
22/07/2025
பிரபல பாடசாலையில் வகுப்பறையில் 30 பாம்புகுட்டிகள் - அச்சத்தில் உறைந்த மாணவர்கள்.
22/07/2025 - செவ்வாய்
𝑰𝑻𝑴 ✍️ குருநாகல் மாவட்டத்தில் போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில், ஆரம்பப் பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
𝑰𝑻𝑴 ✍️ பாடசாலையில் பாம்புகள் தென்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு அறிவித்தனர்.
𝑰𝑻𝑴 ✍️ இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி அன்று கடமைகளைப் பொறுப்பேற்ற அதிபர் தலைமையில் சோதனை செய்யப்பட்டதில் 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
𝑰𝑻𝑴 ✍️ அதேவேளை போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை சுமார் 2,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அதில், 153 மாணவர்கள் ஆரம்ப பிரிவில் உள்ளனர்.
𝑰𝑻𝑴 ✍️ இந்நிலையில் பாடசாலை நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்தமையினால் பிள்ளைகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
𝐀𝐃𝐌𝐈𝐍 : 𝐀𝐑𝐒𝐇𝐀𝐃 𝐓𝐇𝐀𝐇𝐈𝐑
💁♂️ Follow our Telegram Channel
👇👇👇
https://t.me/Internationaltamilmedia
💁♂️ Follow our WhatsApp Channel
👇👇👇
https://whatsapp.com/channel/0029VaA4rZf2kNFuxI3YCh3H
💁♂️ Join our WhatsApp Group
👇👇👇
https://chat.whatsapp.com/CRWVwhHfhdVBSBCjgtOxs2
💁♂️ Facebook
👇👇👇
https://www.facebook.com/InternationalTamilMedia/