Social TV

Social TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Social TV, News & Media Website, Nintavur.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள குழுமத்தில் இணையுங்கள் 👇🏻 :
https://chat.whatsapp.com/ISt6ycp7HkK0PcGi48oMEy

📈 விளம்பரம் ஏற்றுக்கொள்ளப்படும்.

☎️ +94 78 106 9510 (Call)
🪀 +94 70 338 0067 (WhatsApp)
🪀 +966 57 011 7434 (WhatsApp)

அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை!உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் ...
12/07/2026

அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை!

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அதேநேரம் ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.

உலகின் வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத்தரம் குறித்த மிகப்பெரிய தரவுத்தளத்தைக் கொண்ட 'நம்பியோ' (Numbeo) இணையதளம் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கான போக்குவரத்து குறியீட்டின் (Traffic Index) மூலம் இது தெரியவந்துள்ளது.

இந்த புள்ளிவிபரத்தின்படி, உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாக நைஜீரியா முதலிடத்திலும், கோஸ்டாரிகா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

எஸ்தோனியா மிகக் குறைந்த போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாகக் கருதப்படுகிறது. ஒஸ்ட்ரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் குறைந்த நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் உள்ளன.

பயணத்திற்காகச் செலவிடப்படும் நேரம், அதற்காகச் செலவாகும் எரிபொருள் அளவு, போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் மன உளைச்சல், கார்பன்-டை-ஒக்சைடு (CO2) வெளியேற்றம் மற்றும் போக்குவரத்து அமைப்பில் உள்ள திறமையின்மை போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தரவுகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த குறியீடு, ஒரு நாட்டின் ஒட்டுமொத்த போக்குவரத்து நிலைமைகள் குறித்த விரிவான பார்வையை வழங்குகிறது.

ஆறு தமிழ் பேசும் கட்சிகள் விரைவில் கூட்டு உடன்படிக்கை!ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தங்களுக்குப் பொதுவான விடயங்கள் ...
12/07/2026

ஆறு தமிழ் பேசும் கட்சிகள் விரைவில் கூட்டு உடன்படிக்கை!

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தங்களுக்குப் பொதுவான விடயங்கள் குறித்து ஒன்றிணைந்து செயல்படுவதற்கான உடன்படிக்கையொன்றை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கவுள்ளன.

தற்போதைய சூழலில் பொதுவான நலன் சார்ந்த விடயங்களில் ஒன்றிணைந்து செயல்பட தாங்கள் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகவும், அது தொடர்பான மேலதிக விபரங்களை நிகழ்வின் போது வெளிப்படுத்தப்போவதாகவும் அக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தமிழரசு கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளே இதில் உள்ளடங்குகின்றன.

மட்டக்களப்பில் பாம்பு தீண்டி ஆசிரியர் உயிரிழப்பு!மட்டக்களப்பு - கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளி பகுத...
12/07/2026

மட்டக்களப்பில் பாம்பு தீண்டி ஆசிரியர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளி பகுதியில், ஆசிரியர் ஒருவர் பாம்பு தீண்டியதில் #உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (11) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு - பண்டாரியாவெளியைச் சேர்ந்த 54 வயதுடைய, நான்கு பிள்ளைகளின் தந்தையான க.உதயகுமார் எனும் ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நேற்று சனிக்கிழமை தனது வீட்டில் இருந்து, வயலுக்கு அறுவடை வேலைகளுக்காக அவர் சென்றிருந்தபோது, அங்கிருந்த பாம்பு ஒன்று அவரைத் தீண்டியுள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேலதிக அவசர சிகிச்சைக்காக #மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (12) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு - கொக்கட்டிசோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டார் உள்ளிட்ட அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்!மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகை...
12/07/2026

கட்டார் உள்ளிட்ட அமெரிக்கத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்!

மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இருப்பினும், அந்த ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இடைமறித்துச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக கட்டார் மற்றும் பஹ்ரைன் நாடுகள் தங்களின் பாதுகாப்பு எச்சரிக்கைகளை உயர்த்தி உள்ளதுடன், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளன.

இந்தத் தாக்குதல்கள் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை இலக்காகக் கொண்டே நடத்தப்பட்டுள்ளன.

இதன்படி, ஜோர்டானில் உள்ள பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் பல பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.

மேலும், குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள சில அமெரிக்க இராணுவத் தளங்களையும் இலக்காகக் கொண்டு ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இலங்கையின் சுற்றுலா வருமானத்தில் வீழ்ச்சி!இலங்கையின் சுற்றுலாத்துறையிலிருந்து ஈட்டப்பட்ட வருமானம், கடந்த ஆண்டின் முதல் ஆ...
12/07/2026

இலங்கையின் சுற்றுலா வருமானத்தில் வீழ்ச்சி!

இலங்கையின் சுற்றுலாத்துறையிலிருந்து ஈட்டப்பட்ட வருமானம், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சரிவைக் கண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையிலிருந்து 1,511.1 மில்லியன் அமெரிக்க டொலர்களே வருமானமாகப் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்த வருமானம் 1,712.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

கடந்த மே மாதம் 155.7 மில்லியன் டொலர்களாக இருந்த சுற்றுலா வருமானம், ஜூன் மாதத்தில் 151.1 மில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஈட்டப்பட்ட 169.5 மில்லியன் டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க சரிவாகும்.

இதற்கிடையில், வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்திலும் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மே மாதம் 847 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம், ஜூன் மாதத்தில் 695 மில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது. இது 152 மில்லியன் டொலர் குறைவு என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஈட்டப்பட்ட மொத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 3,738 மில்லியன் டொலர்களாக இருந்த இந்த வருமானம், இவ்வருடத்தின் அதே காலப்பகுதியில் 4,604.8 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 866.8 மில்லியன் டொலர் அதிகரிப்பாகும்.

பலத்த காற்று குறித்து வெளியான எச்சரிக்கை!நாட்டின் ஊடாக நிலவும் தீவிரமான தென்மேற்கு பருவநிலை காரணமாக மத்திய, சப்ரகமுவ, வட...
12/07/2026

பலத்த காற்று குறித்து வெளியான எச்சரிக்கை!

நாட்டின் ஊடாக நிலவும் தீவிரமான தென்மேற்கு பருவநிலை காரணமாக மத்திய, சப்ரகமுவ, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும், மற்றும் சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் உள்ள கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது, அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கும் என்றும், கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து மீனவர்களும் கடற்சார் சமூகத்தினரும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவித்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார்!கத்தார் நாட்டின் நவீன வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த மா...
12/07/2026

கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி காலமானார்!

கத்தார் நாட்டின் நவீன வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த மாபெரும் தலைவரும், 'அமீர் தந்தை' எனப் போற்றப்பட்டவருமான முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி (74) இன்று (ஜூலை 12, 2026) காலை காலமானார். அவரது மறைவை கத்தார் அரச மாளிகையான அமீரி திவான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

1995 முதல் 2013 வரை 18 ஆண்டுகள் கத்தாரின் அமீராகப் பதவி வகித்த அவர், இயற்கை எரிவாயு வளத்தை உலகளாவிய பொருளாதார வலிமையாக மாற்றி, கத்தாரை உலக அரங்கில் முக்கிய நாடாக உயர்த்தியவர். மேலும், 2013 ஆம் ஆண்டு தனது மகனும் தற்போதைய அமீருமான ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியிடம் தன்னிச்சையாக ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதியான அதிகார மாற்றத்தை ஏற்படுத்தினார்.

அல் ஜசீரா செய்தி வலையமைப்பை உருவாக்கியது, கத்தாரின் சர்வதேச முதலீடுகளை விரிவுபடுத்தியது, 2022 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியை கத்தாரில் நடத்தும் உரிமையைப் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்தது உள்ளிட்ட பல சாதனைகள் அவரது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றன.

அவரது மறைவு கத்தார் மக்களுக்கும், அரபு மற்றும் இஸ்லாமிய உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கும் கத்தார் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இசைக்குயில் எஸ்.ஜானகியின் வாழ்க்கை வரலாறுமறைந்த தென்னிந்திய பாடகி எஸ்.ஜானகி 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் திகதி, ஆந்திரப் ...
12/07/2026

இசைக்குயில் எஸ்.ஜானகியின் வாழ்க்கை வரலாறு

மறைந்த தென்னிந்திய பாடகி எஸ்.ஜானகி 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் திகதி, ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற கிராமத்தில் பிறந்தார்.

இவரது தந்தை ஸ்ரீராமமூர்த்தி ஒரு ஆசிரியர்.

சிறுவயதிலேயே இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஜானகி, முறையாக இசைப் பயிற்சி பெற்றார்.

1957ஆம் ஆண்டு, 'விதியின் விளையாட்டு' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.

தனது தனித்துவமான குரல் வளம் மற்றும் எந்த மொழியிலும் மிகத் துல்லியமாக உச்சரிக்கும் திறன் காரணமாக, குறுகிய காலத்திலேயே தென்னிந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத பாடகியானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் 48,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

பல வெளிநாட்டு மொழிகளிலும் இவர் பாடியிருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இவரது குரலின் இனிமை காரணமாகப் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இவரை 'இசைக்குயில்' என்று அழைக்கின்றனர்.

குழந்தை முதல் முதியவர் வரை எந்த வயதினருக்கும் ஏற்றாற்போல் குரலை மாற்றிப் பாடும் திறன் (Voice Modulation) ஜானகிக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பு.

குறிப்பாக, இவரது குழந்தைத்தனமான குரலில் பாடிய பாடல்கள் இன்றும் தனி ரகம்.

டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், கே.ஜே.யேசுதாஸ் மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்றவர்களுடன் இணைந்து இவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை.

இந்தநிலையில் எஸ்.ஜானகி சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை நான்கு முறை வென்றுள்ளார்.

அத்துடன் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மாநில அரசுகளின் உயரிய விருதுகளைப் பலமுறை பெற்றுள்ளார்.

மேலும் 2013ஆம் ஆண்டு, இந்தியாவின் உயரிய விருதான 'பத்ம பூஷன்' விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த விருதை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, தென்னிந்தியக் கலைஞர்களுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படவில்லை என்று கூறி அதனை அவர் நாசூக்காகத் தவிர்த்தார்.

இசைஞானி இளையராஜாவின் பல நுணுக்கமான மெட்டுகளுக்கு உயிர் கொடுத்தவர் ஜானகி.

"நான் ஒரு மெட்டைப் போட்டால், அதை ஜானகி எப்படிப் பாடுவார் என்று கற்பனை செய்தே உருவாக்குவேன்" என்று இளையராஜாவே பலமுறை புகழ்ந்துள்ளார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையிசையில் கோலோச்சிய ஜானகி, 2017ஆம் ஆண்டு தனது 79வது வயதில் பின்னணிப் பாடகி பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இருப்பினும், இன்றும் அவரது பாடல்கள் வானொலிகளிலும், இசைத் தளங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன.

இசைக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட எஸ். ஜானகி, இந்தியத் திரையிசை வரலாற்றில் என்றும் அழியாத ஒரு வரலாற்றுத் தடம் பதித்த கலைஞர் ஆவார்.

டி20 தரவரிசையில் முதலிடத்தை இழந்தது இந்தியா!இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் இந்தியா பரிதாபமாக இழந்து...
12/07/2026

டி20 தரவரிசையில் முதலிடத்தை இழந்தது இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் இந்தியா பரிதாபமாக இழந்துள்ளது.

சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டியில் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, தொடரைக் கைப்பற்றியது.

புதிய அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

குறித்த தொடரில் தோல்வியைத் தழுவியதன் மூலம், கடந்த 4 ஆண்டுகளாக டி20 தரவரிசையில் முதலிடத்திலிருந்த இந்தியா, தற்போது அந்த இடத்தைப் பறிகொடுத்துள்ளது.

இதன்படி டி20 தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

முன்னதாக அயர்லாந்துக்கு எதிரான தொடரையும் 2-0 என்ற அடிப்படையில் இந்திய அணி இழந்திருந்தது.

இதன் மூலம், கடந்த ஏழு டி20 போட்டிகளிலும் வெற்றி பெற முடியாமல் இந்திய அணி கடும் சரிவைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

11/07/2026

SOCIAL TV 6TH ANNIVERSARY

Address

Nintavur

Alerts

Be the first to know and let us send you an email when Social TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Social TV:

Shortcuts

Share