10/08/2026
நான் அறிந்த வகையில் அப்துல் பாசித் புகாரி (Abdul Basith Bukhari) இந்தியாவை சேர்ந்த ஒரு சிறந்த பேச்சாளர், அவர் பற்றிய சில கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்ற நிலையில் அவ்வரான ஒரு பதிவுக்கு கீழ் பயனர்கள் இட்ட கமெண்ட்களை தருகிறேன்…
பயனர் 1
அவர் மீது எந்தத் தவறும் இல்லாத பட்சத்தில், அவருடைய கண்ணியத்தை அதே சபையில் அல்லாஹ் உயர்த்துவானாக.
அவர் மீது பொய்யான பழி சுமத்தியவர்கள் பாவிகளாக இருந்தால், அவர்களுடைய முகத்திரையை அல்லாஹ் கிழித்து, அவர்கள் செய்த அநியாயத்தை அவர்களுக்கே உணர்த்தி, கடுமையான முறையில் பாடம் புகட்டுவானாக. அவர்கள் அவருக்கு ஏற்படுத்திய அவமானத்தையும் வேதனையையும் அவர்களே உணரும்படி அல்லாஹ் செய்வானாக.
ஒருவேளை அவர் மீது உண்மையில் பாவம் இருந்தால், அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்து, அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் சிறப்பான, நல்லதொரு வாழ்க்கையை வழங்குவானாக.
அவர் பாவியோ, பாவியில்லையோ... அவரை இப்படிச் சபையில் தரக்குறைவாக நடத்தியது பாவம். ஒரு முஃமினின் பாவத்தை சபைக்குக் கொண்டு வந்து, அதை வெளிப்படுத்திய தூய்மையான, இக்லாஸான மலக்குகள் போன்ற மனிதர்கள் அனைவருக்கும் அல்லாஹ் கடுமையான பாடத்தைப் புகட்டுவானாக.
அவர் அடைந்த அவமானத்தையும் வேதனையையும், அவரை இவ்வாறு நடத்தியவர்கள் உணரும்படி அல்லாஹ் செய்வானாக.
பயனர் 2
ஏன் பிறர் மனத்தில் உங்கள் விளையாட்டு பிறரின் குறைகளை மறைக்கும் போது அல்லாஹ் மறுமையில் உங்களின் குறைகளை மறைத்து விடுவான்.
பயனர் 3
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். உண்மையை அறியாமல் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. அது உண்மையாகவே இருந்தாலும் அதை பகிர்வதை தவிர்ப்பது நல்லது.
தவறு செய்வது மனிதனின் இயல்பு. அதிலிருந்து தங்களை திருத்திக்கொள்பவர்கள்தான் சிறந்தவர்கள்.
தங்களுடைய தவறுகள் வெளிப்படாதவரை அனைவரும் சிறந்தவர்களே. ஒரு மனிதனின் மானம் இஸ்லாத்தில் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.
பயனர் 4
அஸ்ஸலாமு அலைக்கும்.
தற்பொழுது அப்துல் பாசித் புகாரி பற்றி ஒரு விடயம் மிக வேகமாக வாட்ஸாப்பிலும், இணையதளத்திலும் பரவிக் கொண்டிருக்கிறது.
இந்த தருணத்தில் ஒரு மூமின் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு அழகிய முறையில் பாடம் நடத்துகிறது.
அதை பின்பற்றி வரக்கூடிய காலங்களில் நம்முடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளலாம்.
அதனால் உண்மை நிலவரம் தெரியாமல் யாரும் இந்த விஷயத்தை பரப்பாமல் இருப்பது சிறந்தது என்று இஸ்லாம் கூறக்கூடிய விடயங்களை கீழே பாருங்கள்.
சந்தேகத்தின் பேரில் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதைக் குறித்து சூரஹ் அல்-ஹுஜுராத் (49:12) வசனம் தடை செய்கிறது:
"நம்பிக்கையாளர்களே! சந்தேகங்களில் பெரும்பாலானதைத் தவிர்ந்து கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக சந்தேகங்களில் சில பாவங்களாகும்."
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
நன்மையான காரியம் செய்வதாக இருந்தாலும் பாவத்திலிருந்து
மீளுவதாக இருந்தாலும் அல்லாஹுடைய தௌபிக் செய்வானாக
பயனர் 5
ஒருவரின் தவறை திருத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் முதலில் அவருக்கு தனியாக அறிவுரை கூறுவது சிறந்த நடைமுறை அவருடைய அவமானத்தைப் பொதுவெளியில் பரப்புவது வேறு விஷயம்
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்
ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பவரின் குறையை அல்லாஹ் இவ்வுலகிலும் மறுமையிலும் மறைப்பான்
பயனர் 6
ஸஹீஹ் முஸ்லிம்
மேலும் குர்ஆன் ஒருவரை ஒருவர் கேலி செய்யக்கூடாது அவதூறாகப் பேசக்கூடாது புறங்கூறக்கூடாது என்று எச்சரிக்கிறது (49:11–12)
அதனால் அவர் தவறு செய்தார் என்பதற்காக அவரை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் அவமானப்படுத்துவது சரியான இஸ்லாமிய அணுகுமுறை அல்ல தவறைத் தடுக்க வேண்டிய அவசியம் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஆதாரத்துடன் தெரிவிப்பது வேறு விஷயம்.
பயனர் 7
"உன் சகோதரனின் துயரத்தில் நீ மகிழ்ச்சியடையாதே; அப்படிச் செய்தால் அல்லாஹ் அவனுக்கு அருள்புரிந்து, உன்னை அந்தச் சோதனையில் ஆட்படுத்திவிடக்கூடும்.”
ஜாமியுத் திர்மிதி (ஹதீஸ்: 2596)
“மனிதர்களில் சிலர் பிறருடைய மானத்தைக் கிழிப்பதிலும், அவர்களின் குறைகளைத் தோண்டித் துருவி அம்பலப்படுத்துவதிலும் மிகுந்த இன்பம் காண்கிறார்கள். இது ஈமானின் பலவீனத்தைக் காட்டுகிறது. பிறரின் மானத்தைச் சீரழிக்கும் நாவைக் கொண்டவன், மறுமையில் கடுமையான தண்டனைக்குரியவன்.”
இமாம் இப்னுல் கையிம் (ரஹ்)