International Tamil Media

International Tamil Media I think spoil good things for everyone எமது சேவை இணையத்தளம் மற்றும் பேஸ்புக், வட்ஸ்அப் இம்மூன்றிலும் வெற்றிகரமாக செயற்படுகிறது.

17/08/2025
இன்றைய மருத்துவ குறிப்புஉடல் சூட்டை தடுக்க வேண்டுமா? கட்டாயம் இதையெல்லாம் செய்திடுங்க𝑰𝑻𝑴 ✍️ உடல் சூடு காரணமாக அவதிப்படுப...
17/08/2025

இன்றைய மருத்துவ குறிப்பு

உடல் சூட்டை தடுக்க வேண்டுமா? கட்டாயம் இதையெல்லாம் செய்திடுங்க

𝑰𝑻𝑴 ✍️ உடல் சூடு காரணமாக அவதிப்படுபவர்கள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

𝑰𝑻𝑴 ✍️ இன்றைய அவசர காலத்தில் மக்களின் பழக்கவழக்கங்கள் அனைத்தும் மொத்தமாக மாறியுள்ளது. ஆம் உணவுப்பழக்கம், சுற்றுச்சூழல் மாற்றங்கள், மன அழுத்தம் இவற்றினால் உடல் சூடு அதிகரிப்பதும் ஒரு பிரச்சனையாகும்.

𝑰𝑻𝑴 ✍️ உடலில் சூடு அதிகரித்துவிட்டால், தலை மற்றும் வயிறு வலி, மலச்சிக்கல், சோர்வு போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். இதனை மிகவும் சுலபமாக வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

✅ *உடல் சூட்டை தணிக்க என்ன செய்ய வேண்டும்?*

𝑰𝑻𝑴 ✍️ உடல் சூட்டை தணிப்பதற்கு முதலாவதாக போதுமான தண்ணீர் பருக வேண்டும். உடம்பை நீரேற்றத்துடன் வைத்திருந்தால், உடலில் உள்ள நச்சு பொருட்கள் வெளியேற்ற உதவுமாம். குளிர்ந்த நீரை அருந்துவது உடல் சூட்டை உடனடியாக தடுக்குமாம்.

𝑰𝑻𝑴 ✍️ நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடுவது அவசியம், இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், எலுமிச்சை, மோர் இவற்றினை கட்டாயம் எடுத்துக் கொள்ளவும்.

𝑰𝑻𝑴 ✍️ சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, வாழைப்பழம், அன்னாசி பழம் உடம்பிற்கு குளிர்ச்சியை கொடுக்கும்.

𝑰𝑻𝑴 ✍️ இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

𝑰𝑻𝑴 ✍️ ஆனால் உணவில் உடல்சூடு சரியாகவில்லையெனில் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

𝐀𝐃𝐌𝐈𝐍 : 𝐀𝐑𝐒𝐇𝐀𝐃 𝐓𝐇𝐀𝐇𝐈𝐑

💁‍♂️ Follow our WhatsApp Channel
👇👇👇
https://whatsapp.com/channel/0029VaA4rZf2kNFuxI3YCh3H

💁‍♂️ Join our WhatsApp Group
👇👇👇
https://chat.whatsapp.com/CRWVwhHfhdVBSBCjgtOxs2

💁‍♂️ Facebook
👇👇👇
https://www.facebook.com/InternationalTamilMedia/

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்17/08/2025 - ஞாயிறு𝑰𝑻𝑴 ✍️ பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாள...
17/08/2025

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

17/08/2025 - ஞாயிறு

𝑰𝑻𝑴 ✍️ பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகிறது.

𝑰𝑻𝑴 ✍️ 2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாவது பாடசாலைத் தவணை கடந்த 7 ஆம் திகதி நிறைவடைந்தது.

𝑰𝑻𝑴 ✍️ இதன்படி, குறித்த பாடசாலைகளின் 3 ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

𝐀𝐃𝐌𝐈𝐍 : 𝐀𝐑𝐒𝐇𝐀𝐃 𝐓𝐇𝐀𝐇𝐈𝐑

💁‍♂️ Follow our WhatsApp Channel
👇👇👇
https://whatsapp.com/channel/0029VaA4rZf2kNFuxI3YCh3H

💁‍♂️ Join our WhatsApp Group
👇👇👇
https://chat.whatsapp.com/CRWVwhHfhdVBSBCjgtOxs2

💁‍♂️ Facebook
👇👇👇
https://www.facebook.com/InternationalTamilMedia/

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும்!17/08/2025 - ஞாயிறு𝑰𝑻𝑴 ✍️ மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அடுத்த...
17/08/2025

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும்!

17/08/2025 - ஞாயிறு

𝑰𝑻𝑴 ✍️ மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இதற்காக பொருத்தமான நபர்களை அடையாளம் காணுவதற்காக தற்போது அறிவுறுத்தப்பட்டு வருவதாக சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்காராச்சி தெரிவித்தார்.

𝑰𝑻𝑴 ✍️ விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையும் கடற்றொழில் திணைக்களமும் இணைந்து இந்த நடவடிக்கையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளன.

𝑰𝑻𝑴 ✍️ ஏற்கனவே உள்ள மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயலிழக்கச் செய்யப்பட்டபோது, சுமார் 60,000 மீனவர்கள் இதன் மூலம் பலன்களைப் பெற்று வந்ததாக தலைவர் கூறினார்.

𝑰𝑻𝑴 ✍️ அதன்படி, இந்த மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் தொடங்கப்படும்போது, அந்த எண்ணிக்கையை விட அதிகமான மீனவர்களுக்கு பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்காராச்சி மேலும் தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

𝐀𝐃𝐌𝐈𝐍 : 𝐀𝐑𝐒𝐇𝐀𝐃 𝐓𝐇𝐀𝐇𝐈𝐑

💁‍♂️ Follow our WhatsApp Channel
👇👇👇
https://whatsapp.com/channel/0029VaA4rZf2kNFuxI3YCh3H

💁‍♂️ Join our WhatsApp Group
👇👇👇
https://chat.whatsapp.com/CRWVwhHfhdVBSBCjgtOxs2

💁‍♂️ Facebook
👇👇👇
https://www.facebook.com/InternationalTamilMedia/

அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை17/08/2025 - ஞாயிறு𝑰𝑻𝑴 ✍️ தவறு செய்யும் அரச ஊழியர்கள் யாராக இருந்...
17/08/2025

அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

17/08/2025 - ஞாயிறு

𝑰𝑻𝑴 ✍️ தவறு செய்யும் அரச ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதியமைச்சர் சுனில் வடகல எச்சரித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ தனியார் வானொலியொன்றின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பொலிஸ் திணைக்களத்தில் தற்போதைக்கு 21 ஆயிரம் வெற்றிடங்கள் நிலவுகின்றன. ஆயினும் அதனைக் கருத்திற்கொள்ளாது தவறு செய்த 300 பொலிஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

𝑰𝑻𝑴 ✍️ அதே போன்று தவறு செய்யும் அரச ஊழியர்கள் எவராக இருப்பினும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

𝐀𝐃𝐌𝐈𝐍 : 𝐀𝐑𝐒𝐇𝐀𝐃 𝐓𝐇𝐀𝐇𝐈𝐑

💁‍♂️ Follow our WhatsApp Channel
👇👇👇
https://whatsapp.com/channel/0029VaA4rZf2kNFuxI3YCh3H

💁‍♂️ Join our WhatsApp Group
👇👇👇
https://chat.whatsapp.com/CRWVwhHfhdVBSBCjgtOxs2

💁‍♂️ Facebook
👇👇👇
https://www.facebook.com/InternationalTamilMedia/

நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழப்பு17/08/2025 - ஞாயிறு𝑰𝑻𝑴 ✍️ இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழந்துள்ளதாக பொல...
17/08/2025

நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழப்பு

17/08/2025 - ஞாயிறு

𝑰𝑻𝑴 ✍️ இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

𝑰𝑻𝑴 ✍️ இதில் 37 பெண்கள் மற்றும் 220 ஆண்கள் அடங்குவர் என்று பொலிஸ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

𝑰𝑻𝑴 ✍️ இதற்கிடையில், நீரில் மூழ்கி விபத்துக்களில் இருந்து 69 உள்ளூர் சுற்றுலாப் பயணிகளையும் 33 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

𝐀𝐃𝐌𝐈𝐍 : 𝐀𝐑𝐒𝐇𝐀𝐃 𝐓𝐇𝐀𝐇𝐈𝐑

💁‍♂️ Follow our WhatsApp Channel
👇👇👇
https://whatsapp.com/channel/0029VaA4rZf2kNFuxI3YCh3H

💁‍♂️ Join our WhatsApp Group
👇👇👇
https://chat.whatsapp.com/CRWVwhHfhdVBSBCjgtOxs2

💁‍♂️ Facebook
👇👇👇
https://www.facebook.com/InternationalTamilMedia/

மற்றொரு மாவட்ட நீதிமன்ற நீதிபதி பணி நீக்கம்17/08/2025 - ஞாயிறு𝑰𝑻𝑴 ✍️ தவறான நடத்தை குற்றச்சாட்டில் மற்றொரு மாவட்ட நீதிமன்...
17/08/2025

மற்றொரு மாவட்ட நீதிமன்ற நீதிபதி பணி நீக்கம்

17/08/2025 - ஞாயிறு

𝑰𝑻𝑴 ✍️ தவறான நடத்தை குற்றச்சாட்டில் மற்றொரு மாவட்ட நீதிமன்ற நீதிபதியை நீதித்துறை சேவை ஆணையகம் பணிநீக்கம் செய்துள்ளது, இதன் மூலம் இந்த மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட மொத்த நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ தனி விசாரணையைத் தொடர்ந்து, கம்பஹாவில் பணியாற்றும் ஒரு சிவில் மேல்முறையீட்டு மேல்; நீதிமன்ற நீதிபதி திறமையற்ற செயல்திறன் குற்றச்சாட்டுகளை அடுத்து ஓய்வுப்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ அத்துடன் அவருக்கான ஓய்வூதிய ஆவணங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இதற்கிடையில், மினுவாங்கொட மாவட்ட நீதிபதி மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி இருவரும் தவறான நடத்தை தொடர்பான தொடர்ச்சியான விசாரணைகளுக்காக நீதிபதிகள் நிறுவனத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

𝐀𝐃𝐌𝐈𝐍 : 𝐀𝐑𝐒𝐇𝐀𝐃 𝐓𝐇𝐀𝐇𝐈𝐑

💁‍♂️ Follow our WhatsApp Channel
👇👇👇
https://whatsapp.com/channel/0029VaA4rZf2kNFuxI3YCh3H

💁‍♂️ Join our WhatsApp Group
👇👇👇
https://chat.whatsapp.com/CRWVwhHfhdVBSBCjgtOxs2

💁‍♂️ Facebook
👇👇👇
https://www.facebook.com/InternationalTamilMedia/

இன்றைய வானிலை முன்னறிவிப்பு17/08/2025 - ஞாயிறு𝑰𝑻𝑴 ✍️ மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...
17/08/2025

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

17/08/2025 - ஞாயிறு

𝑰𝑻𝑴 ✍️ மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும்.

𝑰𝑻𝑴 ✍️ மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

𝐀𝐃𝐌𝐈𝐍 : 𝐀𝐑𝐒𝐇𝐀𝐃 𝐓𝐇𝐀𝐇𝐈𝐑

💁‍♂️ Follow our WhatsApp Channel
👇👇👇
https://whatsapp.com/channel/0029VaA4rZf2kNFuxI3YCh3H

💁‍♂️ Join our WhatsApp Group
👇👇👇
https://chat.whatsapp.com/CRWVwhHfhdVBSBCjgtOxs2

💁‍♂️ Facebook
👇👇👇
https://www.facebook.com/InternationalTamilMedia/

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஐந்தாண்டு போட்டித்தடை தடை16/08/2025 - சனி𝑰𝑻𝑴 ✍️ ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கண்டற...
16/08/2025

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஐந்தாண்டு போட்டித்தடை தடை

16/08/2025 - சனி

𝑰𝑻𝑴 ✍️ ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட முன்னாள் இலங்கை உள்ளூர் கிரிக்கெட் வீரர் சாலிய சமனுக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க ஐந்து ஆண்டுகள் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதற்காக ஐசிசி ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் அவருக்கு குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ செப்டம்பர் 13, 2023 முதல் சமன் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். 2021 அபுதாபி டி 10 போட்டியின் போது விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட புனே டெவில்ஸ் அணியின் 8 வீரர்களில் அவரும் ஒருவராவார்.

𝑰𝑻𝑴 ✍️ எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிகளின் மூன்று பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

✅ சர்வதேச கிரிக்கட் விதிமுறைகளில் உள்ள சட்டங்களின்படி,

👉2.1.1 - 2021 அபுதாபி டி 10 போட்டிகளை அல்லது போட்டிகளின் தன்மைகளை மாற்ற, சதி செய்யதல் மற்றும் செல்வாக்கு செலுத்த முயற்சித்தல்.

👉2.1.3 – விதிகளில் மாற்றம் செய்வதற்காக ஊழலில் ஈடுபடும் ஒரு வீரரின் சார்பாக மற்றொரு பங்கேற்பாளருக்கு பரிசு வழங்குதல்.

👉2.1.4 – விதிகளின் பிரிவு 2.1 ஐ மீறுவதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேண்டுகோள் விடுத்தல், தூண்டுதல், ஆலோசனை வழங்குதல், வற்புறுத்துதல், ஊக்குவித்தல் அல்லது தெரிந்தே உதவுதல்,போன்ற மூன்று பிரிவுகளில் குற்றம் சாற்றப்பட்டுள்ளார்.

👉101 முதல் தர போட்டிகள், 77 A போட்டிகள் மற்றும் 47 T20 போட்டிகளில் விளையாடிய சகலதுறை ஆட்டக்காரரான 39 வயதான சமன் கடைசியாக மார்ச் 2021 இல் இலங்கை கிரிக்கெட் T20 தொடரில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு போட்டியில் விளையாடியுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

𝐀𝐃𝐌𝐈𝐍 : 𝐀𝐑𝐒𝐇𝐀𝐃 𝐓𝐇𝐀𝐇𝐈𝐑

💁‍♂️ Follow our WhatsApp Channel
👇👇👇
https://whatsapp.com/channel/0029VaA4rZf2kNFuxI3YCh3H

💁‍♂️ Join our WhatsApp Group
👇👇👇
https://chat.whatsapp.com/CRWVwhHfhdVBSBCjgtOxs2

💁‍♂️ Facebook
👇👇👇
https://www.facebook.com/InternationalTamilMedia/

Address

Matale Town

Telephone

+94781001021

Website

http://www.InternationalTamilMedia.com/

Alerts

Be the first to know and let us send you an email when International Tamil Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share