CMCMN-Mannar

CMCMN-Mannar Organization:

The Centre for Mass Communication and Media Network - Mannar

நாடாளுமன்ற சூழலில் உள்ளாடை போராட்டம்...
06/05/2022

நாடாளுமன்ற சூழலில் உள்ளாடை போராட்டம்...

பதவி விலகியது தேசிய விளையாட்டு கவுன்சில்
06/04/2022

பதவி விலகியது தேசிய விளையாட்டு கவுன்சில்

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன் தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.

நாமல் ராஜபக்ஸ விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2020-ல் தேசிய விளையாட்டு கவுன்சில் அமைக்கப்பட்டது.

எனினும் நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலை, மற்றும் அமைச்சர்களின் இராஜினாமாவை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம்...

Mahela Jayawardene
Julian Bolling
Kumar Sangakkara
Dilantha Malagamuwa
Kasturi Chellaraja Wilson
Supun Weerasinghe
Rohan Fernando
Ruwan Keragala
Sanjeewa Wickramanayake
Major General Rajitha Ampemohotti
Lieutenant General Shaveendra Silva
Rowena Samarasinghe
Yaswanth Muttetuwegama
A.J.S.S Edirisooriya
Thiyumi Abeysinghe ஆகியோர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹர்ஷ டி சில்வாவை ஜனாதிபதியாக்குவோம்...
06/04/2022

ஹர்ஷ டி சில்வாவை ஜனாதிபதியாக்குவோம்...

கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பொருளாதாரம் தொடர்பில் நன்கு கற்ற ஹர்ஷ டி சில்வாவை தற்காலிகமாக ஜனாதிபதியாக்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,இந்த நாடாளுமன்றில் எத்தனையோ நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் ஆனால் 225 உறுப்பினர்களையும் மக்கள் வெறுக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன? இதுதான் இந்த நாட்டின் நிலைமை எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு வருடத்திற்கு சம்பளம் வேண்டாம் எனவும், நாடாளுமன்றில் உள்ள உணவகத்தில் உணவு உட்கொள்ள மாட்டேன் என தெரிவித்த ஹரின், அனைத்து எம்.பிக்களுக்கும் இவ்வாறு கூற முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

நாடு இப்போது பாரிய பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ கௌரவமாக பதவி விலக வேண்டும். மக்களும் அதையே கோருகிறார்கள். கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பொருளாதாரம் தொடர்பில் நன்கு கற்ற ஹர்ஷ டி சில்வாவை தற்காலிகமாக ஜனாதிபதியாக்குவோம்.

அவருக்கு தெரியும் பொருளாதார நெருக்கடியை எவ்வாறு தீர்க்க வேண்டுமென்பது. அதை விட்டுவிட்டு பதவிக்காகவோ, தேர்தலுக்காகவோ போட்டியிடவேண்டிய நேரம் இது இல்லை எனவும் குறிப்பிட்டார்.

அப்படி இல்லையென்றால், மக்கள் விடுதலை முன்னணியாவது ஒரு அணியாக திரட்டிக்கொண்டு தற்காலிகமாக அரசை பொறுப்பேற்று செய்து காட்டுவதற்கு வாய்ப்பளிப்போம்” என தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக குறையும்..
06/04/2022

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக குறையும்..

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2022 ஆம் ஆண்டில் 2.4% ஆக குறையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி கணித்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 1.3 சதவீதம் சரிவாகும். 2021 இல், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.7 சதவீதமாக இருந்தது.

கடன்கள், குறைந்த வெளிநாட்டு கையிருப்பு மற்றும் கொரோனா தொற்று ஆகியவை வீழ்ச்சிக்கு காரணம் என கூறப்படுகின்றது.

இதேவேளை அடுத்த ஆண்டில் 2.5% ஆக சிறிதளவு முன்னேற்றம் காணும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.

பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறை ...
06/04/2022

பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறை ...

நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று (06) முதல், தவணை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அடுத்த தவணை எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளது.

06/04/2022

அரசாங்கத்தின் செயற்பாடுகளால்தான் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருள்களுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் வைத்திய சேவைகளை முழுமையாக முன்னெடுக்க முடிவில்லை எனவும், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்பாக இன்று (06) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிலைய வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் தாதிய உதவியாளர்கள் இணைந்து நண்பகல் 12 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் இப்போராட்டத்தை ஆரம்பித்து, பிரதான வீதி வரை சென்று அங்கு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வைத்தியர்கள், “தற்போது மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்குத் தேவையான பொருள்கள் பற்றாக்குறையாக உள்ளன. இருப்பதைக் கொண்டு மக்களுக்கு சேவையை வழங்கி வருகின்றோம். சிக்கனமாக பயன்படுத்துகின்றோம்.

“இந்த நிலை தொடருமானால் வைத்திய சேவையை மக்களுக்கு தொடர்ச்சியான வழங்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மக்கள் பெரும் சவால்களுக்கு முகங் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும்” என்றனர்.

வீட்டுக்கு முன்னால் போராடுங்கள்..
06/04/2022

வீட்டுக்கு முன்னால் போராடுங்கள்..

ராஜபக்சக்களின் வீட்டுக்கு முன்னால் சென்று போராட்டம் நடத்துங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார்.


இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், மக்கள் தமது போராட்டத்தை கைவிடக்கூடாது என்பதே தனது வேண்டுகோள் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அரசாங்கத்தின் பிரதம கொறடாவான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தீவிரவாதிகள் என கூறியமைக்கும் அவர் கடும் கண்டனத்தை வெளியிட்டார்.

பால் பக்கெட் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த 89 வயதான தாய் ஒருவரும் தீவிரவாதியா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

225 பேரும் வெளியேற வேண்டும் என மக்கள் கூறுவதன் அர்த்தம் அமைப்பில் மாற்றம் வேண்டும், நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும் என்பதே என்றும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றே இந்த தலைமுறை விரும்புகிறது என்றும் அது நடக்கும் வரை போராட்டம் ஓயாது என்றும் அவர் தெரிவித்தார்.

அவசரகால நிலை இரத்து..
06/04/2022

அவசரகால நிலை இரத்து..

அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட பிரகடனத்தை இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

இன்று(செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

போராட்டங்களில் கொழும்பு பேராயர்
05/04/2022

போராட்டங்களில் கொழும்பு பேராயர்

பொருளாதார நெருக்கடிக்கு நிலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் இணைந்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேராயருடன் அருட்தந்தையர்கள்இ கன்னியாஸ்திரிகள் கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து கொண்டன.

இந்த பேரணி பொரளை பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவசரகாலச் சட்டம்.
05/04/2022

அவசரகாலச் சட்டம்.

அவசரகாலச் சட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்திருந்தார்.


அவசரகாலச் சட்டம் தொடர்பான அறிவிப்பு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, கூடிய விரைவில் அனுமதிக்கப்பட வேண்டும் அல்லது நிராகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேற்படி அறிவித்தலை நாடாளுமன்றம் அங்கீகரிக்குமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் வகையில் நாளை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இல்லையேல் 14 நாட்கள் இருக்க அனுமதித்து, பின்னர் காலாவதியாகி அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்த வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது கூட, நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி, அவசரகால பிரகடனத்தை வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியும் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானம்
05/04/2022

பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானம்

பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானம்

40க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (5) முதல் சுயாதீனமாக செயற்படுவதற்கான தீர்மானத்தை பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளைச் சேர்ந்த 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக பாராளுமன்றத்தில் செயற்பட தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 12 ஆளும் கட்சி எம்பிக்களும் இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தீர்மானங்களை அறிவித்துள்ளனர்.

இன்று முதல் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று காலை ஊடகங்களுக்கு அறிவித்தது.

113 ஆசனங்களுடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை வெளிப்படுத்தும் எந்தவொரு குழுவிற்கும் ஆட்சி அமைக்க அதிகாரத்தை வழங்கத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளமைக்காக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கம் பதவி விலகுமாறு கோரி நாடு முழுவதும் பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இராஜிநாமா செய்தார் அலி சப்ரி..
05/04/2022

இராஜிநாமா செய்தார் அலி சப்ரி..

ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார்...
04/04/2022

ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார்...

ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார்...

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார் எனவும் நாட்டை சீர்குலைக்க விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஆளும் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பிக்களுடனான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமது அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாததன் காரணமாக அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக பல ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களின் இந்த எரியும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேராசிரியர் சோ. சந்திரசேகரம் காலமானார்
04/04/2022

பேராசிரியர் சோ. சந்திரசேகரம் காலமானார்

பேராசிரியர் சோ. சந்திரசேகரம் காலமானார்

கொழும்பு பல்கலைக் கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் சோ. சந்திரசேகரம் தமது 78 ஆவது வயதில் காலமானார்.

மாரடைப்பு காரணமாக, காலி-பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்ததாக உறவினர்கள் அறிவித்துள்ளார்கள்.

பேராசிரியர் சோ.சந்திரசேகரம் 1944, டிசம்பர் மாதம் பதுளையில் பிறந்தார்.

பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் யப்பானின், ஹிரோசிமா பல்கலைக் கழகங்களின் பட்டதாரியான இவர், இலங்கையின் தமிழ் கல்வித்துறைக்கு பாரிய பங்களிப்புக்களை செய்தார்.

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக சிறப்பாக கடமைவகித்தார்.

தேசிய கல்வி ஆணைக்குழுவின் முன்னாள் அங்கத்தவராக பேராசிரியர் சோ.சந்திரசேகரம் பணியாற்றினார்.

கொழும்பு தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் அவர் விளங்கினார்.
தமது எழுத்தாற்றலை, சமூக மேம்பாட்டுக்காக பயன்படுத்தினார்.

மும்மொழி புலமை கொண்ட பேராசிரியர் சந்திரசேகரம், முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற கொள்கையை முதன் முதலில் முன்மொழிந்த பெருமை காலம் சென்ற பேராசிரியர் சோ.சந்திரசேகரத்தைச் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதி அமைச்சர் அலி சப்றி இராஜினாமா..
03/04/2022

நீதி அமைச்சர் அலி சப்றி இராஜினாமா..

நீதி அமைச்சர் அலி சப்றி இராஜினாமா..

நீதி அமைச்சர் அலி சப்றி தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இன்றிரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளையடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் அலி சப்றி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதவியில் இருந்து விலகும் நாமல்..
03/04/2022

பதவியில் இருந்து விலகும் நாமல்..

பதவியில் இருந்து விலகும் நாமல்..

அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பதவி விலகல் தனிப்பட்ட வகையில் தனக்கு கவலையளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

03/04/2022

இடைக்கால அரசு அமையும் சாத்தியம்..!

சாதாரண பெரும்பான்மையையும் இழக்கிறது அரசு.!

டக்ளஸ், பிள்ளையான், ஜீவன் கைவிரித்தால் ஆப்பு உறுதியாகலாம்..!

பங்காளிகளின் வெளியேற்றம், இராஜாங்க அமைச்சர்களின் இராஜினாமா, ஆளுங்கட்சியினரின் அதிருப்தி ஆகியவற்றுக்கு மத்தியில் தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் அரசாங்கம் வசம் -
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -117
ஈபிடிபி - 02
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 01
அரவிந்தகுமார் - 01
டயானா - 01 - 122 ஆசனங்களே உள்ளன.

அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக்கொள்ள ஏழு பேர் தயார் நிலையில் இருக்கின்றனர்.

1. சுசில் பிரேமஜயந்த
2. விஜயதாச ராஜபக்ச
3. சந்திம வீரக்கொடி
4. விதுர விக்ரமநாயக்க
5. பிரேமநாத் சீ தொலவத்த
6. நிமல் லான்சா
7. ரொஷான் ரணசிங்க
122 - 7 = 115

ஆக - ஆளுங்கட்சி வசம் தற்போது 115 ஆசனங்களே உள்ளன. இந்நிலையில் அரசிலிருந்து வெளியேற தயார் என்ற அறிவிப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் விடுத்துள்ளது.
115-2 = 113

எனவே, டக்ளஸ், பிள்ளையான் ஆகியோர் ( 2+1 = 3) அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டால் (113 - 3 = 110) நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சாதாரண பெரும்பான்மையை இழந்துவிடும்.
✍️சிலவேளை, அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (4), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (02), அலி சப்ரி (புத்தளம்) (01) ஆகியோரின் ஆதரவை பெற்றால் அல்லது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் எதிரணி எம்.பிக்களை வளைத்து போட்டால் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

தற்போதைய சூழ்நிலையில் கட்சி தாவல்கள் என்பது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே.. தேசிய மட்டத்திலான தேர்தலொன்றுக்கும் சாத்தியம் குறைவு.

எனவே, இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு அரசு முற்படலாம்.

நாடாளுமன்றத்தின் பதவிகாலம் இரண்டரை வருடங்கள் முடிந்த பின்னர் 2023 பெப்ரவரியில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைக்கலாம். ( தற்போதைய சூழ்நிலையில் இதுவே ஏற்புடைய நடவடிக்கையென அரசியல் கட்சிகள் கருதுகின்றன.)

ஏனெனில் சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணியின் நிலைப்பாடு இதுவாகவே உள்ளது.

பொதுத்தேர்தலில் மொட்டு கட்சி (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் ஆசனங்கள் சகிதம்) 145ஆசனங்களை வென்றது.

இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி - 14 (நா.உ)
தேசிய சுதந்திர முன்னணி - 06
ஜனநாயக இடதுசாரி முன்னணி - 02
பிவிதுரு ஹெல உறுமய - 01
கம்யூனிஸ் கட்சி - 01
லங்கா சமசமாஜக்கட்சி - 01 (தேசியப்பட்டியல்)
‘யுதுகம’ - 01 ஆகியன அரசை எதிர்க்கும் நிலைப்பாட்டில் உள்ளன.
✍️145 -26 = 119
எமது மக்கள் சக்தி - 01
தேசிய காங்கிரஸ் - 01 என்பவனும் 11 கட்சிகளின் கூட்டணியில் உள்ளன. 119 -2 = 117 ( அரசு வசம் தற்போது உள்ள ஆசனங்கள்)

எனவே.. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் தற்போது 117 ஆசனங்களே உள்ளன என்று மேலே குறிக்கப்பட்டுள்ளது.

அவசரகால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருந்தாலும் அதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அதனை நிறைவேற்றிக்கொள்வதற்குகூட அரசு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடலாம்...

Address

"Stella Villa", Pesalai-06, Mannar
Mannar Town
41000

Alerts

Be the first to know and let us send you an email when CMCMN-Mannar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CMCMN-Mannar:

Share

Category