varnamnews

varnamnews news

கிளிநொச்சியில் புகையிரதத்துடன் கார் மோதி 17 வயது மாணவி ப*லி இருவர் படுகாயம்=================================கிளிநொச்சி –...
26/08/2026

கிளிநொச்சியில் புகையிரதத்துடன் கார் மோதி 17 வயது மாணவி ப*லி இருவர் படுகாயம்
=================================

கிளிநொச்சி – யாழ். பல்கலைக்கழக வீதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவையில் இன்று (26.08.2026) இடம்பெற்ற கோர விபத்தில் 17 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து இன்று முற்பகல் சுமார் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம், குறித்த புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான காரில் பயணித்த கிளிநொச்சி, செல்வாநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய தினேஸ்குமார் டிலானி (அக்சயா) என்ற மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், காரில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கணவனின் கத்திக்குத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் பலி===============================தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் கணவனின் க...
26/08/2026

கணவனின் கத்திக்குத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் பலி
===============================
தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (26) புதன்கிழமை காலை கணவனால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயத்திற்கு உள்ளான குறித்த பெண் தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தலைமன்னார் ஸ்டேஷனை சேர்ந்த கோகுலன் சோனியா வயது 28 என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் கணவர் தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு.விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

26/08/2026

கிளிநொச்சியில் இன்று காலை (26) புகையிரத கடவையை கடக்க முயன்ற கார் மீது புகையிரதம் மோதியதில் 17 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலிமேலும் இருவர் படுகாயம் #வர்ணம்நியூஸ் #மன்னார்செய்திகள்

சீன அரசின் உதவியுடன் 49 மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கல்===============================சீன அரசாங்கத்தின் உதவியுடன் ...
25/08/2026

சீன அரசின் உதவியுடன் 49 மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கல்
===============================
சீன அரசாங்கத்தின் உதவியுடன் தலைமன்னார் உள்ளிட்ட மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 49 மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (25) தலைமன்னாரில் இடம்பெற்றது.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு மீனவருக்கும் தலா ஆறு மீன்பிடி வலைகள் வீதம் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் செயலாளர், மன்னார் மாவட்ட பிரத்தியேக செயலாளர், கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர், கடற்றொழில் அமைச்சின் மன்னார் மாவட்ட இணைப்பாளர், சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் மீனவ பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்ட இந்த உதவிக்கு மீனவ பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற உணவகத்திற்கு ரூ.9.5 இலட்சம் தண்டம்👇 https://varnamnews.com/?p=16847
25/08/2026

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற உணவகத்திற்கு ரூ.9.5 இலட்சம் தண்டம்👇
https://varnamnews.com/?p=16847

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் பொருளாதாரத்தை பற்றி பேசுகிறார்கள் -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ👇 https://varnamnews....
25/08/2026

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் பொருளாதாரத்தை பற்றி பேசுகிறார்கள் -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ👇 https://varnamnews.com/?p=16843

ரசாயன திரவத்தை தண்ணீர் என நினைத்துப் பருகி மூன்று வயது சிறுமி உயிரிழப்பு 👇 https://varnamnews.com/?p=16840
25/08/2026

ரசாயன திரவத்தை தண்ணீர் என நினைத்துப் பருகி மூன்று வயது சிறுமி உயிரிழப்பு 👇
https://varnamnews.com/?p=16840

பலத்த பாதுகாப்புடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்படும் 'பஸ் லலித்' https://varnamnews.com/?p=16...
25/08/2026

பலத்த பாதுகாப்புடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்படும் 'பஸ் லலித்'
https://varnamnews.com/?p=16833

24/08/2026

யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட சாவகச்சேரி, கோப்பாய் மற்றும் வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் நகைகளைத் திருடி அதனை வேறு நபர்கள் ஊடாக அடகு வைத்த பிரதான சந்தேகநபர் ஒருவரும் அவருக்கு உதவிய மேலும் இருவரும் சாவகச்சேரி பொலிஸாரால் 23/08 ஞாயிற்றுக்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளனர். #வர்ணம்நியூஸ் #மன்னார்செய்திகள்

Address

Mannar
41000

Alerts

Be the first to know and let us send you an email when varnamnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share