
11/03/2023
மட்டக்களப்பு மாவட்டத்தின் அறுவடைக் காலத்தையும், விதைப்புக் காலத்தையும் கருத்திற் கொண்டு உரமானியம், நெல்விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும் என தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனிடம் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிற்கு தனிப்பட்ட திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இவ்வாறான உறுதியளிப்பு மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார்.