18/01/2025
🥹🤲
#மர்ஹூம் ாயிஸ் ஹஸ்ரத் அவர்களின் ஜனாஸா ஓர் அழகிய முன்மாதிரி....
தனது மறுமை வாழ்க்கையை நோக்கிச்சென்ற அஷ்-ஷெய்ஹ் fபாயிஸ் ஹழரத் அவர்கள்.
கண்டி, #தெஹியங்க பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட அஷ்-ஷெய்ஹூ fபாயிஸ் (முர்ஸி) ஹஸரத் அவர்கள் அக்குறணை அஸ்னா மத்திய பள்ளிவாசலில் 15 வருட காலம் பிரதம இமாமாகக் கடமையாற்றியவராவார்.
குடும்ப சகிதம் அக்குறணையிலேயே தொடர்ந்தும் தங்கி இருந்த அவர் நேற்று வெள்ளிக்கிழமை (17.01.2025) அக்குறணையின் UGGALA TOWER
ஜுமுஆ பள்ளிவாசல் நிருவாகத்தின் அழைப்பின் பேரில் நேற்று குறித்த மஸ்ஜித் சென்று தனது குத்பா பிரசங்கத்தின் தமிழ் சொற்பொழிவை அழகாக நிறைவு செய்துள்ளார்.
பின்பு இரண்டாம் அரபு குத்பாவில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் மீது ஸலவாத்தை உச்சரித்துக் கொண்டிருக்கையில் நெஞ்சிப் பகுதியைப் பிடித்தவாறு சிறிது சரிந்துள்ளார்.
உடனே அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று மிம்பரில் இருந்து அவரைக் கீழே இறக்கியுள்ளனர்.
வாகனத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல விரைந்தபோது “அஷ்-ஹது அல்லா இ லாஹ இல்லல்லாஹ்....” என பல தடவைகள் திருக்கலிமாவை மீட்டி மீட்டி ஓதிய நிலையில் அவரது ரூஹ் பிரிந்துள்ளது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....
இது உண்மையில் மிகவும் படிப்பினைக்குறிய ஜனாஸாவாகும்.
பேணுதலான ஒரு ஆலிமாக, அல்லாஹ்வின் தீனுக்காகவே தனது கால நேரத்தை அர்ப்பணித்த ஒரு மனிதராகவே அவர் வாழ்ந்து மரணித்திருந்தார்.
சிறப்பு மிக்க ரஜப் மாதம்,
வெள்ளிக்கிழமை தினம்,
ஜுமுஆவுடைய நேரம், மிப்பர் மேடையில், மார்க்கம் பற்றி உரையாற்றுகையில், வுழூவுடைய நிலையில், ஸகராத்துடைய நிலையை எய்தி,
திருக் கலிமாவை ஓதியவராக மரணித்திருக்கின்றார் பாக்கியசாலியான இமாம் அஷ்-ஷெய்ஹூ fபாயிஸ் (முர்ஸி) ஹஸரத் அவர்கள்.
நேற்றைய அவருடைய குத்பா சொற்பொழிவு #மனத்தூய்மை பற்றியும், #மெளத்தைப் பற்றியும் மிகவும் உருக்கமானதொரு உபதேசமாக அமைந்திருந்ததாக குறித்த Tower ஜூம்மா மஹல்லா மக்கள் கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒரு மனிதரின் வாழ்நாள் எந்தளவு அர்த்தமுள்ளதாக, அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தியதாக அமையுமோ அதற்கு ஏற்பவே அவரது மரணமும் அமையும் என்பதற்கு இந்த ஜனாஸா சிறந்த எடுத்துக்காட்டாகும்.
*யா அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவனத்தை அருள்வாயாக!
அவரின் குடும்பத்தினருக்கு திடமான மனதையும் கொடுப்பாயாக!
*اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وجيرانا خيرا من جيرانه وادخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار🤲🏻
𝐒𝐡𝐨𝐨𝐫𝐚 𝐍𝐞𝐰𝐬 𝐒𝐫𝐢𝐥𝐚𝐧𝐤𝐚 (New Page)