The Real Frame

The Real Frame உறுதி செய்யப்பட்ட உண்மை தகவல்கள் மட்டுமே வெளியிடப்படும்

146 கோடி 39 லட்சம் (1,463,900,000) மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு 58 பதக்கங்கள்.வெறும் 2 கோடி 32 லட்சம் (23,200,000) மக...
28/10/2025

146 கோடி 39 லட்சம் (1,463,900,000) மக்கள் தொகை கொண்ட இந்தியாவிற்கு 58 பதக்கங்கள்.

வெறும் 2 கோடி 32 லட்சம் (23,200,000) மக்கள் தொகை கொண்ட இலங்கைக்கு 40 பதக்கங்கள்

🔴 ஒரு இலங்கையராக முழு நாட்டு மக்களுமே பெருமை கொள்ளும் தருணமிது.

🔴 உலகத்தை எம் பக்கம் திரும்ப வைத்த வீர, வீராங்கனைகளுக்கு எமது அன்பும், நன்றியும் கலந்த பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.

Proud Of Srilankan 🫴💥

27/10/2025

Happy Birthday
Our Sri Lankan "The Greatest Of All Time "

GOAT 🪽✨

26/10/2025

யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள்......
நடக்கும் அவலம் ☝️

குப்பைகள் கழிவுகள் அதிகரிப்பு அவற்றையும்
CCT camera ஊடாக கண்காணிப்பு ஆனாலும் மாற்றம் ஏதுமில்லை !

#அடையாளம் #யாழ்ப்பாணம்

24/10/2025

"மனிதம்_போற்றிட_வா_நண்பனே..."

நாளைய தினம் 25.10.2025 காலை பேசாலை
பொது வைத்திய சாலையில் வெற்றியின் சிறகுகள் அமைப்பினரின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இடம் பெற உள்ளது !

இந்த நிகழ்வில் கிராமத்தை சேர்ந்த அனைவரையும் கலந்து பல உயிர்களைக் காக்க அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் !

பகிர்ந்து கொண்டு அடையாளப்படுத்துவோம் நாளை இந்த நிகழ்வில் பலரும் இணைந்து கொள்வதற்காக....

🏆🌟 சிறந்த தொழில்முனைவோர் விருது – 2025 (வன்னி ) 🌟🏆மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த உமா தயாரிப்புகளின் உரிமையாளர் திருமதி. எம...
24/10/2025

🏆🌟 சிறந்த தொழில்முனைவோர் விருது – 2025 (வன்னி ) 🌟🏆

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த உமா தயாரிப்புகளின் உரிமையாளர் திருமதி. எம். ஐ. உமாமகேஸ்வரி அவர்கள், சிறந்த தொழில்முனைவோர் விருது – 2025 விருதைப் பெற்றுள்ளார் 🎉

அவரது சிறந்த தலைமையாற்றல், புதுமை திறன் மற்றும் தொழில்முனைவுத்துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா பல்கலைக்கழகத்தின் வணிகப் பாடப்பிரிவு அவருடைய இந்தச் சிறப்பை பெருமையுடன் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது👏💐

#வவுனியாபல்கலைக்கழகம் #வணிகபாடப்பிரிவு #சிறந்ததொழில்முனைவோர்விருது #வன்னிமண்டலம் #உமாதயாரிப்புகள் #தொழில்முனைவு #வணிகமிகச்சிறப்பு #பெருமைமிகும்நேரம் #ஈர்க்கும்தலைமையே

🏆🌟 𝐁𝐞𝐬𝐭 𝐄𝐧𝐭𝐫𝐞𝐩𝐫𝐞𝐧𝐞𝐮𝐫 𝐀𝐰𝐚𝐫𝐝 – 𝟐𝟎𝟐𝟓 (𝐕𝐚𝐧𝐧𝐢 𝐑𝐞𝐠𝐢𝐨𝐧) 🌟🏆

𝐇𝐞𝐚𝐫𝐭𝐟𝐞𝐥𝐭 𝐜𝐨𝐧𝐠𝐫𝐚𝐭𝐮𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐭𝐨 𝐌𝐫𝐬. 𝐌. 𝐈. 𝐔𝐦𝐚𝐦𝐚𝐡𝐞𝐬𝐰𝐚𝐫𝐢, 𝐎𝐰𝐧𝐞𝐫 𝐨𝐟 𝐔𝐦𝐚 𝐏𝐫𝐨𝐝𝐮𝐜𝐭𝐬, 𝐌𝐚𝐧𝐧𝐚𝐫, 𝐟𝐨𝐫 𝐛𝐞𝐢𝐧𝐠 𝐡𝐨𝐧𝐨𝐮𝐫𝐞𝐝 𝐰𝐢𝐭𝐡 𝐭𝐡𝐞 𝐁𝐞𝐬𝐭 𝐄𝐧𝐭𝐫𝐞𝐩𝐫𝐞𝐧𝐞𝐮𝐫 𝐀𝐰𝐚𝐫𝐝 – 𝟐𝟎𝟐𝟓 (𝐕𝐚𝐧𝐧𝐢 𝐑𝐞𝐠𝐢𝐨𝐧)! 🎉

This outstanding recognition celebrates her remarkable leadership, innovation, and contribution to entrepreneurship. The Faculty of Business Studies, University of Vavuniya, proudly acknowledges her achievement and dedication to empowering regional business excellence. 👏💐

Wishing her continued success and growth in all future entrepreneurial endeavors! 🌿✨

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் CTP டிப்போ தொடக்கம் கீரி வரையான பகுதியில் வீதியோரத்தில்  மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்...
22/10/2025

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில்

CTP டிப்போ தொடக்கம் கீரி வரையான பகுதியில் வீதியோரத்தில்

மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட நிலையில் காணப்பட்டு வருகின்றது....

காலநிலை மாற்றம் மற்றும் வெள்ள நிலைமை ஏற்படும் நிலைமையில் சூழல் காணப்படுவதால் இவ்வாறான கழிவுகள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அமையக்கூடும் !

  22.10.2025🚨 **அதிர்ச்சி செய்தி! கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி வந்த ஏசி பஸ் விபத்து!** 🚨இன்றைய அதிகாலை நேரத்தில், கொழ...
22/10/2025

22.10.2025

🚨 **அதிர்ச்சி செய்தி! கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி வந்த ஏசி பஸ் விபத்து!** 🚨

இன்றைய அதிகாலை நேரத்தில், கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ஏசி பஸ் ஒன்று **பரையானங்குளம் போலீஸ் பிரிவுக்குட்பட்ட மடு – பெரிய கட்டு பிரதான வீதியில்** விபத்துக்குள்ளாகியுள்ளது. 🚌💥

முதல் கட்ட தகவல்களின் படி, **பஸ் கட்டுப்பாட்டை இழந்தது** காரணமாக சாலை ஓரத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் குறைந்தது **பத்து பேர் காயமடைந்து**, அவர்கள் **வவுனியா செட்டிகுளம் பிரதான வைத்தியசாலையில்** அனுமதிக்கப்பட்டுள்ளனர். 🏥

அவர்களில் ஒருவர் தற்போது இறந்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 🚔

👉 காயமடைந்தவர்களின் நிலை குறித்து மருத்துவமனையிலிருந்து விரைவில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

#மன்னார் #பஸ்_விபத்து #வவுனியா #செட்டிகுளம் #செய்தி_பதிவு

🌧️ தொடர் மழை – எச்சரிக்கை அவசியம்! ⚠️தொடர்ச்சியான மழை நம் நிலத்தையும், வாழ்வையும் பாதிக்கக்கூடும்.எனவே நம் பாதுகாப்புக்க...
21/10/2025

🌧️ தொடர் மழை – எச்சரிக்கை அவசியம்! ⚠️

தொடர்ச்சியான மழை நம் நிலத்தையும், வாழ்வையும் பாதிக்கக்கூடும்.
எனவே நம் பாதுகாப்புக்காக சில முக்கிய முன்னெச்சரிக்கைகள்👇

🌿 கவனிக்க வேண்டியவை:

1️⃣ மின்கம்பிகள், மரங்கள் விழும் இடங்கள் போன்ற ஆபத்தான பகுதிகளில் செல்ல வேண்டாம்.
2️⃣ வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருங்கள்.
3️⃣ குடிநீரை எப்போதும் கொதிக்கவைத்து மட்டுமே குடியுங்கள். 💧
4️⃣ வீடுகளின் வடிகால் வழிகள் சுத்தமாக இருக்குமாறு பாருங்கள்.
5️⃣ தேங்கிய நீர் கொசுக்கள் பெருக காரணமாகும் — உடனே அகற்றுங்கள். 🦟
6️⃣ மழையில் வெளியே செல்ல வேண்டிய அவசியமிருந்தால் மழைக்கோட்டை அணிந்து பாதுகாப்பாக இருங்கள்.
7️⃣ ரேடியோ, சமூக ஊடகம், அரசு அறிவிப்புகளை தொடர்ந்து கவனியுங்கள். 📢

💚 சமூகத்திற்கான பொறுப்பு:

👉 மூத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுவர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
👉 இயற்கை ஆபத்துகள் நேரத்தில் ஒன்றிணைந்து செயல்படுங்கள் — ஒற்றுமையால் பாதுகாப்பு!

✨ மழை நமக்கு வரம் — ஆனால் எச்சரிக்கை அத்தியாவசியம்

#மழைக்காலஎச்சரிக்கை

20/10/2025

விசேட முன்னறிவிப்பு

20.10.2025 திங்கட் கிழமை பிற்பகல் 3.30 மணி

இலங்கையின் கிழக்கே உருவாகியுள்ள தாழமுக்க நகர்வு காரணமாக இன்று இரவு, நாளை அதிகாலை மற்றும் நாளை காலை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மாதிரிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகள்( பிரதானமாக நகரப்பகுதி), முல்லைத்தீவு மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் மற்றும் மன்னார் மாவட்டம், மற்றும் வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் 80- 120 மி.மீ. வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அத்தோடு இக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகள் சிலவும் 30- 50 மி.மீ. மழையைப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பகுதிகளில் இடி மின்னல் நிகழ்வுக்கும் வாய்ப்புக்கள் உண்டு.

தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.

News

- நாகமுத்து பிரதீபராஜா -

✨ Happy Deepavali from The Real Frame! ✨May this Festival of Lights fill your hearts with love, peace, and endless inspi...
20/10/2025

✨ Happy Deepavali from The Real Frame! ✨
May this Festival of Lights fill your hearts with love, peace, and endless inspiration.
Let’s celebrate the victory of light over darkness, hope over despair, and truth over fear.
Shine bright, spread kindness, and keep creating beautiful stories that light up the world. 💫


-

✨ “தி ரியல் ஃப்ரேம்” குழுமத்தின் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! ✨
இன்று இருளை நீக்கும் ஒளியாக, துன்பத்தை நீக்கும் நம்பிக்கையாக,
நம் மனங்களில் அன்பும் அமைதியும் பரவட்டும். 💖
ஒளியின் திருநாளான தீபாவளி நம் வாழ்க்கையில்
புதிய துவக்கங்களையும் மகிழ்ச்சியையும் தரட்டும்! 🪔
#தீபாவளி2025 #ஒளியின்_விழா #அன்பும்_அமைதியும்

19/10/2025

🎤 இறுதியாக “காலிறுதி போட்டிக்கு” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மன்னாரின் குரல் ! 🤩⚡️

இந்த பயணத்தின் முழுவதும் எனக்கு அன்பும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்! 💖
உங்கள் ஒவ்வொரு ஆதரவும் எனக்கு மிகப் பெரிய சக்தியாக இருந்தது. 🙏

Emanualy Amalaraj

இப்போதும் இதே உற்சாகத்துடன் ஆதரிப்போம் —
இந்த பருவத்தின் கிரீடம் 👑 எங்கள் பக்கம் வரட்டும்! 💪🌟



-

மன்னார் மாவட்ட  இளம் மீனவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு. ரோகினி நிஷாந்தன்இளம் மீனவர்களை வலுப்படுத்துதல் மற்றும் சட...
17/10/2025

மன்னார் மாவட்ட இளம் மீனவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தமர்வு.

ரோகினி நிஷாந்தன்

இளம் மீனவர்களை வலுப்படுத்துதல் மற்றும் சட்ட விரோத மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்,இளம் மீனவர்களுக்கான கருத்தமர்வு ஒன்று இன்றைய தினம் (17.10) வெள்ளிக்கிழமை, மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் (MSEDO) நடைபெற்ற இந்நிகழ்வில்,

மன்னார் மாவட்ட கடற்றொழில் அலுவலர் இ.ரொபின் ஜூட் வளவாளராகக் கலந்து கொண்டு கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சார்ந்த சட்டங்கள், மீன்பிடிக்கு பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ள உபகரணங்கள்,அனுமதி இன்றி சங்குகள் வைத்திருத்தல், பிடிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள கடல் வாழ் உயிரினங்கள்,மற்றும் மீன்பிடிக்கான அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் இளம் மீனவர்களுக்குத் தெளிவுப்படுத்தினார்.

இக்கலந்துரையாடல் தொடர்பில், மெசிடோ (MSEDO) நிறுவனத்தின் இயக்குனர் கருத்து தெரிவிக்கையில்,

"வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் மீனவ சமூகம் என்பது அதி முக்கியமான ஒன்றாகும்.இன்றைய காலகட்டத்தில் கடல் வளங்களானது வடக்கு கிழக்கு பகுதிகளில் இயற்கையாகவும் செயற்கையாகவும், பல்வேறு வடிவங்களில் அழிக்கப்பட்டு வருகின்றது. அந்த வளங்களைக் காப்பாற்றுவதற்காகவே சிவில் சமூக அமைப்புகள் மற்றும் மீனவ சமூகங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இளம் மீனவர்களை வளங்களைப் பாதுகாத்து பொறுப்புணர்வுடன் செயற்படும் வகையில் ஊக்குவிக்குமுகமாக, வடக்கு கிழக்கு இளம் மீனவர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கான தெளிவூட்டல்களை இவ்வாறான கருத்தரங்குகள் மூலம் வடக்கு கிழக்கின் பல இடங்களிலும் முன்னெடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

குறித்த கருத்தமர்வில்,
மெசிடோ (MSEDO)நிறுவனத்தின் இயக்குனர் ஜாட்சன் பிகிராடோ,திட்ட முகாமையாளர் சூ.செ. ஜான்சன்,திட்ட இணைப்பாளர் ஜூலியஸ்,நிர்வாக அலுவலர் கரோலின் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டதோடு மன்னார் மாவட்ட மீனவர்கள் மற்றும் இளம் மீனவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

News Rohini Quily Nishanthan

Address

Mannar

Telephone

0761265041

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Real Frame posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Real Frame:

Share