Mannar Media Voice - மன்னார் ஊடக குரல்

Mannar Media Voice - மன்னார் ஊடக குரல் Mannar Media Voice - மன்னார் ஊடக குரல்

குளிர்பானம் விற்கும் தொழிலாளியின் மகள் தொழில் நுட்பபிரிவில் மாவட்டத்தில் முதலிடம்மன்னார் மாவட்டத்தில் பழைய சதோச கட்டிடத்...
30/08/2022

குளிர்பானம் விற்கும் தொழிலாளியின் மகள் தொழில் நுட்பபிரிவில் மாவட்டத்தில் முதலிடம்

மன்னார் மாவட்டத்தில் பழைய சதோச கட்டிடத்திற்கு முன் பகுதியில் பல வருடங்களாக தள்ளுவண்டியில் சர்பத்,பழகலவை மற்றும் குளிர்பானம் விற்கும் தொழிலாளியின் மகள் உயிர்முறைமையியல் தொழில் நுட்பபிரிவில் மூன்று A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதல் இடத்தையும் தேசிய ரீதியில் 85 வது இடத்தையும் பெற்றும் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்

மன்னார் உப்புக்குளத்தை சேர்ந்த மொஹமட் பாருக் பாத்திமா வாஸ்மியா மன்/அல்ஹஸ்கர் பாடசாலையில் கல்வி கற்றுவந்த நிலையில் 2021 ஆண்டு இடம் பெற்ற உயர்தர பரீட்சையில் உயிர்முறைமையியல் தொழில் நுட்பம்- A சித்தி

மனை பொருளியல்- A சித்தி

தொழில் நுட்பத்திற்கான விஞ்ஞானம்-A பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்

ஐந்து பிள்ளைகளை கொண்ட மிகவும் குறைந்த வருமானமுடைய குடும்பத்தை சேர்ந்த பாத்திமா வாஸ்மியா வீட்டில் மூன்றாவது பிள்ளையாவர்

இவரது தந்தை தள்ளுவண்டியில் குளிர்பானம் விற்பனை செய்தும் சர்பத் விற்பனை செய்தும் கிடைக்கின்ற வருமானத்தில் குடும்பத்தினை கொண்டு சென்றதுடன் பிள்ளைகளை சிறப்பாக கல்வியில் முன்னேற்றியிள்ளார்

பாத்திமா வாஸ்மியாவுடன் சேர்த்து இத் தந்தையின் மூன்று பிள்ளை இதுவரை பல்கலைக்கழகத்தில் கல்விகற்று வருகின்றமை குறிப்பிடதக்கது

மன்/ #சித்திவிநாயகர்  #இந்து  #கல்லூரி உயர்தர பரீட்சையில் மாவட்டத்தில் முதலிடம்6 மாணவர்கள் 3 A சித்தி பொறியியல் பிரிவுக்...
30/08/2022

மன்/ #சித்திவிநாயகர் #இந்து #கல்லூரி உயர்தர பரீட்சையில் மாவட்டத்தில் முதலிடம்

6 மாணவர்கள் 3 A சித்தி பொறியியல் பிரிவுக்கு நான்கு மாணவர்கள் தெரிவு

கல்வி பொது தர உயர் தர பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரி முதலிடத்தை பெற்றுள்ளது 72.36 சித்திவிகிதத்துடன் முதல் இடத்தை பெற்றுள்ளது என்பதுடன் பொறியியல் பிரிவுக்கு என மன்னார் மாவட்டத்திற்கு 7 மாணவர்களுக்கான வாய்ப்பு காணப்பட்ட நிலையில் நான்கு மாணவர் சித்திவிநாயகர் இந்து கல்லூரியை சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

அதே நேரம் உயர்தர பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் சிவபாலன் யுதர்சன் மூன்று A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியாக பெளதீக விஞ்ஞான பிரிவில் முதல் இடத்தையும் நிலாமதி அன்ரனி சில்வஸ்டர் 3 A சித்திகளை பெற்று கலைபிரிவில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளனர்

அத்துடன் நகுலராஜா கதுஷன் 3 A சித்திகளை பெற்று வணிகப்பிரிவில் இரண்டாவது இடத்தையும் இருதயராஜ தியோஜின் குரூஸ் 3 A சித்தியை பெற்று உயிரியல் விஞ்ஞான பிரிவில் மூன்றாமிடத்தினையும் ஜோதிவேல் ஜதுர்சினி 3A சித்திகளை பெற்று கலைப்பிரிவில் மூன்றாம் இடத்தையும் அரசகுமார் கார்திகா 3A சித்தியை பெற்று கலைப்பிரிவில் நான்காம் இடத்தையும் உதயகுமார் ABC சித்திகளை பெற்று பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்

மன்/சித்திவிநாயகர் இந்துகல்லூரியில் கடந்த வருடம் 152 மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய நிலையில் அதில் 110 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடதக்கது

‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில்...
02/08/2022

‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் நூறு (100) நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று திங்கட்கிழமை (1)காலை 11 மணி அளவில் மன்னார் பிரதான சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் இடம் பெற்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் நூறு (100) நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ , மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ். திலீபன் மற்றும் கிராம மட்ட அமைப்புகள் ,விவசாய, மீனவ சங்கங்கள்,பெண்கள் அமைப்புகள் , மாணவர் அமைப்புகள்,சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள், மன்னார் மெசிடோ பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.

குறித்த செயல் திட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களால் மகஜர் ஒன்று வாசிக்கப்பட்டது….

குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,

“நாங்கள் நாட்டை துண்டாட வோ, தனியரசு கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம்”

“வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும்” “13 வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்க துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது”

இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் சிறுபான்மை தமிழ் மக்களான நாம் ஆட்சிக்கு வந்த சிங்கள பெரும்பான்மை அரசுகளின் இனவாதக் கொள்கைகளால் பல்வேறு வழிகளிலும் அடக்கப்பட்டு வந்துள்ளோம். அது இன்று வரை தொடர்கிறது.

இதுவே தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் குறித்து சிந்திக்கத் தூண்டியது. இதன் நியாயத்தன்மையை பிராந்திய நட்பு நாடான இந்தியாவும் சர்வதேச நாடுகளும் என்றோ ஏற்றுக்கொண்டுள்ளன.

அதன் விளைவே இந்தியா, இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் சார்ந்து இலங்கை அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் (1987 இன் இந்திய – இலங்கை உடன்படிக்கை), 1999 – 2008 வரையான காலப்பகுதியில் நோர்வேயின் மத்தியத்துவம் மற்றும் 2002இல் இலங்கையில் சமாதானம், புனர்வாழ்வு மற்றும் மீளக் கட்டுமானம் சார்ந்து பங்களிப்பு செய்வதற்கு ஜப்பானின் அமைச்சரவை திரு. யசூசி அகாசி அவர்களை நியமித்தமை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.

1987 இன் பின்னர் இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசுகள் எதுவுமே அதிகாரப்பரவலாக்கத்தை நிராகரிக்கவில்லை. விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் அதிகாரப் பரவலாக்க உரையாடலை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது.

1987இல் ஜனாதிபதி திரு. ஜே. ஆர். ஜயவர்தன இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக அதிகாரப் பரவலாக்கத்துக்கான 13வது திருத்தச்சட்டத்தை அரசியலமைப்பில் இணைத்தார்.

1990இல் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அரசியல் தீர்வுகளுக்கான திட்டங்களை முன்வைத்தார். இவரின் காலத்தில், 1991இல், திரு. மங்கள முனசிங்க தலைமையில் 45 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

1994 திருமதி. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாயிருந்த காலத்தில், 1995இல் திரு. நீலன் திருச்செல்வம் மற்றும் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தலைமையில் “ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு” அடங்கலான தீர்வுப் பொதி தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2001இல் ஆட்சிக்கு வந்த திரு. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக கொண்ட அரசாங்கம் நோர்வே மத்தியத் துவத்துடன் சுயாட்சி (பெடரல் ) முறையில் அதிகார பரவலாக்கத்துக்கு இணங்கியது நினைவுகூறத்தக்கது.

2015இல் ஆட்சிக்கு வந்த விக்கிரமசிங்க – சிறிசேன “நல்லாட்சி” அரசு, ஐ.நா. மனித உரிமைப் பேரவையால் ஏற்கப்பட்ட தீர்மானத்தின் இணைப்பங்காளியாக இருந்தது.

இத்தீர்மானத்தின் செயற்பாட்டு உறுப்புரை 16 ஆனது, அரசியல் தீர்வை, அதிகாரப் பரவலாக்கத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறது.

அவ்வகையில், வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு, அதிகாரப் பரவலாக்கம் என்பது இலங்கையின் அரசியலமைப்பின் அங்கமாயிருப்பதுடன், சர்வதேச சமூகத்தினால், ஐக்கிய நாடுகள் சபையினாலும் வரவேற்கப்படுகின்ற ஒன்றாகும்.

ஆகவே, எமக்கான உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கும், நட்பு நாடான இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்தி கொண்டு வடக்கு கிழக்கு வாழ் மக்களான நாம், எமது சாத்வீகமான, ஜனநாயகமான நூறு நாட்கள் செயல்முனைவு ஆவணி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கிறோம்.

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்”என குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர் வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள மடு ஆவணி திருவிழா தொடர்பாகவும் முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும...
02/08/2022

எதிர் வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள மடு ஆவணி திருவிழா தொடர்பாகவும் முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் முன் ஆயத்த கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை(1)காலை 11.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார், சுகாதார திணைக்கள அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ், ராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாக ஆராயப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினாலும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருவார்கள் என்ற காரணத்தால் அதற்கு அமைவாக திணைக்களங்கள் தொடர்பான சேவைகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விசேட புகையிரத சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொழும்பில் இருந்து மடு புகையிரத நிலையத்திற்கும் ,அநுராத புரத்தில் இருந்து மடு புகையிரத நிலையத்திற்கும் எதிர்வரும் 13ஆம், 14ஆம், மற்றும் 15 ஆம் திகதிகளில் வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

மடு புகையிரத நிலையத்தில் இருந்து மடு திருத்தலத்திற்கு பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று மீளவும் ஆரம்பித்துள்ள மையினால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து திருவிழா திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) மன்னார் மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப...
01/08/2022

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) மன்னார் மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட பின்தங்கிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட 400 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள்
வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 2500 ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதிகள் இவ்வாறு வழங்கப்பட்டு வருகின்றது.

நானாட்டான் மற்றும் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அச்சங்குளம், அறுகம் குன்று பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 18 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 12 குடும்பங்களுக்கும், காயக்குழி மற்றும் முள்ளிக்குளம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறிய 18 குடும்பங்களுக்கும், மருதமடு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 10 குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில், பணியாளர்கள் குறித்த கிராமங்களுக்குச் சென்று குறித்த கிராம பிரதிநிதிகளுடன் இணைந்து நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கூலித்தொழில் மேற்கொள்ளும் குடும்பத் தலைவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில்,குறித்த கிராமங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டுள்ளதோடு, தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னி மாவட்ட சிவில் சமூக இணையங்களின் கலந்துரையாடல் வவுனியா மாவட்டத்தில் மன்னர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தி...
27/07/2022

வன்னி மாவட்ட சிவில் சமூக இணையங்களின் கலந்துரையாடல் வவுனியா மாவட்டத்தில் மன்னர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் முல்லை தீவு மாவட்ட ECDO நிறுவனம் மற்றும் வவுனியா மாவட்ட PFJ நிறுவனத்தின் ஏற்பாட்டில் வவுனியா மன்னார் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சிவில் சமூக பிரதிநிதிகளினால் இக்கலந்துரையாடல் நடாத்தப்பட்டது.

18/07/2022

வெளிநாடு செல்பவர்களுக்கு அதிசொகுசு பேருந்து சேவை
====================================
தற்போது மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் வெளிநாடுகளிலிருந்து அதிகமானோர் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். அவ்வாறு கொழும்பிலிருந்து மன்னார் மாவட்டத்திற்கு வருவதற்கு அல்லது மன்னார் மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு செல்வதற்கு சராசரியாக 70 லிட்டர் எரிபொருள் தேவைப்படுகின்றது.

இது வரையில் வெளிநாடு செல்பவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டிருந்தது ஆனால் இனிவரும் காலங்களில் இவ்வளவு தொகை ஒரு தனி நபருக்காக செலவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதனால் அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்கள் சொகுசு பேருந்து முகாமையாளர் இடம் தொடர்பு கொண்டு இவ்வாறு வெளிநாடு செல்பவர்களுக்கு அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கொழும்பிலிருந்து மன்னாருக்கு வருவதற்கு அதிசொகுசு பேருந்து சேவை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

அந்த வகையில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் கொழும்பிலிருந்து மன்னார் மாவட்டத்திற்கும். ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் மன்னாரிலிருந்து கொழும்பிற்கு செல்வதற்காக ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செல்பவர்கள் 0774902440 என்ற தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு ஆசனங்களை பதிவு செய்துகொள்ள முடியும்.

மன்னாரில் இருந்து கொழும்புக்கு 1 லட்சம் ரூபாவும் பேசாலையில் இருந்து கொழும்பிற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாவும் van கூலியாக அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜூலை 15ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3:30 மணி வரை, பேசாலை வைத்தியசாலையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஏற...
18/07/2022

ஜூலை 15ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3:30 மணி வரை, பேசாலை வைத்தியசாலையில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“இரத்த தானம் செய்வோம் இன்னுயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் , வெற்றியின் சிறகுகள் எனும் குழுவினரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரத்தம் இருந்தால் இதயம் இயங்கும். அந்த இதயத்தில் இரக்கம் இருந்தால் இன்னும் ஒரு இதயம் சேர்ந்து இயங்கும். இதை உணர்வோம் உதவுவோம்.

இதை மையமாகக் கொண்டு பல இளைஞர்கள் இரத்த தானம் வழங்கும் நிகழ்வுகளில் இணைந்துள்ளார்கள் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்..

வெற்றியின் சிறகுகள் குழு

மன்னார் அரசாங்க பேரூந்து டிபோக்கு வரும் எரிபொருளில் இருந்து மன்னார் தனியார் பேருந்துகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க முடிய...
06/07/2022

மன்னார் அரசாங்க பேரூந்து டிபோக்கு வரும் எரிபொருளில் இருந்து மன்னார் தனியார் பேருந்துகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என மன்னார் அரச பேருந்து சாலை நிறைவேற்று அதிகாரி ஸாஹிர் தெரிவித்துள்ளார்.

மன்னார் அரசாங்க அதிபர் தலைமையில் மன்னார் பேருந்து சாலை நிறைவேற்று அதிகாரி மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் இணைந்து நடாத்திய கூட்டத்திலேயே இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை உறுப்பினர்கள் எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டம்https://youtu.be/ofywQCOZCN4
06/07/2022

மன்னார் நகர சபை உறுப்பினர்கள் எரிபொருள் கோரி ஆர்ப்பாட்டம்
https://youtu.be/ofywQCOZCN4

பெற்றோல் விநியோக நடைமுறை --  மன்னார் மாவட்டம்.   எதிர்வரும் 05.07.2022 தொடக்கம் மன்னார் மாவட்டம் முழுவதும் பிரதேச செயலகங...
06/07/2022

பெற்றோல் விநியோக நடைமுறை -- மன்னார் மாவட்டம்.

எதிர்வரும் 05.07.2022 தொடக்கம் மன்னார் மாவட்டம் முழுவதும் பிரதேச செயலகங்கள் ஊடாக வாகனங்களுக்கென வழங்கப்பட்ட எரிபொருள் அட்டையின் அடிப்படையில் பெற்றோல் விநியோகிக்கப்படும்.

குறிப்பிட்ட கிராம அலுவலர்கள் பிரிவுகளை இணைத்து அவ் வாகனங்களுக்கு ஒரு நாள் எனவும் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்கான நேரமும் முதல் நாள் அறிவிக்கப்படும்.

அத்தோடு சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு விஷேடமாக வழங்கப்படும் எரிபொருள் விநியோகத்தின் போது சுகாதார திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அட்டையுடன் பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக அட்டையையும் கொண்டு வருதல் அவசியம்.(மன்னார் மாவட்ட உத்தியோகத்தர் மட்டும்).

தற்போது மாவட்டத்தின் இரு IOC நிலையத்தினால் வழங்கப்பட்டாலும் 15ம் திகதியின் பின்னர் ஏனைய எரிபொருள் நிலையங்களுக்கும் கிடைக்கப்பெற்றால் கிராமங்களுக்கு கிட்டிய நிலையங்களில் வழங்கக்கூடியதாக இருக்கும்.

மாந்தை மேற்கு பிரதேசத்தில் எரிபொருள் நிலையம் இல்லாமையால் கிட்டிய நிலையத்தினூடாக வழங்கப்படும்.

முசலி மற்றும் மடு பிரதேச வாகனங்களுக்கு அண்மைய நிலையங்களில் நாள் ஒதுக்கப்படும்.

02/07/2022

மன்னாரில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக முச்சக்கர வண்டிகள் சாரதிகள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பாரிய திண்டாட்டம்.

ஆனால் எரிபொருட்கள் வேறு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் விசனம்.

மன்னார் IOC எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருற்களை பெற்றுக் கொள்வதற்காக காத்திருக்கின்ற மக்கள். ஆனால் எரிபொருள் வி...
02/07/2022

மன்னார் IOC எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருற்களை பெற்றுக் கொள்வதற்காக காத்திருக்கின்ற மக்கள். ஆனால் எரிபொருள் விநியோகம் இடம்பெறவில்லை.

 #கள்ளச்சந்தையில் எரிபொருள் விநியோகம்.  #தலைமன்னாரில் மக்கள் குழப்பம் http://voiceofmedia.lk/?p=64571
02/07/2022

#கள்ளச்சந்தையில் எரிபொருள் விநியோகம். #தலைமன்னாரில் மக்கள் குழப்பம் http://voiceofmedia.lk/?p=64571

இன்றய செய்திகள்காணொளிகள் கள்ளச்சந்தை வியாபாரகளின் குழப்பகரமான நிலையால் தலைமன்னாரில் எரிபொருள் விநியோகம் பா...

 #மன்னார்  #பிராந்திய  #சுகாதார  #பணிப்பாளர்  #ரி_வினோதன் மன்னார் சுகாதார உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம் https://youtu.be...
02/07/2022

#மன்னார் #பிராந்திய #சுகாதார #பணிப்பாளர் #ரி_வினோதன்
மன்னார் சுகாதார உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்
https://youtu.be/zHWmnUzX2Tc

தலைமன்னார் வீதி IOC எரிபொருள் நிரப்பும் நிலையத்தில்https://youtu.be/9DHOxwyTIXE
02/07/2022

தலைமன்னார் வீதி IOC எரிபொருள் நிரப்பும் நிலையத்தில்

https://youtu.be/9DHOxwyTIXE

Address

Mannar
Mannar Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mannar Media Voice - மன்னார் ஊடக குரல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share