MEGA TV

MEGA TV இது உங்களின் குரல்
***********************

நிகழ்வுகளை தொகுத்திட, போட்டிகளுக்கான வர்ணணை,ஔிப்பதிவு செய்திட, அறிவிப்பாளர்களை பெற்றிட ( 0742392323,0715441444)

21/10/2025

விரைவில் எதிர்பாருங்கள்
*******************************

காத்திரமான பல தகவல்கள் கல்முனை வலையக்கல்விப் பணிப்பாளரிடமிருந்து........!

மருதமுனை அல்ஹம்றா மாணவி ஸைனப் ஆலியாவின் வெற்றி விழா..........!
21/10/2025

மருதமுனை அல்ஹம்றா மாணவி ஸைனப் ஆலியாவின் வெற்றி விழா..........!

21/10/2025

🔵மருதமுனை அல்ஹம்றா மாணவி ஜைனப் ஆலியாவின் சர்வதேச வெற்றி விழா-2025.......!

🔴Live streaming of Mohamed Raaji .....!

20/10/2025

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிறஸ் ஒன்றுகூடல் மருதமுனையில்
***********************
(எம்.பி.எம்.றாஜிட்)

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிறசின் மக்கள் சந்திப்பு கருத்தரங்கு 20-10-2025 நேற்றய தினம் திங்கட்கிழமை மருதமுனை பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது..........!

கட்சியின் மருதமுனைக்கான புதிய அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்ட எம்.எச்.எம்.தாஜூடீன் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்ற இந்த ஒன்று கூடலில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிறஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.........!

கட்சியின் வட்டார அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைகப்பட்ட இந் நிகழ்வில் மருதமுனைப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகளவான இளைஞர்கள் கலந்துகொண்டமை சிறப்பம்மாகும்........!

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் காத்திரமான முடிவுகள் எடுப்பதன் அவசியத்தை வலியுறுத்திப்பேசிய ரஊப் ஹக்கீம் அவர்கள் வாக்குவங்கி அதிகரிப்பின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்........!

நிகழ்வில் கட்சியின் அதிகளவான உச்சபீட உறுப்பினர்களும் போராளிகளும் கலந்திருந்ததோடு இராப்போசனத்துடன் கலந்துரையாடல் நிறைவு பெற்றது ...........!

#ஸ்ரீலங்காமுஸ்லீம்காங்கிறஸ
-

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப  முன்னணியின் அம்பாரை மாவட்ட சம்மேளத்தின் விஷேட கூட்டமும், கௌரவிப்பும் ஞாயிற்றுக்கிழமை (1...
20/10/2025

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அம்பாரை மாவட்ட சம்மேளத்தின் விஷேட கூட்டமும், கௌரவிப்பும் ஞாயிற்றுக்கிழமை (19)ஆம் திகதி ஒலுவில் மஸாலா காடனின் நடைபெற்றது.
*******************
(Rifas jp)

சம்மேளனத்தின் பதில் தலைவர் ஏ.ஆர்.அஸாம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிமனையின் பிரதிக் கல்விப்பணிப்பாளர்.ஏ.எச். பௌஸ் பிரதம அதிதியாகவும், ஏ.ஆர்.பீ.உரிமையாளர் கே.எல். அப்துல் ரஹுமான் கௌரவ அதிதியாகவும், நிறைவேற்றுப்பணிப்பாளர் எம். ஐ.உதுமாலெவ்வை விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இதேவேளை அரச பணியிலிருந்து ஓய்வு பெற்ற அமைப்பின் ஆலோசகர் எம்.எஸ்.எம். அப்துல் மலீக், அஞ்சல் திணைக்களத்தில் பதவியுர்வு பெற்ற யூ.எல்.எம். பைசர், மற்றும் கே.நிஹால், எம்.பீ. சம்சுடீன் ஆகியோர் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டதுடன் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு அமைப்பின் இலட்சனை பொறிக்கப்பட்டுள்ள டீசேட் வழங்கி வைக்கப்டமையும் குறிப்பிடத்தக்கது.........!

கௌரவிப்பு நிகழ்வு 🎗️**********************அண்மையில் இடம்பெற்று முடிவடைந்து Abdul Aziz & Son's சுற்றுத்தொடரில் சம்பியன்கள...
20/10/2025

கௌரவிப்பு நிகழ்வு 🎗️
**********************

அண்மையில் இடம்பெற்று முடிவடைந்து Abdul Aziz & Son's சுற்றுத்தொடரில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டு எமது மண்ணிற்கு பெருமை சேர்த்த Victory FC உதைபந்தாட்ட அணியினை கௌரவிக்கும் வகையில் காத்தான்குடி உதைபந்தாட்ட அபிவிருத்தி ஒன்றியத்தினால் கௌரவிப்பு நிகழ்வுடன் உதைபந்தாட்ட போட்டி ஒன்றும் எதிர்வரும் ( 24-10-2025 ) வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு ஹிஸ்புல்லாஹ் பொது மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது........!

குறித்த போட்டியில் காத்தான்குடி விக்டரி அணியினை எதிர்த்து கொக்கட்டிச்சோலை ஈஷ்வரா அணி பலப்பரீட்சை நடாத்தவுள்ளது...............!

எனவே குறித்த போட்டியினையும், கௌரவிப்பு நிகழ்வினையும் கண்டுகளிக்க வருகை தருமாறு அனைத்து உதைபந்தாட்ட ரசிகர்களினையும் அன்புடன் அழைக்கின்றோம்.

♦காத்தான்குடி உதைபந்தாட்ட அபிவிருத்தி ஒன்றியம்...........!
(KFDA)

19/10/2025
19/10/2025

இலங்கை கிழக்கு மாகாணம் மருதமுனை ஜனாஸா பற்றிய அறிவிததல்.............!

வட மாகாண முஸ்லிம்களுக்கு நீதி கோரி – காத்தான்குடியில் எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வு. எம்.ரீ.எஸ் ...
19/10/2025

வட மாகாண முஸ்லிம்களுக்கு நீதி கோரி – காத்தான்குடியில் எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வு.
எம்.ரீ.எஸ் . யூனூஸ்

எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில், விடுதலைப் புலிகளால் வட மாகாணத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட “வட மாகாண முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு” இன்று (18) சனிக்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் அஹமத் லெப்பை ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஜே.எல்எம். ஷாஜஹான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பின், தலைவரும் ஆய்வாளருமான சட்டமாணி பி.எம். முஜிபுர் ரஹ்மான், முன்னாள் இராணுவ ஓய்வுநிலை அதிகாரிகளான மேஜர் ஜூனைத் நபீர், தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றிய பிரதிநிதி யூ.எல்.எம். முபீன், யாழ் மாநகர சபை உறுப்பினரும், யாழ் முஸ்லிம் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான பீ.எஸ்.எம்.ஷரபுல் அனாம், காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன உபசெயலாளர் எம்.ஐ.எம்.இர்பான், அட்டாளைச்சேனை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் அனைத்து ஜும்ஆ பள்ளிவாயல் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ். ஜூனைதீன், ஏறாவூர் வர்த்தக சங்க செயலாளர் எம்.ஐ.எம்.நாஸர், காத்தான்குடி வர்த்தக சங்க செயலாளர் மு.ஆரீப்.காத்தான்கு நகர சபை உறுப்பினர்களான சட்டமாணிE m. றிஸ்வீன்.காத்தான்குடி நகர சபை உறுப்பினர் A.m.m. பர்சாத் உற்பட பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் போது ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற சாஜன் மேஜர் ஆர்.எஸ்.பி. புஹாரி மற்றும் வட மாகாண மக்களின் உரிமைக்காக தொடர்ந்து பங்காற்றி வரும் சட்டமாணி பி.எம்.முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், வட மாகாண முஸ்லிம்களுக்கு நீதி கோரி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பிக்கவுள்ள மகஜர், தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்பாட்டாளர் எம்.ஏ. அஸீஸ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அத்தோடு, வட மாகாண முஸ்லிம்கள் சார்ந்த சட்டத்தரணி கவிஞர் காத்தநகர் முகைதீன் சாலி எழுதிய “சிலுவை சுமந்த பயணம்” எனும் கவிதை நூலும் வெளியிடப்பட்டதோடு, நூலின் முதல் பிரதியை ஸ்ரீலங்கா சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும், கபே நிறுவனத்தின் தேர்தல் கண்காணிப்பு ஒருங்கிணைப்பாளருமான ஏ.எல்.எம். மீராசாஹிபு அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிரமதான நிகழ்வு*****************(பிராந்திய செய்தியாளர்)அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரண சங்கத்தின் ஏற்பாட்டில் கிளீன் ஸ...
19/10/2025

சிரமதான நிகழ்வு
*****************
(பிராந்திய செய்தியாளர்)

அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரண சங்கத்தின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்திற்கமைய நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிரமதான நிகழ்வு இன்று (18)காலை இடம்பெற்றது.

மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ. உதுமாலெவ்வை தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர் எம்.பீ.ஏ.வாஜீத் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சாரண இணைப்பாளர் சசிகுமார் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாவட்ட சாரணர் சங்க செயலாளர்,உதவி மாவட்ட ஆணையாளர்கள், சாரண ஆசிரியர்கள், சாரணர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்...........................!

  *****PHOTOS************விரட்டியடிக்கப்பட்ட வட மாகாண முஸ்லிம்களுக்கான நிகழ்வு********************(M. B. M. Raajid)🔴விடு...
19/10/2025


*****
PHOTOS
************

விரட்டியடிக்கப்பட்ட வட மாகாண முஸ்லிம்களுக்கான நிகழ்வு
********************
(M. B. M. Raajid)

🔴விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து இனச் சுத்திகரிப்புசெய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கேரும் கறுப்பு ஓக்டோபர் நிகழ்வு........!

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் அஸ் ஷஹீத் அஹமட் லெப்பை ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது......!

நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்த விசேட அம்சமாகும்....!

🔵ஏற்பாடு எக்ஸத் ஊடகப்பிரிவு

18/10/2025

MEGA TV
*****
விரட்டியடிக்கப்பட்ட வட மாகாண முஸ்லிம்களுக்கான நிகழ்வு
********************
(M. B. M. Raajid)

🔴விடுதலைப் புலிகளால் வடக்கிலிருந்து இனச் சுத்திகரிப்புசெய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கேரும் கறுப்பு ஓக்டோபர் நிகழ்வு........!

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் அஸ் ஷஹீத் அஹமட் லெப்பை ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது......!

நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்த விசேட அம்சமாகும்....!

🔵ஏற்பாடு எக்ஸத் ஊடகப்பிரிவு

Address

Maruthamunai
Maruthamunai

Telephone

+94742392323

Website

Alerts

Be the first to know and let us send you an email when MEGA TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category