணமாக இருப்பினும் அவரின் ஆளுமைகள் இன்றும் இலங்கை அரசியலில் பலரால் அசைபோடப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

அரசியல் சாத்தியமானதை சாதிக்கும் கலை என்பார்கள். அஷ்ரப் தனக்கு சாதகமாக வந்த வாய்ப்புகளை பயன்படுத்தி பல விடயங்களை சாதித்துக்காட்டினார்.

அதிலும், இன்று வரை சிறுபான்மைக்கட்சிகள், சிறிய கட்சிகள் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பெறுமளவுக்கும் இன்றைய ஆட்சியாளர்களான மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய மக்கள் சக்தியும் அரியாசணம் ஏறுமளவுக்கு அடித்தளமிட்டவர் அஷ்ரப். அன்று பிரேமதாசவிடம் கேட்டுப்பெற்ற தேர்தல் வெட்டுப்புள்ளியை 5% குறைத்தது தான் காரணம் என்பதை எவரும் மறுக்கவோ மறுதலிக்கவோ முடியாது.

உயர்வான எண்ணங்களோடு, தூரநோக்கோடு தனது அரசியல் பயணத்தைத்தொடர்ந்த அஷ்ரப்பின் அரசியல் பயணம் தங்களுக்கு தலையிடியென உணர்ந்தவர்களின் சதியா? அல்லது விபத்தா? என்ற கேள்வியோடு இன்று வரை தொடர்கின்றது அஷ்ரப்பின் திடீர் மறைவின் மர்மம்.

அஷ்ரப் மரணித்தார். தலையிடி தீர்ந்தது என பேரினவாதம் மகிழ்ந்தது. ஆனாலும், அவரின் கட்சியின் கீழ் முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டிருப்பது அவரின் இலக்கை அடைந்து கொள்ள வழிவகுக்கும் என அஞ்சி, சதிக்கு மேல் சதி செய்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை அதற்குள்ளிருந்த சிலரை பதவி ஆசை காட்டி உடைத்தெடுத்து பதவி கொடுத்து தலைவர்களாக்கி முஸ்லிம் சமூகத்தின் அரசியலை பலவீனப்படுத்தியது. இன்று வரை முஸ்லிம் அரசியலில் அதன் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

தற்போதைய ஆட்சியாளர்களும் அமைச்சரவையில் ஒரு முஸ்லிமை அமைச்சராக நியமிக்கும் மனநிலை இல்லாமல் தான் இருக்கிறார்கள். இலங்கை அரசியல் வரலாற்றில் மன்னர் காலந்தொட்டு அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்து நாட்டுக்கு தொண்டு செய்து வந்த முஸ்லிம் சமூகத்தின் அமைச்சரவை அடையாளம் இன்று மறுக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம் சமூகத்தில் பல கட்சி தோற்றம் முஸ்லிம் அரசியலை பலவீனப்படுத்தியதன் விளைவும், கடந்த ஆட்சியாளர்களின் நடவடிக்கையும், அவர்களோடு இணைந்து பயணித்த அரசியல்வாதிகளின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாகவும் முஸ்லிம் சமூகம் தங்களின் பெருவாரியான வாக்குகளை அனுர பெற்று ஜனாதிபதியாக உறுதியான ஆட்சியைக்கொண்டு செல்வதற்கும் வழங்கினார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் இந்த ஆட்சியாளர்கள் அமைச்சரவை உட்பட பல முக்கிய நியமனங்களில் தகுதியானவர்கள் இருந்த போதும், அவர்கள் புறக்கணக்கப்பட்டமை உட்பட பல அசெளகரியங்களை முஸ்லிம் சமூகம் சந்தித்த நிலையில், இந்த நாட்டில் தாங்களும் தனித்துவமான இனம் என்பதையும், தங்களுக்கான நியாயமான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும், ஏனைய இனத்தவர்களால் தங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்புப் பெறுவற்கும் உரித்துடைய சமூகம் என்பதை மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

அரசியல் அரங்கில் முஸ்லிம் சமூக அரசியலை உயிர்ப்போடு கொண்டு செல்ல அஷ்ரப் காட்டிய வழிமுறைகளை இளம் சந்ததி அறிந்து கொள்ளச் செய்வதோடு, அஷ்ரப் கால அரசியல் சூழ்நிலை தற்கால அரசியல் சூழ்நிலை தொடர்பான தெளிவான ஞானத்தையும் இன்றைய இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சிக்கு இளம் தலைமுறையினரையும், கல்வியலாளர்களையும் உள்ளீர்த்து புத்துயிரளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பெரும் தலைவர் அஷ்ரப் மரணித்து 25 வருடங்கள் நிறைவடையும் தருணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு மீண்டும் உயிரூட்டும் அரசியல் யுக்திகள் தொடர்பில் அவதானஞ்செலுத்த வேண்டும்.

தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் பல சவால்கள், துரோகங்களுக்கும் முகங்கொடுத்து கட்சியை முன்கொண்டு செல்கிறார். மேலும் கட்சியை வலுவூட்டும் நடவடிக்கைகளிலும் கவனஞ்செலுத்தி வருகிறார்.

பின்வரும் விடயங்களில் கவனஞ்செலுத்துவதும் கட்சிக்கு புத்துயிரளிக்கும்.

01.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நோக்கம் பற்றிய தெளிவான அறிவை கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் இளம் தலைமுறைக்கு மீண்டும் நினைவூட்டுதல் அவசியமாகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நோக்கங்களாக பின்வருபவனவற்றைப் பார்க்கலாம்.

*முஸ்லிம்களின் நலன் :-
இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், நலன்கள் மற்றும் முன்னேற்றத்தைப் பாதுகாக்கவும் வளர்க்கவும்.

*ஜனநாயகத்தின் நிலைநிறுத்தம்:-
ஜனநாயக முறைகள், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை நிலைநிறுத்துதல்.

*ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம்:-
முஸ்லிம் சமூகத்தின் உட்பகையைத்தவிர்த்து, அவர்களிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை உருவாக்குதல்.

*தேசிய ஒற்றுமை :-
பிற இன, மத சமூகங்களுடனான நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் மேம்படுத்துதல்.

*அரசியல் பிரதிநிதித்துவம்:-
உள்ளூராட்சி, மாகாண, நாடாளுமன்றம் உள்ளிட்ட சகல் நிலைகளிலும் முஸ்லிம்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறல்.

*சமூக முன்னேற்றம்:-
கல்வி, கலாசாரம், பொருளாதாரம் போன்ற துறைகளில் முஸ்லிம்களின் வளர்ச்சியை உறுதி செய்தல்.

*சமாதானம்:-
நாட்டில் நிலையான அமைதி, சமாதானம், சமநிலை ஆகியவற்றை நிலைநிறுத்த முயற்சித்தல்.

உண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நோக்கங்களை நோக்கும் போது பலரால் இனவாதக்கட்சி என குற்றஞ்சாட்டப்படுவது அடிப்படையற்றது என்பதை விளங்கிக்கொள்வதோடு, ஒரு ஜனநாயகக்கட்சி என்பதை தெளிவாகப்புரிந்து கொள்ள முடிகிறது.

2. புதிய தலைமுறை முன்னேற்றம்:-

இன்றைய தலைமுறை மக்கள் (இளைஞர்கள், கல்வியறிவு பெற்றவர்கள்) - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை “பழைய கட்சி, இனத்துவக்கட்சி” எனக்கருதுகிறார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வீரியத்தை எடுத்துக்கூறி இளைஞர்கள், பெண்கள், கல்வியாளர்கள் கட்சிக்குள் உள்வாங்கி முன்னுரிமை வழங்க வேண்டும்.
தூய்மையான, ஊழலற்ற முகங்களை முன்வைக்க வேண்டும்.

அரசியலில் நம்பிக்கை இழந்த முஸ்லிம் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக, புதுமையான யோசனைகள் (Digital platforms, job creation policies) கொண்டு வர வேண்டும்.

3. மக்கள் பிரச்சினைகளில் நேரடி ஈடுபாடு:-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று “கூட்டணி அரசியல்” என்ற பெயரில் அமைச்சுப்பதவிகளை மட்டுமே நாடுகிறது என்ற குற்றச்சாட்டுண்டு.

இதைத்தகர்க்க, பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் விவசாயிகள், மீனவர்கள், சிறுதொழிலாளர்கள் பிரச்சினைகள் மற்றும் பிரதேச ரீதியாக முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தனித்துவமாக எடுத்துரைக்க வேண்டும்.

கிராம, மாவட்ட மட்டத்தில் உண்மையான சமூகப்பணி செய்ய கட்சி மட்டத்திலுள்ள நிருவாகிகள் தயாராக வேண்டும், இதற்குப்பொருத்தமானவர்கள் அடையாளம் காணப்பட்டு நிருவாகப்பொறுப்புகள் வழங்கப்படுதல் வேண்டும்.

4. இன ஒற்றுமை – பாலம் கட்டும் பங்கு:

அஷ்ரப்பின் கனவான தேசிய ஐக்கிய முன்னணி( NUA ) – எல்லா இனங்களையும் இணைக்கும் மேடையாக பார்க்கப்பட்டது.

இன்று அதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாக உயிர்ப்பிக்க தமிழர்களுடனும் சிங்களர்களுடனும் உண்மையான சமரச அரசியல் செய்ய வேண்டும்.

முஸ்லிம் பிரச்சினைகளைத் தனியாகப்பேசினாலும், நாட்டின் ஒருங்கிணைந்த பிரச்சினைகளிலும் பங்களிக்க வேண்டும். (தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்சொன்ன விடயத்தில் தொடராக பங்களிப்புச்செய்து வருகிறார்)

5. கொள்கை மற்றும் நெறிமுறை புதுப்பிப்பு:-

வெளிப்படையான கொள்கை அறிக்கை (Policy Manifesto) தயாரிக்க வேண்டும்.
ஊழல், குடும்ப அரசியல், பதவி வியாபாரம் ஆகியவற்றைத்தவிர்த்து, நேர்மை என்ற முகத்துடன் செயற்பட வேண்டும்.

6. தேசிய அரசியலில் தனித்துவ பங்கு:-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பாலும் “பெரிய கட்சிகளின் துணைக்கட்சி” என்ற விமர்சனம் இருக்கிறது.

ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தளவில் சுயாதீன முடிவுகளை பல சந்தர்ப்பத்தில் எடுத்திருக்கிறது.

தேர்தலில் தனித்துப்போட்டியிடும் துணிச்சல் இக்கட்சியிடம் இருக்கிறது.

அரசாங்கத்தில் சேரும் போது கூட, முஸ்லிம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் உறுதிகளையும் பல சந்தர்ப்பங்களில் பெற்றுக்கொண்டிருக்கிறது.

தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமின் நடவடிக்கைகள்

*சமூக ஒருமையை மீட்டெடுத்து வலிமை கொடுக்கல்:- பிரிவுகளை ஒன்றிணைத்து சமூகத்தின் அடிப்படை சக்தியை உறுதி செய்தல்.

*பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தல்:- எதிர்க்கட்சியாக இருந்தாலும் சமூகத்தின் உரிமைகள் பாதுகாப்பு விடயங்களில் கவனம்.

*அரசியல் திட்டமிடல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனஞ்செலுத்துதல். தேர்தல் வாக்கு சக்திகளை கணக்கிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

*இளம் தலைமுறைக்கு வழிகாட்டுதல்:-
அஷ்ரப் காட்டிய அரசியல் வழிமுறைகள் இளம் தலைமுறை அறிந்து பின்பற்றச்செய்தல்.

இன்றைய சூழ்நிலையில் அடுத்த தலைமுறை நோக்கி கட்சியை நகர்த்த வேண்டியது அவசியமாகிறது.

இன்றைய சூழ்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தாலும், அடுத்த தலைமுறை மூலம் சமூக அரசியலை வலுப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

*இளம் தலைமுறை உரிமையாளர்களை கட்சியில் சேர்ப்பது :-
இளம் இளைஞர்களின் திறன், கற்பனை மற்றும் உற்சாகத்தை கட்சிக்கு புதுப்புயிர் கொடுக்கப் பயன்படுத்துதல்.

*சமூகப்பிரிவுகளை ஒருங்கிணைத்து ஒருமை வலுப்படுத்தல்:- சமூகத்திலுள்ள அனைவரும் கட்சியின் செயற்பாடுகளுக்கு இணைந்து பங்களிக்கத்தூண்டுதல்.

*அரசியல் கல்வி மற்றும் பயிற்சி:-
அஷ்ரப் கால அரசியல் சூழ்நிலையை அறிந்து, தற்போதைய சூழ்நிலை மற்றும் எதிர்க்கட்சிப் பங்களிப்பை திட்டமிடும் திறன் வளர்த்தல்.

*முஸ்லிஸ் சமூக உரிமைகள் மற்றும் அதிகாரங்களை பாதுகாப்பது :-
சமூகத்தின் நியாயமான உரிமைகள், வாக்கு சக்தி மற்றும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல்.

*முன்னேற்றத்திற்கான திட்டங்கள் உருவாக்கல்:-
சமூக நலன், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் பங்களிப்பு ஆகியவற்றை முன்னெடுக்கும் நடவடிக்கைகள்.

இவ்வாறு, அடுத்த தலைமுறை உருவாக்கப்படும் வழியோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சமூகத்திற்கும் அரசியலிற்கும் உறுதியான பங்களிப்புச் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான மாற்றங்களை மேற்கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரளிப்பதற்கு கட்சிக்கட்டமைப்புகளில் மாற்றங்கள் செய்து பொருத்தமான நபர்களாக இளைஞர்கள், கல்வியலாளர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளீர்த்து பொறுப்புகளைக்கையளித்து, ஆலோசனைகளை வழங்கி, கண்காணிப்புகளை மேற்கொள்வதனூடாக சிறப்பான அடைவுகளைக்காணலாம்.

அஷ்ரப் கால சாதனைகள், பெற்ற உரிமைகள், நுட்பமான அரசியல் நகர்வுகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவரின் செயற்பாடுகள் இணைந்து, எதிர்க்கட்சியாக இருந்தாலும் முஸ்லிஸ் சமூக அரசியலை வலுவாக்கும் வழிமுறையை உருவாக்குகின்றன.

இளந்தலைமுறை இதனைப்பின்பற்றி, சமூக ஒற்றுமை, அதிகாரம் மற்றும் உரிமைகளை வலுப்படுத்தி, அஷ்ரப் இலக்குகளைத்தொடர வேண்டும். இதன் மூலம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முஸ்லிஸ் சமூக அரசியல் மற்றும் எதிர்கால அரசியலில் முக்கிய பாத்திரம் வகிக்கும்.

எனவே, மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்வதோடு நின்று விடாது, அவரின் நோக்கங்களை வெற்றி பெறச்செய்ய அனைவரும் திடசங்கம் பூண வேண்டும்.

மல்வானை பாதுகாப்புக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையின் மாணவர்களுக்கு வீதி ஒழுங்குமுறை பயி...
12/09/2025

மல்வானை பாதுகாப்புக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலையின் மாணவர்களுக்கு வீதி ஒழுங்குமுறை பயிற்சியொன்று இன்று 12.09.2025 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி அளவில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பியகம பொலிஸ் வீதி ஒழுங்குமுறை பொறுப்பதிகாரி திரு ஜயதிஸ்ஸ அவர்களும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதில் குழு தலைவர் சகோதரர் முஹம்மத் ரம்ஸீ உட்பட உறுப்பினர்களும் கலந்துகொண்டு போக்குவரத்து ஒழுங்குமுறை பயிற்சி நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைத்தனர்.

நன்றி -Media Unit
MALWANA DEFENCE COMMITTEE

கல்வி அமைச்சின் சமய மற்றும் விழுமியங்கள் பிரிவின் ஏற்பாட்டில் நடை பெற்ற மீலாத் விழா சிறப்பு நிகழ்ச்சி  நேற்று  மள்வானை அ...
12/09/2025

கல்வி அமைச்சின் சமய மற்றும் விழுமியங்கள் பிரிவின் ஏற்பாட்டில் நடை பெற்ற மீலாத் விழா சிறப்பு நிகழ்ச்சி நேற்று மள்வானை அல் முஸ்தபா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக கல்வி அமைச்சின் சமய மற்றும் விழுமியங்கள் பிரிவின் பணிப்பாபாளர் திருமதி தார்ஷனி அமரசிங்க அவர்கள் கலந்துகொண்டார்கள்.

விசேட அதிதிகளாக கல்வி அமைச்சின் இஸ்லாம் பாட பிரிவுக்கான பொருப்பதிகாரி பிரதிக் கல்விப் பணிப்பாளர் நெளபர் டீன் அவர்களும் சமய மற்றும் விழுமியங்கள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர் .

மாணவர்களின் மேடை நிகழ்ச்சிகள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளும் நடை பெற்றன.

விஷேட பேச்சாளராக திஹாரிய தன்வீர் உயர் கல்வி நிறுவனத்தின் சிரேஷ்ட விறுவுரையாளர் அஷ்சேஹ் அப்ரார் நளீமி அவர்கள் கலந்து கொண்டு சிங்கள மொழியில் சொற்பொழிவாற்றினார்.

மாணவர்களுக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் கல்வி அமைச்சு சார்பாகவும் ஆசிரியர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் மூலம் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு இன்றைய பாடசாலை ரீதியான தேசிய மீலாத் விழா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றன.

நன்றி -Yatihena News


அல் முஸ்தபா மகா வித்தியாலயம்*64 ஆம் ஆண்டு நிறைவு தினத்தினை முன்னிட்டு மாபொரும் இரத்த தான நிகழ்வு*💮 காலம் - 14.09.2025 (ஞ...
12/09/2025

அல் முஸ்தபா மகா வித்தியாலயம்

*64 ஆம் ஆண்டு நிறைவு தினத்தினை முன்னிட்டு மாபொரும் இரத்த தான நிகழ்வு*

💮 காலம் - 14.09.2025 (ஞாயிறு)
💮 நேரம் - காலை 9.00 மணி - மாலை 3.00 மணி வரை

⚛️ இடம் - அல் முஸ்தபா மகா வித்தியாலயம்

*"யார் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவன் போலாவான்'' (சூரா மாயிதா :32)*

உதிரம் கொடுப்போம்!
உயிர் காப்போம்

ஆண்கள் பெண்கள் அனைவரும் வருகை தந்து இரத்ததானம் செய்து சிறப்பிக்குமாறு அழைகின்றோம்.

*බප/ කැල/ අල් - මුස්තාෆා මහා විද්‍යාලයේ*

*64 වන සංවත්සරය නිමිත්තෙන් පැවැත්වෙන*

*ලේ දන්දීමේ මහා පින්කම*

2025.09.14 දින උදෑසන 9.00- 3.00 දක්වා පාසල් පරිශ්‍රයේදී පැවැත්වේ.

*පින් කැමති ඔබ සැමට ආරාධනා*

"යම් කෙනෙකු ජීවිතයක් රැකගනීද, එය ඔහු සියලු මනුෂ්‍යයන්ගේ ජීවිතයම රැකගත්තෙකු වූ සේ වේ."
(සූරා මයිදා:)

-பாடசாலை நிர்வாகம்-

Address

Malwana

Alerts

Be the first to know and let us send you an email when Malwana News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Malwana News:

Share